நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிகபட்ச தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது...அந்த கட்சியின் எடியூரப்பா (ஆங்கிலத்தில் நேமாலஜிப்படி எட்டியூரப்பா ( yettiyurappa) ) முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்..தேர்தலுக்கு முன்னால் கட்சியில் சேர்ந்த எம்.பி பிரகார் போலீஸ் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.....
ஏஏஏஏஏஏஏஏ நிறுத்துப்பா...இன்னும் எலக்சனே நடக்கல...அதுக்குள்ள நீரு ரிசல்ட்ட சொல்றீரா...அப்படீங்கறீங்களா...அட டருஜாவாதீங்க...அதுதான் நடக்கப்போவுது இங்கன...
அனுதாப அலை அலை அப்படீம்பாங்களே...அது அடிங்குதுங்க இப்ப பி.ஜே.பிக்கு...மதச்சார்பற்ற ஜனதா தளத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெருவுக்கு தெரு பிரச்சாரம் செய்துவருகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்...
அதுவும் இல்லாமல் ஜெயிக்குற குதிரையில் பந்தயம் கட்டும் அரசியல் வியாதிக்கூட்டம், கொத்துக்கொத்தாக கல்லா கட்டிக்கொண்டிருந்த கட்சியை விட்டு, பாரதீய ஜனதாவின் பக்கம் தாவிக்கொண்டிருக்கின்றனர்...
நான் இருக்கும் அல்சூர் லேக் ஏரியா கவுன்சிலர் - தமிழர், இதுநாள் வரை காங்கிரஸில் இருந்தார்...ஸ்போர்ட்ஸ் பைக் விவகாரங்களில் அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் உண்டு...நேற்று தடாலடியாக காங்கிரஸில் இருந்து பி.ஜே.பிக்கு ஜம்ப் அடித்தார்...
அய்யா ஏன் அய்யா இந்த மங்கி ஜம்ப் என்றதற்கு, அடப்போ ரவி, எம்.எல்.ஏவே ஜம்பிட்டார்...நான் என்ன பிஸ்கோத்து என்கிறார்...
மேலும் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களில் வெற்றியை ருசி பார்த்துள்ள பாரதீய ஜனதாவினர், சில பல பெட்டிகளை இறக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது...
நம்ம ஏரியா கவுன்சிலருக்கு வந்த அமவுண்டில் ஒரு ட்ரிப்பிள் பெட்ரூம் ப்ளாட் ஹாட் கேக் சர்ஜாப்பூர் ஏரியாவில் ஹாட் கேஷுக்கு வாங்கப்போறாராம்...(அமவுண்ட் எல்லாம் நான் சொல்லமாட்டேன் ஆமாம்...)
காங்கிரஸ் செய்வதறியாமல் விழித்து நிற்கிறது...ஏற்கனவே உள்ள கோஷ்டிகள் தனியே கிடக்க, கவர்னராக போன எஸ்.எம்.கிருஷ்னா, நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன் ரீதியில் பேசி வருகிறார்...சோனியா சொன்னால் களத்தில் இறங்குவேன்...மன்மோகன் சிங் சொன்னால் மீண்டும் குதிப்பேன்...வீட்டம்மா சொன்னால் காருக்கு பெட்ரோல் போடுவேன் என்று தினம் ஒரு அறிக்கை கொடுத்துவருகிறார்...
மதசார்பற்ற ஜனதா - கவுடா கோஷ்டிகள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டன...பேசாம கவர்மெண்ட பாரதீய ஜனதாவுக்கே கொடுத்து இன்னும் இருவது மாசம் கல்லா கட்டியிருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் தேவே.கவுடா...குமாரசாமி கடும் டெண்ஷனில் இருக்கிறார் தந்தை மீது...முத்தாய்ப்பாக, தேவ கவுடா, தன்னுடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்வது, கிட்டத்தட்ட ஜனதா தளம் அஸ்தமணம் ரேஞ்சுக்கு வந்துவிட்டது தெரிகிறது...குமாரசாமி நல்லவர்...இந்த அலைக்கு எதிர்த்து பத்து பதினைஞ்சு எம்.எல்.ஏ தேத்துவது கஷ்டம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
கட்டங்கடைசியாக காங்கிரஸ் எடுத்துள்ள அஸ்திரம், வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என்று நெற்றியில் நீண்ட நாமம் போட்ட (கிச்சா ?? )தேர்தல் கமிஷனரை வைத்து ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க வைத்தது தான்...மேலும் உங்கள் பெயரில் போலி வாக்காளர் இருந்தால் அதற்கு பொறுப்பாளி நீங்கள் தான், உங்களுக்கு தான் ஜெயில் தண்டணை என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்...
எனக்கென்னமோ பார'தீ'ய ஜனதா சுனாமிபோல் சுழன்று வந்துகொண்டிருக்கிறது...அதில் தாக்குப்பிடிக்க கவுடாவின் / மல்லிகார்ஜுன கார்கேயின் / தரம்சிங்கின் / குமாரசாமியின் / குமார பங்காரப்பாவின் / சீத்தாரம்மையாவின் அரசியல்கள் எடுபடாது என்று தான் தோன்றுகிறது...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
2 comments:
அப்படியா!!!?
நம்மூர்கரய்ங்க எந்த நேரத்துல அந்தர் பல்டி அடிப்பாய்ங்கனு அவனுகளுக்கே தெரியாது...!
இவய்ங்களுக்கெல்லாம் செலக்டிவ் அம்னீசியா இருப்பது தங்களுக்கு தெரியாதா ரவி??
இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று near past history-யை பாருங்கள் ;-)
Post a Comment