Sunday, April 26, 2009

தனி ஈழமே தீர்வு : புரட்சித்தலைவி வீர முழக்கம்...!!!



இன்றைக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தமிழருக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்றும் அ.இ.அ.தி.மு.க தனி ஈழம் அமைய பாடுபடும் என்றும் முழங்கியிருக்கிறார்...

*********

கலைஞர் கருணாநிதி அவர்களே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் 'கடைசி நேர' பந்த் ஒன்றை நடாத்திவிட்டு, அது வாக்குகளாக விழுமா ஆப்புகளாக விழுமா என்று கணக்கு பார்த்துக்கொண்டிருக்கையில் புரட்சித்தலைவியின் இந்த அறிவி(ஆ)ப்பு வந்து விழுந்துள்ளது...

*********

காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவேண்டுமாயின் அதற்கு அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதே ஒரே வழி என்ற நிலையில் (விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வராத சூழ்நிலையில்), அம்மா ஆட்சியை திரும்ப கொண்டுவந்தால் மீண்டும் பொடா வாடா தடா என்று எதையாவது கையில் எடுப்பாரோ என்று கொஞ்சம் தயங்கிய உணர்வாளர்கள், இனி தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..

*********

தனிப்பட்ட முறையில் திருமா, ஆர்.எஸ்.பாரதி, மாறன் போன்றவர்கள் வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தாலும், என்னைப்பொறுத்தவரை, 40 தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே சிந்தாமல் சிதறாமல் தருவேதே சாலச்சிறந்தது...அப்போது தான், இத்தாலி அடிமைகளை ஓட ஓட விரட்டமுடியும்...

*********

இளங்கோவன், மனிசங்கர அய்யர், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் வரலாறு காணாதவகையில் தோற்கவேண்டும். இவர்களின் தோல்வி, காங்கிரசு துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்...

*********

சமீபத்தில் வன்னியில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில் புலிகள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணன் வைகோவையும் கூட்டணி தொகுதி பங்கீடு பிரச்சினைகளை பொறுத்துப்போகுமாறு களத்திலிருந்தே தகவல் வந்ததாம்..

*********

அம்மாவின் இந்த மனமாற்றம் தேர்தல் ஸ்டண்ட் என்று எகிறி குதிக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்...ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் இந்த முடிவு, கண்டிப்பாக ஒரு திருப்புமுனையாகும்...மீண்டும் அம்மா ஆட்சி மலரும்போது, புலிகளுக்கு சென்னையில் ஆபீஸ் போடக்கூட அனுமதி கிடைக்கக்கூடும்...யார் கண்டா ?

*********

வலையுலகில் பதிவர் பொடி டப்பா, உடன் திருப்பு, இங்கிலீஸ் பூவியா போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்கப்பட்டவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை...ஆனால் பதிவர் லக்கிலுக் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகம் சென்று அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் அட்டை பெறுவது என்றால் அதற்கு நான் உதவ தயார்..

*********

வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே...!!!!

!!!!!!!!!!

!!!!!!!!!!

34 comments:

பொற்கோ said...

என்ன ரவி, காகிதத்தில் கப்பல் விடலாம் ஆனால் கரை சேரவேண்டும் அதுதான் முக்கியம். ஜெயலலிதா என்ன அப்படி சொல்லி விட்டார் என்று தாங்களும் விண்ணை முட்டும் அளவுக்கு சத்தம் போடுகிறிர்கள்.நாளையே நான் அப்படி சொல்லவில்லை என்று நாக்கு குளறினாள் என்றால் எங்க போய்முட்டிக்கிறது.சுத்த விவரமில்லாதவங்க கூடஅந்த அம்மா வை நம்ப தயாரில்லை.நேற்று வரை பேசியவைகளை தமிழகத்தின் சில படித்த வர்க்கம் மறந்து விட்டது வியப்பாகயிருக்கிறது.சோனியாவை இத்தாலி க்கு விரட்டுவதற்கு இவர் எப்படி சரியானவராக இருக்கமுடியும் இவரும் விரட்டப்படவேண்டியவர் வரிசையிலுள்ளவர் தானே.இன்றைய ஈழ தமிழரின் இன்னலுக்கு இவரும் காரணமானவர் என்பதை எல்லாரும் மறந்துவிட்டனர். கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஆவேசத்தில் அலறுவது ஏன் என்று புரியவில்லை.அதற்காக நாம் யாரையும் முற்றிலும் சரியானவர் என்று சொல்லவரவில்லை. கருணாநிதி இருப்பதனால் மறைவாக செய்யப்படுகிரவைகள் , செயலலிதா ஆட்சியிலிருந்திருந்தால் இன்று வீர வசனம் பேசும் அனைவரும் கம்பிக்குள் வெளிச்சமாக இருந்திருப்பார்கள். இவை அனைத்தும் தெரிந்த தமிழ் இன உணர்வாளர்கள் யாவரும் இன்று நெருப்பு கட்டையால் காது குடைகின்றனர்.
எனவே தங்களின் பதிவு ஈழ தமிழனுக்கும் உலகத்தமிழ்னுக்கும் கேடு விளைவிக்க கூடியது.பயன் தரக்குடியது அல்ல.

குழலி / Kuzhali said...

//நாளையே நான் அப்படி சொல்லவில்லை என்று நாக்கு குளறினாள் என்றால் எங்க போய்முட்டிக்கிறது//

அய்யா இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் உடனடியாக என்ன தான் செய்வது? இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என கேட்கிறீர்கள்... இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....


//இன்றைய ஈழ தமிழரின் இன்னலுக்கு இவரும் காரணமானவர் என்பதை எல்லாரும் மறந்துவிட்டனர்//
க‌ருணாநிதியையும் சோனியாவையும் விட‌ இவ‌ர் எந்த‌ வித‌த்தில் இப்போது கார‌ண‌ம்?

//செயலலிதா ஆட்சியிலிருந்திருந்தால் இன்று வீர வசனம் பேசும் அனைவரும் கம்பிக்குள் வெளிச்சமாக இருந்திருப்பார்கள்.
//
தற்போது மட்டும் என்ன வாழுது? கருணாநிதியின் எத்தேச்சாதிகாரத்தை விட நீதிமன்றங்களே தேவலாம் போலுள்ளது, சீமான், கொளத்தூர் மணி, சிரிப்பு நடிகர் பெஞ்சமின்(பாவம் இவருக்கு ஜாமீன் போட கூட வழியில்லை), நாஞ்சில் சம்பத், போன்றோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில், நல்ல வேளை பொடா இல்லை இல்லையென்றால் சோனியாவின் பாதம் தாங்கி கருணாநிதி பொடாவில் போட்டிருப்பார் எல்லோரையும்...

கருணாநிதி உள்ளே போட்டதை சட்டம் மூலமாகத்தான் உடைத்துகொண்டு வந்துள்ளார்கள் இந்த விசயத்தில் கருணாநிதி எந்த விதத்திலும் ஜெயலலிதாவைவிட வேறு பட்டவர் இல்லை...

Vishnu - விஷ்ணு said...

//மீண்டும் அம்மா ஆட்சி மலரும்போது, புலிகளுக்கு சென்னையில் ஆபீஸ் போடக்கூட அனுமதி கிடைக்கக்கூடும் //

கனவு கண்டதையெல்லாம் நிஜமா நடக்கணுமுன்னு நினைக்கிரேங்களே.

தீப்பெட்டி said...

///குழலி / Kuzhali said...
அய்யா இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் உடனடியாக என்ன தான் செய்வது? இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என கேட்கிறீர்கள்... இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....
....///

குழலி சொன்னதை முழுமையாக வழிமொழிகிறேன்

enRenRum-anbudan.BALA said...

ஜெவின் இந்த மனமாற்றம் ஆச்சரியமாக (ஏன் அதிர்ச்சியாகக் கூட) உள்ளது !

நம்பிக்கை தான் வாழ்க்கையின் உயிர் நாடி, நம்புவோம்!

இப்பதிவுக்கு என் லேட்டஸ்ட் இடுகையில் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

எ.அ.பாலா

Suresh Kumar said...

களமுனையில் பின்னடைவை கண்டுவரும் புலிகளுக்கு இது ஒரு வெற்றி தான் . தேர்தல் ஸ்டாண்ட் என்று இருந்தால் கூட ஜெயாவின் வாயிலிருந்து இந்த தனி தமிழ் ஈழம் என்ற வார்த்தை வந்திருக்கிறது என்றால் அது தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி . தமிழனை மறந்து இனி யாரும் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை தான் .

ஜெயாவை பொறுத்த வரையில் உறுதிமிக்கவர் நினைத்த காரியத்தில் உறுதியுடன் செயல் படுவர் . தமிழர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் தமிழ் ஈழம் வெகு தூரத்தில் இல்லை .

வெற்றி-[க்]-கதிரவன் said...

//இளங்கோவன், மனிசங்கர அய்யர், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் வரலாறு காணாதவகையில் தோற்கவேண்டும். இவர்களின் தோல்வி, காங்கிரசு துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்...
//

இனி எக்காலத்திலும் காங்கிரஸ்க்கு தமிழகத்தில் ஒரு தொகுதிகூட கிடைக்க கூடாது என்று எழுதிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

viduthalaikuyil said...

u guys only beleive wat karuna(TN)SAYS......that is y he keeps changing words in order to entertain people like u!

பதி said...

ஜெ வை நம்ப வேண்டிய தேவையெல்லாம் ஒன்றும் இல்லை....

ஏனெனில், யார் மத்தியில் வென்றாலும் இப்பொழுது இருக்கும் நிலையை விட பாதிக்கப்பட்ட மக்கள் மோசமான நிலைக்கு போக முடியாது..

அதே சமயம், கொலைகார காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் இப்பொழுது ஈழத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்திற்குத் தான்...

ஆகையால், இன்றைய தேவை

தமிழ் ஆதரவு கட்சிகள் வெல்லவேண்டும் என்பதற்கும் முன்னால் கொலைகார காங்கிரசும் அதன் கூட்டணி யோக்கியஸ்தர்களும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது தான் முதல் தேவை.

அவ்வளவே !!!!!!!

தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவால் பேசப்பட்ட இந்த சொற்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்ததாகக் கருத முடியாது. அது உதட்டிலிருந்துதான் சிதறியிருக்கவேண்டும்...



....தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளைப்பற்றி பேசுவதே குற்றம் என்று கற்பித்தவர்தானே ஜெயலலிதா? ஆதரவு தெரிவித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம்தானே நெற்றியடி கொடுத்தது!...



...உண்மையைச் சொல்லப்போனால் கலைஞர் ஆட்சி இருக்கிற காரணத்தால்தான் ஈழத்தமிழர் படும் அவதிபற்றி பொதுக்கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது - போராட்டம் நடத்த முடிகிறது - பேட்டி கொடுக்க முடிகிறது. ஏடுகளிலும் வெளியிட முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புண்டா?...



...ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்காக மனிதாபி மானத்தோடு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவிதைக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர்தானே ஜெயலலிதா!

ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.

மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதும், நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபி மானச் செயல்கள். அதைக்கூட ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காட்டத் தயாராக இல்லாத ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பேசுவதை விட ஏமாற்று வேலை, மோசடி வேலை வேறு எதுவாகத் தானிருக்க முடியும்?

கேவலம் அரசியலுக்காக மக்களின் வாக்குகளைப் பறிப்பதற்காக மோடி மஸ்தான் வேலையில் ஈடுபடுவது பரிதாபகரமானது.

அதுவும் அன்றாடம் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை அரசியல் குளிர் காய்வதற்குப் பயன்படுத்த எத்தனிப்பது மன்னிக்கப்பட முடியாத ஒன்றே!

கீழ்கண்ட சுட்டியில் முழுமையான செய்திகளை அறியலாம்

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_16.html

Venkatesh Kumaravel said...

குழலியையும், பதியையும் வழிமொழிகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் காங்கிரஸை நம்புவதைக்காட்டிலும், ஜெ-வை நம்பலாம்.

ராஜ நடராஜன் said...

ஜெயலலிதா கிட்ட ஏதாவது எழுதி வாங்கிட்டு யோசிக்க வழியிருந்தா சொல்லுங்கள்.நம்ப முடியாத பேர்வழி.

இருக்கும் சூழலின் ரகசியம் தெரிந்து சதுரங்கம் விளையாடுகிறாரென்றால் காவிரித் தண்ணீர் கதைதான் ஈழத்தின் கண்ணீர்க் கதையும்.

இல்லை மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு படி உயர்வதாய் அவர் ஆழ்மனதின் வெளிப்பாடு என்றால் எத்தனையோ அடி வாங்கிட்டோம் இன்னுமொரு அடி வாங்கித்தான் பார்ப்போமேன்னு பரிட்சித்துப் பார்க்கவேண்டியதுதான்.

ஆமா!ஒளிஞ்சிட்டு நிற்கிற சோ,ராம் பற்றியெல்லாம் ஒருத்தரும் சவுண்டு விடறதக் காணோமே ஏன்?

ஒரு மாவட்டத்திலாவது 49ஓ பரிட்சிக்கப் பட்டால் சந்தோசப் படுவேன்.

Anonymous said...

40 தொகுதிகளிலும் வெற்றி தாருங்கள், நான் ஈழம் பெற்றுத் தருகிறேன் என்று இன்றையப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்படியானல், ஒன்று அல்லது இரண்டு இடங்கள் குறைந்தால் ஈழம் கிடையாதா?

வில்லங்கம் விக்னேஷ் said...

லூசு புள்ளிங்களா இத்தினி நாளு சென்னைல குசுவிட்டுட்டு இருக்கியாளே லங்காரத்தனா இண்டுவ ஏன்னு கேக்க முடியல்ல. சொட்டையன் துக்ளக்க கவனிக்க முடியல்ல. வாயி மட்டும் தோணி போல கிழியுது. அவனுங்க வாசலுல போயி நின்னூ நாயிங்கள யாருடா நீங்கன்னு கேக்க முடிஞ்சா கவனியுங்க. முடியல்ல வாய மூடிட்டு ஒதுங்குங்கடா சாமியளா. வெட்டி பேச்சுக்கு மட்டும் நெட்டுல பஞ்சமில்லே

The hindu
Find some other place for Eelam: Sri Lanka to Jayalalithaa Colombo (PTI) Sri Lanka on Sunday took strong objection to AIADMK chief J Jayalalithaa's remarks that Tamil Eelam was the only solution for the ethnic conflict, saying she should "find some other place to give Eelam" but not on the island.

"I don't know what these people are talking about...I think she must find some other place to give Eelam but not in Sri Lanka," Defence Secretary Gotabhaya Rajapaksa said.

He also took objection to Ms. Jayalalithaa's allegation that the video footage provided by spiritual guru Sri Sri Ravishankar, who recently visited the IDP centre in Wavuniya in eastern Sri Lanka, showed that the Tamils were being treated badly by the Government.

The AIADMK chief made these comments at a public meeting in Tamil Nadu on Saturday.

"When Ravishankar met President (Mahinda Rajapaksa) after visiting the IDP camps he said it was one of the best camps he has ever seen in the world," the powerful official, who is the brother of the President, said.

Mr. Rajapaksa said he could understand the concern for the fate of civilians expressed by the international community and else where.

"But I don't understand why some people are trying to give a new life to the terrorists. They have killed many innoncent civilians and destroyed our country," he told NDTV, when asked about demands from certain quarters for a ceasefire with the rebels.

vasu balaji said...

எல்லாத்துக்கும் இடக்கா பேசிடே இருக்கலாம்தான். இன்றைய நிஜம்தான் யதார்த்தம். குறைந்த பட்சம் தேர்தல் வரையுமாவது பல்டி இருக்காது. நல்ல அலசல் ரவி.

பதி said...

//தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவால் பேசப்பட்ட இந்த சொற்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்ததாகக் கருத முடியாது. அது உதட்டிலிருந்துதான் சிதறியிருக்கவேண்டும்...//

ஓ.. ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் அந்த ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கிய இனமான தலைவரின் சொந்த அனுபவமா??? !!!!

//உண்மையைச் சொல்லப்போனால் கலைஞர் ஆட்சி இருக்கிற காரணத்தால்தான் ஈழத்தமிழர் படும் அவதிபற்றி பொதுக்கூட்டம் போட்டுப் பேச முடிகிறது - பேரணி நடத்த முடிகிறது - போராட்டம் நடத்த முடிகிறது - பேட்டி கொடுக்க முடிகிறது. ஏடுகளிலும் வெளியிட முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புண்டா?//

இந்த மாதிரி பூச்சாண்டி இன்னமும் எத்தனை நாளைக்கு?
அப்படியே கருணா எழுதுற கவிதை, பந்த் நாடகத்தை எல்லாம் ஏன் சேர்க்கலை? இந்த கேவலமான அசிங்கமும் கொலைஞர் ஆட்சில தான்...

குழலியின் பின்னூட்டத்தை கவனிக்கவில்லையா??

கருணாநிதியின் எத்தேச்சாதிகாரத்தை விட நீதிமன்றங்களே தேவலாம் போலுள்ளது, சீமான், கொளத்தூர் மணி, சிரிப்பு நடிகர் பெஞ்சமின்(பாவம் இவருக்கு ஜாமீன் போட கூட வழியில்லை), நாஞ்சில் சம்பத், போன்றோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில், நல்ல வேளை பொடா இல்லை இல்லையென்றால் சோனியாவின் பாதம் தாங்கி கருணாநிதி பொடாவில் போட்டிருப்பார் எல்லோரையும்...

கருணாநிதி உள்ளே போட்டதை சட்டம் மூலமாகத்தான் உடைத்துகொண்டு வந்துள்ளார்கள் இந்த விசயத்தில் கருணாநிதி எந்த விதத்திலும் ஜெயலலிதாவைவிட வேறு பட்டவர் இல்லை...

//கேவலம் அரசியலுக்காக மக்களின் வாக்குகளைப் பறிப்பதற்காக மோடி மஸ்தான் வேலையில் ஈடுபடுவது பரிதாபகரமானது.

அதுவும் அன்றாடம் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை அரசியல் குளிர் காய்வதற்குப் பயன்படுத்த எத்தனிப்பது மன்னிக்கப்பட முடியாத ஒன்றே!//

உண்மை... ஆனால், இந்த 2ம் தமிழக கருணா'விற்கு (மற்றும் அவர்களின் கூஜா தூக்கிகளுக்கு யாருன்னு விளாவரியா விளக்க வேண்டியது இல்லை) முற்றிலும் பொருந்தும்..

ராஜ நடராஜன் said...

ஜெயலலிதாவின் அறிக்கை தேச விரோதமானது,பொறுப்பற்றது.

நான் சொல்லல.காங்கிரஸ் அறிக்கை.

(எப்படியோ தேச விரோத சட்டம் பாயாம இருந்தா சரிதான்)

Unknown said...

திரு கருணாநிதி அவர்களின் கபடநாடகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

குடும்பம் பற்றியே அவரது சிந்தனை சுழல்வதால் , இனி அவரை நம்பி பயன் இல்லை.

அவரிடமும் உடல் மற்றும் உள்ளத்திலும் உறுதி இல்லை.

விட்டொழியுங்கள் அவரை......

நன்றி - பாஸ்கரன் சுப்ரமணியன்

ராசா said...

திமுக, காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடித்து பாடம் புகட்ட மாற்று கட்சியை தேர்தெடுக்க வேண்டியது அவசியமே....
அதற்காக ஜெயலலிதாவை துதிபாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

எல்லாளன் said...

அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்
அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும்
-விடுதலைப் புலிகள்-

அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்

ISR Selvakumar said...

ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் ஒருவருக்கொருவர் சளைக்காத ஓட்டுப் பொறுக்கிகள்தான்.

தேர்தல் முடிந்தவுடன் தெரியும் மீண்டும் ஜெயலலிதாவின் சுய ரூபம். இப்போது பார்ப்பது வெறும் அரூபம்.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

ரவியின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். ஜெயலலிதா நம்பகத்தன்மை இல்லாதவராக இருக்கலாம். ஆனால் 'தமிழினத் தலைவர்' (இன்னுமா உலகம் இதை நம்புது-?) போல நம்ப வைத்து கழுத்தறுப்பவர் அல்ல. ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் ஆதரவுக் குரல் கொடுப்பவர்களின் கடந்த கால குப்பைகளையெல்லாம் நாம் கிளற வேண்டியதில்லை. நிகழ்கால கபட வேடாதாரிகளை தோற்கடிப்பதே முக்கியம். காங்கிரஸ்-தி.மு.க கொலைகாரக் கூட்டணியைத் தோற்கடிப்போம்.

ரவி said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...விடுமுறையாதலால் பதில் சொல்ல முடியவில்லை...நாளை சொல்கிறேன்.........

Anonymous said...

//மீண்டும் அம்மா ஆட்சி மலரும்போது, புலிகளுக்கு சென்னையில் ஆபீஸ் போடக்கூட அனுமதி கிடைக்கக்கூடும்...//


இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே? இதுக்கு நீங்க அவர் கால்லயே விழுந்திருக்கலாமே?

அவர் இன்னும் விடுதலைப்புலிகள் பத்தி எந்த கருத்தும் சொல்லலையே? அதுக்கு நீங்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்கனும். அதோட அவர் இது வரைக்கும் புலிகள் பத்தி சொன்ன கமென்ட்ஸ் எல்லாத்தையும் கூட நீங்க மறக்கனும்.

butterfly Surya said...

பதிர்விற்கு நன்றி ரவி.

என்னதான் வலையிலும் ஊடகங்களிலும் நாமெல்லாம கத்தி தீர்தாலும் ஈழப்பிரச்சினை ஒரு பெரிய முக்கிய காரணியாக இந்த தேர்தலில் இருக்க வாய்ப்பில்லை. ஜெ. எதிர்பார்பதும் நடக்காது.

தி.மு.க + 25 -27 வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும............

Losers:

தங்க பாலு

ஈவிகேஸ்

பிரபு.


=================

Tentative:

வைகோ ( 50 / 50 )

ப.சி ( 50/50 )

=========

Gainers:

அழகிரி.

மாறன்

டி.ஆர். பாலு.

ரித்தீஷ்.


I am not at all favouring any one. I am not belongs to any party.

My guess...

Let us wait and see.

சக்திவேல் said...

திரு செந்தழல் ரவி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
ரவி அவர்களே உங்கள் கருத்துக்கள் சரியே. ஜெயலலிதா இச்சூழ்நிலைக்கு காரனமோ இல்லையோ? அல்லது பின்நாளில் பேச்சை மாற்றுவாரோ இல்லையோ, ஆனால் தனி ஈழம்தான் தீர்வு என்று இப்பொழுது சொல்லியிருக்கின்றார். உரிமைகளை அனுபவிக்க தகுதியில்லாத ஈனப்பிறவிகள்தான் தமிழர்கள் என்று இலைங்கையிலும் இந்தியாவிலும் நினைத்துக்கொன்டு செயல்புரியும் பாவிகளின் கொடுமைகளை சகித்துக்கொன்டுதான் போகனுமென்று அழுத்தமாக உலகமே சொல்லும் தருனத்தில், இல்லை இவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு தனி ஈழம்தான் தேவை என்று சொல்லுவது. பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் சாகும் தருவாயில் இருப்பவனுக்கு சோலை கிடைத்தது போலவாகும்.

தீவிர ஜெயலலிதா எதிர்ப்பாளனாகிய நான் ஜெயலலலிதா அவர்களின் கருத்துக்கு நன்றி சொல்லி 8 கோடி தமிழர்களும் உஙளை உயிருள்ளவரை மறக்கமாட்டார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.

வெளிநாட்டில் இருக்கும் காரணத்தினால் எனக்கு அதிமுக வுக்கு ஓட்டு போடமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன். ஆனால் எனது உற்றங்களை மற்றும் சுற்றங்களை அதிமுக வுக்கே வாக்களிக்கும்படி சொல்லிவிட்டேன்.

thiru said...

கருணாநிதி இதுவரையில் தனி ஈழம் தான் தீர்வென்று சொல்லவில்லை. தனி ஈழம் அமைந்தால் மகிழ்வேன் என்று மழுப்பியிருந்தார். அவருக்கு சோனியா டீச்சரை பார்த்து அவ்வளவு அச்சம்.

ஜெயலலிதா தனி ஈழம் தான் தீர்வு. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாது என்கிறார். தற்போதைய இக்கட்டான சூழலில் ஜெயலலிதாவின் குரல் ஆறுதலை கொடுக்கிறது. தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தின் பக்கம் செய்தி ஊடகங்களை திருப்பியது ஜெயலலிதாவின் குரல். தமிழ் ஈனத் தலைவர் செய்யத் தவறியதை ஜெயலலிதா பயன்படுத்தியதை எவரும் குறை சொல்லமுடியாது. ராஜீவ் காந்திக்கு மரணத்திற்கு முந்தையை கருணாநிதி, ராஜீவிற்கு பிந்தைய கருணாநிதி என்று பகுத்துப் பார்த்தால் (தமிழீனத் தலீவர் தான் இந்த கிமு, கிபி வரலாற்றை பகுத்தவர்)பிந்தைய பகுதியில் ஈழத்திற்கு ஆதரவாக எந்த புல்லையும் கருணாநிதி புடுங்கவில்லை.

கடந்த அக்டோபரில் ஜெயலலிதாவின் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சி பற்றி அறிக்கை வந்தது. அப்போதும் நம்பமுடியவில்லை. அந்த அறிக்கையில் ஓரிடத்தில் போராளி என்று கூட பயன்படுத்தியதாக நினைவு. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையும் ஈழத்தமிழர்களின் உரிமை பற்றி பேசுகிறது. இப்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஊடக சந்திப்பிலும் அதை தொடர்ந்திருக்கிறார்.

ஜெயலலிதா மாறுவாரா என்ற பதட்டம் இப்போது தேவையற்றது. சொக்கத்தங்கம் சோனியாவை நீங்கள் நம்பவில்லையா? கருணாநிதியை நம்பவில்லையா? கடந்தகால வரலாற்றில் வாழும் இவர்களை விடவும், நிகழ்காலத்தில் நிற்கிற ஜெயலலிதா பரவாயில்லை. ஜெயலலிதாவின் கடந்தகால கொள்கைகளில் கடுமையான மாறுபாடு உண்டு. ஜெயலலிதாவை நம்பலாமா என்பதல்ல கேள்வி. பழைய வரலாற்றை சொல்லிச் சொல்லி தமிழர்கள் தலையில் அரியாசனம் போட்டு சந்ததி வளர்க்கும் கருணாநிதியும், சோனியாவும் இன்றைய நிலையில் நம்பக்கூடாதவர்கள்.

பொற்கோ said...

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதில் கடுகளவும் மறுப்போ, மாற்று கருத்தோ கொண்டோர் அல்ல என் போன்றோர்.
ஜெயலலிதாஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் ஈழம் அமைவதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.
ஆனால் யாம் சொல்ல வருவது இப்போது தான் தமிழக மக்கள் உண்மை நிலவரங்களை உணர்ந்து கொண்டுள்ளனர். அதையும் கெடுத்து விடுவார்களோ என்பது தான், மட்டுமல்லாமல் இன்னும் காலம் கடந்து செல்ல அனுமதிப்பது இன்னும் நம்மை பலவீன படுத்துவதற்கான சூட்சிகள் உளவு துறையினரால் நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால் எது நடக்க கூடாதோ அதை யாரை வைத்து நடத்த வேண்டுமோ அவர்களை வைத்து நடத்துவது தான் உளவுத்துறையின் கடந்த காலத்தில் நாம் கண்ட உண்மை.எனவே உண்மையை என் தமிழ் இனத்துக்கு சொல்லவேண்டியது என் முதல் கடமை.
வீரப்பன் கூட்டத்திற்குள் ஆள் அனுப்பி அவனை எப்படி வஞ்சம் தீர்த்தார்கள் என்பது நம் மனதை விட்டு இன்னும் போகவில்லை.
ஜெயலலிதாவின் நெட் ஒர்க் அப்படி நம்பிக்கை உள்ளவர்களின் பின்னலால் பின்னப்பட்ட தல்ல. சொன்னது எதையும் இதுவரை நிறைவேற்றியவர் அல்ல ஜெயலலிதா.என்னை பொறுத்த வரை காங்கிரசின் கோர பற்களை பிடுங்கி எறியவேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு உரிய கடமையை சரிவர செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.
இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டும் எந்த பிரச்னையானாலும் மருத்துவர் ராமதாசையும் நம்ப வேண்டாம் அவர் ஒரு சேலை கட்டாத ஜெயலலிதா.அப்புறம் வைகோ மட்டும் என்ன வாழுது வாஜ்பாய் ஆட்சியில் விடுதலை புலிகள் மீது தடை நீட்டிப்பு செய்த போது வாயை திறக்கவில்லை என்பதாவது இங்கு பின்நுட்டம் எழுதும் நண்பர்களுக்கு தெரியுமா? அன்றும் இன்று போல கலைஞர் பதவி கிடைத்தால் போதும் நிங்க என்ன பண்ணாலும் நாங்க எதுவும் கேட்க மாட்டோம் என்று பேசாதவர் தானே. தனக்கு ஒரு நிலை மற்றவர்களுக்கு ஒரு நிலை என்பது தமிழினத்திற்கு தலைமை தாங்கும் தலைவர்களிடம் இருக்கிறது. சரி அனைத்தையும் விடுவோம் நாற்பதும் கிடைத்த பின் டெல்லியில் இதே காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது என்பதோ, அந்த ஆதரவினால் உள்ள பலமான ஆட்சியின் அதிகாரத்தை வைத்து இன்னும் திஇவிரமான தாக்குதலுக்கு துணை போக மாட்டோறேன்பதோ நம்புவதற்கு இல்லை.நம்பிக்கை தான் வாழ்க்கை ஆனால் எதை நம்மப வேண்டும் என்பதற்கு பகுத்தறியும் அறிவு இருப்பவர்களுக்கு மட்டும் தான் புரியும். இன்றைய நிலையில் "செந்தழல் ரவி குறிப்பிடும் "பழந்தண்ணி" பாழ் பட்ட தண்ணி அதை குடிக்க வேண்டாம் என்பது தான் என் உறுதியானதும் , உலக தமிழினம் நம்ப வேண்டியதுமான கருத்து.

தோழமையுடன்

பொற்கோ

பொற்கோ said...

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதில் கடுகளவும் மறுப்போ, மாற்று கருத்தோ கொண்டோர் அல்ல என் போன்றோர்.
ஜெயலலிதாஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் ஈழம் அமைவதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.
ஆனால் யாம் சொல்ல வருவது இப்போது தான் தமிழக மக்கள் உண்மை நிலவரங்களை உணர்ந்து கொண்டுள்ளனர். அதையும் கெடுத்து விடுவார்களோ என்பது தான், மட்டுமல்லாமல் இன்னும் காலம் கடந்து செல்ல அனுமதிப்பது இன்னும் நம்மை பலவீன படுத்துவதற்கான சூட்சிகள் உளவு துறையினரால் நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால் எது நடக்க கூடாதோ அதை யாரை வைத்து நடத்த வேண்டுமோ அவர்களை வைத்து நடத்துவது தான் உளவுத்துறையின் கடந்த காலத்தில் நாம் கண்ட உண்மை.எனவே உண்மையை என் தமிழ் இனத்துக்கு சொல்லவேண்டியது என் முதல் கடமை.
வீரப்பன் கூட்டத்திற்குள் ஆள் அனுப்பி அவனை எப்படி வஞ்சம் தீர்த்தார்கள் என்பது நம் மனதை விட்டு இன்னும் போகவில்லை.
ஜெயலலிதாவின் நெட் ஒர்க் அப்படி நம்பிக்கை உள்ளவர்களின் பின்னலால் பின்னப்பட்ட தல்ல. சொன்னது எதையும் இதுவரை நிறைவேற்றியவர் அல்ல ஜெயலலிதா.என்னை பொறுத்த வரை காங்கிரசின் கோர பற்களை பிடுங்கி எறியவேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு உரிய கடமையை சரிவர செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.
இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டும் எந்த பிரச்னையானாலும் மருத்துவர் ராமதாசையும் நம்ப வேண்டாம் அவர் ஒரு சேலை கட்டாத ஜெயலலிதா.அப்புறம் வைகோ மட்டும் என்ன வாழுது வாஜ்பாய் ஆட்சியில் விடுதலை புலிகள் மீது தடை நீட்டிப்பு செய்த போது வாயை திறக்கவில்லை என்பதாவது இங்கு பின்நுட்டம் எழுதும் நண்பர்களுக்கு தெரியுமா? அன்றும் இன்று போல கலைஞர் பதவி கிடைத்தால் போதும் நிங்க என்ன பண்ணாலும் நாங்க எதுவும் கேட்க மாட்டோம் என்று பேசாதவர் தானே. தனக்கு ஒரு நிலை மற்றவர்களுக்கு ஒரு நிலை என்பது தமிழினத்திற்கு தலைமை தாங்கும் தலைவர்களிடம் இருக்கிறது. சரி அனைத்தையும் விடுவோம் நாற்பதும் கிடைத்த பின் டெல்லியில் இதே காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது என்பதோ, அந்த ஆதரவினால் உள்ள பலமான ஆட்சியின் அதிகாரத்தை வைத்து இன்னும் திஇவிரமான தாக்குதலுக்கு துணை போக மாட்டோறேன்பதோ நம்புவதற்கு இல்லை.நம்பிக்கை தான் வாழ்க்கை ஆனால் எதை நம்மப வேண்டும் என்பதற்கு பகுத்தறியும் அறிவு இருப்பவர்களுக்கு மட்டும் தான் புரியும். இன்றைய நிலையில் "செந்தழல் ரவி குறிப்பிடும் "பழந்தண்ணி" பாழ் பட்ட தண்ணி அதை குடிக்க வேண்டாம் என்பது தான் என் உறுதியானதும் , உலக தமிழினம் நம்ப வேண்டியதுமான கருத்து.

தோழமையுடன்

பொற்கோ

Tech Shankar said...

உங்க ஆதரவுக்கு நன்றி திரு. ரவியண்ணே

உடன்பிறப்பு said...

போர் நிறுத்தத்துக்கே ஒபாமா முதல் எல்லோரும் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள், இப்போ போய் காமெடி பண்ணிகிட்டு

Suresh said...

எப்படியோ போர் நிறுத்தம் எற்ப்பட்டு அப்பாவி மக்கள் வாழ்கை நன்றாக இருந்தால் சரி தான் நண்பாஅ

அன்பரசு said...

என்னண்ணே இன்னும் இப்படி பச்சப் புள்ளையா இருக்கீங்க! பேஸ் கட்ட பாத்தாலே தெரிய வேணாமா இவங்க என்ன பண்ணுவாயங்கன்னு! பாத்து சூதானமா இருங்கண்ணே!

யாரோ அவன் யாரோ said...

உன் டப்பாங்குத்து ஆட்டமெல்லாம் அந்த மோகனா ஆட்டத்திற்கு முன்னாடி செல்லாது...

மனோரமாவிடம் தில்லான மோகனாம்பாள் திரைப்டத்தில் ஒருவர் (பெயர் நினைவில்லை)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....