தனித்த தமிழச்சி !!!!!!!!!!!!!!!!

கத்தரிக்காய் விற்றால் கூட தமிழச்சி பெயரை சொல்லி ஆரம்பித்தால் அமோகமாக ஓடும் காலம் இது...(யக்கோவ்...கத்ரீக்கா...வெண்டே கா...முருங்கே கா...)...அதனால் குசும்பன், ஆசிப் அண்ணாச்சி வரிசையில் நானும் இணைந்து இப்பாலிக்கா ஒரு கவுஜய காப்பி அட்ச்சிக்கினேன்...!!!தனித்த தமிழச்சி

மரணங்கள் சகஜமாகிப்
போன பூமியில்
போர் உமிழ்ந்த்
எச்சங்கள்
தமிழ் பேசிய
'முண்டங்கள்'!
பிராயங்கள்
பேதமில்லாமல்,
பாலினங்கள்
வித்தியாசமில்லாமல்...
குண்டு வீச்சில்
சமத்துவம்!

கூட்டிப் பெருக்கிய
குப்பைகளாய்
சேர்த்தெரித்த
பிணக்கும்பல்களின்
நாற்றங்களையும் மீறி
என் சுவாசக்
குழிகளுக்குள்
மூச்சு
உயிரென்ற ஒன்றுக்கான
சாட்சியாய்
இயங்க விருப்பமில்லாத
ஆயுள் சுமையுடன்
தனியாக விடப்பட்ட
அனாதையான நான்,
பார்த்துக்
கொண்டிருக்கின்றேன்...
சொந்த மயானமான
வீட்டின் பின்வளவில்
என் குடும்பத்தை
எரித்த சாம்பல்
மேட்டினருகில்,
எனக்கென்று
மிச்சமாய்
எதுவுமில்லாமல்...

வரையறுத்த வாழ்கை
நியதிகளில்
பங்கு கொள்ள
நாதியற்ற
நிகழ்தகவுகளான
பொழுதுகளோடு
நிரந்தரமான
போராட்டங்கள்,
பிரிவுகள், மரணங்கள்
பழகிவிட்ட ஆயுள்..
அதனால்
அழுவதற்கு
தோன்றவில்லை.
சடுதியில் மரணம்
தின்ற உறவுகளால்
உறைந்து போன இதயம்,
அதிர்ந்து போன
உணர்வுகளுடன்...
உயிர் மட்டும்
துடிப்புடன்
உட்கொண்ட
சராசரி ஈழத்துத்
தமிழச்சியாய்
நானும்
அகதியாய்...அனாதையாய்...

இன்னும் எத்தனை
காலம்
வேதனை விழுங்கும்
வாழ்கையை ஜீரணிப்பது?
மண்டையோட்டினுள்
வெள்ளைப் பிண்டம்
இரத்தத்தில் இரசாயன
மாற்றமுருவாக்க
நரம்புகள் சுட்ட
கணத்தாக்கங்களில்
வன்மம் வரிந்து
வரிந்து
என்னுள் கிளர்ந்து
கொழுந்தான அசுரம்...
ஆங்காரமாய்,
அழுவதற்கு
அவமானப்பட்டது
சுயம்...!

எதிர்காலமாய்
இலக்கற்ற பாதை
எதிரில் இருளில்
நீண்டு
கிடக்கின்றது..
எங்கே போய்
நிற்கும்?
விடை பயணப்பட்டால்
மட்டுமே இனி...!

எனக்கான பாதையில்
என் குடும்பம்
எரித்த சாம்பல்
மேட்டை
அடையாள முதல் மைல்
கல்லாக வைக்கிறேன்...
இனி மேல்
எனக்கு பதுங்கு
குழிகள் தேவையில்லை...
பாதுகாப்பதற்கு
எதுவுமில்லாத போது!
பாய வேண்டிய
காரணங்களை
ரணங்களாக
சேகரித்துவிட்டேன்..
வாழ்கையின் அடுத்த
கட்டம் புனுக்கு
எட்டவாய்..

முறிந்து போன
கூண்டுக்கம்பிகளை
கடந்து நடக்கலாம்
இனி..
மீள வந்தால்...
சரித்திரத்தின் ஒரு
அங்கமாவது
என் கையிலிருக்குமே..?
அல்லது
சரித்திரத்தில் ஒரு
துளியாகி போவேன்...!!

-சுவாதி (mswathi1025@yahoo.com)

http://thatstamil.oneindia.in/art-culture/poems/2008/a-poem-by-swathi-220108.html

இரண்டு மூன்று நாட்களாக தமிழ்மணத்தை திறந்தாலே மணம் வீசுவதற்கு பதில் ஒரே கப்பு வாசம்...ஊர்நாட்டில் நவீன கழிப்பிடங்களில் படம் வரைந்து பாகம் குறிக்கப்படும் வார்த்தைகள் சர்வ சாதாரனமாக எஞ்சாய் பண்ணி படிக்கப்படுகின்றன..

பின்னவீனத்துவ கவிஞர்களால் பக்கம் பக்கமாக எழுதப்பட்டபோது மூடிக்கொண்டு இருந்தவர்களுக்கு, தமிழச்சி கிழிக்கும்போது மட்டும் ஏறிக்கொண்டு வந்து - தப்பு தப்பு, செல்லாது செல்லாது என்பது பாசிசம்...

அய்யனாரும் சுகுனா திவாகரும் எழுதும்போது அதை பின்னூட்டம் இட்டு திட்டவேண்டியது தானே ? அப்போ எங்கே போச்சு இந்த நாகரீக சிந்தனை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" திருக்குறள் மயிறு மண்ணாங்கட்டியெல்லாம் ?

பெருசா வந்துட்டாங்க.. (எப்பீடீடீடீ !!!)

கழகம் சாகும்வரை கூட்டம்போடும்...செத்தபிறகு - இரங்கல் கூட்டம் போடும்...

பெங்களூர் கிளைக்கழகம்..
லேக் ஏரியா...அல்சூர்...

Comments

இம்சை said…
நன்றி ரவி... வாழ்த்துக்கள்
இம்சை said…
அய்யனாரும் சுகுனா திவாகரும் எழுதும்போது அதை பின்னூட்டம் இட்டு திட்டவேண்டியது தானே ? அப்போ எங்கே போச்சு இந்த நாகரீக சிந்தனை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" திருக்குறள் மயிறு மண்ணாங்கட்டியெல்லாம் ?

நியாயமான கேள்வி ? பின்னவீனத்துவ கவிஞர்கள் கவிதை. எழுதினால் ஒன்னும் புரிய மாட்டேங்குது... அதனால் அதிகம் படிப்பது இல்லை. நான் என் மாணவர்களுக்கு படிக்க பரிந்துரை செய்வது இல்லை.

ஆனால் தமிழச்சி அவர்கள் நிறைய புரியும் படியான , தேவையான பதிவுகள் எல்லாம் எழுதுகிறார். பெரியாரை பற்றி நிறையா தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனாம் வருத்தம் அளிக்கும் படியான பதிவுகள் அதிகம் வந்தால் அதை மாணவர்களுக்கு எப்படி படிக்க பரிந்துரை செய்ய முடியும் அந்த சின்ன வருத்தம் மட்டுமே.

ஏதோ நம் பெரியாரை பற்றி நிறையா பேரு தெரிஞ்சிக்கட்டும் என நினைத்தேன்.

உங்க கவிதை அருமை ஆனா புரியல
//பின்னவீனத்துவ கவிஞர்களால் பக்கம் பக்கமாக எழுதப்பட்டபோது மூடிக்கொண்டு இருந்தவர்களுக்கு, தமிழச்சி கிழிக்கும்போது மட்டும் ஏறிக்கொண்டு வந்து - தப்பு தப்பு, செல்லாது செல்லாது என்பது பாசிசம்...

அய்யனாரும் சுகுனா திவாகரும் எழுதும்போது அதை பின்னூட்டம் இட்டு திட்டவேண்டியது தானே ? அப்போ எங்கே போச்சு இந்த நாகரீக சிந்தனை, "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" திருக்குறள் மயிறு மண்ணாங்கட்டியெல்லாம் ?

பெருசா வந்துட்டாங்க.. (எப்பீடீடீடீ !!!)

கழகம் சாகும்வரை கூட்டம்போடும்...செத்தபிறகு - இரங்கல் கூட்டம் போடும்...
//
ஐ லவ் திஸ் .... ரவி எங்கேயோ போயிட்டப்பா :-)))
அப்பாவி said…
அதானே! அய்யனார் எழுதுனா அது புனைவாம். தமிழச்சி எழுதுனா அது புணர்வாம்.

எல்லா எழவும் ஒன்னுதான்னு யார் இவனுங்களுக்கு சொல்றது!
Anonymous said…
தழலாரே

சும்மா நச்னு ஒரு பதிவு போட்டிருக்கீரு.
நல்லா இருங்கடே!!

அய்ய்னாரும், சுகுணா திவாகரும் எலக்கியவியாதிங்க. தமிழச்சியும் அப்படித்தானா? நானும் எளக்கியவாதின்னு அறிவிப்பு போட்ச் சொல்லுங்க தோழரே! :-)

தமிழ்மண்மே நாறுதுன்னு நீங்க சொல்ற அளவுக்கு இருந்ததாலத்தான் ஒரு சமாதான முயற்சியா ரெண்டு பதிவு போட்டேன்.

ஒண்ணும் வெளங்குறா மாதிரி இல்ல போல :-) நீங்க சொன்னா மாதிரி கலவர பூமில கால் வைக்குறதே தப்பு. காத்து வாங்கிட்டு காத்து வாங்கப் போனேன்ன்னு பாட்டும் பாடுனா வெளங்குமா? :-) நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்
செந்தழல் ரவி,

நிஜமாகவே நல்ல கவிதை தான்.

நீங்கள் இத்தனை அருமையாகக் கவிதை எழுதுவீர்களா என எண்ணிக் கொண்டு மகிழ்வுடன் படித்து வரும் பொழுதே, கடைசியில் வேறொரு பெயர்.

உணர்ச்சிபூர்வமான கவிதை ஒன்றை கொடுத்ததற்குப் பாராட்டுகள். (எடுத்துப் போட்டாலும் கூட, நல்லவற்றைச் சுட்டிக் காட்ட மனம் வேண்டுமே!)
செந்தழல் ரவி,

நிஜமாகவே நல்ல கவிதை தான்.

நீங்கள் இத்தனை அருமையாகக் கவிதை எழுதுவீர்களா என எண்ணிக் கொண்டு மகிழ்வுடன் படித்து வரும் பொழுதே, கடைசியில் வேறொரு பெயர்.

உணர்ச்சிபூர்வமான கவிதை ஒன்றை கொடுத்ததற்குப் பாராட்டுகள். (எடுத்துப் போட்டாலும் கூட, நல்லவற்றைச் சுட்டிக் காட்ட மனம் வேண்டுமே!)
யோவ் பெங்களூர் கிளை!

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_29.html

இந்த பதிவை பாரு... இன்னும் புல்லரிச்சி போயிடலாம்...
தமிழச்சி தன் சுய விளம்பரத்திற்காக எழுதுகின்றார். இதனைப் பற்றி அவரது வலையில் பின்னூட்டம் இட்டால் பிரசுரிக்கமறுக்கின்றார் ஆகவே தமிழச்சி ஒரு சுய விளம்பரப் பிரியை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். தமிழ் மணத்தில் இவரது பதிவுகளை பிரசுரிக்காமல் செய்வதே ஒரே ஒரு சிறந்தவழி.
Anonymous said…
///தமிழச்சி அவர்கள் நிறைய புரியும் படியான , தேவையான பதிவுகள் எல்லாம் எழுதுகிறார். பெரியாரை பற்றி நிறையா தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனாம் வருத்தம் அளிக்கும் படியான பதிவுகள் அதிகம் வந்தால் அதை மாணவர்களுக்கு எப்படி படிக்க பரிந்துரை செய்ய முடியும் அந்த சின்ன வருத்தம் மட்டுமே.///

வருத்தம் வேண்டாம்.
உங்கள் மாணவர்களை இங்கே
சென்று பார்க்கச் சொல்லவும். பெரியாருக்காகவே தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.
www.thamizachi.com
Anonymous said…
//வித்யா said...
தமிழச்சி தன் சுய விளம்பரத்திற்காக எழுதுகின்றார். இதனைப் பற்றி அவரது வலையில் பின்னூட்டம் இட்டால் பிரசுரிக்கமறுக்கின்றார் ஆகவே தமிழச்சி ஒரு சுய விளம்பரப் பிரியை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். தமிழ் மணத்தில் இவரது பதிவுகளை பிரசுரிக்காமல் செய்வதே ஒரே ஒரு சிறந்தவழி.//

போடி வயித்தெறிச்சக்காரி...
லுசு...
Anonymous said…
// லக்கிலுக் said...
யோவ் பெங்களூர் கிளை!

இன்னும் புல்லரிச்சி போயிடலாம்...//

புல்லரிச்ச உங்க உடம்பு எப்படி இருக்குதுங்க?

Popular Posts