Wednesday, November 12, 2008

தேசியம் பேசும் சஞ்ஜெய் : இந்த கேள்விக்கு பதில் சொல் !!!


முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..

அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்...

காங்கிரஸ் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய தந்தையார் தான்...பல தேர்தல்களில் என்னுடைய தாயாரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லியவர், தானும் அவ்வண்ணமே வாக்களித்து வருபவர்...

அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...

சஞ்ஜெய்க்கு வைக்கப்படும் கேள்வி !!

முந்தா நேற்றைக்கு நாளிதழ்களை ஆக்ரமித்துள்ள ஒரு செய்தி, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்...

மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...

மீனவர்கள் சிங்கள படையினரின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்..

இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?

கிட்டத்தட்ட 450 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் ஏன் இந்திய மைய அரசு அதன் குடி மக்களை காக்கவில்லை ?

அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ? குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா ?

ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?

பதில் சொல்லுங்கள் சஞ்ஜெய் !!!!!

85 comments:

Anonymous said...

வகைப்படுத்த முடியாமல் போய்விட்டது...சஞ்ஜெயிடம் யாராவது தெரிவிக்கவும்...

ஆட்காட்டி said...

இவங்களைத் தான் எப்பவோ கை கழுவிட்டாச்சே, அப்புறம் எதுக்கு அவங்களுக்கு குரல் குடுக்கணும்?மீனவர்களைச் சொன்னன். இவங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை. கரையில நிண்டு நெத்தலி மீன் பிடிக்க வேண்டியது தானே? இல்லாட்டி கோவணமும் இல்லாமல் மீன் பிடிக்கப் போறது.

பொருளாதார மேதைகள் தான். இந்தியப் பொருளாதாரம் உயர்ந்தா மக்களின் வசதிகள் கூடுமா? இருக்கிற பணக்காரர்களின் இருப்புக் கூடும். குறைஞ்சாலும் அவங்களின்ர தான் குறையும். பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் எப்பவும் உயராது.
அவங்கள் நினைச்சத நடத்துறாங்கள். அவங்கள் நினைச்சதும் நடக்குது. அவங்கட திட்டம் செம்மையாத் தான் போகுது. புலிகள் தான்.

குசும்பன் said...

//பதில் சொல்லுங்கள் சஞ்ஜெய் !!!!!//

மாம்ஸ் காங்கிரசில்ல் இருக்கும் ஒரே தொண்டர் நீங்க விரைவில் தலைவர் ஆகிடுவீங்க என்று எதிர்பார்த்தேன் ஆனா இவ்வளோ சீக்கிரம் ஆகிடுவீங்க என்று நினைக்கவில்லை,

தமிழக காங்கிரஸ் புது தலைவர் சஞ்சய் வாழ்க!!!


(காங்கிரஸா இல்லை காங்கிரசா ஸ்பெல்லிங் தெரியவில்லை:))))) யாராவது ஹெல் செய்யுங்க!!!

குசும்பன் said...

வெண்கலபாலு: இது திட்டமிட்ட நாடகம்
இலங்கை கடற்படையின கடலுக்குள் வந்து பல வருடங்கள் ஆகிறது, வந்தவர்கள் விடுதலை புலிகள்!

குசும்பன் said...

தொங்கபாலூஊஊஊ இந்த மீணவர்கள் வலை ஏறக்கனவே கிழீந்த வலை அதில் பல ஓட்டைகள் இருந்தன! அதை யாரும் கிழிக்கவில்லை மீண் வலை நிறைய ஓட்டைகள் இருந்ததையும் இருப்பதையும் ஆதாரத்தோடு நிருப்பீக்க நான் தயார்!

இது விடுதலைபுலிகள் ஆதரவாளர்கள் நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம்!

குசும்பன் said...

ரோசன்: பப்பப்பே வெவ்வே க்க்ப்பே ரெவ்வ்வே

நிருபர்: முதலில் தேசிய பிரச்சினை பற்றி பேசும் பொழுது வாயில் இருக்கும் பாக்கை துப்பிட்டு பேசுய்யா!!!

வால்பையன் said...

ரெண்டு பேரும் ஒரே கலர் சட்ட போட்டுருக்கிங்களே, நீங்க ரெண்டு பேரும் ஒரே கட்சியா?

குசும்பன் said...

கிழங்கோவன்: நாங்க தமிழ மந்திரி சபையில் இடம் கேட்பதை திசை திருப்பவே இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

மீனவர்களை நிர்வாணம் எல்லாம் செய்யவில்லை சும்மா அவுங்க கடலுக்குள் சன் பாத்து எடுத்துக்கொண்டு இருந்தார்கள் அதை இங்கு செய்தி ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டனர்.

வால்பையன் said...

//முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்.//

வீசுங்க வீசுங்க
அவரும் ரொம்ப நாள பதிவு எழுதாம தான் இருக்காரு

வால்பையன் said...

//நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால்//

நல்ல நகைச்சுவை உணர்வுடன் கூடிய மனிதர்.

வால்பையன் said...

//வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..//

தேசியம்னா இன்னான்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?

வால்பையன் said...

//அக்மார்க் காங்கிரஸ்க்காரர்//

அக்மார்க் நெய் தான் நான் கேள்வி பட்டிருக்கேன். இது என்ன?

ஏழர said...

தேசியம் என்பது பொய்.
இந்தியா பல தேசிய இனங்களின் சிறை...

குசும்பன் said...

//ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ?//

அரசு பணத்தில் இருந்து இருவரும் புளிப்பு முட்டாய் வாங்கி சாப்பிடுகிறார்களாம் அதனாலேயே செலவு அதிகம் ஆகிறதாம்!

வால்பையன் said...

//அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் //

அந்த ஜல்லியை வைத்து தேசிய நெடுஞ்சாலை போடமுடியுமா?

Anonymous said...

குசும்பா அதர் ஆப்ஷன் இல்லாதபவே இப்படியா ? வயிறு வலிக்குதுப்பா !!!

வால்பையன் said...

//இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?//

ராஜபக்‌ஷே இங்கே எதுக்கு வந்துருக்காரு?
அப்படியே சிறை படுத்திருவோமா?

வால்பையன் said...

//அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ?//

சோத்துக்கு இல்லாட்டியும் ஏப்பம் மட்டும் பலமா விடுவோமே நாம தான்

குசும்பன் said...

//மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...//

சீர்காழி: இராணுவம் கடலில் சும்மாக இருப்பதால் அவர்களுக்கு வலைவீசி மீன் பிடிக்க கொடுத்த டிரெயிங் அது அதை போய் கடலில் எறிந்துள்ளனர் என்று திரித்து செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள், இலங்கை இரானுவத்துக்கு மீன் பிடிக்க கத்துகொடுப்பதுக்கு வாங்கும் டிரைனிங் பீஸ் வகையில் அரசுக்கு ரூ1000 கோடி வருமானம்!

வால்பையன் said...

//ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள்//

இன்னுமா இந்த உலகம் அவங்கள நம்புது

குசும்பன் said...

//வகைப்படுத்த முடியாமல் போய்விட்டது...சஞ்ஜெயிடம் யாராவது தெரிவிக்கவும்...//

காங்கிரஸ் ஆட்கள் தான் யாராவது சொல்லனும் இருக்கும் ஒரே ஆளுக்கு நீங்க லெட்டர் எழுதிட்டீங்க, வேறு யாரு சொல்வது?

மன்மோகன் வேற டூர் போய் இருக்கிறாராம் வந்ததும் சொல்லுவார்!!!

☀நான் ஆதவன்☀ said...

//தமிழக காங்கிரஸ் புது தலைவர் சஞ்சய் வாழ்க!!!//


ஆகா காங்கிரஸில் இருக்கிற கோஷ்டி பத்தாதுன்னு இன்னோரு புது "சஞ்சய் கோஷ்டி"ன்னு ஒன்னு ஆரம்பிச்சு கொடுத்திடுவீங்க போல...

குசும்பன் said...

சு.சாமி: அன்று நடந்தது ஒரு திட்டமிட்ட நாடகம் இலங்கைக்கு ஆதரவாக போராடும் சினிமா கலைஞர்கள் போட்ட நாடகம் அது பல முண்ணனி நட்சத்திரங்கள் போட்ட மாறுவேடம் அவர்கள் மேக்கப் போட்டு கடலுக்குள் போன வீடியோ காட்சி எல்லாம் வீடியோ இருக்கிறது!

Unknown said...

//தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்...

மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...

மீனவர்கள் சிங்கள படையினரின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்..//

Ravi, I think it is easy to comment from Bangalore about the incident.

First there are various occasions in which these fisherman have crossed Indian boundary (Read 2 weeks back reporter for the same)

Second here are various occasions in which these fisherman have smuggled petrol, diesel and weapons to Srilanka.

If it is not of either cause why would SL army should attack fisherman. Think logically.

Considering the current scenario I am sure they would want to have good relationship with Indians, if thats the case why would they want to create hatred by attacking Indian fisherman sir.?

There are many occasions in which LTTEs have attacked indian fisherman and have put the blame on SL army.

To stop this only we should have a joint patrol of Indian and SL army

//ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?//


It is just because of them the value of our currency is not dropping in global market, otherwise we would have been like a country in Africa where a loaf of bread costs 50000$.

Tell sir, me how many indian companies have announced that they are bankrupt.?

வால்பையன் said...

//நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?//

மக்கள் பணம் சுவிஸ் பேங்கில் கிடந்தால் வீங்காமல் என்ன செய்யும்

குசும்பன் said...

திருட்டினசாமி: போனியா அம்மா இந்த பிரச்சினையில் எல்லோரும் ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்க நான் என்ன சொல்ல!!! கலைஞரிடம் கேட்டு சொல்லவா?

போனியா: நீங்க ஒருவர்தான் உண்மையான காங்கிரஸ் ஆள் உங்க பொருமையை மெச்சினோம் இன்னும் இரு தினங்களில் உங்களை மீண்டும் தலைவர் ஆக்கிவிடுகிறேன்!!!

குசும்பன் said...

சரி பதிவை அப்படியே அலேக்கா ஹைசாக் செய்து சீரியஸ் பதிவாக்க ஆட்கள் வருகிறார்கள் போல அதனால்
மீ தி எஸ்கேப்பு:))

வெண்தாடிதாசன் said...

இதோ தேசியவாந்திகளின் பதில்கள்
அ. அடிவாங்கியவர்கள் இந்தியர்கள் கிடையாது
ஆ. அடித்தவர்கள் இலங்கை ராணுவத்தினர் இல்லை
இ. மீனவர்களை அடித்தவர்கள் விடுதலை புலிகள்
ஈ. அவர்கள் மீனவர்கள் இல்லை.
உ. அவர்கள் புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் ஏஜண்டுகள்.

வெண்தாடிதாசன் said...

//Ravi, I think it is easy to comment from Bangalore about the incident.//

ஆஹா நம்ம ஸ்ரீலங்கா ரத்னா வந்துட்டாரய்யா வந்துட்டாரு.

stanjoe அய்யா, நீங்க எங்க இருக்கீங்க?. இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் எல்லையிலா??

Anonymous said...

///அந்த ஜல்லியை வைத்து தேசிய நெடுஞ்சாலை போடமுடியுமா?///

எக்ஸலண்ட் ட்ரை வால் பையா...சூப்பர்...

யோவ் நான் சீரியசா கேட்டிருக்கேன் இப்படி வந்து காமெடியாக்கிட்டீங்களே...

Anonymous said...

ஸ்டேஞே..

இப்படி ஒரு ஜல்லி வரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தேன்...

மீனவர்கள் பார்டரை கிராஸ் பண்ணான், அவன் சுட்டான் என்று...

டேய் பார்டரை கிராஸ் பண்ணா அரஸ்ட் பண்ணி உங்கள் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்...

உங்கள் நீதி மன்றம் என்ன தண்டனை கொடுக்குதோ அதை ஏற்றுக்கொள்கிறோம்...

ஒரு உயிரை உடனே எடுக்க உனக்கு எவண்டா அதிகாரம் கொடுத்தது டோமரு ?

450 மீனவர்கள் செத்திருக்கான் அவன் பொண்டாட்டிங்க தாலியறுத்திருக்காளுங்க...

ஒரு நாதாரி இங்க வந்து வெட்டி நாயம் பேசுது...

செருப்பாலடி...

Anonymous said...

///Tell sir, me how many indian companies have announced that they are bankrupt.?///

விப்ரோவுலயும் சத்யத்துலயும் 10 ஆயிரம் பேருக்கு மேல தூக்கியிருக்கான்...

அவன் லோன் இ.எம்.ஐ நீயா கட்டுற ? அதனால தான் வெட்டி நாயம் பேசுற...

நேத்துகூட ஒரு இண்வெஸ்ட்மெண்ட் பேங்கின் பெங்களூர் கிளையில் 200 பேரை வேலைய உட்டு நீக்கியிருக்கானேடா டோமரு ?

அஞ்சு வருசமா ஆண்டானுங்க வேட்டியும், தொப்பியும்...1.72 பில்லியன் டாலர் கடன்...

பாக்கிஸ்தான்ல 20 ரூபாய் விக்கிற பெட்ரோல் இங்க 60 ரூவா...

யாரை ஏமாத்த பாக்குறீங்க ?

Anonymous said...

///தேசியம் என்பது பொய்.
இந்தியா பல தேசிய இனங்களின் சிறை...////

எளிதான வார்த்தைகளில் எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க...

தலைவணங்குகிறேன்...

Anonymous said...

///There are many occasions in which LTTEs have attacked indian fisherman and have put the blame on SL army. ///

வெண்தாடி தாசன் அவர்களே...நீங்க ஒரு தீர்க்க தரிசி...பாருங்க...நீங்க சொல்லிய பாயிண்டுகளை அப்படியே புடிச்சு ஜல்லியடிக்கிறார் ஸ்டேண்ஜோ...

Anonymous said...

எங்கே சஞ்ஜெய், எங்கே சஞ்ஜெய் !!!

Unknown said...

//விப்ரோவுலயும் சத்யத்துலயும் 10 ஆயிரம் பேருக்கு மேல தூக்கியிருக்கான்...//

This is an annual exercise in which every company lay off people who are worst performers.
(Probabaly which LG software does not do )

Just that media is blowing it out.

.


//அஞ்சு வருசமா ஆண்டானுங்க வேட்டியும், தொப்பியும்...1.72 பில்லியன் டாலர் கடன்...

பாக்கிஸ்தான்ல 20 ரூபாய் விக்கிற பெட்ரோல் இங்க 60 ரூவா...

யாரை ஏமாத்த பாக்குறீங்க ? //

It is like asking why the price of sal is so less in Tuticorin and asking why the price of Fish is so high in Bangalore.

You could have compared the proce of basmati rice instaed of petrol

Sanjai Gandhi said...

:))

வால்பையன் said...

stonjoe
பெங்க்ளூர்ல மீன் விலை அதிகமாயிருக்குறதுக்கு காரணம் டீசல் தான், தூத்துகுடியிலிருந்து அங்க கட்ட வண்டியிலயா கொண்டுவர முடியும்.

கச்சா எண்ணையின் விலை குறைந்தும் இன்னும் பெட்ரோல் விலையை குறைக்காமல் ஆயில் கம்பெனிகள் நட்டத்தில் இருகின்றன என்று ஆயில் கம்பெனிகளுக்கு வருடி விடும் அரசு நமக்கு தேவை தானா?

Sanjai Gandhi said...

இங்க பாருங்கோண்ணா.. எனக்கு இந்த தேசிய வெங்காயம் எல்லாம் பேசனும்னு ஆர்வமும் இல்ல.. விருப்பமும் இல்ல.. சில இந்தியா மீது எனக்கு இயற்கையாவே இருக்கும் கரிசனத்தால தனித் தமிழ்நாடு கேக்கறவங்களையும் அதை ஆதரிக்கிறங்கவங்களையும் எதிர்த்து பேசறேன். அவ்ளோ தான். என்னைப் பொறுத்த வரையில் வைகோ, மு.கண்ணப்பன், ராஜ் தாக்கரே, மோடி, எடியுரப்பா, பால் தாக்கரே எல்லாரும் ஒன்னு தான்....

தமிழக மீனவர்கள் தாக்குதலை பொறுத்தவரையில் அவர்கள் எல்லை மீறுப் போய் மீன் பிடித்திருந்தாலும் சுடுவதோ, தாக்குவதோ ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காக இலங்கை மீது போர் தொடுத்தாலும் ஆதரிப்பேன்.

இந்த தேசிய புடலங்காய்களை பற்றி எலலாம் பேசுவதால் என் நேரம் தான் வீணாகிறது. மொக்கை போட்டு அழையுங்கள். கும்மியடிக்கிறேன்... அது என் டென்ஷனை குறைக்க பயன்படும். ஆனா இந்த தேசிய புண்ணாக்கு எனக்கு ஒரு மயிருக்கும் பயன்படாது. ஆளை விடுங்க.

மிஸ்டர் ரவி ஐயங்கார் .. என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :))

காங்கிரசை பற்றி எழுதினால் கூடி கும்மியடிக்க குசும்பன் இருக்கிறார். என்னை விடுங்க சாமியோவ். :)

Anonymous said...

///This is an annual exercise in which every company lay off people who are worst performers.
(Probabaly which LG software does not do )///

என்னாது, வருசா வருசம் கம்பெனிங்க லே ஆப் பன்றானுங்களா ?

இது ஒரு ஆனுவல் எக்ஸஸைசா ?

அடப்பாவி ? இங்கேயே உமது டவுசர் அவிழ்ந்து விழுவது தெரியவில்லையா ?

இதை வேறு எங்கேயும் போய் சொல்லி வைக்காதீரும் ? ஏன் என்றால் ஐ.டி மக்கள் அதிகம் உலவும் இடம் இது...

எல்லோருக்கும் தெரியும், எந்த கம்பெனியும் வருசா வருசம் லே ஆப் செய்வதில்லை என்று...

///It is like asking why the price of sal is so less in Tuticorin and asking why the price of Fish is so high in Bangalore.

You could have compared the proce of basmati rice instaed of petrol///

இது சரியான காமெடி...

பாக்கிஸ்தான் என்ன துபாயா ? அங்கே பெட்ரோலா எடுக்கிறான், அவன் கம்மியா கொடுப்பதற்கு ?

சர்வதேச அளவில் கச்சா எண்ணை வியாபாரம் நடக்கிறது, ஒரு பேரல் இவ்வளவு என்று உலகமெங்கும் அறிவிக்கப்படுகிறது...

இது ஒன்றும் உப்பு வியாபாரம் அல்ல !!!!

///You could have compared the proce of basmati rice instaed of petrol///

பாஸ்மதி ரைசா ? பிரதர், நான் மோட்டா அரிசி கஞ்சி குடிச்சும், சத்துணவு சோறு துன்னும் வளந்தவன்...

நான் எப்படி பாஸ்மதி ரைசை கம்பேர் பண்ணமுடியும் ? ஒருவேளை நீங்க கம்பேர் பண்ணி எழுதுங்க !!!

Anonymous said...

//பெங்க்ளூர்ல மீன் விலை அதிகமாயிருக்குறதுக்கு காரணம் டீசல் தான், தூத்துகுடியிலிருந்து அங்க கட்ட வண்டியிலயா கொண்டுவர முடியும்.///

வால்பையன்...
அல்டிமேட்...

///கச்சா எண்ணையின் விலை குறைந்தும் இன்னும் பெட்ரோல் விலையை குறைக்காமல் ஆயில் கம்பெனிகள் நட்டத்தில் இருகின்றன என்று ஆயில் கம்பெனிகளுக்கு வருடி விடும் அரசு நமக்கு தேவை தானா?///

நிருபர்கள் கேட்கிறார்கள், கச்சா எண்ணை விலைதான் குறைந்துவிட்டதே,இப்போது பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் என்ன என்று...

பிரதமர் சொல்கிறார், பெட்ரோலுக்கு கம்பெனிகளி 4 ரூவாய் 75 பைசா லாபம் சம்பாதிப்பது என்னவோ உண்மைதான்...ஆனால் டீசலுக்கு 95 பைசா நட்டத்தை சந்திக்கின்றன என்று...

4.75 எங்கே 95 எங்கெ ? பிரதமர் கணக்கை மறந்துவிட்டாரா என்ன ?

Anonymous said...

///இங்க பாருங்கோண்ணா.. எனக்கு இந்த தேசிய வெங்காயம் எல்லாம் பேசனும்னு ஆர்வமும் இல்ல.. விருப்பமும் இல்ல.. சில இந்தியா மீது எனக்கு இயற்கையாவே இருக்கும் கரிசனத்தால தனித் தமிழ்நாடு கேக்கறவங்களையும் அதை ஆதரிக்கிறங்கவங்களையும் எதிர்த்து பேசறேன். அவ்ளோ தான். என்னைப் பொறுத்த வரையில் வைகோ, மு.கண்ணப்பன், ராஜ் தாக்கரே, மோடி, எடியுரப்பா, பால் தாக்கரே எல்லாரும் ஒன்னு தான்....

தமிழக மீனவர்கள் தாக்குதலை பொறுத்தவரையில் அவர்கள் எல்லை மீறுப் போய் மீன் பிடித்திருந்தாலும் சுடுவதோ, தாக்குவதோ ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காக இலங்கை மீது போர் தொடுத்தாலும் ஆதரிப்பேன்.

இந்த தேசிய புடலங்காய்களை பற்றி எலலாம் பேசுவதால் என் நேரம் தான் வீணாகிறது. மொக்கை போட்டு அழையுங்கள். கும்மியடிக்கிறேன்... அது என் டென்ஷனை குறைக்க பயன்படும். ஆனா இந்த தேசிய புண்ணாக்கு எனக்கு ஒரு மயிருக்கும் பயன்படாது. ஆளை விடுங்க.

மிஸ்டர் ரவி ஐயங்கார் .. என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :))

காங்கிரசை பற்றி எழுதினால் கூடி கும்மியடிக்க குசும்பன் இருக்கிறார். என்னை விடுங்க சாமியோவ். :)////

சஞ்ஜெய் தென்கலையாரே...

நன்றி !!! அப்பாலிக்கா கும்மலாம்...பொழப்பை பார்க்கவும்...இன்னைக்கு இன்னொருத்தன் சிக்கிட்டான்...இப்பத்தான் மூத்திர சந்துக்கு நானும் வால்பையனும் தள்ளிக்கினு போறோம்...நாளைக்கு சந்திப்போம்...

Anonymous said...

///இங்க பாருங்கோண்ணா.. எனக்கு இந்த தேசிய வெங்காயம் எல்லாம் பேசனும்னு ஆர்வமும் இல்ல.. விருப்பமும் இல்ல.. சில இந்தியா மீது எனக்கு இயற்கையாவே இருக்கும் கரிசனத்தால தனித் தமிழ்நாடு கேக்கறவங்களையும் அதை ஆதரிக்கிறங்கவங்களையும் எதிர்த்து பேசறேன். அவ்ளோ தான். என்னைப் பொறுத்த வரையில் வைகோ, மு.கண்ணப்பன், ராஜ் தாக்கரே, மோடி, எடியுரப்பா, பால் தாக்கரே எல்லாரும் ஒன்னு தான்....

தமிழக மீனவர்கள் தாக்குதலை பொறுத்தவரையில் அவர்கள் எல்லை மீறுப் போய் மீன் பிடித்திருந்தாலும் சுடுவதோ, தாக்குவதோ ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காக இலங்கை மீது போர் தொடுத்தாலும் ஆதரிப்பேன்.

இந்த தேசிய புடலங்காய்களை பற்றி எலலாம் பேசுவதால் என் நேரம் தான் வீணாகிறது. மொக்கை போட்டு அழையுங்கள். கும்மியடிக்கிறேன்... அது என் டென்ஷனை குறைக்க பயன்படும். ஆனா இந்த தேசிய புண்ணாக்கு எனக்கு ஒரு மயிருக்கும் பயன்படாது. ஆளை விடுங்க.

மிஸ்டர் ரவி ஐயங்கார் .. என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :))

காங்கிரசை பற்றி எழுதினால் கூடி கும்மியடிக்க குசும்பன் இருக்கிறார். என்னை விடுங்க சாமியோவ். :)////

சஞ்ஜெய் தென்கலையாரே...

நன்றி !!! அப்பாலிக்கா கும்மலாம்...பொழப்பை பார்க்கவும்...இன்னைக்கு இன்னொருத்தன் சிக்கிட்டான்...இப்பத்தான் மூத்திர சந்துக்கு நானும் வால்பையனும் தள்ளிக்கினு போறோம்...நாளைக்கு சந்திப்போம்...

Sanjai Gandhi said...

முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன்..

என் பதிவுக்கு இணைப்பு தராமல் என் பெயரை மட்டும் பயன்படுத்தி விளம்பரம் தேடிக்கும் தகரநடுங்குலை ஐய்யங்கார் ரவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

( இப்போ தான் ஒரு வழியா என் ப்ளாக்ல விளம்பரம் போட எல்லாம் அனுமதி கேட்டிருக்காங்க.. இன்னும் கொஞ்சம் பிரபலமாக்குங்கய்யா.. கமிஷன் தரேன்.. :)) )

நவநீதன் said...

இந்த அரசியல் வியாதிகளுக்கு தேர்தல் வந்தால் தான் இந்த மீனவர்களை பற்றி ஞாபகம் வரும்...
தேர்தல் வந்ததும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதி கொடுத்து ஓட்டை லபக்கி கொண்டு போய் விடுகின்றனர். மிஸ்டர் அப்பாவி பொது ஜனம் ரொம்ப பாவம்.
இதில் காங்கிரசை மட்டும் குறை சொல்ல முடியாது. எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

@குசும்பன்....
ரூம் போட்டு சிரிக்கலாம்னு இருக்கேன்...

Sanjai Gandhi said...

எனக்கொரு டவுட்டு..
ஏன் இதை எல்லாம் எதிர்த்து வைகோவும் ராமதாஸ் கட்சிக்காரங்களும் திருமாவளவனின் ரவிக்குமாரும் (அதான் ஒருத்தர் எஸ் ஆய்ட்டாரே :)) ) தன்க்கள் பதிவிகளை ராஜினாமா செய்யவில்லை? :(

என்னாது .. எல்லாரும் ஜார்ஜ் ந்பெர்னாண்டஸ் ஆக முடியாதா?

அதும் சரிதான்.. வைகோ என்றாலே வாய்ச் சொல்லில் வீரன் என்று எல்லா தமிழ் அகராதியிலும் இருக்காமே.. அய்யோ நெசமாவா? :(

வால்பையன் said...

//அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். //

மறுக்கா கூவுவுவுவுவு....

Sanjai Gandhi said...

இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்து வகைப் போராட்டத்தையும் நடத்தியவர்கள் ஏன் அதே உக்கிரத்துடன் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதை கண்டித்து தொடர் போராட்டம் எதுவும் நடத்தவில்லை?

ம்ம்.. பாவம் அவர்களா மல்டிப்ளக்ஸ்களில் நூறுகளை இரைத்து சினிமா பார்க்கிறார்கள்? அல்லது தேர்தலுக்கு லட்சலட்சமாய் நிதி தருகிறார்களா? :)

போலிகளை கண்டு ஏமாறாதீர்.. இவர்களுக்கு வேற பல கிளைகளும் உண்டு.. :))

வால்பையன் said...

//போலிகளை கண்டு ஏமாறாதீர்.. இவர்களுக்கு வேற பல கிளைகளும் உண்டு.. :)) //

கோவையில இருக்கா?

tommoy said...

முரணாப் புகர்ஜி - இந்தியா வந்த ராஜபக்ஷே, ரொம்ப தெளிவா சொல்லிட்டார் , சிங்கள கடற்படை கடலுக்குள் வந்தே வருஷம் 15 ஆகுதாம்.. அதனால, இது புலிகளின் திட்டமிட்ட சதியாம்.. பாராளுமன்றம் எதிரில் இருக்கும் பெருமாள் கோவிலில் அவர் கற்பூரம் அடிச்சு சத்தியம் பன்னிட்டார்.. அதை நாங்கள் முழுமையா நம்பறோம்..

அப்புறம்.. இதுவரைக்கும் செத்தது மீனவர்கள் இல்லைனு சந்தேகபபடறோம்.. நடுக்கடல்ல குளிக்க போனவங்க சிலபேரு நீச்சல் தெரியாம செத்திருக்கலாம். உளவுத்துறை விசாரிச்சுகிட்டு இருக்கு.

இது சம்பந்தமா கலைஞர்ஜீ ய அடுத்த வாரம் சந்தித்து விளக்கம் கொடுப்பேன்..

மோனியா - அலோ அலோ என்ன அவசரம்... இந்த மேட்டருக்கு கலைஞர் அப்பாவ பார்க்க சொல்லி நான் சொன்னேனா. நான் சொல்லாம நீங்களா எப்படி முடிவு எடுக்கலாம்..
அருனாசலப்பிரதேசத்துல ஆக்கிரமிப்பு பன்ன சீனா ரெடியாகுது.. அது என்னனு பாருங்க.. அத விட்டுட்டு நான் சொல்லாமயே கலைஞர பார்க்குறேன்னு கிளம்ப்பாதீங்க.. சரி சரி, நான் சொல்றேன்.. அடுத்த வாரம் கலைஞர் அப்பாவ நேர்ல பார்த்து விளக்கம் கொடுத்துடுங்க.. சரியா..

Sanjai Gandhi said...

//ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?//

தூங்குபவர்களை எழுப்பலாம்.. தூங்குவது போல் நடிப்பவர்களை?

பாஜக ஆட்சியில் இருக்கும் போது இது போன்ற பெரிய பிரச்சனைகள் எதும் இல்லாமலே பிப்ரவரி 10, 2001ல் விலையேற்றம் 8.77 சதவீதமாக இருந்தது. ( 1998 மார்ச் முதல் 2004 மே வரை பிஜேபி ஆட்சி). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. பிஜேபி ஆட்சியில் இருந்து இறங்கிய இரண்டு மாதத்தில் ஜூலை 31, 2004ல் பணவீக்கம் 8.02. பாஜகவின் செயல்பாடு இந்த லட்சனத்தில் தான் இருந்தது.

காங்கிரஸ் ஆட்சி பொறுபேற்ற பின் விலையேற்றம் வெகுவாக குறைந்தது. டிசம்பர் 2007ல் 3.89 சதவீதமாகவும் ஜனவரி 2008ல் கூட 4.26 சதவீதமாகத் தான் இருந்தது. பிறகு அநியாயத்திற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றமும் உயர்ந்தது. இதெல்லாம் தெரிந்தும் மூடத் தனமாக பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும் செயல்படுகிறார்கள்.

Sanjai Gandhi said...

உலக அளவில் விலையேற்றம் :

துருக்கி - 10.4 - மே 2008
வெனிசுகா - 29.3 - ஏப்ரல் 08
சவூதி அரேபியா - 10.5 - ஏப்ரல் 08
சீனா - 8.5 - ஏப்ரல் 08
ரஷ்யா - 15.1 - மே 08
இந்தோனேஷியா - 10.4 - மே 08
பாகிஸ்தான் - 19.3 - மே 08
சிங்கப்பூர் - 7.5 - ஏப்ரல் 08
தாய்லாந்து - 7.6 - மே 08
அர்ஜெண்டினா - 8.9 - ஏப்ரல் 08
தெ. ஆப்பிரிக்கா - 11.1 - ஏப்ரல் 08
இந்தியா - 7.57 - ஏப்ரல் 08, 8.75 - மே 08

Sanjai Gandhi said...

//காங்கிரஸ் ஆட்சி பொறுபேற்ற பின் விலையேற்றம் வெகுவாக குறைந்தது. டிசம்பர் 2007ல் 3.89 சதவீதமாகவும் ஜனவரி 2008ல் கூட 4.26 சதவீதமாகத் தான் இருந்தது.//

ரவி ஐயங்கார்.. அப்போவும் இதே பிரதமர் தான்.. இதே நிதி அமைச்சர் தான்.. சும்மா பொரளி பேசிட்டு இருக்காதீரும் ஓய்..

வால்பையன் said...

கும்மி மட்டும் தான் அடிப்பேனு சொல்லிட்டு விஜயகாந்த் மாதிரி எப்படி புள்ளிவிபரம் கொடுக்குறாரு பாருங்க!

விலைவாசி குறைந்ததாக சொல்லப்படுவது ஒரு மாயை
இன்றும் மக்கள் அடிப்படை வசதிக்கு அல்லோலப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்

தமிழன்-கறுப்பி... said...

புரியல...:)

Sanjai Gandhi said...

வாலு...

//ravi.antone: ஹே
நாட் ரியலீ சீரியஸ் மேன்
இட்ஸ் ஆல் ஜாலி
ஜாலிலோ ஜிம்கானா//

இப்படி வந்து ஒரு பாசக்கார புள்ள சொல்லும் போது நாம் எப்டி வெரும் கும்மியோட நிறுத்தறது.. எது வேணாம்னு சொல்றாங்களோ.. அதைத் தான நாம செய்வோம்.. :))

தமிழன்-கறுப்பி... said...

ஆமா இந்த அரசியல் தெரியாதவங்க இதுல கலந்து வெளையாட முடியாதா...

வால்பையன் said...

//ஆமா இந்த அரசியல் தெரியாதவங்க இதுல கலந்து வெளையாட முடியாதா...//

நானெல்லாம் தெரிஞ்சிகிட்டா விளையாடிகிட்டு இருக்கேன்

வால்பையன் said...

59

வால்பையன் said...

60 வது கும்மிக்கு வால்பையனுக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

இது நமக்கு நாமே வாழ்த்து சொல்லும் திட்டம்

வால்பையன் said...

அரசியவாதிகள் அவங்களே போஸ்டர் அடிச்சிகிறது இல்ல அது மாதிரி

Anonymous said...

கருப்பி தமிழன் ஒய் நாட் ?

உங்களுடைய திறமையை காட்டத்தானே இந்த பதிவு...

அட்லீஸ்ட் மீ த சிக்ஸ்ட்டி போர் அப்படீன்னாவது போட்டுட்டு போங்க...

Athisha said...

\\ ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ? \\

ஒரு உறைல இரண்டு கத்தி இருந்தா அப்படித்தான்னு ஒரு மேதாவி சொன்னாரு...

ஆனா ரெண்டு கத்தியும் மொன்ன கத்தியா இருந்தாலும் இப்படித்தானாம்

Athisha said...

\\
இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?
\\

இல்லை .. அதுலாம் கேக்கமுடியாது... கேட்டா இந்திய தேசிய இறையாண்மை கெட்டுடும்..

உனக்கு பசிச்சா பிச்சை எடு என்ன மயிருக்கு கடல்ல இறங்கி மீன் புடிக்கற...

அடுத்த தேர்தல்ல ஓட்டு போட மட்டும் மறந்திடாதே கைச்சின்னம்.. கிகி

Athisha said...

\\ அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ? குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா ? \\

உங்க கேள்வி எப்படி தெரியுமா இருக்கு ரஜினி படத்தில எதுக்கு ஸ்ரேயா _____ (இதில் எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் நான் தொப்புளையும் தொடையையும்தான் குறிப்பிடுகிறேன் ) காட்டுறாங்கற மாதிரில இருக்கு...

படம் ஓட வேண்டாமா பாஸூ

கொழுவி said...

பிளீச்சிங் பவுடர் தான் ஏதோ நிர்வாணப் படுத்த வேண்டும் என எழுதியிருந்தார். அதை சிறிலங்கன் நேவி படித்திருக்கலாம்.

சுட்டால் - நீ எதுக்கு அவன் எல்லைக்குள்ளே போகிறாய் என கதையளப்பவர்கள் - நிர்வாணமாக்கினால் நீ எதுக்கு கோவணம் கட்டிட்டு போறாய் என கேட்பார்களாக்கும்.

புலிகளுக்கும் மீனவர்களுக்குமிடையிலான உறவும் - மீனவர்களை புலிகள் ஏன் பகைத்துக் கொள்ளக் கூடாதென்றும் - மற்றெல்லோரையும் விட கரையோரத் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே புலிகள் மீனவர்களை சுட்டார்கள் என்ற பருப்பெல்லாம் அவர்களிடத்தில் வேகாது.

அதிலும் கிட்டத்தட்ட மன்னார் கரையோரம் முழுவதையும் சிறிலங்கன் ஆர்மி கைப்பற்றி விட்ட பிறகு அந்த கடலில் புலிகளின் நடமாட்டம் இருக்கும் என நம்புபவன் சூனியம்.

ஜோசப் பால்ராஜ் said...

//ஒரு உறைல இரண்டு கத்தி இருந்தா அப்படித்தான்னு ஒரு மேதாவி சொன்னாரு...

ஆனா ரெண்டு கத்தியும் மொன்ன கத்தியா இருந்தாலும் இப்படித்தானாம் //

ரெண்டு தானா? மூணாவது கத்திய விட்டுட்டீங்க? MMC கூட்டணிங்க அது.
மன்மோகன் சிங்,மாண்டேக் சிங் அலுவாலியா, சிதம்பரம்னு மூணு பொருளாதார மேதைகள் இருக்காங்க இங்க.

அது எப்டிங்க அந்த சிங்கள ரத்னா இப்டி வெக்கமேயில்லாம எல்லா இடத்துலயும் போயி ஒரேக் கதைய திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்காரு? என்னா சென்மமோத் தெரியல.

நாகு (Nagu) said...

ரவி,

சங்கருக்கு உதவமுடியுமா என்று பாருங்கள்...

http://saveshankar.com

Sanjai Gandhi said...

//அது எப்டிங்க அந்த சிங்கள ரத்னா இப்டி வெக்கமேயில்லாம எல்லா இடத்துலயும் போயி ஒரேக் கதைய திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்காரு? என்னா சென்மமோத் தெரியல. //

ஹிஹி.. உன்ன மாதிரியேவா இருக்கும் மாப்ள :)) நீயும் எல்லா எடத்துலையும் ஒரே மாதிரி தான வாந்தி எடுக்கிற? அப்புறம் அவரை மட்டும் சொன்னா எப்படி மச்சி? :))

நல்லதந்தி said...

//முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..

அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்//

சரியான தேர்வு!.எனென்றால் தற்போது தேசியம் காங்கிரஸ் கைகளில் தான் இருக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க அங்கே காவிரிப் பிரச்சனையில் தமிழக எதிர்ப்பு நிலையில் கர்நாடக தேசியம்.கேரளாவில் சென்ற காங்கிரஸ் ஆட்சியின் போது வேண்டும் என்றேமுல்லைப் பெரியார் பிரச்சனையைக் கிளப்பி விட்டு அந்தப் பிரச்சனையில் தமிழக எதிர்ப்பு நிலையில் கேரள தேசியம்.ஆந்திராவில் பாலாறுப் பிரச்சனையில் தமிழக எதிர்ப்பு நிலையில் ஆந்திர தேசியம்.இப்போது மகாரஸ்டிராவில் ராஜ்தாக்ரேவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால் எங்கே மகாரஸ்டிராவில் ஓட்டு பறி போய்விடுமோ என்ற பயத்தில் மகாராஸ்டிர தேசியம்.இப்படி பல தேசியத் திட்டங்களை வைத்திருப்பது காங்கிரஸ் மத்திய அரசாங்கம்.

தாக்கப் பட்ட தமிழக மீனவர்களுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லையென்றால்,அடுத்த தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கப் போகிறதா?.இல்லை.அட..காங்கிரஸுக்கு எதாவது ஓட்டு வங்கி தமிழகத்தில் இருக்கிறதா?.இல்லை.
இப்படி தமிழர்களால் காங்கிரஸுக்கு எந்தப் பயனும் இல்லாத போது எதற்க்கு காங்கிரஸ் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
இப்படிப் பட்ட காங்கிரஸ் அரசை வைத்துக் கொண்டு “இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?” என்று கேள்வி கேட்கிறீர்களே?..அடப் போங்க ரவி சார்!.சும்மா தமாஷ் பண்ணாதீங்க!

Anonymous said...

//ஆயில் கம்பெனிகளுக்கு வருடி விடும் அரசு நமக்கு தேவை தானா?//

என்னமோ ஆயில் கம்பனி எவனோ அப்பன் வீட்டு சொத்து மாதிரி எழுதுறீங்க. இந்தியாவுல பெட்ரோல் விக்குற கம்பனி எல்லாமே கவர்மென்ட் கம்பனிதானே. எல்லா லாபமும் கவருமென்ட்டுக்குதானே போகுது.

வால்பையன் said...

கேக்கவே புல்லரிக்குது தெனாலி
ரிலையன்ஸ் கவர்மெண்ட் கம்பெனின்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்.

நல்லாருங்க

விலெகா said...

அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...

ஹி,ஹி,ஹி ஏன் அப்புடி செஞ்சீங்க?, அந்த ஒரே ஒரு தப்பை மட்டும் ஏன் செஞ்சீங்க?

ஜோசப் பால்ராஜ் said...

//ஹிஹி.. உன்ன மாதிரியேவா இருக்கும் மாப்ள :)) நீயும் எல்லா எடத்துலையும் ஒரே மாதிரி தான வாந்தி எடுக்கிற? அப்புறம் அவரை மட்டும் சொன்னா எப்படி மச்சி? :))
//

நாங்க எடுக்குறது வாந்தின்னா உங்களுக்கு எல்லாம் என்ன பேதியா மாப்ள?

Anonymous said...

//ரிலையன்ஸ் கவர்மெண்ட் கம்பெனின்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்.//

எனக்கு சத்தியம உங்க கணக்கு புரியல. மக்களுக்கு குறைந்த விலையில் அரசு கம்பனிகள் விற்பதால் லாபம் இல்லை என ரிலையன்ஸ் சில்லறை விலையை மூடிவிட்டதாக ஞாபகம்.ஆக அரசு மட்டும்தாம் மக்களுக்கு பெட்ரோல் விக்குது. பிற இடங்களில் குறைந்த விலையில் வாங்காமல் அரசு ரிலையன்ஸ்யிடம் அதிக விலையில் வாங்கி மக்களிடம் விக்குதா? இதற்கு ஆதாரம் உண்டா?

vijay tiruppur said...

hello,
ravi, iam vijay fm tiruppur. all yr articles r very superp,,,,

வால்பையன் said...

ரிலியன்ஸின் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையமே மற்ற பெட்ரோல் நிறுவனங்களுக்கும் பெட்ரோல் சப்ளை பண்ணுதுன்னு உங்களுக்கு தெரியாதா!
ரிலையன்ஸ் கச்சா எண்ணையை வாங்குறான், இங்கே பெட்ரோலா விக்கிறான். அவன் விற்க்கும் விலை அரசால் நிர்னயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை

Anonymous said...

//ரிலியன்ஸின் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையமே மற்ற பெட்ரோல் நிறுவனங்களுக்கும் பெட்ரோல் சப்ளை பண்ணுதுன்னு உங்களுக்கு தெரியாதா!
ரிலையன்ஸ் கச்சா எண்ணையை வாங்குறான், இங்கே பெட்ரோலா விக்கிறான். அவன் விற்க்கும் விலை அரசால் நிர்னயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை//

அது தெரியும் சார், மற்ற ரிபைனரிகளை விட அதிக விலையில் விற்று ரிலையன்ஸ் அரசினை சுரண்டுகிறதா என்பது என் சந்தேகம். அவன் அதிகபட்ட விலைக்கு விற்பதில் பிரச்சனை இல்லை. அவன் வியாபாரி, அவன் அப்படித்தான் செய்வான். ஆனால் அரசு பிற வெளிநாட்டு அல்லது உள்நாட்டு கம்பனிகளிடம் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தும் அதிக விலைக்கு ரிலையன்ஸிடம் வாங்குகிறதா?

வால்பையன் said...

இந்தியாவின் மிகபெரிய பெட்ரோல் சுத்திகரிப்பு நிறுவனம் அது தான்.
அதுவும் நம் காசில் தான் ஆரம்பிக்கபட்டது.
வெளி நாட்டிலிருந்து நாம் கச்சா எண்ணையாக தான் வாங்க முடியும்.
இங்கே பெட்ரோல் விற்பனையில் ரிலையன்ஸின் பெரும்பங்கு இருக்கிறது.


இந்த கதை யாருடயது தெரியுமா

ரவி said...

ய்யேப்...நல்லா போனியாச்சு...

நல்லதந்தி said...

//ய்யேப்...நல்லா போனியாச்சு.//

போணியாச்சுன்னு சொல்லுங்க.காதில வேற மாதிரி விழுவுது! :)(பாரீஸ் அக்காவோட ஃபேவரெட் வார்த்தை மாதிரி!) :))

வெண்பூ said...

என்னா கும்மிடா சாமி.... நல்ல ஆரோக்கியமான அலசல்.. எனக்கு இன்னும் ஒண்ணு புரியல.. 147 டாலர் இருந்தப்ப 55 ரூபாய்க்கு விலையேத்தி வித்த பெட்ரோலு இப்ப 49 டாலர் ஆனதுக்கப்புறமும் கொறயலயே ஏன்? அப்ப 5 ரூபா ஏத்திட்டு இப்ப குறைச்சாலும் 3 ரூபாத்தான் கொறப்பேன்னு சொல்றாங்களே ஏன்?

தனியார் ஷெல் பங்குல பிரிமியம் பெட்ரோல் 58 ரூபாய்க்கு கிடைக்குது (அதுவும் கலப்படமில்லாம சுத்தமானதா). ஆனா பக்கத்துல இருக்குற அரசு பங்க்ல 59 ரூபா. ஏன் இதுக்கோசரம் யாருமே பிரதமருக்கு லெட்டர், தந்தி போட மாட்டேன்றாங்க?

அண்ணா.. யாராவது பதில் சொல்லுங்கண்ணா... புண்ணியமா போகும்..

Sanjai Gandhi said...

venpoo, govt petrol price yethum pothu evlo irunthathunu matume pakarele.. athuku munnadi evlo irunthathunu konjam paarungalen saami :).. 39$ la iruntha matera marantha epdi? :) 130$ mela vanthapo than price hike pannanga.. appo athuku munnadi evlo loss aayirukumnu yosinga.. antha loss equal aagara varaikum price kuraikirathu kastam..

moothirathuku porathuku kooda bike or car use panratha avoid pannanumna innum price hike pannanum. appo than petroloda arumai theiryum.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சரி, சஞ்சய். நீங்கள் சொல்லியிருக்கும் காரணத்தை (பெட்ரோலுக்கு) ஒப்புக் கொண்டாலும்கூட, விமான எரிபொருளுக்கு, இவ்வளவு விலை இறங்கிய பின்னரும் ஏன் சுங்க வரி விலக்கு கொடுக்க வேண்டும்? பெட்ரோல் விலை எவ்வளவு ஏறியும், எவ்வளவு முறை கேட்கப்பட்டும் சுங்க வரிவிலக்கு கொடுக்கப்படவில்லையே :(

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....