Tuesday, November 18, 2008
தமிழ் பதிவர் லோஷன் கைது !!!
இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...
அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...
வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...
பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...
இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?
பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...
ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....
அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...
ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அரசு, இப்படி செயல்படுவது முறையல்ல...
உடனே சர்வதேச அளவிலான அழுத்தங்கள் தந்து, லோஷன் அவர்களை காக்க நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்...
பத்திரிக்கை சுகந்திரம் காக்கப்படவேண்டும்...
மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்...
பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை நிலைநாட்டப்படவேண்டும்...
அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன், அவர் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் !!!
சீரீலங்கா அரசாங்கத்துக்கு என்னுடைய கண்டனங்களை இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்...
வலைப்பதிவு உலகில் இருக்கும் ஊடகவியளாலர்கள் இந்த நிகழ்வை தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனே கொண்டுசெல்லவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
30 comments:
இதுதானா சுதந்திரம்? பயங்கரவாத இலங்கை அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
சில நாட்களுக்கு முன்பு இளா ஸ்டேட்டஸ் மெசேஜில் இந்த செய்தியை பார்த்தேன், பதிவரும் இவரும் ஒன்றா என்று தெரியாமல் அவரிடம் கேட்டேன், பிஸியாக இருந்தார் போல பதில் இல்லை பின் நானும் மறந்துவிட்டேன், இன்று உங்கள் பதிவை பார்த்துதான் இருவரும் ஒன்று என்று தெரிந்துக்கொண்டேன்.
ஊடங்கங்கள் இதை ஐநா சபை வரை எடுத்துசெல்லவேண்டும்!!!
ஆங்கிலப் பதிவுகளில் செய்தி விவரங்கள் போட்டால் பலனிருக்கும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி யாழ்...
சர்வதேச ஊடகவியளாலர்கள் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது என்று நினைக்கிறேன்...
ஊடகவியளாலர்களுக்கு பாதுகாப்பற்ற பூமிகளில் ஒன்று என்ற பட்டியலிலும் இலங்கை அரசு சேர்க்கப்பட்டுள்ளது...
சனிக்கிழமையாக இருக்கலாம் குசும்பன்...
///ஊடங்கங்கள் இதை ஐநா சபை வரை எடுத்துசெல்லவேண்டும்!!!//
ஒருவேளை காங்கோவில் எதாவது பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டால் ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு..
இலங்கை என்று ஒரு நாடு இருப்பதே ஐ.நா சபைக்கு தெரியாது என்று நினைக்கிறேன்...
///ஆங்கிலப் பதிவுகளில் செய்தி விவரங்கள் போட்டால் பலனிருக்கும்.//
ஆங்கிலப்பதிவுகளில் போடலாம்...ஆங்கில பத்திரிக்கைகள் (டெக்கான் க்ரோனிக்கல்) போன்றவற்றில் இந்த செய்தி வர முயற்சி செய்தால் முடியும்...
தி ஹிண்டு என்ற பத்திரிக்கை இலங்கையில் இருந்து வெளிவருவதால் அதில் பிரசுரிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்...
http://rishanshareef.blogspot.com/2008/11/blog-post.html
இது பற்றிய எனது விரிவான பதிவு இங்கே !
(பிரசுரிக்கவல்ல )
புது அப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள் !
வருத்தம் தரும் செய்தி
இலங்கையில் மக்கள் உரிமை மறுக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது
ஊடகவியளாலர்களுக்கு பாதுகாப்பற்ற பூமிகளில் ஒன்று என்ற பட்டியலிலும் இலங்கை அரசு சேர்க்கப்பட்டுள்ளது...
ஆமாம்,இலங்கையை ஒவ்வொரு விசயத்திலும் புறக்கணீக்க வேண்டும் என்பதே என் ஆவா!
;-(((
இது குறித்த எனது கண்டனங்களை பதிகிறேன்...
இதில ஒரு வெளித்தெரியாத சிக்கல் இருக்கிறது. கைது செய்யப்பட்ட அன்று அதிகாலையே இது குறித்த செய்தியை இட்டுவிட்டு பிறகு அதை கொண்டு செல்லாது இருந்து விட்டேன்.
இலங்கை அரசை அதன் இராணுவ நிர்வாகத்தை ஜனநாயகம் பொருந்தியது என்று நம்பிக்கொண்டு
அரசை கண்டிக்கிறோம். கைதை கண்டிக்கிறோம் என்ற நமது கோசங்கள் லோசனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். நமது இலங்கை அரசு ஒரு மாதிரியான ஒற்றை ரூட்டு அரசு என்பதால்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இந்த செய்தியை வைத்திருக்க வேண்டியுள்ளது.
//அரசை கண்டிக்கிறோம். கைதை கண்டிக்கிறோம் என்ற நமது கோசங்கள் லோசனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். நமது இலங்கை அரசு ஒரு மாதிரியான ஒற்றை ரூட்டு அரசு என்பதால்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இந்த செய்தியை வைத்திருக்க வேண்டியுள்ளது//
ரவி
மேலே கொழுவி சொன்னது தான் என் கருத்தும், கண்டனப் பதிவோ ஆர்ப்பாட்டமோ அவர்களின் குரங்குச் சேட்டையை அதிகப்படுத்தி விடும்.
//தி ஹிண்டு என்ற பத்திரிக்கை இலங்கையில் இருந்து வெளிவருவதால் அதில் பிரசுரிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்//
;-) உண்மையிலும் உண்மை
கொழுவி மற்றும் பிரபா...
இப்படிப்பட்ட கோணம் ஆச்சர்யமாக இருக்கிறது.....
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
ஐ.நா.சபை செயலாளர் திரு.பான்.கி.மூன் அவர்ளுடைய தொடர்புகளுக்கு இந்த விடயத்தை கொரிய மொழியில் கடிதமாக உருவாக்கி அனுப்பியிருக்கிறோம்...
நன்றி அதிஷா, வால்பையன், ரிசான் செரீப்...
அன்பு சகோதரர்களே,
இலங்கை சகோதரரும், சக பதிவருமான லோசன் அவர்கள் கைதிற்கு நான் என்னுடைய முழு எதிர்ப்பையும் இலங்கை அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இது நிச்சயம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது தான். இலங்கையில் தமிழர்களுக்கு என்ன வகையான சுதந்திரம் கிடைக்கிறது என்பது வெளிப்படுத்த இப்போது வாய்ப்பாக கருதி செயல் பட வேண்டும்.
நாம் என்ன செய்ய முடியுமென கலங்க வேண்டாம். இப்பதிவுகள் நம் இன மான உணர்வின் வெளிப்பாடுகள். இவை நம்மை வாழ வைக்கும்.
பிரிட்டிஷ் அரசு நேதாஜி அல்ல காந்திஜி மீது கை வைக்க தான் அஞ்சியது. எந்த அரசு கருத்து சுதந்திரத்தை மறுக்கிறதோ அதற்கு அழிவு நிச்சயம்.
"தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தர்மம் நிச்சயம் வெல்லும்"
சகோதர தமிழன்.
இதனை டிஜே அண்ணனின் பதிவில் தெரிந்து கொண்டேன்...
அதற்கு அந்த துறைசார்ந்தவர்களின் கண்டனம் கொஞ்சம் கவனிக்கப்படலாம்
மற்றப்படி கண்டனைங்களும் கூச்சல்களும் பிரயோசனமற்றது...
அது வேறுமாதிரி விளைவுகளை கொடுக்கக்கூடியது...
சிந்தனைத்தெளிவே இல்லாத சிங்களவரும் இளைய சமுதாயமும்...
இருக்கும் வரை கேவலாமான அரசியலும் அறிக்கைகளும் நடந்து கொண்டே இருக்கும்..
கைதுகளுக்கும் காணாமல் போதலுக்கும் இது ஒரு காரணம் மட்டுமே!
என்ன செய்கின்றன இலங்கையின் பல்கலைக்கழகங்கள் படிச்சென்ன புடுங்கப்போயினை உவை..இளைய சமுதாயம் விழிப்பே இல்லாமல் இருக்கிறது அவர்கள் நினைத்தால் நாட்டை திருப்பிப்போடலாம் என்பது என் கருத்து...!!!
தமிழன், கிங் கருத்துக்கு நன்றி...
இதுல என்னய்யா இருக்கு! எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.
http://irakasiyam.blogspot.com
//தி ஹிண்டு என்ற பத்திரிக்கை இலங்கையில் இருந்து வெளிவருவதால் அதில் பிரசுரிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்//
;-) உண்மையிலும் உண்மை
தி ஹிண்டு எப்பொழுதாவதூ ஈழமக்கள் சார்பாக, ஐயோ வேணாமையா, உண்மையாக எழுதியிருக்கிறார்களா? இவர்களின் வகுப்புவாதம் உடைபடும். அப்பொழுது அவர்கள் உணர்வார்கள்.
http://irakasiyam.blogspot.com
லோஷன் என்ற அற்புத படைப்பாளியை கைதுசெய்து விட்டார்கள். எதை சாதிப்பார்கள். எதையும் முடியாது. எதிராக எழும்பும் குரல்களே அதிகம் தவிர குறையாது. இது உகந்தது அல்ல. ஈழவிடுதலை பற்றி எவர் சிந்தித்தாலும், பேசினாலும், எழுதினாலும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் மிலேச்ச சிங்கள அரசு தன்னை பயங்கரவாதி என மக்கள் உணர்கிறார்கள் என நினைக்கவில்லை. காலம் பதில் சொல்லும்.
//பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...//
சிங்களவர்கள் நம்மை பயங்கரவாதிகள் என்று கூறிக் கொள்ளட்டும். நாம் அந்த வார்த்தையை தவிர்க்கலாமே!
இந்தக் கைதுகளைப் பெரிதுபடுத்தி எழுதும்போது இலங்கை அரசு அவர்களைச் சித்திரவதை செய்வார்கள் அல்லது கொல்லக்கூடும். இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு ஜனநாய வழி பல இலட்சம் கையூட்டுக் கொடுத்து மீட்பதுதான். உலகில் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்பட்ட நாடுகளில் இலங்கை 2ம் இடத்தில் உண்டு.
இதை தமிழக முதல்வர் கையில் எடுத்தால் கைது செய்யப்பட்டவருக்கு நன்மை கிடைக்குமா?
கருனாநிதி என்ற பெயர் இருந்த காரணத்தால் என் நண்பர் 1985இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டது இன்னும் வலிக்கின்றது.
ஒரு ஈழத் தமிழன்
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பிரதீப் !!!
///இந்தக் கைதுகளைப் பெரிதுபடுத்தி எழுதும்போது இலங்கை அரசு அவர்களைச் சித்திரவதை செய்வார்கள் அல்லது கொல்லக்கூடும்.///
இதை படித்து இலங்கை அரசுக்கு மொழிபெயர்த்து சொல்லக்கூடிய நல்ல தமிழர்களும் இருக்கிறார்களா ?? அவர்களின் பெயர் பட்டியல் தரமுடியுமா ?
அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:49.08 AM GMT +05:30 ] - தமிழ்வின்
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment