திண்ணையில் ஜெயமோகனின் வேண்டுகோள்....
திண்ணையில் ஜெயமோகன் உலகத்தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்...அது என்னன்னா இது தானுங்கோ...
இங்கன அமுத்துங்க
///// மலேசியாவில், சிங்கப்பூரில், கனடாவில், அமெரிக்காவில், தமிழகத்தில் என உலகமெங்கும் உள்ள தமிழிலக்கிய வாசகர்களில் சிலருடைய மனசாட்சியையேனும் இச்சொற்கள் சென்று தொடும் என நான் நம்புகிறேன். அவர்களில் சிலராவது இதற்கு ஏதாவது செய்யவேண்டும். மீண்டும் புது அமைப்புகளை உருவாக்குவதன்றி இதற்கு வேறு வழியும் இல்லை. /////
அதாவது புதுசா ஒரு அமைப்பை ஏற்படுத்து, ஜோல்னா பை மூனுநாள் தாடிவாலாக்களுக்கு விருது ( அமவுண்டு) தரவேணுமாம்...
நாட்ல எவ்ளோ பிரச்சினைகள் இருக்க, இவர் என்ன இதுவரை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு விருது கிடைக்கலியேன்னு இவ்ளோ கஷ்டப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி எழுதறாரே அப்படின்னு தான் ஒரு சாமானியன் ( லைக் மீ) நினைப்பான்...
இவருக்கு பொறாமைப்பா...அதான் அந்த விருதுக்குழுவுல இருக்கறவங்களை கலாய்க்கிறாரு...ஆமாம்...இவருக்கு கிடைக்கலை...(அப்படியா?)...அதனால அவங்களை அக்யூஸ் பண்றது மூலமா அவங்களோட கிரெடிட்டபிலிட்டியை கேள்விக்குறியாக்கி, கேலிக்குரியதாக்கி, மண்டையில ஒன்னுமில்லாதவனுங்கன்னு திட்டிவெக்குறார்...அப்படீங்கறார் ஒரு மூன்றாம் தர வாசகர்...(லைக் மீ)
பொதுவா எழுத்தை விட்டா வேறு வேலை இல்லைன்றவங்க கம்மிதான்...பேங்க் எம்ப்ளாயீஸ், உருப்புடியா வேற வேலை செய்யத்தெரியாத சோம்பேறிங்க தான் எழுதறேன் எழுதறேன்னு திரிஞ்சிக்கிட்டிருப்பாங்க...அல்ட்டிமேட் கோல் சினிமாவுல எண்ட்ரி ஆகுறதோ, இல்லை ஏதாவது வெகுஜனப்பத்திரிக்கை எடிட்டோரியல்ல போய் குந்திக்கினு குப்பை கொட்டுறதோத்தான் இருக்கும்ங்கறாரு ஒரு வாசிப்புன்னா என்னான்னு தெரியாத மொக்கை வாசகர்..(லைக் மீ)
இயல்புவாதம்,தஸ்தாவொஸ்கி, சே, பாப் மார்லி, தாஸ் காப்பிடஸ், சிட்னி ஷெல்டர், சூழலியல் அபத்தவாதம், அங்கதக் கவிதைகள், ரஸ்புத்தீன், காப்கா, ஆல்பெர் காம்யூ, செம்மலர், ஜோசம் டிஜுகாஸ்வெல்லி, இவர்களை/இவைகளை பற்றியெல்லாம் மேலிருந்து கீழாக படித்து, லைட்டாக ஒற்றைத்தலைவலியுடன் பீச்சு மணலில் புகையுடனும், சரக்குடனும் சிற்றிலக்கிய அரசியல்கள் விவாதிக்கும் சிலபலருக்கு வேலை வெட்டி என்று இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் வேளையில், சாகித்திய அக்கதமி கொடுக்கும் பிரைஸ் மணியை வைத்து மூன்று செண்டு நிலம் ப்ளான்செய்துகொண்டு எழுத உட்காரும் இலக்கிய கூட்டத்தின் பர்ஸண்டேஜ், திடீர் மழையால் வெள்ளம் அடித்து அறுக்கவேண்டிய நெற்பயிர் தலைவரை தண்ணீர் நின்று அழுகிறதே, வெள்ள நிவாரணம் கிடைக்குமா, அறுத்து அடித்தாலும் மூட்டைக்கு முன்னூறாவது கிடைக்குமா என்று நினைக்கும் பர்ஸண்டேஜை விட கம்மியா அதிகமா என்று மண்டை குழம்பி இரண்டு சைடும் தலைவலிக்கு ஆளாகும் மூன்றாம் தர குமுதம் வாசகர் ( லைக் மீ)...
பின் தொடரும் நிழலின் குரல் படிச்சிருக்கியா ? ஜே.ஜே சில குறிப்புகள் ? சுந்தர ராமசாமியோடது ஏதாவது ? ம்ம்ஹும்...அப்ப என்ன தான் நீ வாசிச்சிருக்க ? புத்தரின் ஜாதகக்கதைகள், ம்ம்ம்ம் அப்புறம் பொன்னியின் செல்வன்...அடச்சே...நீ யெல்ல்லாம் வாழுறதே வேஸ்ட்...நாஞ்சில்நாடன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன் இவங்கள்ளாம் யாருன்னு தெரியாத நீ, இன்னும் ஒருவாரத்துக்கு சாப்பிடாதே...என்ன கொடுமை பிரதர் இது...நீங்க சொல்ற இலக்கியவாதிகளை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்...கொக்கோ கோலா கம்பெனிக்காரன் இந்திய மக்களை முட்டாளாக்குறான்னு தெரியும்...இது சமூகம்...அப்புறம் என்னுடைய இந்த வருஷ அப்ரைசல் எத்தனை பர்சண்டேஜுன்னு தெரிஞ்சா போறாதா ? என்று கேட்கும் தேர்ட் ரேட் வாசகன் ( லைக் மீ)
உலகத்தமிழர்கள் எல்லாம் சேர்ந்து காசு போட்டு, ஒரு பெரிய விருது உருவாக்கி, அதுக்கு இயல், புயல், உலகத்தமிழர் அக்கடமி அப்படீன்னு ஒரு பேரு வெச்சு, வருஷா வருஷம் பயங்கர அல்டிமேட்டா ஒரு விழா எடுத்து, அதுக்கு சீ.எம் எல்லாம் கூப்பிட்டு, சாகித்திய அக்கதமிக்காரனுங்க மூக்கை உடைச்சு, அவனுங்க ரிஜெக்ட் பண்ண ஆளுங்களுக்கெல்லாம் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் வாங்குற அளவுக்கு பொற்கிழியோட விருது கொடுக்கனும்..அடப்பாவி மக்கா...தமிழ் நாட்டுல அகதியா நிக்குற ஈழத்தமிழன் கக்கூஸ் கூட இல்லாம கஸ்டப்படுறானே...அதை கவனிக்க ஒரு கமிட்டி போடுறதுன்னு ஒரு எண்ணமாவது வந்துச்சா ? அதெல்லாம் முடியாது...கலை....எழுத்துக்கலை....இலக்கியம்...நவீன இலக்கியம்...சூழலியல்...எழுத்து முன்னோடிகள்...இதுதான் முக்கியம்....
அடப்பாவீ...தமிழ் நாட்டுல மக்கள் கஞ்சித்தொட்டி, எலிக்கறிப்பஞ்சம் இல்லாம மூனு வேளை சாப்பிடுறதென்னமோ நிஜம்தான்...ஆனா நடுத்தர மக்கள் அன்னாந்துபார்க்கும் அளவில் விலைவாசி உயர்வு, ஒருபுறம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் கூட்டம், மறுபுறம் நகரத்தை விட்டு விலகி ஓடவேண்டிய நிலையில் ஒரு பெருங்கூட்டம்...தொழிற்புரட்சி...சுயலாப அரசியல்...இந்த கொடுமையை எல்லாம் எழுத்தில வடிக்காதீங்க...காதல் கவிதைகள் எழுதி பேனாவுக்கு சுயமைதுனம் செய்துவிடும் சிற்றிலக்கியத்துக்கு விருது உருவாக்கி, அதை அமவுண்டோட கொடுத்து, உள்ளூர சந்தோஷப்படுங்க...இதுக்கு உலகத்தமிழர்கள் அறைகூவல்...கோழி கூவினா சூப்பாவது வைக்கலாம்...இந்த அறைகூவலை ப்ரிண்ட் அவுட் எடுத்தா குப்பைத்தொட்டியில் தான் போடலாம்...
பி.கு:
பெரியாளுங்களை திட்டினா பெரியாளாகலாமுன்னு நெனைப்பா தம்BI
விஷ்னுபுரம் இன்னும் படிக்கலை...அப்படி படிச்சி அவரோட ரசிகனாயிருந்தா அபத்தங்களுக்கு மவுனப்பார்வையாளனா கடந்திருப்பேனோ ? விஷ்னுபுரத்தை ஒருத்தன்கிட்ட இரவல் கேட்டிருக்கேன்...இந்த வீக்கெண்ட் கிடைக்குதா பார்க்கலாம்...
Wednesday, January 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
6 comments:
நியாயமான கேள்விகள் ரவி....
தலை
இந்தப் பதிவைப் படிச்சதும் உங்களோட முந்திய பதிவோட தலைப்புதான் ஞாபகம் வருது. லைக் மீன்னு சொல்றதோட நிறுத்தாம லைக் மீ அண்ட் அண்ணாச்சின்னு என்னையும் துணைக்குக் கூப்பிட்டிருக்கலாம் :-)
ஈழத்தமிழனுக்குக் கக்கூஸ் இல்லைன்னு கவலைப்பட ஆரம்பிச்சா கவலைபப்டுறவனுக்கு ஒழுங்கா கக்கூஸ் போகாதுன்னு தெரியாதா?
வேலயப் பாருங்க. முடிஞ்சா டொனேஷன் குடுங்க. இல்லேன்னா இப்படி திட்டுறதை விடுங்க. பாவம் ஜெயமோகரு :-)
பின்னூட்டத்துக்கு நன்றி செல்வம்...!!!
அண்ணாச்சி...
கலக்குறீங்க போங்க...ஏதாவது புக் ஓசியில கிடைக்குமா ?
நான் இலக்கியம் பற்றி ஏதும் அறிந்தவன் இல்லையென்றாலும், ஜெயமோகனின் ஆதங்கம் புரிகிறது. அது நியாயமானதாகவும் இருக்கலாம்...
ஆனால், இவர் கனவு காணும் அமைப்புகளும்...விளக்கு, இயல் என்று இங்கு குறிப்பிடப்படும் அமைப்புகளைப் போலவே நாளை இயங்க நேரிடும் அல்லவா?
ஹலோ, மூன்றாந்தர வாசகா/செந்தழல் ரவி/வெறும்பயலே,
இன்னும் கொரஞ்சது பத்து வருசத்துக்கு ஒங்க குறிக்கோள் ஷுட் பீ 2 லாக்/ஆன்னம் ஹைக் ஆவரேஜ்..னெக்ஸ்டு டெத்து,எட்செட்ரா,எட்செட்ரா.. ஜெயமோகன் நெக்ஸ்டு ஜென்மம், மூள வளர்ந்தா...
Post a Comment