Monday, March 22, 2010

பகுத்தறிவும் இந்து ஞான மரபும் !!

எல்லாருக்கும் ஏற்ற இடுகை அல்ல..Non G. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள், மெல்லிய இதயம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த பதிவை படிக்காமல் தவிர்க்கவும்...இடுகையை வலது மூலையில் X இருக்கும் பொத்தானை அழுத்து மூடிவிடவும்..!!



கடந்த பதிவில் என்னுடன் விவாதம் செய்ய முயன்ற நன்பர்களுக்கும், திட்டிய பெயர் உள்ளவர்கள், வெறும் ப்ரொபைல் மட்டும் உள்ளவர்கள் மற்றும் அனானிகளுக்கும் சரியான பதில் சொல்லமுடியாத நிலை. வேலை. வேறு காரணமில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள். பதிவை எழுத முயன்றபோது அதற்குள் இணையத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் என்னை பாதித்தன. என்னுடைய கேள்விகள் சந்தேகங்கள் இந்த பதிவில். No Judgment. எந்த முன்முடிவும் இல்லை என்னிடம்..

இந்து ஞான மரபு.இதுபோன்ற பஸ் வேர்ட்களை (Buzz Words) இப்போது தான் பார்க்கிறேன். இந்து ஞான மரபு வாளின் மீது மதம் நடத்திய இஸ்லாமிய, அதிகாரத்தின் மீது மதம் பரப்பிய கிறித்தவ மதங்களின் அழுத்தத்தில் இருந்தெல்லாம் தாக்குபிடித்தததாக ஜெயமோகன் நிறுவுகிறார்..மேலும் ஆதிவாசிகளின், பழங்குடிகளின் தெய்வங்களையும் (வேலன் முருகன், சபரிமலை மணிகண்டன்) தன்னுள் இழுத்துக்கொண்டதாம் இந்து ஞான மரபு..அப்படி என்றால் முகமதுவையும், அல்லாவையும், இயேசுவையும், மரியாளையும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒருவரின் கேள்விக்கு பதிலை காணோம் !!

ஆனால் இந்து ஞான மரபு அதன் so Called டிவோட்டீஸ்களுக்கு என்ன செய்தது ? இந்து ஞான மரபு ஏன் அதில் இருந்து சாதி வேறுபாடுகளை களைய முயலவில்லை ? மனு தர்மம் என்பது இந்து ஞான மரபின் ஒழுங்குதானே ? மனு தர்மம் தானே சாதி அமைப்பை இன்னும் வீரியமாக நிறுவுகிறது ? இந்து ஞான மரபின் வழி வந்த சமூகம் என்றால் அதில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகம் மேல் எழ வாய்ப்பே இல்லை என்பது தானே உண்மை ?

இந்து ஞான மரபு, தத்துவம் மற்றும் விவாதங்களினாலேயே தன்னை நிலை நிறுத்தியது என்கிறார் ஒருவர். அப்போது சமணர்கள் ஏன் படுகொலை செய்யப்பட்டார்கள் ? அவர்கள் விவாதத்துக்கு தயாராக இல்லையா என்ன ? பவுத்தமும் சமணமும் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்துக்கு முன்பே அல்லவா அழிக்கப்பட்டன ?

பகுத்தறிவை பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். பகுத்தறிவும், நாத்திகமும் வெவ்வேறு என்பதுவாக ஒரு கதையாடல் அப்படியே தூவப்படுகிறது இணையத்தில். அதிலும், உண்மை பகுத்தறிவு வேறாம், போலி பகுத்தறிவு வேறாம். அது என்ன என்று இன்னும் கொஞ்சம் வெளக்குங்க, வெளங்கிக்கறேன்...

ஏன் பெரியாரிஸ்டுகள், நாத்திகர்கள் இந்து மதத்தை முதலில் கையில் எடுக்கவேண்டும் ? மூடநம்பிக்கைகளை எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் மதம் என்ற வகையிலும், திரட்சியான மக்களால் நம்பபடும் மதம் என்ற வகையிலும் தான் என்பது என் கருத்து. மற்ற ஆபிரகாமிய மதங்களில் மூட நம்பிக்கை இல்லையா, பெண்ணடிமைத்தனம் இல்லையா, சாதி வேறுபாடுகள் இல்லையா என்றால் இருக்கிறது. அதையும் சாடவேண்டிய தேவையும் இருக்கிறது.

ஏன் இந்து மதத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறாய் ? இஸ்லாமின் பர்தாவை கேள்விகேள், கிறித்தவ பாதிரிமார்களின் ஒழுக்கமின்மையை கேள்விகேள் என்றால், அதையும் செய்யத்தானே போகிறோம். முதலில் உங்களை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். மற்ற ஆபிரகாமிய மதங்களை நாங்கள் கேள்விகேட்கும்போது அவர்கள் பதில்சொல்வார்கள்...

ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? புண்படுத்தாமல் எப்படி பண்படுத்த முடியும் ? கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும்,  நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?

இந்து ஞான மரபோ, ஆபிரகாமிய மதங்களோ, சோதிடமோ, மூட நம்பிக்கைகளோ, பழக்க வழக்கங்களோ, யாரையும் பாதிக்காத வரையில் யாருக்கும் எந்த தொல்லையுமில்லை. ஆனால் அப்படி இல்லையே ? ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அது தொடுகிறதே ?

மரபூர் ஜய சந்திரசேகரன் என்று ஒருவர் உண்டு. அவர் செய்வதென்ன ? எங்கெல்லாம் இந்து கோயில்கள் கவனிப்பாரற்று விடப்படுகிறதோ அங்கே சென்று இறங்கி, அந்த கோயிலை சுத்தம் செய்து பூஜைகள் நடக்க வழி செய்கிறார். அவர் கோயிலை சுத்தப்படுத்துக்கிறாரோ, மரபை காக்கிறாரோ அதை பற்றி நான் சொல்லவரவில்லை. அவர் அந்த கோவில் மூலமாக ஒரு பூஜை நடத்தும் அர்ச்சகரின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். இது போன்ற ஒரு சில பாஸிட்டிவ் சைட் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான நெகடிவ் விஷயங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன. ? பட்டியல் போட்டால பதிவு நாராசமாகிவிடும்...அந்த கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் சேரியில் பஞ்சாயத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் தலித் குழந்தைகளுக்கு எதாவது செய்தாரா என்பதை அவர்தான் வந்து சொல்லவேண்டும்...

என்னுடைய மாமனார் தான் சார்ந்திருக்கும் ராமகிருஷ்ன மடத்துக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் தருகிறார். பூஜை புனஸ்கார நெய்வேத்தியம் மற்றும் அங்கே உழைக்காமல் வயிறு வளர்க்கும் அர்ச்சகர்களுக்காக இதை செய்கிறார். ஆனால் அவர் வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக சமையல் வேலை செய்யும் பிற்படுத்த்தப்பட்ட செல்விக்கு மாதம் 500 சம்பளம். 50 ரூபாயை உயர்த்துமாறு இரண்டு மாதமாக போராடுகிறார் செல்வி. இது ஒரு சிறிய உதாரணம்.

இந்து ஞான மரபை போற்றுவதால் பயன் பெறுபவர்கள் யார் ? அவர்கள் இந்து மதத்தை சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களா ? விதர்பாவில் ஐந்து ஆயிரம் ரூபாய் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி இந்து ஞான மரபை சேர்ந்தவரே. ஏன் அவருக்கு இந்து ஞான மரபு உதவி செய்யவில்லை ? ராமகிருஷ்ண மடத்தில் நெய்யாய் எரிந்த பணம் ஏன் அங்கே செல்லவில்லை ?

இந்து ஞான மரபின் உள்ளார்ந்து இணைந்துள்ள ஒன்று சோதிடம். சோதிடம் ஒரு ஹம்பக் என்று பலரும் உணர்ந்தே உள்ளார்கள். சோதிடத்தால் பயன் அடைபவர், அந்த சோதிடத்தை தொழிலாக செய்யும் சோதிடரே. (வாத்தியார் அய்யா மன்னித்தருள்க). அந்த சோதிடர் நல்லவராக இருந்து, நல்ல வார்த்தைகளை அள்ளிவிட்டால் நன்று. ஆனால் செவ்வாய் தோஷம் போன்ற தோஷம் பரிகாரம் போன்ற உடான்ஸுகளை விட்டு, அவர் பையையும் ரொப்பிக்கொண்டு, அவரை தேடிப்போனவர்களுடைய குடும்பத்திலும், வாழ்விலும் விளையாடுபவர்கள் எத்தனைபேர் ? வான சாஸ்திரத்தை (astralogy) திருடி அதை சோதிடத்துடன் இணைத்து, சோதிட பொய்களுக்கு உண்மை மேற்பூச்சு (Flavor) அடித்துவிட்டார்கள். 

2000 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா பார்ட்டி, சோதிடத்தை பாடமாக்க முயன்றபோது சுப்ரீம் கோர்ட்டு என்ன சொன்னது ? 'a giant leap backwards, undermining whatever scientific credibility the country has achieved so far'  

வெறும் கண்ணால் வானை அளந்து நட்சத்திரங்களையும், அதன் போக்குகளையும் கண்ட முற்கால இந்திய அறிவியலாளர்களின் உழைப்பை இந்த மூட நம்பிக்கைகள் திருடிக்கொண்டதை பார்த்தால் வருத்தமாக இல்லையா ? பெங்களூரில் ஒருவர் தான் கேட்கும் பத்து கேள்விகளுக்கும் எந்த சோதிடராவது பதில் சொன்னால் பத்து லட்சம் தருவதாக கரடியாக கத்தியும் எந்த சோதிடரும் அந்த சவாலை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? அவர்களுக்கு தெரியும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்... ?

மீண்டும் இந்த மத ரீதியான வன்முறைகளை பற்றி பார்க்கலாம்..இஸ்லாம் வன்முறை மதம் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸும் விஹெச்பியும் பூ பறிக்கவில்லையே ? அதுவும் தனது வன்முறைகளை அவ்வப்போது வெளிக்காட்டிக்கொண்டுதானே இருக்கிது ? அவன் குண்டு வைக்கிறான், நானும் வைப்பேன் பார் என்பது தானே மாலேகான் ? இந்து மதம் அதன் ஞான மரபை ஏன் கயர்லாஞ்சியில் பிரியாங்காவின் யோனியில் ஆப்பை அடித்து சொருகிய காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவில்லை ?

அப்போ அம்பேத்கார் தழுவிய புத்த மதம் அமைதியான மதமா ? பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்து, போராளி பெண்களின் பிணத்துடன் உறவுகொண்ட சிங்கள வெறியர்கள் புத்த மதத்திரராயிற்றே ? அவர்கள் ஏன் புத்தம் சரணம் கச்சாமி என்று பாடிக்கொண்டு எறும்புக்கு கூட துரோகம் இழைக்காமல் போகவேண்டியது தானே ? அதனால் தானே சொல்கிறோம். வன்முறையாளர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்று...மதங்களையும், மத பழக்கவழங்களையும் தூக்கி பிடிப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாதென்று ?

பர்தா போட்டால் நற்குடியென்று பெண்ணடிமைத்தனத்தை ப்ரெயின்வாஷ் செய்து வலியுறுத்தும் இஸ்லாமும் சரி, பிரம்மச்சரிய விரதம் பூண்டு பை-செக்ஸுவல் ஆக சந்தோஷமாக இருக்கும் உரோமை கத்தோலிக்க பாதிரிமார்களும் சரி, தன்னளவில் தங்கள் மதம் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே செய்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை சப்பைக்கட்டுகிறார்கள். அதன் எதிர்ப்புகளை பத்வா போட்டு சரி செய்கிறார்கள்.பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள். இந்து ஞான மரபும் சாரு நிவேதிதா போன்ற ஐசிஐசியை பிக்ஷாந்தி இண்டலக்சுவல் மூலம் வயிறு வளர்க்கிறது. நித்யானந்த ரஞ்சிதோற்சவம்..கல்கி தம்பதி சமேத ஹெராயினோற்சவம்...

மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய கிருத்துவ ப்ரெயின்வாஷ் மதங்கள் தன்னளவில் தங்களது திரட்சியான பின் தொடர்பவர்களை தக்கவைக்க தன்னால் ஆனமட்டும் முயல்கிறது. கொல்கிறது. ஒருபக்கம் காக்காய் வலிப்பு வந்தவர் லட்சக்கணக்கில் உம்ராக்கள் கொடுத்தார் என்றால் இன்னொரு பக்கம் யூதர்களிடம் தரும அடி வாங்கி கோமா ஸ்டேஜ் போய் மீண்டு வந்தவர் உயிர்த்தெழுந்தவர் ஆனார். இது தானே நிஜம் ? நீங்கள் நம்பும் இறையை இப்படி திடீரென அவமதிப்பதால் ஏன் இறை எதுவுமே செய்வதில்லை ? நீங்கள் தானே கோபக்குரல் எழுப்புகிறீர்கள் ?

இந்து மக்கள் கட்சி லீனா மணிமேகலை மீது, அவர் எழுதிய இரண்டு கவிதைக்காய் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் எழுதிய இரண்டு கவிதைகள் இவைதான் :


இரண்டு கவிதைகள்

1

நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது


நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்


எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்


அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை



2.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

ஆக்கம் : லீனா மணிமேகலை 


இதுகுறித்து ஜமாலன் எழுதிய விளக்கம் சுட்டியாக கொடுத்துள்ளேன்...!!!


இதே இந்து மக்கள் கட்சி, இந்து மதத்தை அவமதித்து விட்டமைக்காய் ஏன் நித்யானந்தர் மீது வழக்கு தொடரவில்லை ? கோயிலில் வைத்து கொன்றமைக்காய், சாட்சிகளை கலைத்தமைக்காய், ஏன் சங்கரர்கள் மீது வழக்கு தொடரவில்லை ? கருவறையில் இருப்பது கல் என்று வெளிச்சம் போட்டு காட்டி, அங்கே காதல் அரங்கம் நடத்திய தேவநாதன் மீது ஏன் வழக்கு தொடரவில்லை ? அவர்கள் வலிமையானவர்களாக, அவர்கள் உங்களை சார்ந்தவர்களாக இருப்பதனாலேயேதானே ? 

கட்டற்ற சுகந்திரம் வழங்கும் இணைய பெருவெளியில் இந்த கவிதையை ஆயிரம் பேர் கட் காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டால் அவர்கள் மீது எப்படி வழக்கு தொடுப்பீர்கள் ? முகமற்றவர்கள் பின்னூட்டத்தில் வெளியிட்டால் ? தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்டால் ? இதே போன்றதொரு பத்து கவிதைகளை யாரோ ஒருவர் ஒரு குழுமத்தில் எழுதினால் ? பல்வேறு ஆபிரகாமிய சோதனைகளை கடந்துவந்த இந்து ஞான மார்க்கம் இதனை ஏன் புறங்கையால் தள்ளிவிடாமல் லீனா மணிமேகலைக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ? 

விமர்சனங்களை எதிர்த்து பதில் சொல்லும், விவாதங்களை அல்வா துண்டு போல வெட்டி வீழ்த்தும் வினவும் இது குறித்து தானும் ஒரு ஆபாச பதிவை தன் தளத்தில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியுடன் கை கோர்த்துக்கொள்கிறார்கள். அல்லது ஒருவருக்கொருவர் சொறிந்துவிட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து பரிஷத் தீவிரவாதிகளாயிற்றே ? ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ம்ஹும். எப்போதும் போல ஒன்று அமைதி காப்பார்கள் அல்லது அசிங்கப்படுத்துவார்கள்...அதை தானே காலங்காலமாக செய்துவருகிறார்கள் ? பெண்கள் தினத்து கட்டுரைகளை பெண்களை வைத்து எழுதிவிட்டால் போதுமா ? நீங்களும் பிற்போக்குவாதிகளாக, ஊகத்தின் அடிப்படையில் கட்டுரை தீட்டுபவர்களாக, தனிமனித ஆபாச தாக்குதல் நடத்துபவர்களாக தானே இருக்கிறீர்கள் ?

இந்த பதிவு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். நான் உங்கள் நன்பனாகவும் இருக்கலாம். என்னை இந்த பதிவுக்கு பிறகு வெறுத்துவிடவேண்டாம். புறத்தே தள்ளிவிடவேண்டாம்...நான் தவறு செய்வதாக நினைத்தால் எனக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு உங்கள் கடவுளிடம் வேண்டுங்கள்..!!! இது என்னுடைய கருத்து மட்டுமே. ஒரு நெகடிவ் ஓட்டை போட்டுவிட்டீர்கள் என்றால் எவ்வளவு பேருக்கு இந்த பதிவு பிடிக்கவில்லை என்று காண்பேன்...!! உங்களை இந்த பதிவு உண்மையில் ரொம்பவே காயப்படுத்தினால் சொல்லுங்கள். பதிவையே எடுத்துவிடுகிறேன். அது நட்புக்கு நான் செய்யும் மரியாதை...!!!

தொடர்ந்து பகுத்தறிவு !! 
இருளில் இருந்து ஒளி..!!!
மூட நம்பிக்கைகளில் இருந்து நல்வாழ்வு...!!!


..
..

85 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

பொறுங்க பதிவை முழுதும் படித்துவிட்டு வருகிறேன் !

Anonymous said...

படத்தில் இருக்கும் முண்டம் யார்?கிருத்துவ பகுத்தறிவாளனா?

ரவி said...

என்னை உரையாடியில் இணைத்துக்கொள்ள

redflameravi@gmail.com

வால்பையன் said...

முழுமையாக உடன்படுகிறேன்!

நோய்கான மருந்து கசக்க தான் செய்யும்!
மதம், மனிதனை பிடித்துள்ள நோய்!

Anonymous said...

Your email should have been

convertedsob@bastards.com

உண்மைத்தமிழன் said...

நீங்கள் போராளிதான். ஒத்துக்குறேன்.. அதுக்காக உதாரணம் காட்டுறதுக்கு சொந்த வாழ்க்கையைக் காட்டுறது அவ்ளோ நல்லாயில்லை தம்பி..!

பதிவின் கருத்துக்கு சம்பந்தமேயில்லாமல் புகைப்படத்தை போட்டு வைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை..!

ஓருவேளை.. இப்படியே நானும் ஹரித்துவார் கிளம்பிட்டேன்னு காட்டுறதுக்கா..?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிறைய எழுதி இருக்கிறீர்கள்!


லீனா கவ்ஜை படிச்சாச்சு, முன்னாடியே!

பழமைபேசி said...

இளைய குத்தூசி எதோ எழுதி இருக்கார்... வெகு நீளமாக இருப்பதால், அடியேன் இப்போதைக்கு விடை பெறுகிறேன்!

பழமைபேசி said...

மட்டுறுத்தல் உங்க பதிவுலுமா? நடக்கட்டு நடக்கட்டு!!

சென்ஷி said...

++ :)

இனியா said...

Good one Ravi!!!

பனித்துளி சங்கர் said...

நண்பரே உலகம் என்ற இந்த சிறிய வார்த்தைக்குள் இத்தனை முரண்பாடுகாளா ?

கவிதா | Kavitha said...

எச்சூச்சுமீ...!! எல்லாம் சரி.. இதுல ஒரு போட்டோ போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//வன்முறையாளர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்
100% உண்மை அண்ணா ..

கிருஷ்ண மூர்த்தி S said...

திரு ரவி!

குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்பது சரிதானே என்ற ரீதியில், உங்கள் பதிவு இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

ஜெயமோகன் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள், அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதாஎன்பதைத் தேடுவதை விட அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் முன்கூட்டியே எடுத்துக் கொண்ட முடிவின்படியே, அவர்கள் சொல்லும் விஷயத்தையும் தீர்மானிக்கிறீர்கள் இல்லையா?

இந்தியத் தத்துவ மரபு அல்லது வேறு சமூகங்களின் தத்துவ மரபு இவைகளை இப்போது தான் பார்க்க முடிகிற ஒருவருக்கு, கொஞ்சம் புரிந்துகொள்ள முயற்சிக்கிற தன்மையும் இருந்திருந்தால், இவ்வளவு நீளமான பதிவும், அதற்குச் சமமாக இப்படி ஒரு நீளமான பின்னூட்டமும் தேவையே இருந்திருக்காது.

ஞான மரபு சாதீயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், சமூகம், தன்னை ஒரு அரசியல் அமைப்பாக, அரசாக இருக்கும்போது, அங்கே கொஞ்சம் படித்தரங்கள் வந்துவிடுகின்றன. மனுதர்மம், சாதீயக் கட்டுமானங்கள் இவையெல்லாம், தத்துவத்தின் அடிப்படையில் அல்ல, ஆண்டவர்களுடைய சவுகரியங்களுக்காக ஏற்படுத்தப் பட்டவை. ஆந்திரத்தில் கல்வேலை செய்யும் நாயக்கர்கள், இங்கே அடிமைகளாக கல்லுடைக்கும் பாயக்கர்கலாகவும், ஒட்டர நாயக்கர்களாகவும் ஆகிப் போன அவலம், அரசுகளுக்கிடையே நடந்த போர்களின் விளைவாக ஏற்பட்டவையே தவிர, தத்துவ மரபுகளால் அல்ல!

அதேபோல, சமணர்களைக் கழுவேற்றம் செய்தது சைவத்தின் எழுச்சி என்பதைவிட, வணிகர்களின் ஆதிக்கத்தை உடைத்து வெள்ளாளர்கள் நடத்திய அதிகாரப் போட்டி என்பது, கொஞ்சம் வரலாற்றை சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் புரிய வரும். உயிர் பிழைப்பதற்காக சமணர்களாக இருந்தவர்கள், சோழநாட்டை விட்டுப் பாண்டிய மண்ணுக்கு ஓடிவந்த கதையை சிலப்பதிகாரம் சொல்லும். அப்படி வந்தவர்கள், சிவநெறிச் செல்வர்களாகவும் மாறி தாங்கள் அண்டிப் பிழைக்க வந்த இடத்தை செட்டி நாடு என்றும், செட்டிநாட்டு அரசர் என்றும் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் கதை நீங்கள் சொல்லும் நிறைய விஷயங்களை வெறும் கற்பிதம் என்றே ஆக்குகிறது.

இதை, ஒரு பட்டிமன்றமாகவோ, அல்லது எரிந்த கட்சி-எரியாதகட்சி லாவணியாகவோ மாற்றிவிடவோ எனக்கு விருப்பமில்லை.

மதங்களுடைய உபயோகம், தேவை முடிந்து விட்டது. வெற்று உபதேசங்களால் எந்த ஒரு மனிதனுக்கும் அவன் தேட வேண்டிய, அறிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் புரிய வைத்துவிட முடியாது என்ற அளவில் முடித்துக் கொள்கிறேன்.

பத்மநாபன் said...

பதிவுன்னா எல்லாந்தானே ... எனக்கு அந்த போட்டோ பத்தி மட்டும் ... போட்டோ எங்க எடுத்திங்க ? ..பார்த்தவுடன் எனக்கு நீலகிரி மலை ரயில்பாதை நினைவுகள் மட்டும் தாலாட்டியது ... ஹடர்லி ன்னு ஒரு ஸ்டேஷன் வரும் அந்த இடம் மாதிரியே இருக்கு .
(பெயர் முன்ன பின்ன இருக்கும்) அந்த இடத்திலே அரை மணி நேரம் நிறுத்துவாங்க ...கூன்னூர் லிருந்து வடை , பப்ஸ் கொண்டு வந்து விப்பாங்க .. இயற்கை அழகு சுகமோ சுகமான இடம்.. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி ....

வினவு said...

//விமர்சனங்களை எதிர்த்து பதில் சொல்லும், விவாதங்களை அல்வா துண்டு போல வெட்டி வீழ்த்தும் வினவும் இது குறித்து தானும் ஒரு ஆபாச பதிவை தன் தளத்தில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியுடன் கை கோர்த்துக்கொள்கிறார்கள். அல்லது ஒருவருக்கொருவர் சொறிந்துவிட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து பரிஷத் தீவிரவாதிகளாயிற்றே ? ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ம்ஹும். எப்போதும் போல ஒன்று அமைதி காப்பார்கள் அல்லது அசிங்கப்படுத்துவார்கள்...அதை தானே காலங்காலமாக செய்துவருகிறார்கள் ?//

வினவு எங்கே ஆபாச பதிவை வெளியிட்டது? இந்து மக்கள் கட்சியுடன் எங்கே கை கோர்த்தோம்?

லீனா மணிமேகலை கவிதை குறித்த விமரிசனம்தான் வினவின் கட்டுரை. லீனாவின் கவிதையை விமரிசிக்கக் கூடாது என்பதும் ஒரு வகையில் பாசிசம்தான். உங்களுக்கு லீனாவின் கவிதையும் புரியவில்லை, அதற்கு வினவின் கட்டுரையும் புரியவில்லை. எதற்கு கோபம் வருகிறது என்பதும் புரியவில்லை.

இந்து மக்கள் கட்சி இந்து முன்னணியை விட இந்துக்களுக்கான தீவிர அமைப்பு என்று காட்டிக் கொள்வதற்கு இத்தகைய மலிவான விளம்பரங்களில் ஈடுபடுகிறது. பத்திரிக்கைகள் அதை மலிவான பரபரப்பிற்காக விளம்பரப்படுத்துகின்றன. இதில் லீனாவை விமரிசிப்பதால் வினவும் இந்து மக்கள் கட்சியும் ஒன்று என்று கருதுவது அடிமுட்டாள்தனம்.

உலக அழகிப் போட்டி பெங்களூரில் முன்பு நடந்த போது இடது சாரிகள், பெண்ணியவாதிகள், இந்துமதவெறி அமைப்புக்கள் எல்லாரும் எதிர்த்தனர். இதனால் இடதும், வலதும் ஒன்றா? எதிர்ப்பதின் நோக்கங்கள் வேறு. இந்து மதவெறியர்கள் தமது பெண்ண்டிமைத்தனத்தை காப்பாற்றுவதற்காக எதிர்க்கின்றனர். இடதுசாரிகள் பெண்ணை போகப்பொருளாக மாற்றும் முதலாளித்துவ வக்கிரத்துக்கு எதிராக எதிர்க்கின்றனர். இதை இணைவைத்து பேசி எல்லாம் ஒன்று என்று முத்திரையிடுவது அயோக்கியத்தனம்.

அடுத்து செங்கடல் படப்படிப்பில் லீனா குழுவினர் ஒரு தொழிலாளியை அடித்து அவமதித்தது குறித்து அந்த தொழிலாளியே இனியொரு தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இப்போது ஊகமின்றியே உண்மையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

லீனா போன்ற மேட்டுக்குடி பெண்கள் பொழுதுபோக்கிற்காக எழுதும் குப்பைகளையெல்லாம் உங்களைப் போன்ற ரசிகர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். அதற்கு இந்து மக்கள் கட்சி போன்ற காமடி பாசிஸ்ட்டுகள் ஒரு விளம்பரத்தை தேடித் தரலாம். மற்றபடி இதில் எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.

இப்படி ஒரு விளக்கத்தை எழுதி நேரவிரயம் செய்த துக்கத்துடன்...............

வினவு said...

//விமர்சனங்களை எதிர்த்து பதில் சொல்லும், விவாதங்களை அல்வா துண்டு போல வெட்டி வீழ்த்தும் வினவும் இது குறித்து தானும் ஒரு ஆபாச பதிவை தன் தளத்தில் வெளியிட்டு இந்து மக்கள் கட்சியுடன் கை கோர்த்துக்கொள்கிறார்கள். அல்லது ஒருவருக்கொருவர் சொறிந்துவிட்டுக்கொள்கிறார்கள்.அவர்கள் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து பரிஷத் தீவிரவாதிகளாயிற்றே ? ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ம்ஹும். எப்போதும் போல ஒன்று அமைதி காப்பார்கள் அல்லது அசிங்கப்படுத்துவார்கள்...அதை தானே காலங்காலமாக செய்துவருகிறார்கள் ?//

வினவு எங்கே ஆபாச பதிவை வெளியிட்டது? இந்து மக்கள் கட்சியுடன் எங்கே கை கோர்த்தோம்?

லீனா மணிமேகலை கவிதை குறித்த விமரிசனம்தான் வினவின் கட்டுரை. லீனாவின் கவிதையை விமரிசிக்கக் கூடாது என்பதும் ஒரு வகையில் பாசிசம்தான். உங்களுக்கு லீனாவின் கவிதையும் புரியவில்லை, அதற்கு வினவின் கட்டுரையும் புரியவில்லை. எதற்கு கோபம் வருகிறது என்பதும் புரியவில்லை.

இந்து மக்கள் கட்சி இந்து முன்னணியை விட இந்துக்களுக்கான தீவிர அமைப்பு என்று காட்டிக் கொள்வதற்கு இத்தகைய மலிவான விளம்பரங்களில் ஈடுபடுகிறது. பத்திரிக்கைகள் அதை மலிவான பரபரப்பிற்காக விளம்பரப்படுத்துகின்றன. இதில் லீனாவை விமரிசிப்பதால் வினவும் இந்து மக்கள் கட்சியும் ஒன்று என்று கருதுவது அடிமுட்டாள்தனம்.

உலக அழகிப் போட்டி பெங்களூரில் முன்பு நடந்த போது இடது சாரிகள், பெண்ணியவாதிகள், இந்துமதவெறி அமைப்புக்கள் எல்லாரும் எதிர்த்தனர். இதனால் இடதும், வலதும் ஒன்றா? எதிர்ப்பதின் நோக்கங்கள் வேறு. இந்து மதவெறியர்கள் தமது பெண்ண்டிமைத்தனத்தை காப்பாற்றுவதற்காக எதிர்க்கின்றனர். இடதுசாரிகள் பெண்ணை போகப்பொருளாக மாற்றும் முதலாளித்துவ வக்கிரத்துக்கு எதிராக எதிர்க்கின்றனர். இதை இணைவைத்து பேசி எல்லாம் ஒன்று என்று முத்திரையிடுவது அயோக்கியத்தனம்.

அடுத்து செங்கடல் படப்படிப்பில் லீனா குழுவினர் ஒரு தொழிலாளியை அடித்து அவமதித்தது குறித்து அந்த தொழிலாளியே இனியொரு தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இப்போது ஊகமின்றியே உண்மையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

லீனா போன்ற மேட்டுக்குடி பெண்கள் பொழுதுபோக்கிற்காக எழுதும் குப்பைகளையெல்லாம் உங்களைப் போன்ற ரசிகர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். அதற்கு இந்து மக்கள் கட்சி போன்ற காமடி பாசிஸ்ட்டுகள் ஒரு விளம்பரத்தை தேடித் தரலாம். மற்றபடி இதில் எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.

இப்படி ஒரு விளக்கத்தை எழுதி நேரவிரயம் செய்த துக்கத்துடன்...............

வெடிகுண்டு வெங்கட் said...

very interesting.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

Anonymous said...

Sir,
RK mutt is doing some good services in rural areas. You can enquire about the saradha ashram, ulundurpet. Hope you will get some positive news. Because i studied there for 6 years.

About astrology, i agree completely with you. it is of no use.

good and bad are in every religion. but in so called hinduism it is a nexus of politics and religious leaders. very difficult to creat awareness among the common man.

haripasad

ராம்ஜி_யாஹூ said...

to me it looks like very long post, to be honest read selected paragraphs only.

தர்ஷன் said...

பதிவை எடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அருமையான அவசியமானப் பதிவு ஆனால் இந்தக் காட்டுக் கூச்சல் உறைப்பதேயில்லை என்பதுதான் வேதனை

முகவை மைந்தன் said...

வாழ்த்துகள். எல்லாத்தையுமே யாரும் சரியாப் பேசுறதில்லை. சறுக்குனதை மட்டும் வைச்சுக்கிட்டு எதிர்வினை பண்ணறது இயல்பு. நீங்க தொடருங்க;-)

அப்ப, சரியாப் பேசுனதை என்ன பண்றது? எதிர்வினை தான் உரையாடலை மேக்கொண்டு எடுத்துட்டுப் போகும். அது தானே இன்றைய தலையாயத் தேவை.

குடுகுடுப்பை said...

தொடர்ந்து பகுத்தறிவு !! இருளில் இருந்து ஒளி..மூட நம்பிக்கைகளில் இருந்து நல்வாழ்வு...!!!
//

நீங்க பெரியார்தாசன் மாதிரியே பேசறீங்க. சும்மா காமிடிக்குதான்.

மதமெல்லாம் ஒழியாது என்பது என் நம்பிக்கை. ஆனால் நிறைய உயிரை காவுகொடுக்கும் என்பதும் என் நம்பிக்கை.

உள்ளூர்காரன் said...

ஏன் சார் உங்களுக்கு வேறு வேலையே இல்லையா......சாமி கும்பிடுகிறவன் கூட 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ தான் சாமியை நினைப்பான், நீங்க எல்லோரும் சாமி இல்லை சாமி இல்லை என்று சொல்லிக்கிட்டு 24 மணி நேரமும் சாமியையே நினைத்துக்கொண்டு, அனைத்து நூல்களையும் படித்து விட்டு அதிலிருந்து உதாரணங்களை உங்களுக்கு ஏற்றார்போல தொகுத்து, அதை பதிவிட்டு அதற்க்கு ஒரு கூட்டம் உடனே மறுமொழி மூலம் ஆதரவு தெரிவித்து உங்களுக்குள்ளேயே மகிழ்ந்துகொள்கிறீர்கள், யாரை திருப்தி செய்ய நினைக்கிறீர்கள், இளைஞர்கள் என்றாலே கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்போல காட்டிகொள்வது, நாலு காசு பார்த்ததும் அலட்சிய போக்குள்ளவர்கள் போல் நடந்து கொள்வது, இது தான் இன்றைய fashion,

இத்தனை பேசும் நீங்கள் முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களை திருத்த பாருங்கள், உங்க மாமனாரிடம் இதை எல்லாம் விளக்கி சொல்லி அவர் மடத்திற்க்கு தரும் பணத்தை வேறு காரியங்களுக்கு திருப்பி விடுங்கள், அது முடியுமா உங்களால்?? அவரிடம் சொன்னால் அவர் என்ன சொல்லுவார் " போடா வெளக்கெண்ணை எனக்கு எல்லாம் தெரியும் என்பார், அவ்வளவு ஏன் சொத்து உள்ள மாமனார் என்றால் நீங்களும் கூட சேந்து மடத்துக்கு கூஜா தொக்கினாலும் ஆச்சர்யபட இல்லை......

இங்க BLOGSPOT சும்மா கிடைக்குதேன்னு பெரிய புரட்சிகாரன் மாதிரி எழுத வேண்டியது...அதற்க்கு நாலு வெண்ணை வெட்டி சிப்பாய்கள் வந்து வந்தனம் பாட வேண்டியது....

சாமி கும்பிடுருவனுக்கும் கடவுள் இல்லை இல்லைன்னு நல்லாவே தெரியும்....இருந்தாலும் ஏன் கும்பிடுரான்னா இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா துன்பத்திற்க்கு மத்தியில் வாழ்க்கையை கடக்கும் போது அனைவருக்கும் மனதில் ஒருவித பயம் வரும், தன்னம்பிக்கை குறையும், அப்போது தனக்கு மேல் ஒரு சக்தி உள்ளது, அது நம்மை கைவிடாது......என்ற எண்ணத்தினால்...ஏன் குருட்டு நம்பிக்கையினால் , அவனாகவே அவனுக்கு ஒரு கற்பனையான ஆதரவை தேடிக்கொண்டு தொடந்து பயணிக்கிறான்....சில சமயம் வரம்பு மீறுவதும், தவறாக போவதும் தவிர்க்க முடியாததாகிறது....

ஆனால் இதுவல்ல நாட்டின் முக்கிய பிரச்சனை....இன்னைக்கு எங்க பார்த்தாலும் வறுமை, வஞ்ச லாவண்யம், வேலையின்மை, கடும் விலைவாசி உயர்வு, அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கு, அரசியல்வாதிகளின் நேரடி ஊழல், எதற்க்கும் கட்டுபடாத அரசு அலுவலர்களின் கொட்டம் போன்ற எண்ணிலடங்கா பிரச்சனைகள் சாமானியனின் வாழ்வை நிலைகுலைய வைக்கிறது......இதை பற்றி உங்களால் எதாவது எழுத முடியுமா அல்லது இதை எதிர்த்து உங்களால் ஒரு இயக்கமோ அல்லது அமைப்போ உருவாக்கி போராட தான் முடியுமா, இதெல்லாம் முடியாது...ஏனென்றால் உங்களுக்கு பயம், இதையெல்லாம் செய்தால் வீடு தேடி வந்து இழுத்து போட்டு உதைப்பார்கள்..... அதனால் மிகவும் எளிதான வேலைகளான அடுத்தவர்களை கேலி செய்வது, அவர்களின் நம்பிக்கையை ஏளனம் செய்வது, வெட்டி வசனம் பேசுவது, வீண் தர்க்கம் செய்வது...இதைத்தானே உங்களால் செய்ய முடியும், அதற்க்கு உங்களை போன்ற ஒரு கூட்டம் ஆதரவு தர தயாராக உள்ளது, என்ன அந்த காலத்தில் குட்டி சுவற்றின் மீது அமர்ந்து கொண்டு இதை செய்தார்கள், இப்போது நவீனமாக BLOGSPOT மூலம் செய்கிறேர்கள் அவ்வுளவுதான் வித்தியாசம்.....

உங்களின் பதிவுகளுக்கு மதவாதிகளிடம் இருந்தோ அல்லது இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் இருந்தோ அதிக எதிர்ப்பு வராததட்க்கு காரணம் தெரியுமா?? சாலையில் மலம் கிடந்தால் நாம் தான் ஒதுங்கி போக வேண்டுமே ஒழிய அதை மிதிக்க என்ன கூடாது, அப்படி செய்தால் அது நமது காலில் தான் ஒட்டிக்கொள்ளும், அதற்க்காக மலம் தன்னை பெரியவனாகவோ, தன்னை கண்டு அனைவரும் பயந்து போவதாகவோ எண்ணிக்கொள்ள முடியாது...

உள்ளூர்காரன் said...

ஏன் சார் உங்களுக்கு வேறு வேலையே இல்லையா......சாமி கும்பிடுகிறவன் கூட 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ தான் சாமியை நினைப்பான், நீங்க எல்லோரும் சாமி இல்லை சாமி இல்லை என்று சொல்லிக்கிட்டு 24 மணி நேரமும் சாமியையே நினைத்துக்கொண்டு, அனைத்து நூல்களையும் படித்து விட்டு அதிலிருந்து உதாரணங்களை உங்களுக்கு ஏற்றார்போல தொகுத்து, அதை பதிவிட்டு அதற்க்கு ஒரு கூட்டம் உடனே மறுமொழி மூலம் ஆதரவு தெரிவித்து உங்களுக்குள்ளேயே மகிழ்ந்துகொள்கிறீர்கள், யாரை திருப்தி செய்ய நினைக்கிறீர்கள், இளைஞர்கள் என்றாலே கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்போல காட்டிகொள்வது, நாலு காசு பார்த்ததும் அலட்சிய போக்குள்ளவர்கள் போல் நடந்து கொள்வது, இது தான் இன்றைய fashion,

இத்தனை பேசும் நீங்கள் முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களை திருத்த பாருங்கள், உங்க மாமனாரிடம் இதை எல்லாம் விளக்கி சொல்லி அவர் மடத்திற்க்கு தரும் பணத்தை வேறு காரியங்களுக்கு திருப்பி விடுங்கள், அது முடியுமா உங்களால்?? அவரிடம் சொன்னால் அவர் என்ன சொல்லுவார் " போடா வெளக்கெண்ணை எனக்கு எல்லாம் தெரியும் என்பார், அவ்வளவு ஏன் சொத்து உள்ள மாமனார் என்றால் நீங்களும் கூட சேந்து மடத்துக்கு கூஜா தொக்கினாலும் ஆச்சர்யபட இல்லை......

இங்க BLOGSPOT சும்மா கிடைக்குதேன்னு பெரிய புரட்சிகாரன் மாதிரி எழுத வேண்டியது...அதற்க்கு நாலு வெண்ணை வெட்டி சிப்பாய்கள் வந்து வந்தனம் பாட வேண்டியது....

சாமி கும்பிடுருவனுக்கும் கடவுள் இல்லை இல்லைன்னு நல்லாவே தெரியும்....இருந்தாலும் ஏன் கும்பிடுரான்னா இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா துன்பத்திற்க்கு மத்தியில் வாழ்க்கையை கடக்கும் போது அனைவருக்கும் மனதில் ஒருவித பயம் வரும், தன்னம்பிக்கை குறையும், அப்போது தனக்கு மேல் ஒரு சக்தி உள்ளது, அது நம்மை கைவிடாது......என்ற எண்ணத்தினால்...ஏன் குருட்டு நம்பிக்கையினால் , அவனாகவே அவனுக்கு ஒரு கற்பனையான ஆதரவை தேடிக்கொண்டு தொடந்து பயணிக்கிறான்....சில சமயம் வரம்பு மீறுவதும், தவறாக போவதும் தவிர்க்க முடியாததாகிறது....

ஆனால் இதுவல்ல நாட்டின் முக்கிய பிரச்சனை....இன்னைக்கு எங்க பார்த்தாலும் வறுமை, வஞ்ச லாவண்யம், வேலையின்மை, கடும் விலைவாசி உயர்வு, அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கு, அரசியல்வாதிகளின் நேரடி ஊழல், எதற்க்கும் கட்டுபடாத அரசு அலுவலர்களின் கொட்டம் போன்ற எண்ணிலடங்கா பிரச்சனைகள் சாமானியனின் வாழ்வை நிலைகுலைய வைக்கிறது......இதை பற்றி உங்களால் எதாவது எழுத முடியுமா அல்லது இதை எதிர்த்து உங்களால் ஒரு இயக்கமோ அல்லது அமைப்போ உருவாக்கி போராட தான் முடியுமா, இதெல்லாம் முடியாது...ஏனென்றால் உங்களுக்கு பயம், இதையெல்லாம் செய்தால் வீடு தேடி வந்து இழுத்து போட்டு உதைப்பார்கள்..... அதனால் மிகவும் எளிதான வேலைகளான அடுத்தவர்களை கேலி செய்வது, அவர்களின் நம்பிக்கையை ஏளனம் செய்வது, வெட்டி வசனம் பேசுவது, வீண் தர்க்கம் செய்வது...இதைத்தானே உங்களால் செய்ய முடியும், அதற்க்கு உங்களை போன்ற ஒரு கூட்டம் ஆதரவு தர தயாராக உள்ளது, என்ன அந்த காலத்தில் குட்டி சுவற்றின் மீது அமர்ந்து கொண்டு இதை செய்தார்கள், இப்போது நவீனமாக BLOGSPOT மூலம் செய்கிறேர்கள் அவ்வுளவுதான் வித்தியாசம்.....

உங்களின் பதிவுகளுக்கு மதவாதிகளிடம் இருந்தோ அல்லது இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் இருந்தோ அதிக எதிர்ப்பு வராததட்க்கு காரணம் தெரியுமா?? சாலையில் மலம் கிடந்தால் நாம் தான் ஒதுங்கி போக வேண்டுமே ஒழிய அதை மிதிக்க என்ன கூடாது, அப்படி செய்தால் அது நமது காலில் தான் ஒட்டிக்கொள்ளும், அதற்க்காக மலம் தன்னை பெரியவனாகவோ, தன்னை கண்டு அனைவரும் பயந்து போவதாகவோ எண்ணிக்கொள்ள முடியாது...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது நீக்க வேண்டிய பதிவல்ல!இத்தனை காலமாகியும் எந்த மதங்களுமே மனிதம் பேணவில்லையெனும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.அடுத்து லீனாவின் எழுத்துப் பற்றி- அவருக்கு எழுத்துச் சுதந்திரம் உள்ளது போல் அதைப் படித்த எமக்கு அதை எப்படி புரிந்தோம் என்று கூறும் உரிமையுண்டு. ஒரு ஆணோ பெண்ணோ- இப்படி எழுதினால் அவர்கள் கட்டாயம் ஒரு பாலியல் மனநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதே நன்று.ஏதோ பாதிப்பு உண்டு.இதை அவர் குடும்ப உறுப்பினர்கள் உடன் செய்வது எல்லோருக்கும் நன்மை.

K.MURALI said...

///ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ?///

நீங்களாக வந்து நான் உனக்கு வைத்தியம் பார்க்கிறேன் என்று சொல்ல முடியாது.
எந்த வைத்தியரிடம் செல்ல வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அவர் அவர்களுக்கே உள்ளது.
நீங்கள் யார் எல்லாருக்கும் வைத்தியம் பார்க்க.
வலியில்லாமல் போடுவதற்க்கு ஊசி வந்துவிட்டது.

உங்களால் உங்கள் மாமனாருக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
மூடியாது. ஏன் என்றால் பிறகு உங்கள் வீட்டில் நிம்மதி போய் விடும்.

காலில் முள் குத்தினால் உயிரை யாரும் எடுத்துவிடுவதில்லை.
முள்ளை மட்டுமே எடுப்போம்.

ஆதலால் நடக்கின்ற தவறை மட்டும் சுட்டி காட்டுங்கள்.

//வால்பையன் said...

முழுமையாக உடன்படுகிறேன்!

நோய்கான மருந்து கசக்க தான் செய்யும்!///
ஆமாம்.கசக்க தான் செய்யும்!ஆணால் அதை கசப்பு தெரியாமல் தேனில் குழைத்து சாப்பிடலாம்.
அல்லது ஒரே முழுங்காக முழுங்கி விடலாம்.

priyamudanprabu said...

ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? புண்படுத்தாமல் எப்படி பண்படுத்த முடியும் ? கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும், நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?
////

நல்லாயிருக்கு

priyamudanprabu said...

ஜெயமோகனின் ஏழாம் உலகமும் கோவில் கருவறையும்..!!!!!
http://priyamudan-prabu.blogspot.com/2010/03/blog-post_20.html

Anonymous said...

அருமையான பதிவு. மதம் மனிதர்களுக்கு மதம் பிடிக்க வைத்துவிடுகிறது. இந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் செய்த "தவறை" மனம் ஒத்துக்கொள்ள மறுக்கும் பொது தான் "கடவுள்" தேவை படுகிறார். இதை எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவனுக்கு "கடவுளோ" "மதமோ" தேவைபடாது. என்னை பொறுத்தவரை "சாமி" கும்பிடுகிறவன் எல்லாம் "Obsessive-compulsive disorder" உள்ளவர்கள். கண்டிப்பாக நல்ல மன நல மருத்துவரை அணுகினால் சீக்கிரம் குணமடைந்து விடலாம்.

எறும்பு said...

followup..

மணிஜி said...

//என்னுடைய மாமனார் தான் சார்ந்திருக்கும் ராமகிருஷ்ன மடத்துக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் தருகிறார். பூஜை புனஸ்கார நெய்வேத்தியம் மற்றும் அங்கே உழைக்காமல் வயிறு வளர்க்கும் அர்ச்சகர்களுக்காக இதை செய்கிறார். ஆனால் அவர் வீட்டில் பதினைந்து ஆண்டுகளாக சமையல் வேலை செய்யும் பிற்படுத்த்தப்பட்ட செல்விக்கு மாதம் 500 சம்பளம். 50 ரூபாயை உயர்த்துமாறு இரண்டு மாதமாக போராடுகிறார் செல்வி. இது ஒரு சிறிய உதாரணம்.//

பூஜை,புனஸ்காரம் என்று ஆசாரமாக இருக்கும் உங்கள் மாமனார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமையல்காரியை பணியமர்த்தியிருக்கிறார் என்பது உண்மையானால் அவர் போற்ற படவேண்டியவரே ரவி !

Anonymous said...

R.K.Mutt is doing social service and offers education and health care.Many Hindu organizations do the same.Of course sometimes you dont get to see this but only banners and posters welcoming x swami or sri sri y :).

Sri Sri Ravi Shankar's organization is doing social service and they offer build toilets for poor with funds from devotees and this is provided free of cost. State should be doing this.In Norway and Sweden welfare state takes care of your basic needs and assures you resources to earn a decent income. There are no starvation deaths there.So there is less need for God there :).

Casteism is an issue that cannot be tackled by Hindu organizations alone.These movements dont encourage casteism or bigtory thinking against muslims,christians.There are positive and negative aspects with these movements and organization.
Astrology is not supported by Ramakrishna Mission and it encourages women to join that Order and get ordained.It does not approve of casteism.But as an institution it may not be perfect and all those associated with that may not be perfect.The goals and objectives matter and institutionalization brings its own problems and opportunities.

ananthakuthan said...

//ஏன் இந்து மதத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறாய் ? இஸ்லாமின் பர்தாவை கேள்விகேள், கிறித்தவ பாதிரிமார்களின் ஒழுக்கமின்மையை கேள்விகேள் என்றால், அதையும் செய்யத்தானே போகிறோம். முதலில் உங்களை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். மற்ற ஆபிரகாமிய மதங்களை நாங்கள் கேள்விகேட்கும்போது அவர்கள் பதில்சொல்வார்கள்...///


When you are going to ask the question about others?

Is today or tomorrow or after end of your life.

Please study the periyar life..,

Let me how many question he asked about other reg.?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Good Post

யுவகிருஷ்ணா said...

லீனா ஜூ.வி. பேட்டியில் சொல்லியிருக்கும் ஒரு சொல்லாடல் அற்புதமானது

“இந்து மக்கள் கட்சிக்கும் இலக்கியத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?”

Hats off Leena!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அடிப்படையினாலான ஒரு நம்பிக்கை மனிதனுக்கு தேவைப்படுகிறது என்பதாலேயே கடவுள் நம்பிக்கை கை கொடுக்கிறது. மதங்களின் பெயரால் நடக்கும் கொடு்மைகளை அம்பளப்படுத்துவது அவசியமான ஒன்று தான். ஆனால் நம்பிக்கையை சிதிலம் செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை சரியாக தோன்றவில்லை.

Anonymous said...

//“இந்து மக்கள் கட்சிக்கும் இலக்கியத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?”//
சம்பந்தம் கிடையாது.லீனாவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டா?அதுவும் கிடையாது.

Unknown said...

//பர்தா போட்டால் நற்குடியென்று பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் இஸ்லாமும் சரி, பிரம்மச்சரிய விரதம் பூண்டு பை/செக்ஸுவல் ஆக சந்தோஷமாக இருக்கும் உரோமை கத்தோலிக்க பாதிரிமார்களும் சரி, தன்னளவில் தங்கள் மதம் செய்யும் அயோக்கியத்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே செய்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை சப்பைக்கட்டுகிறார்கள். அதன் எதிர்ப்புகளை பத்வா போட்டு சரி செய்கிறார்கள்.பணத்தை கொடுத்து வாயை அடைக்கிறார்கள். இந்து ஞான மரபும் சாரு நிவேதிதா போன்ற ஐசிஐசியை பிக்ஷாந்தி இண்டலக்சுவல் மூலம் வயிறு வளர்க்கிறது. நித்யானந்த ரஞ்சிதோற்சவம்...//

எல்லாரும் சப்பை கட்டுவதில்லை. மதத்தை வைத்து அரசியல் பிழைப்போர் மட்டுமே அப்படி செய்வார்கள்.

இருநாட்கள் முன், போப், ஐயர்லாந்து உரோமன் பாதிர்கள் செய்த பாலியல் குற்றங்களை ஒத்துக்கொண்டார்.

ஜெயேந்திரர் வழக்கில் எல்லாச்சாமியர்களும், எல்லா இந்துக்களும், தலையிடவில்லை. அதே போல் நித்தியா விடயத்திலும்.

எனவே எல்லாரையும் சேர்த்துக் காட்டி, கட்டி, கடலில் தூக்கியெறிய முடியாது...!

Unknown said...

கிருஷணமூர்த்தி!

இந்து ஞான மரபு என்பது இன்று நேற்று விடயமல்ல. ப்ல்லவர், பாண்டியர் காலத்திலிருந்தெல்லாம் ஆரம்பிக்க முடியாது.

அதைச்சிந்து சமவெளியிலிருந்த்துதான் ஆரம்பிக்கவேண்டும். அதன்படி, இந்து ஞான மரபு, வருணாஷ்ரதர்மத்தை, தன் தலையாயக்கொள்கைகளுள் ஒன்றாகக்கொண்டு, கீதையில் பகவானே மக்களை நால்வகை வருணங்களாகப் பிரித்தான் என்பதாகும்.

வருணங்கள் வேறு; சாதிகள் வேறு. எனினும் முன்னது பின்னதாக மாறுகொண்டு இந்தியாவை பிளவுபடுத்தியது.

எனவே ‘நிர்வாகம்’ எழுதியது சரியே.

Unknown said...

லீனா எழுதியது கவிதை அல்ல. அது ஒரு soft porn material.

இந்து மக்கள் கட்சி, எல்லார் சார்பாகவும் எதிர்ப்பை தெரிவித்தது எனலாம்.

படிக்கும் எவரும் லீனாவின் செயலை ஏற்கமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஆயிரம் வேலை.

இந்து மக்கள் கட்சி அவர்களுக்காக எதிர்ப்பு குரல் கொடுத்தது.

soft porn materialஐ லீனா எழுத முழு உரிமை உண்டு. ஆனால் ரோட்டில் வைத்து விற்க முடியாது. லீனா செய்தார். கண்டிக்கப் படுகிறார்.

Unknown said...

//பதிவின் கருத்துக்கு சம்பந்தமேயில்லாமல் புகைப்படத்தை போட்டு வைத்திருப்பது ஏன் என்றும் தெரியவில்லை..! //

எல்லோருக்குமான ரயில் வந்து கொண்டேயிருக்கிறது ...:)

ரவி said...

///One friend of mine brought to my notice about your comments on our work in temple renovations? Please note the fact that the Cheri kids and Chri youth are encouraged for eduaction and employment as well as to perform pujas! If you do not know the facts, kindly please ask me and may please add these in your blog also. I can quote many such guys as replies.
Chandrasekaran @மரபூர் ஜெய.சந்திரசேகரன்

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org////

மரபூரார் மின்னஞ்சல் அறிக்கை

ரவி said...

முழுமையாக உடன்படுகிறேன்!

நோய்கான மருந்து கசக்க தான் செய்யும்!
மதம், மனிதனை பிடித்துள்ள நோய்!--------------------

நன்றி வால்பையன்...!!!

ரவி said...

உண்மையாரே ? அது சக்லேஷ்புரம் ட்ரெக்கிங். போராடித்தான் வெற்றியை நோக்கி போகவேண்டும் என்று புரியவைத்த இடம்..

ரவி said...

ஆதரவுக்கு நன்றி சென்ஷி..

ரவி said...

பழமைபேசியாரே. நீங்கள் நேரம் இருந்தால் படித்து கருத்து சொல்லிடவேண்டும்,,,!!

ரவி said...

நன்றி இனியா. நன்றி பனித்துளி சங்கர்.

ரவி said...

///எச்சூச்சுமீ...!! எல்லாம் சரி.. இதுல ஒரு போட்டோ போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?!///

எல்லாம் ஒரு பில்டப்புக்குத்தான்...!!!

ரவி said...

திரு க்ருஷ்ணா, நன்றி !!!

ரவி said...

&&&அதேபோல, சமணர்களைக் கழுவேற்றம் செய்தது சைவத்தின் எழுச்சி என்பதைவிட, வணிகர்களின் ஆதிக்கத்தை உடைத்து வெள்ளாளர்கள் நடத்திய அதிகாரப் போட்டி என்பது, ^^^^

புதிய(?) செய்தி. ஜெயமோகன் வேறு காரணம் சொல்கிறார். எண்ணாயிரம் என்பது ஒரே ஆளாக இருக்கக்கூடுமாம். அவரிடமும் தெரிவித்துவிடுங்கள் அவருக்கு உபயோகமாகும்.

ஆனால் இந்த கழுவேற்றத்தை மதத்தின் பெயரால் செய்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

ரவி said...

&&&மதங்களுடைய உபயோகம், தேவை முடிந்து விட்டது///

சரியாக சொன்னீர்கள். தென் கொரியாவில் 50 சதவீதம் மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் 80 சதமாக அதிகரிக்குமாம். இங்கும் எங்கும் அது நடக்கத்தான் போகிறது...!!! என்ன அதை காணத்தான் நான் இருக்கப்போவதில்லை...!!!

ரவி said...

இப்படி ஒரு விளக்கத்தை எழுதி நேரவிரயம் செய்த துக்கத்துடன்..............//////

மன்னித்த்துவிடுங்கள், உங்கள் நேரத்தை விரயம் செய்தமைக்காய்.

எதையும் எழுத யாருக்கும் உரிமை உண்டு. அதை எதிர்ப்பது கண்டனத்துக்குரியது. மேலும், அவர் யோனியையும் குறியையும் ஸ்டாலினையும் வைத்து கவிதை எழுதுகிறார் என்றால் அதை நீங்கள் எதிர்த்த விதம் என்ன ? அவர் கணவர் பெயரை இழுத்து வைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தவில்லையா ? அதனை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் வினவு தோழரே ? சோபா சக்தியோடு படம் பப்படம் எடுப்பவரின் நோக்கம் தவறானது என்பதை புரிந்துகொள்ளும் அளவில் அரசியல் அறிவுள்ளது. ஆனால் அதை வைத்து அவரது கவிதையை சாக்காக கொண்டு தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது எவ்விதம் சரி ? நாளை இந்து மக்கள் கட்சி தமிழச்சி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தினால் நீங்கள் வாளாவிருப்பீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?

ரவி said...

///இருநாட்கள் முன், போப், ஐயர்லாந்து உரோமன் பாதிர்கள் செய்த பாலியல் குற்றங்களை ஒத்துக்கொண்டார்.///

அதன் சுட்டியை இந்த பதிவில் இருந்தும் தாங்கள் காணலாம்.

ரவி said...

////பதிவுன்னா எல்லாந்தானே ... எனக்கு அந்த போட்டோ பத்தி மட்டும் ... போட்டோ எங்க எடுத்திங்க ? ..பார்த்தவுடன் எனக்கு நீலகிரி மலை ரயில்பாதை நினைவுகள் மட்டும் தாலாட்டியது ... ஹடர்லி ன்னு ஒரு ஸ்டேஷன் வரும் அந்த இடம் மாதிரியே இருக்கு .
(பெயர் முன்ன பின்ன இருக்கும்) அந்த இடத்திலே அரை மணி நேரம் நிறுத்துவாங்க ...கூன்னூர் லிருந்து வடை , பப்ஸ் கொண்டு வந்து விப்பாங்க .. இயற்கை அழகு சுகமோ சுகமான இடம்.. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி ...////


பத்து சார்... இது பெங்களூரில் இருந்து சிரீரங்கபட்னா போறவழியில் இருக்கும் சக்லேஷ்புரா ட்ரெக்கிங் ரோடு.

http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_116099631454258478.html

இந்த சுட்டியில் முழு விவரம் உண்டு. 45 கிலோமீட்டர் மொத்தம், பதினேழு கி.மி போனபிறகு கீழே இறங்க வழியுண்டு, அதுவரை இல்லை. கைவிடப்பட்ட ரயில்வே பாதை. நாங்கள் சென்றபோது வேலை நடந்துகொண்டிருந்தது. டண்ணல்கள், பாலங்கள், அட்டைப்பூச்சிகள் etc.

ரவி said...

---பூஜை,புனஸ்காரம் என்று ஆசாரமாக இருக்கும் உங்கள் மாமனார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமையல்காரியை பணியமர்த்தியிருக்கிறார் என்பது உண்மையானால் அவர் போற்ற படவேண்டியவரே ரவி ---

அதில் இருக்கும் உள்ளார்ந்த அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளாமல் மேல்நோக்காக தட்டையான பார்வையுடன் அதை அணுகி இருக்கிறீர்கள். நீங்கள் எப்பவுமே இப்படித்தான். அவசரகுடுக்கை.

- இவருக்கு ஏன் ரயில்வேயில் வேலை கிடைத்தது, ஏன் செல்வியின் அப்பாவுக்கு கிடைக்கவில்லை ?

- செல்விக்கு ஏன் இதைவிட சிறந்த வாழ்வாதாரம் கிடைக்கவில்லை ?

- ஏன் செல்வி கழுவிய நன்றாக பின்னும் பாத்திரங்கள் மீண்டும் ஒருமுறை லைட்டாக கழுவப்படுகின்றன ?

- மடத்து நெய் நைவேத்தியம் ஏன் செல்விக்கு நூறு கிராம் கூட கிடைக்கவில்லை ?

- செல்விக்கு ஏன் மடம் போன்ற உயர்வாக சொல்லப்படும் இடங்களில் அணுமதியில்லை ?

கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள். இது பார்ப்பணீயம் என்று பரவலாகவும், உயர் சாதீயம் என்று பார்ப்பணர்களாலும் சொல்லப்படுவது..

-

தமிழ் மதுரம் said...

ரவி தங்களது நியாய பூர்வமான கருத்துக்கள் சமூகத்தின் மீது சாட்டையால் அடிக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்.

ரவி said...

நன்றி கமல். மெல்போர்னில் எல்லாரும் சவுக்கியமா ?

பத்மநாபன் said...

தேங்க்ஸ் ரவி ... அகல ரயில் பாதையை பார்த்த உடனேயே புரிஞ்ச்சு கிட்டேன் ... நீலகிரி நேரோ கேஜ் ...... ஞாபகத்தை பகிரிந்து கிட்டேன் .. அப்புறம் உங்களுக்கு ட்ரெக்கிங் ஆர்வம் நிறைய இருக்கிறது தோள்ல இருக்கிற பொட்டி படுக்கையை பார்த்தாலே தெரியுது ... அதுக்கு சூப்பரான இடம் நீலகிரி தான் ... முக்குருத்தி , பார்சன்ஸ்வல்லி . பாண்டியாறு ..பொன்னம்புளா.. வெஸ்டேர்ன் கேட்ச்மென்ட் .. ஒருதடவை போயிட்டு வந்தா மனசு அப்படியே ப்ரெஸ் ஆய்டும் ... அப்புறம் நீங்க புடிச்சிட்டிருக்கிற / உங்கள புடிச்சிட்டிருக்கிற இந்த கசமுசா எல்லாம் ஓடிப்போயிரும் ... இவ்வளவு கசமுசாவிலும் விளம்பர இடைவேளை மாதிரி வந்து டிடைல் கொடுத்ததற்கு நன்றி .... கண்டின்யு பண்ணிக்கோங்க .

ரவி said...

ஒரு நல்ல 4 பீப்பிள் டெண்ட் கூட இருக்கு. லதானந்த் அங்கிள் கிட்டே சொல்லி காட்டுக்குள்ள ஒரு நாலு நாள் தங்கலாமா ?

என்ன, வலைப்பதிவர்களை கூட்டிக்கிட்டு போனா வளவளவளன்னு பேசி உயிரை வாங்குவாங்க.

ஓக்கேன்னா சொல்லுங்க, ட்ரிப் போட்டுடலாம்...!!!

வால்பையன் said...

//
கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள். இது பார்ப்பணீயம் என்று பரவலாகவும், உயர் சாதீயம் என்று பார்ப்பணர்களாலும் சொல்லப்படுவது..//


என் பங்குக்கு நானும் கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடர் போட்டிருக்கிறேன்!

கிண்டி கெழங்கெடுக்கலாம் வாங்க!

http://allinall2010.blogspot.com/2010/03/blog-post_23.html

Anonymous said...

ரவி,

வினவு தளத்தில் லீணா விடயத்தில் எழுப்பட்டது இதுவே - "உலகில் மனித விடுதலைக்காக போராடிய தலைவனும், மனிதனை ஆகக் கேவலமாக
ஒடுக்கிய பாசிஸ்ட்டும் ஆண்குறியாக தெரியும் போது, தமிழக பெண்களின் போலி உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு லாபம் பார்க்கும் டி.வி சீரியல்
இயக்குனர்கள், கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி etc போன்றவர்கள் அவ்வாறு தெரியாமல் போனதன் மர்மம் என்ன?" என்பதே. அந்த நீண்ட ஆண்குறிப் பட்டியலில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர்களுக்குள் தான் லீணாவின் பெண் விடுதலை கோசத்தின் யோக்கியதை
ஒளிந்து கிடக்கிறது ரவி

இந்து மக்கள் கட்சி லீணாவை எதிர்ப்பதற்கும் ம.க.இ.கவினர் எதிர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் சுதேசி தற்சார்புக்கும்
கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் தற்சார்புக்கும் உள்ளே அதே வித்தியாசம் தான். அவர்கள் எந்த நலனுக்காக லீணா விவகாரத்தைக்
கையிலெடுக்கிறார்கள் நாங்கள் எந்த நலனுக்காக லீணாவை விமர்சிக்கிறோம் எனும் வித்தியாசம் உங்களுக்குப் புரியாதது துரதிர்ஸ்டமானது.காந்தியை பெரியாரும் விமர்சித்தார் - ஆர்.எஸ்.எஸும் விமர்சிக்கிறது = உங்கள் பார்வையில் இருவரும் ஒன்றா? பார்வைக் கோணத்தின்
வித்தியாசத்தை உணருங்கள் ரவி

ரவி said...

அண்ணே.

ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்பது அடுத்த பிரச்சினை. அங்கே நுழையும் முன்பே, எப்படி விமர்சிக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்க.

ஆபாசமாக, தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு, அவரது தனிப்பட்ட இயல்புகளின் மீது கேள்வி எழுப்பி...

அது தான் ஏன் என்று கேட்கிறேன்...

நாளை, வேறு ஒரு பெண் பெரியாரிஸ்டு அப்புறம் ரெண்டு ஆபாச வார்த்தைகள் போட்டு யாராவது விமர்சித்தால் நாம் கேள்வி கேட்க முடியுமா ? நீங்களும் அதே தவறை தானே செய்தீர்கள் என்பார்களே ?

தமிழ் ஓவியா said...

//ஒரு மதத்தை கேள்வி கேட்கும்போது, அதனை நம்பும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாயே என்கிறீர்கள் ? வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? புண்படுத்தாமல் எப்படி பண்படுத்த முடியும் ? கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும், நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?//

சபாஷ் ரவி.

புரிதலுக்கு நன்றி

வினவு said...

//எதையும் எழுத யாருக்கும் உரிமை உண்டு. அதை எதிர்ப்பது கண்டனத்துக்குரியது. மேலும், அவர் யோனியையும் குறியையும் ஸ்டாலினையும் வைத்து கவிதை எழுதுகிறார் என்றால் அதை நீங்கள் எதிர்த்த விதம் என்ன ? அவர் கணவர் பெயரை இழுத்து வைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தவில்லையா ? அதனை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் வினவு தோழரே ? சோபா சக்தியோடு படம் பப்படம் எடுப்பவரின் நோக்கம் தவறானது என்பதை புரிந்துகொள்ளும் அளவில் அரசியல் அறிவுள்ளது. ஆனால் அதை வைத்து அவரது கவிதையை சாக்காக கொண்டு தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது எவ்விதம் சரி ? நாளை இந்து மக்கள் கட்சி தமிழச்சி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தினால் நீங்கள் வாளாவிருப்பீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம் //

எதையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம் எனில் அதை விமரிசனம் செய்பவருக்கு மட்டும் உரிமை கிடையாது என்றால் எதையும் யாரும் எழுத முடியாது என்றாகி விடுகிறது. முதல் வரியிலேயே சேம் சைடு கோல்!!

சாதி வேண்டும், தீண்டாமை வேண்டும், உடன்கட்டை வேண்டும் என்று கூட ஒருவர் எழுதினால் அவரது எழுத்து உரிமைக்காக செந்தழல் ரவி போராடுவார். வினவு போராடாது.

லெனின், ஸ்டாலின் போன்றோரோடு ஆண்குறி, யோனி என்றெல்லாம் எழுதுவது தனிப்பட்ட தாக்குதலாக தெரியவில்லையா? அவர்களென்ன யார் வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ளும் கழிப்பறைகளா? ரவி உங்களுக்கு முற்போக்கு என்பது ஒரு ஃபேஷன். எங்களுக்கு அது வாழ்க்கை, போராட்டம்.

லீனாவின் கவிதையில் போராளிகள், புரட்சிக்காரர்கள் எல்லாம் யோனியைக் குதறுவதற்காக அலைகிறார்கள் என்றால் அந்தக் கவிதையின் தர்க்கப்படி லீனாவின் கணவரையும் அவரது கவிதையில் சேர்த்திருக்கவேண்டும். லீனாவின் கவிதை 'அழகியலின்' படியே அது சரிதான். அப்படி கூடாது என்றால் நீங்கள் லீனாவைத்தான் கேட்க வேண்டும். வினவை அல்ல. கணவரது குறி மட்டும் புனிதக்குறி புரட்சிக்காரர்களின் குறி மட்டும் காறி உமிழக்கூடியது என்று ஏன் பாகுபாடு?

எது தனிப்பட்ட வாழ்வு? எது பொது வாழ்வு? என்ற பாதுகாப்பான அடைக்கலங்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவருக்குத்தான் தேவைப்படும். எங்களுக்கு அல்ல. எங்களது தனிப்பட்ட வாழ்வும், பொதுப்படையான வாழ்வும் திறந்த புத்தகம்தான். எனில் லீனா தனது சினிமா மோகத்திற்காக பல இயக்குநர்களோடு பணிபுரிந்திருக்கிறார், டி.வி சீரியல் கணவருடன் வாழ்கிறார், இவையெல்லாம் அவருக்கு உறுத்தலாகத் தெரியவில்லை. அவர் பேசும் கவிதையின் தர்க்கப்படி இந்த நிறுவனங்கள்தான் பெண்ணுடலை அதிகமும் குதறும் நிறுவனங்கள். இத்தகைய ஆண்குறிகளை அந்தக் கவிதையில் ஏன் எழுதவில்லை? எழுதினால் அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்றுதானே பொருள்? இத்தகைய நிறுவனங்களை வைத்து தனது சம்பாதிப்பு, புகழ் அத்தனையும் சுருட்டிக்கொள்ளும் அந்த நபர் புரட்சிக்காரர்களை இழிவு படுத்துவது ஏன்? இதைச் சொன்னால் அது தனிப்பட்ட வாழ்வு குறித்த தாக்குதலா?
தனது உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுத்து உலகமெங்கும் போராடிக்கொண்டிருக்கும் போராளிகளை லீனா கேவலப்படுத்திய போது வராத கோபம் அவரது பிழைப்புவாத வாழ்க்கை உண்மைகளைச் சொன்னால் உங்களுக்கு வருகிறது என்றால் என்ன காரணம்? காரணம் உங்களுக்கு முற்போக்கு ஒரு ஃபேஷன். கோபம் வரும் எங்களுக்கு அது வாழ்க்கை முறை.

மற்றபடி பொதுவெளியில் ஒரு கருத்தைச் சொல்லும் ஒருவர் அதன்படி வாழவில்லை என்று கூறினால் அது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தாக்கியதாக பொருள் இல்லை. அப்படி கேட்கக் கூடாது என்றால் சம்பந்தப்பட்டவர் தனது மேல் வாய், கீழ் வாய் எல்லாம் பொத்திக் கொண்டு ஊருக்கு உபதேசம் சொல்லாமல் டிங்கிள் டிங்கிள் லிட்டில் ஸ்டார் என்று மட்டும் பேசலாம். அப்போது அப்படி கேட்பதற்கு அவசியமில்லை.

Unknown said...

ஏன் லீனாவின் கவிதைகளப்பற்றி எழுதிய பின்னூட்டத்தை தடுத்து விட்டீர்கள்.

அதை நான் கேட்ட கேள்வி:

லீனாவுக்கும் கவிதைக்கும் என்னய்யா சம்பந்தம்? எழுதிய இருகவிதைகளும் soft porn ரகத்தைச்ச்சார்ந்தவை என்றும். அதை இந்து மக்கள் கட்சி செய்தது அனைவர் சார்பாகவும்தான் என்றும் இட்டிருந்தேன்.

ஏன் தடுத்து விட்டீர்கள்?

மேலும் நான் கிருஷணமூர்த்திக்கு போட்ட விளக்கடமும் தடுக்கப்பட்டது

ரவி said...

எந்த பின்னூட்டமும் தடுக்கப்படவில்லை. தேடி வெளியிடுகிறேன், மன்னிக்கவும்...

ராஜ நடராஜன் said...

முந்தைய இடுகையை நான் இன்னும் படிக்கவேயில்லை:)சுட்டிகளும் கூட!

சிந்தனை நோக்கில் பார்த்தால் உங்கள் கேள்விகள் சரியாகப் படுகிறது.ஆனால் வளரும் முறை,சொல்லிக்கொடுக்கப் படும் விசயங்கள்,உலகு ஒட்டல்,குறைகளுக்கு இடையிலும் மதங்கள் தங்களை தக்க வைத்துக் கொண்டதின் காரணங்கள் போன்றவை மதத்தை இன்னும் வேரூன்றி வைத்திருக்கிறது.பின்னூட்டங்களை பார்த்தீங்கன்னா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணம்.மதம்,மனம் சார்ந்த விடயங்கள்,விவாதங்கள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை.ஆனாலும் ஆரோக்கியமான விவாதங்கள் உயிர்ப்பித்தல் அவசியம்.

(கடைய விட்டு போகும் போது திடீர்ன்னு நினைவுக்கு வந்தது நீங்க,வாலண்ணன் சொந்தக்கடைல அடிச்சு ஆடுறீங்க.இதுவும் முந்தைய இடுகை போன்ற தலைப்புகளில் ஒருத்தரு மூஞ்சிய சுழிச்சிகிட்டு எதிர் பந்து போட்டா உள்ளேன் ஐயா மட்டும் சொல்லிட்டு வந்திடுறீங்க:)

ராஜ நடராஜன் said...

லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.திடீர் கட்சிகளின் கண்களில் படவில்லையா அல்லது கண்ணில் பட்டும் இது வேற கவிதைன்னு விட்டுட்டாங்களா?

மணிஜி said...

மீண்டும் சொல்கிறேன். ஏறக்குறைய ஒரு தலைமுறை மறந்தே போய்விட்ட விஷயத்தை திரும்பவும் கிளருகிறீர்கள். கருணாநிதியின் பாணி இது. கஷ்டம் வந்துவிட்டால் ஐயகோ..நான் என்று ஒப்பாரி வைப்பார். இந்த தலைமுறை பிள்ளைகள் பத்து பேரை கேளுங்கள். பார்ப்பணீயம் என்றால் என்ன என்று? புது சீரியலா என்றுதான் கேட்பார்கள். அக்ரகாரம் எல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு ரவி.ஆதிக்க சாதியினரின் அத்து மீறல்கள் மட்டும்தான் இன்னும் இருக்கிறது. எவ்வளவுதான் இட ஒதுக்கீடு இத்யாதிகள் என்று சொன்னாலும் ,உங்களுக்கு இந்த சொறிதல் போகவே போகாது.நன்றி ரவி.

மணிஜி said...

மீண்டும் சொல்கிறேன். ஏறக்குறைய ஒரு தலைமுறை மறந்தே போய்விட்ட விஷயத்தை திரும்பவும் கிளருகிறீர்கள். கருணாநிதியின் பாணி இது. கஷ்டம் வந்துவிட்டால் ஐயகோ..நான் என்று ஒப்பாரி வைப்பார். இந்த தலைமுறை பிள்ளைகள் பத்து பேரை கேளுங்கள். பார்ப்பணீயம் என்றால் என்ன என்று? புது சீரியலா என்றுதான் கேட்பார்கள். அக்ரகாரம் எல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு ரவி.ஆதிக்க சாதியினரின் அத்து மீறல்கள் மட்டும்தான் இன்னும் இருக்கிறது. எவ்வளவுதான் இட ஒதுக்கீடு இத்யாதிகள் என்று சொன்னாலும் ,உங்களுக்கு இந்த சொறிதல் போகவே போகாது.நன்றி ரவி.

வால்பையன் said...

//(கடைய விட்டு போகும் போது திடீர்ன்னு நினைவுக்கு வந்தது நீங்க,வாலண்ணன் சொந்தக்கடைல அடிச்சு ஆடுறீங்க.இதுவும் முந்தைய இடுகை போன்ற தலைப்புகளில் ஒருத்தரு மூஞ்சிய சுழிச்சிகிட்டு எதிர் பந்து போட்டா உள்ளேன் ஐயா மட்டும் சொல்லிட்டு வந்திடுறீங்க:) //

புரியவில்லை எந்த பின்னூட்டத்திற்கு எதிர்வினை எதிர் பார்க்கிறீர்கள்! ஒருவேளை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்! அல்லது வேற வேலையில் மூழ்கியிருக்கலாம்!

Veeramani said...

லீன மணிமேகலை எழுதிய கவிதை பெண்னுரிமை என்று மற்றவர்கள் தவறாக எண்ணிவிட கூடாது என்றுதான் பகுத்தறிவுவாதிகளும் பெரியாரின் கருத்துகளை அமோதிப்பவர்களும் லீனவை எதிர்கிறார்கள்!

லீனா பெரியாரை தேவை இல்லாமல் இழுத்து , உண்மைகளை திரித்து கூறியதால் தான் தமிழச்சி போன்றோர் அவரிடம் இருந்து மாறுபட்ட கருத்தை வைத்தார்கள்!

ஆபாசம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது! ஆண் செய்தால் அது ஆணாதிக்கம் பெண் செய்தால் அது ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்று லீனா போன்றவர்கள் ஒரு பிரமையை ஏற்படுதுகின்றார்கள்.

லீனா கவிதையில் எந்த அளவிற்கு ஆபாசத்தை காட்டி அவருக்கு விளம்பரம் தேட முற்படுகிராறோ அதே அளவு அவர் மீது வழக்கு போடுவேன் பேர்வழியும் விளம்பரம் தேட முயற்சிக்கிறார்!

இதில் லீனாவின் கவிதை பெண்ணுரிமை என்பது எல்லாம் பெண்ணுரிமையை பற்றி தெரியாதவர்.

லீனாவின் கவிதை ஆபாசம் முற்றுபுள்ளி! அதைவிட ஆபாசம் பல நாடுகளில் இனசுத்தீகரிப்பை மற்றும் வல்லரசுகளின் குள்ளநரி வேலைகளை வெறும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்று அடக்குவது!

Anonymous said...

//
கரடு முரடான நிலத்தை உழவு செய்யும்போது பூமிக்கு வலிப்பது போல் தோன்றினாலும், நல்ல பயிர் செய்ய நிலத்தை காயப்படுத்தி உழத்தானே வேண்டும் ?
//

ஆமாம், ஆமாம், நீங்க உழுது கொடுப்பீர்கள், அவர்கள் (ஆன்மா) அறுவடை செய்வார்கள். அதுதானே உங்களுக்குள் உள்ள ஏற்பாடு.

ரவி said...

அனானி இதைவிட நீங்கள் என்னை கெட்ட வார்த்தையால் திட்டியிருக்கலாம்...

வால்பையன் said...

//ஆமாம், ஆமாம், நீங்க உழுது கொடுப்பீர்கள், அவர்கள் (ஆன்மா) அறுவடை செய்வார்கள். அதுதானே உங்களுக்குள் உள்ள ஏற்பாடு. //


கோவில்களிலும், ஆசிரமத்திலும் பாவாடையை தான் அவுங்குறானுங்க, எங்க அறுவடை பண்றானுங்க!
அது தனியா எதாவது வீடியோவில் வருமா அனானி!?

பழமைபேசி said...

இடுகைன்னா அது இப்படித்தான் இருக்கணும். சபாசு இரவி! சில இடங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பினும், இடுகையின் பின்னணி மிளிர்கிறது!

Anonymous said...

//வலியில்லாமல் ஊசி போடமுடியுமா ? உங்களுக்கிருப்பதோ வைரஸ் காய்ச்சலாச்சே ? மாத்திரை எப்படி கொடுக்கமுடியும் ? //

சபாஷ் ரவி சபாஷ்.நல்லா ஊசி போடுங்க.ஆனால் மாவோயிஸ்ட் கும்பல் லீனாவுக்கு ஊசி போட்டா மட்டும் உங்களுக்கு ஏன் வலிக்குது.லீனாவுக்கு வைரஸ் காய்ச்சல் அல்லவா?

எதுக்கும் லீனா சமாசாரத்துல கொஞ்சம் ஜாக்ரதையாகவே உளறுங்க ரவி.அகம்பாவம் வேண்டாமே.உங்களுக்கு யாராவது வலிக்கும்படி ஊசி போட்டுறப் போறாங்க.எய்ட்ஸ் வந்து வைக்கப் போகிறது.

Unknown said...

//சபாஷ் ரவி சபாஷ்.நல்லா ஊசி போடுங்க.ஆனால் மாவோயிஸ்ட் கும்பல் லீனாவுக்கு ஊசி போட்டா மட்டும் உங்களுக்கு ஏன் வலிக்குது.லீனாவுக்கு வைரஸ் காய்ச்சல் அல்லவா?//

சிதம்பரம் ஐயா கூட வினவு கும்பலுக்கு ஆபரேஷன் க்ரீன் ஹன்ட் மூலம் ஊசி போடறாராமே?வினவுக்கு வலிக்குதா இல்லையா.ஊசி போடாம மாவொயிஸம் என்கிற வியாதியை போக்க முடியுமா என்ன?

அனானி சொலவ்து போல் செந்தழலின் அகம்பாவ ஆட்டம் தாங்க முடியவில்லை.யாராவது ப்ளூ க்ராஸ் பசங்க வந்து,அந்த மூஞ்சிக்கு,ஒரு ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுவிட்டு போனால் தேவலை.

சூரியன் said...

//ஏன் அவர்களோடு கை கோர்த்தீர்கள் என்றால் அதை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வார்களா வினவு குழு ? ///

வினவு சொன்ன பதிலுக்கு செந்தழல் ரவி ஏன் இன்னும் நேர்மையாக பதில் சொல்லவில்லை?

அமைதியாக இருந்து எஸ்கேப ஆவதோ செந்தழல் ரவி ஆனால் பலி மட்டும் வினவு மீது. நல்ல நியாயம்

சூரியன்

Anonymous said...

//
எவ்வளவுதான் இட ஒதுக்கீடு இத்யாதிகள் என்று சொன்னாலும் ,உங்களுக்கு இந்த சொறிதல் போகவே போகாது.நன்றி ரவி.
//

நல்ல கவனிச்சுப் பார்த்தீங்கன்னாக்கா...இந்த அரிப்பு ஏற்படுத்துறது, இணையத்தில் கத்துறது எல்லாமே சிலுவை ஏந்திகளாகவே இருப்பானுங்க...

கட்லட் பசங்க என்னதான் பெரியார், சோளப்பொரியார் என்றெல்லாம் கத்தினாலும், வெள்ளிக்கிழமையானா குல்லா போட்டுகிட்டு குண்டிய மோந்து பாக்கப் போயிருவானுங்க..

ரவி said...

என்ன அண்ணா செய்வது ? தங்களது சுயலாப ஆபிரகாமிய மதங்களை நோக்கி மக்களை திருப்பிய கூட்டம் என்னுடைய மூதாதையரையும் அந்த வலையில் ரொட்டி துண்டுகளை சாண்ட்விச் செய்துகொடுத்து விழவைத்துவிட்டது.

இதனால் இந்து ஞான மார்க்கத்திலும் பற்றில்லை.

இயேசு ஒரு மனிதன் என்று இப்போது உணந்துவிட்ட காரணத்தினாலும் பகுத்தறிவு வந்து எம்மை ஆட்கொண்ட காரணத்தாலும், எல்லா மதங்களின் பட்டாப்பட்டி நாடாவையும் உருவிவிடவேண்டும் போல மூக்கு புடைப்பாயுள்ளது

THOPPITHOPPI said...

உங்களது தளத்துக்கு எனது முதல் வருகை. உங்கள் பதிவையும் அதற்க்கான் பின்னூட்டத்தையும் படித்தேன் உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உள்ளது

♫வாழ்த்துக்கள்♫

Admin said...

நல்ல பதிவு நன்றி
இவன்
http://www.tamilcinemablog.com/

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....