Wednesday, November 05, 2008

அதிபர் தேர்தல் அமெரிக்காவுக்குதானே ?



டேய் அமெரிக்காவுக்கு தானே தேர்தல் ?

என்னம்மோ அயனாவரம் பஞ்சாயத்து பிரெசிடெண்டு தேர்தல் மாதிரி, அவர் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அலசி துவைச்சு காயப்போடுறீங்க ?

ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடுதலை ஏதோ கலை மாதிரி செய்யுறீங்களேடா ?

போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!!

42 comments:

பழமைபேசி said...

ஆகா?!

பழமைபேசி said...

அண்ணன் என்னச் சொல்லலை, நான் அம்பேல்!

(குற்றமுள்ள மனசு குறுகுறுக்குது, அவ்ளவுதேன்! ஹி!ஹி!!)

ரவி said...

வாங்க பழமை பேசி...

நீங்க ஏதும் பதிவு போட்டிருக்கீங்களா என்ன ?

குட்ட பீடி said...

inge oru nanbar aerkkanave http://arivili.blogspot.com/2008/11/blog-post_05.html kothichchukittu irukkaar.

முரளிகண்ணன் said...

நீங்கள் ஒரு சிறந்த பின் நவீனத்துவவாதி என்று லக்கி சொன்னது முற்றிலும் உண்மையே.

பழமைபேசி said...

இல்லண்ணே, நான இலக்கிய ரீதியா கொஞ்சம் ஒபாமாவப் பத்தி எழுதி இருந்தேன். ஆனா, நீங்க சொல்லுறது சரின்னு எனக்குப் படுது! நான் அமெரிக்க பிரஜையோட அப்பன். நான் பொழச்சுப் போறேன். :-o)

லேகா said...

இன்று காலை தொலைக்காட்சி செய்திகளை பார்த்த பொழுதும் எனக்கு தோன்றியதும் இதுவே!! :-))
நச் பதிவு!!

சிறில் அலெக்ஸ் said...

செந்தழல்,
அமஞ்சிக்கர தேர்தல்ல மட்டும் என்னத்த கிழிச்சிரப் போறோம். நாம என்னதான் ஆதிக்கம் அதிகாரம்ணு சத்தம்போட்டாலும் அமெரிக்க தேர்தல் உலக நாடுகளீல் தாக்கத்தை ஏற்படுத்துவது நிதர்சனம்.

இந்திய அரசியல்ல இல்லாத ஆதிக்க இயங்கியலா அமெரிக்க அரசியல்ல இருக்கப்போகுது?

உலகம் அமஞ்சிக்கரைய விட பெரியது. ஒவ்வொரு மனிதனின் செயலும் இன்னொருத்தனை ஏதோ விதத்தில் தொடுது. அமெரிக்காவ்வில் ஒரு சி.இ.ஓ எடுக்கும் தவறான முடிவு இந்திய ஐ.டி கம்பெனியில் துப்புரவு தொழில் செய்பவரின் வேலைக்கு உலைவைக்குது. இதுதான் நிதர்சனம்.

ஒபாமாவுக்கு வினவு கேள்வி வைத்திருப்பதைப்போல ஏதாச்சும் எழுதியிருந்தீங்கண்ணாச்சும் பரவாயில்ல இது என்னது பதிவு?

வெண்பூ said...

என்ன தல.. டென்ஷனாவுறீங்க... அமெரிக்க அதிபர் தேர்தல வுடுங்க.. அமெரிக்காவுல எதோ ஒரு நிதி நிறுவனம் (என்னாது அது லீ மென் ப்ரதஸாம்) அது கமுந்துடுச்சி.. உடனே நம்ம டவுசரும் நடுங்குனதா இல்லையா? என்னாத்துக்கு? இதே அனுபவ் மாதிரியான நிதி நிறுவனங்கள் கமுந்தப்ப எல்லார் டவுசரும் ஆடுனதா என்னா?

நீங்க ஒத்துகிட்டாலும் ஒத்திகிடாட்டினாலும் (அதே மாதிரி நாம் எல்லாரும் விரும்புனாலும் விரும்பாட்டாலும்) அமெரிக்காவுல இருக்குற ஒருத்தன் டாய்லெட்ட ப்ளஷ் பண்ணாம போய்ட்டான்னா அந்த நாத்தம் உலகம் ஃபுல்லா அடிக்கத்தான் செய்யும். இப்போதைக்கு அதுதான் நெலம..

ஒரு வேளை இந்த அதிபர் ஒழுங்கா நடவடிக்கை எடுக்காம பொருளாதாரம் இன்னும் அதல பாதாளத்துக்கு போனா அதோட பாதிப்பு கண்டிப்பா இந்தியாவுலயும் இருக்கும்:
1. ஐடி கம்பெனியில இன்னும் அதிக லே ஆஃப் இருக்கும்
2. ஸ்டாக் மார்க்கெட் அடி வாங்கும்
3. விலைவாசி கண்டிப்பாக எகிறும் / பணப்புழக்கம் குறையும் (ஆயில் விலை, ஏற்றுமதி குறையுறது இந்த மாதிரி காரணங்களால)

அதனால வேற வழி இல்லை.. அங்க யாரு ஆட்சிக்கு வராங்க, அவங்க கொள்கைகள் இந்தியாவுக்கு சாதகமா இருக்கா அப்படின்னெல்லாம் பாக்குறது ரொம்ப முக்கியம்.

பின்குறிப்பு: என் மனசுக்கு பட்டத சொன்னேன். நான் அமெரிக்க அடிவருடி இல்லை, பிங்க் ஸ்லிப் வந்துரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு இருக்குற ஒரு பாவப்பட்ட ஐடி ஊழியன்.. :(

Kavi said...

:-)

enRenRum-anbudan.BALA said...

//போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!!
//

Superrrrrr :))))) People are claiming that Obama is going to transform the Whole world with a magic wand !!!! 3 much !

Arizona penn said...

என்ன முட்டாள்தனமான ஒரு பார்வை உங்களோடது.... அமெரிக்காவுக்கும் அமிஞ்சிகரைக்கும் தொடர்பு இல்லன்னா, அப்புறம் ஏன் அமெரிக்காவில வங்கிகள் திவாலான உடனே அங்க சென்னையில எல்லாரும் அலறி புடிச்சி வங்கிகளுக்கு ஓடி என் பணம் ஒழுங்கா இருக்கான்னு கேக்கறீங்க??? அமெரிக்காவில பங்கு சந்தை வீழ்ந்தா சென்னையில பங்கு சந்தை டொபுக்குன்னு பாதாளத்துக்கு போகுதே ஏன்??? அமெரிக்கா தும்மினா நம்ம ஊரு ஆடை ஏற்றுமதியும், உணவு ஏற்றுமதியும் கடுமையா பாதிக்கப்படுதே ஏன்??? ஏன்னா, இன்னைக்கு நாம உலகளாவிய கிராமத்தில் வாழறோம், கண்டிப்பா அமெரிக்காவுக்கும் அமிஞ்சிகரைக்கும் நிறைய்ய தொடர்பு இருக்கு....
இவ்வளவு பேசறீங்களே, பாப்பாபட்டி கீரிப்பட்டி கூத்து எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே? நம்ம ஊருல தீண்டாமை கொடுமை எப்படி மக்களை வாட்டி வதச்சிதோ அந்த மாதிரித்தான் அமெரிக்காவில நிற வெறிக்கொடுமை!!!! ஆனா, இப்போ அடிமைகளா தாங்கள் நடத்தின கருப்பரினத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியா தேர்ந்தெடுத்து அவங்க செஞ்ச பாவங்களுக்கு ஒரு பரிகாரம் தேடிக்கிட்டாங்க, "அதை பாத்தாவது திருந்துங்கப்பா " அப்படின்னு மத்தவங்களுக்கு சொல்லத்தான் இத்தனை பதிவுகள்..... ஒபாமா உலகத்தை ரட்சிக்க வந்தவர்னு யாரும் சொல்லலை...ஆனா கண்டிப்பா அமெரிக்காவை தூக்கி நிறுத்துவார் அதன் மூலமா உலக அமைதிக்கு கொஞ்சமாவது வழி பிறக்கும் அப்படின்னு தான் எல்லாரும் நினைக்கிறாங்க....உலக அமைதிக்கும் அமிஞ்சிக்கரைக்கும் சம்பந்தம் இருக்குன்னாவது ஒத்துக்கிறீங்களா?????

அன்பு said...

தம்பி உன் உலக ஞானம் எவ்வளவுன்னு ரொம்ப நல்லா தெரியுது. முதல்ல மரியாதையா எழுத கத்துக்கோ இல்லாட்டி மூஞ்சி பேந்துரும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரமாதம் ரவி ..எனக்கும் இதே குமுறல்தான்

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

ஊர் உலகத்தைப் பத்தி எல்லாம் நமக்கு எதுக்கு கவலை. கிணத்துத் தவளையா இருக்கனும்ங்கிறதுதானே பகுத்தறிவு. நாம அமிஞ்சகரை மேட்டருக்கே வருவோம். அமிஞ்சிக்கரை பஞ்சாயத்துத் தலைவர் யாருன்னு எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுகளா?

siva gnanamji(#18100882083107547329) said...

அண்ணே அண்ணே
நீங்க எங்கேயோ போய்டீங்க......

குடுகுடுப்பை said...

நானும் பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க.

மோகன் கந்தசாமி said...

////தம்பி உன் உலக ஞானம் எவ்வளவுன்னு ரொம்ப நல்லா தெரியுது. முதல்ல மரியாதையா எழுத கத்துக்கோ இல்லாட்டி மூஞ்சி பேந்துரும்////

மூஞ்ச எப்படிங்க மரியாதையா பேப்பீங்க?

----------

எவண்டா இது மரியாத இல்லாம பதிவு போடறது? ரொம்ப மரியாதையா பின்னூட்டம் போடறவர்கிட்ட அடி வாங்காதப்பா!

rapp said...

நம்ம பிரதமர் மன்மோகன் சிங் தானே?:):):)

rapp said...

அட முரளிக்கண்ணன் சார் இங்க தமிழ்ல பின்னூட்டியிருக்காரா

enRenRum-anbudan.BALA said...

//என்ன முட்டாள்தனமான ஒரு பார்வை உங்களோடது.... அமெரிக்காவுக்கும் அமிஞ்சிகரைக்கும் தொடர்பு இல்லன்னா, அப்புறம் ஏன் அமெரிக்காவில வங்கிகள் திவாலான உடனே அங்க சென்னையில எல்லாரும் அலறி புடிச்சி வங்கிகளுக்கு ஓடி என் பணம் ஒழுங்கா இருக்கான்னு கேக்கறீங்க??? அமெரிக்காவில பங்கு சந்தை வீழ்ந்தா சென்னையில பங்கு சந்தை டொபுக்குன்னு பாதாளத்துக்கு போகுதே ஏன்???
//
உண்மை என்னவென்றால், 80% இந்திய மக்களுக்கு அமெரிக்காவினாலும், பங்குச்சந்தை வீழ்ச்சியாலும்/எழுச்சியாலும் ஒரு எழவு பாதிப்பும் இல்ல என்பது தான் யதார்த்தம் !!! கம்யூனிஸ்ட் முத்திரை குத்த விரும்புவர்கள் are Welcome :)

nagai said...

THE WAY HE DEALING WITH PAKISTHAN CHINA DIRECTLY AFFECTS INDIA AND ALSO AMERICAN BASED JOPS

SurveySan said...

ரவி,

என்ன அபத்தம் இது?
எல்லாரும் அவல் கெடச்சா, ஒண்ணா கும்முவதுதானே நமது கொல வழக்கம்?
இதுல ஒரு தப்பும் லேது.


எ.அ.பாலா,
/////உண்மை என்னவென்றால், 80% இந்திய மக்களுக்கு அமெரிக்காவினாலும், பங்குச்சந்தை வீழ்ச்சியாலும்/எழுச்சியாலும் ஒரு எழவு பாதிப்பும் இல்ல என்பது தான் யதார்த்தம் !!! கம்யூனிஸ்ட் முத்திரை குத்த விரும்புவர்கள் are Welcome :)////

என்ன கொடுமைங்க இது? 80%க்கு பாதிப்பு இல்லியா?
ஏன், எல்லாரும் வீட்ல டாலர் மரம் வச்சிருக்காங்களா?
'பாதிப்பு இல்லாமல்' இருக்க சூட்சமம் இருந்தா சொல்லுங்கய்யா. :)

அருள் said...

//////////
என்னம்மோ அயனாவரம் பஞ்சாயத்து பிரெசிடெண்டு தேர்தல் மாதிரி, அவர் வீட்டு நாய்க்குட்டி வரைக்கும் அலசி துவைச்சு காயப்போடுறீங்க ?
/////////////
ந‌ல்லா கேட்டிங்க‌ ந‌ருக்குன்னு ஒரு கேள்வி........
எந்த‌ செய்தித்தாளை திற‌ந்தாலும்....ஒப‌மா ஒப‌மா ஒபாமாதான்.........
இதெல்லாம் அடிமையின் மோக‌ம்தான்.....த‌விர‌ வேறொன்றும் இல்லை.....

நாம ஊருகார‌ங்க‌தான் எல்லாரையும் தூக்கி வைத்துகொண்டு ஆடுறாங்க‌..அந்த‌ ஊரு த‌லைவ‌ர் யார‌வ‌து இங்க‌ வ‌ர‌தா இருக்க‌ட்டும் இல்ல தேர்த‌லா இருக்க‌ட்டும்........
ந‌ம்ம‌ ஆளுங்க‌ அங்க‌ போனாலோ இல்ல‌ இங்க‌ ஒரு தேர்த‌ல்னாலோ ஒருத்த‌ரும் சீண்ட‌மாட்டாங்க‌........அவ‌ங்க‌ அவ‌ங்க‌ வேலைய‌ பாக்ககுறாங்க‌......நாம‌தான் வேலை வெட்டி இல்லாம‌ தேவை இல்லாத‌ எதையாவ‌து செய்துகிட்டு இருப்போம்...........

லக்கிலுக் said...

அமைந்தகரையும், அயனாவரமும் பஞ்சாயத்து அல்ல என்பதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். அவை சென்னை மாநகராட்சியின் ஆளுகைக்குட்பட்டவை.

Unknown said...

அபப ஏன் ரவி சார், ஊர் விட்டு ஊர் பிழைக்க போறீங்க. இங்கேயே உங்க ஜல்லிய அடிக்க வேண்டியதுதானே. முதலில் விசாலமான அறிவோட எழுத கத்துக்கோ. உன்னோட திராவிட தலைவன்கள் போல் தன் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்தும், அமெரிக்காவில் செட்டில் செய்தும் விட்டு மற்றவர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்ட சொல்லாதே. நீ மட்டும வசதியாக வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டு மற்றவர்கள் மூளையை மழுங்கடிக்காதே.

நவநீதன் said...

சர்வேசன்,
பாதிப்புகள் இருக்கலாம் ஆனா அதுக்காக ஒரு துறும்ப கூட கிள்ளி நம்பளால போட முடியாது. அதுக்காக நேரத்த செலவளிக்கரத விட்டுட்டு உருப்படியா ஏதாவது பண்ணலாமே.... அப்படீங்கறது தான் இந்த பதிவின் நோக்கம்னு நான் நினைக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

சர்வேசன்,
//என்ன கொடுமைங்க இது? 80%க்கு பாதிப்பு இல்லியா?
ஏன், எல்லாரும் வீட்ல டாலர் மரம் வச்சிருக்காங்களா?
//
சொன்னதை நேர்மறையாக புரிந்து கொண்டு பதில் கூறவும், நக்கல் (டாலர் மரம்!) பிறகு செய்யலாம்... பெருவாரியான மக்கள் மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்வதால், இந்த கூத்துகளால பெருமளவு பாதிப்பு இல்லை என்பது என் கருத்து. மேலும், ஒரு அமெரிக்க தேர்தலுக்கு இங்கே இவ்வளவு (நேரத்தை வீணடித்து) கூத்தடிக்க வேண்டுமா என்ன ???

ரவி,
ஒரு மொக்கைப் பதிவைப் போட்டு என்னையும் இழுத்து விட்டுட்டீங்களே தல ? :)

எ.அ.பாலா

முரளிகண்ணன் said...

\\அட முரளிக்கண்ணன் சார் இங்க தமிழ்ல பின்னூட்டியிருக்காரா\\

தமிழ் டைப் அடிக்க முடியாத சிஸ்டத்தில் இருக்கும் போது தான் ஆங்கிலம்

வால்பையன் said...

பொழுதுபோக வேணாமா தல

மங்களூர் சிவா said...

பின்னூட்டங்கள் சூப்பர்!

கபீஷ் said...

//rapp said...
நம்ம பிரதமர் மன்மோகன் சிங் தானே?:):):)
//
அப்படித்தான்னு நினைக்கறேன்

Damodar said...

தாங்கள் சென்னை அயனாவரம் சேர்ந்தவரா?

ரவி said...

//மிஸ்டர் அரட்டை said...
தாங்கள் சென்னை அயனாவரம் சேர்ந்தவரா?
///

இல்லீங்க்னா...நான் அமிஞ்சிக்கரை...

ரவி said...

///அமைந்தகரையும், அயனாவரமும் பஞ்சாயத்து அல்ல என்பதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். அவை சென்னை மாநகராட்சியின் ஆளுகைக்குட்பட்டவை.///

லக்கி, நன்னி..

Athisha said...

\\ போங்கடா போய் புள்ளகுட்டிவள படிக்கவைங்க...!!! \\

புள்ள குட்டி இல்லைனா என்ன பண்ண...

பக்கத்துவீட்டு புள்ளக்குட்டிங்கள படிக்கவைக்கலாமா

enRenRum-anbudan.BALA said...

ரவி,
எங்க கமெண்ட்டுக்கெல்லாம் பதில் எதுவும் சொல்ல மாட்டீங்களா ????? :)

வாக்காளன் said...

//// உண்மை என்னவென்றால், 80% இந்திய மக்களுக்கு அமெரிக்காவினாலும், பங்குச்சந்தை வீழ்ச்சியாலும்/எழுச்சியாலும் ஒரு எழவு பாதிப்பும் இல்ல என்பது தான் யதார்த்தம் !!! /////

you didnt understand fully
U Mean to say hike in prices doesnt affect indian people.. ?? it does... and the hike in prices is decided by the global market where america play a vital role (though we dont like it)that is the fact

பழமைபேசி said...

இரவியோட ஆதங்கம் இங்க பிறழ்ந்து போச்சுங்றது என்னோட புரிதல். வெளியூரப் பத்தி தெரிஞ்சுக்கத்தான் வேணும். ஆனா, அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. அந்த எல்லைய நிர்ணயிக்குறதுல மாற்றுக் கருத்துக்கள் வரலாம்.

கால அவகாசம் இருந்தா, இந்த இடுகாணொளியக் கொஞ்சம் பாருங்களேன்!

Anonymous said...

அண்ணே நீங்க காதி க்ராப்டில் வேலை செய்றீங்களா அல்லது கதர் கிராம வாரியம் இல்லை பனை குடிசை கிராம பராமரிப்பு வாரியத்துல இருக்கீங்களா?

நீங்களும் ஆதிக்க சக்திகளுக்கு தானே வேலை செய்றீங்க

அண்ணா நீங்களும் இதே ஆதிக்கசக்திகளுக்கு தரவு வேலை பார்த்து தேடு ஜாப்சு என்று ஆதிக்க சக்திகளின் மறைமுக சுரண்டலுக்கு தரகு வேலை செய்தீர்கள்.

அமெரிக்க தேர்தல் செய்தி பிடித்தவனுக்கு அந்த செய்தி பத்தி பேசறான் அதுக்கு உங்களுக்கு ஏன் ஆதிக்க வெறி தலை எடுத்து ஆடுகின்றது. கொண்டை துடிக்கிறது

உங்களுக்கு புடிக்கலைன்னா இல்லை உங்களுக்கு புடிச்சதை எல்லாம் மத்தவங்க பேசனும் படிக்கனும் எழுதனும்னு சொல்றதே ஒரு ஆதிக்க வெறிதானே அண்ணா

அடுத்தவங்களுக்கு புத்தி சொல்ல நீங்க பதிவுகள் காவலரா?

முதலில் நீங்க திருந்துங்கண்ணா .

தோழமையுடன்
நிரஞ்சன்

SurveySan said...

///சொன்னதை நேர்மறையாக புரிந்து கொண்டு பதில் கூறவும், நக்கல் (டாலர் மரம்!) பிறகு செய்யலாம்...////

சொன்னது புரிந்ததனால்தான், பதில் பின்னூட்டம் வந்தது.
'நக்கல்' உடன் பிறந்தது ;)

இங்கே 'ஒபாமா'வைப் பற்றி கும்முபவர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள்தான்.
அவர்களில் 99%க்கு இது மாற்றத்தை கொண்டுவரும்.
அட்லீஸ்ட், tax விஷயங்கள்.
போரை நிறுத்தித் தொலைத்தால் வரும், எக்கானமி பெனிஃபிட்ஸ், இப்படி சில. ரிட்டையர்மெண்ட் சேமிப்ப்பில், 30% கீழே குறைந்துள்ள நிலையில், யார் வந்து நல்லது செய்யறேன்னு சொன்னாலும், நான் கும்மத் தயார் ;)

நம்ம ஊர் 'பூர்வீக' இந்தியர்களுக்கு, there could be indirect benefits.
benefits may be positive or negative - we dont know that yet, but there will be 'some' benefit.

////மேலும், ஒரு அமெரிக்க தேர்தலுக்கு இங்கே இவ்வளவு (நேரத்தை வீணடித்து) கூத்தடிக்க வேண்டுமா என்ன ???/////

இது இன்னும் கொடுமை. உப்புச்சப்பில்லா, சிவாஜி/தசாவதாரத்துக்கு அடிக்கும் கூத்தை விட, உலக அரசியலில் வரும் மாற்றத்தை கும்முவது, தப்பேலேது, என்பது அடியேன் எண்ணம். ;)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....