ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய் பின்னால் நடந்த விஷயங்களை ஆற அமர பார்க்கலாமாம்.
நேத்து பாயும் புலியும் பதுங்கும் நாகமும் அப்படீன்னு ஒரு படம் பார்த்துக்கிட்டிருந்தேன். அதாங்க க்ரச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன். அதுல ஜெட்லி ஒரு எடத்துல நிக்காம அப்படியே அந்தரத்துல தாவி தாவி. அதுக்கு பேரு உடான் கலையாம். மரத்து எலையில. மூங்கில் குச்சில..நின்னு வாளை சுழட்டி சுழட்டி அடிச்சு. அப்படியே தூங்கிப்போனதுல டைம் மெஷின்ல போறமாதிரி ஒரு கனவு. திடீர்னு மேட்ரிக்ஸ் படத்துல வர்ர மொட்டை கையில ரெண்டு மாத்திரையை நீட்டி, ஒன்ன இப்பவே போடு, உன்ன எப்பவாவது போடறேன் அப்படீன்னு மண்டையிலேயே ரெண்டு போட்டா...
விழிப்பு வந்திருச்சு...எந்திரிச்சு பார்த்தேன்...சுவரில் இருந்த கடிகாரம். அட சுவரில் கடிகாரமே இல்லை..ஆனால் நேரம் தெரியுதுங்க...நேரம் சரியாக 23 July 2310 10:20..அய்யோ. முன்னூறு வருஷம் முன்னாடி வந்துட்டமா ? கையை நீட்டுறேன்..டேபிள்ள தமிழ் நாளிதழ்..என்னய்யா இது...தினத்தந்தின்னு இருக்கு...கட்டம் கட்டி சின்னதா ஓரத்துல் விளம்பர விடீயோ ஓடுது...அதுக்கு மேல செய்தி எதுவும் புரிய மாட்டேங்குது. தாய்லாந்து எழுத்து மாதிரி இருக்கு...ஏய் இது தமிழ்தானே ? இல்லையா ? என்ன ஒன்னும் புரியல.அய்யோ..அய்யய்யோ.அய்யய்யய்யய்யோ
இணையத்தை எழுத்து கூகிள்ல டைப் செய்தேன்...tamil fonts change history. கீழ இருக்க செய்தி வந்தது..
அதுக்கு மேல இருக்க இருநூறு வருஷத்துக்கு ஏழெட்டு தடவை மாற்றிய தகவல் இருக்கு. வெறும் எண்களை மட்டும் தான் பார்க்க முடியுது. ஆனால் எழுத்தை படிக்க முடியல. அந்த கடைசி எழுத்துக்கள் எப்படி இருந்ததுன்னா..இருந்ததுன்னா..என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ லைட்டா பொறி தட்டி இப்படி டைப் செய்தேன்..
Kind Raja Raja sculptures (ராஜராஜன் கல்வெட்டுக்கள்)
ஆஹா.. தமிழ் கல்வெட்டுக்களை அப்படியே வெறுமனே படிக்க நமது அரசும் முதல் அமைச்சர்களும் தொடர்ந்து எழுத்துக்களில் மாறுதல் செய்ய, பழமையும் புதுமையும் கலந்த எழுத்து தமிழ் எழுத்து என்று நிரூபணம் செய்ய, இப்படி செய்துள்ளார்கள். நான் தான் முண்ட கலப்பையாக என்னுடைய பழைய இ கலப்பையை வைத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுடைய தமிழை டைப் செய்துகொண்டிருக்கிறேன்...அவ்வ்வ்வ்...
போதும் விளையாட்டு. இனி சீரியஸாக பேசலாம்..
தமிழ் எழுத்து சீர்திருத்தம் தேவையான ஒன்றா ? ரிட்டையர்டு ஆன பெருசுகள் மானாட மயிலாட ப்ரோக்ராம் பார்த்து வாழ்க்கையை ரசிப்பதை விட்டு, இப்படி இருக்கிற தமிழை திருத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் எப்படி அய்யா ? இப்படி ஒரு சீர்திருத்தத்தின் அவசியம் என்ன ? அச்சு தொழிலுக்கு தேவையான சில சீர்திருத்தங்களை தந்தை பெரியார் செய்தபோது அதனை யாரும் எதிர்க்கவில்லையே ? மாறாக வரவேற்கவே செய்தார்கள். ஆனால் இப்போது இந்த சீர்திருத்தம் ஏன் தேவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில் மிகவும் நகைச்சுவையாக அல்லவா இருக்கிறது ?
வெளிநாட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வசதியாக தமிழை சீர்திருத்துகிறார்களாம். எந்த வெளிநாட்டு குழந்தை தமிழை கற்கிறது ? என் மகளுக்கு நான் நார்வேஜிய மொழியும் ஆங்கிலமும் அடிப்படையாக கற்றுக்கொடுக்கிறேன். காரணம் அவள் வெளியிடங்களில் செல்லும் போது குறைந்தபட்சம் சமாளிக்கவேண்டுமே, மற்ற பிள்ளைகள் நார்வேஜிய மொழி பேசும்போது என் மகள் தனித்து விடப்பட்டுவிடக்கூடாதே என்பதால் நானும் என் மனைவியும் நார்வேஜியன் பழகுகிறோம், என் மகளுக்கும் படிப்பிக்கிறோம். மேலும் ஆங்கிலமும் தேவையான மொழி என்பதால் அதனையும் கற்பிக்கிறோம். தமிழும் கன்னடமும் இயல்பாக சில வார்த்தைகள் பேசுகிறாள். அவள் தமிழ் எழுத நினைக்கும் காலத்தில் அவள் கண்டிப்பாக எந்த கடினமான மொழியையும் கற்கும் திறன் பெற்றிருப்பாள் என்றே கருதுகிறேன்...
எனக்கு கொரிய மொழி எழுத படிக்க பேச தெரியும். நான் அதனை பழகிக்கொள்ளவில்லையா ? ஜப்பானிய மொழியை ஜப்பானியர்களை விட இயல்பாக என்னுடைய நன்பன் பேசுவான். அவன் தமிழன். கொரிய சீன ஜப்பானிய மொழிகளை விடவா அய்யா தமிழ் கடினமான மொழி ? உயிர் , மெய், உயிர் மெய் என்று பிரித்த உயர்வான மொழியாயிற்றே. அதை கற்பதா கடினம் ? ஆர்வமும் தேவையும் இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் பழகிவிடமாடோமா ?
மேலும் நிரலாக்கத்துக்கு தேவையான CPU வேகத்தை அதிகரிக்க Parsing வேகமாக இருக்க இந்த மாற்றம் தேவை என்று ஒரு அடிப்படை அற்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எங்காவது மாக்கான் இருப்பான் அங்கே போய் சொல்லுங்கள். பெண்டியம் போர், கோர் டு டியூவோ, டூவல் கோர் என்று வந்துள்ள ப்ராஸசர்களின் திறன் பல மடங்கு மேம்பட்டு விட்ட நிலையில், இந்த சாதாரண பார்ஸிங் கூட செய்ய திறன் இல்லாத கணினி இப்போது அரசு அலுவலகங்களில் கூட கிடையாது.
இப்போது இருக்கும் எழுத்துருக்களை மாற்றினால், அச்சுத்துறையில் பல மாறுதல்கள் செய்யவேண்டும். இப்போது பதிப்பகத்துறையை லாபகரமாக நடத்துவது என்பது ஒரு சில சிறந்த மேலாண்மையில் இருக்கும் பதிப்பகங்களாலேயே சாத்தியப்பட்டு கைவரப்பெறுகிறது. மற்ற சிறிய பதிப்பகங்கள் நட்டம் இல்லாமல் புத்தகங்களை பதிப்பிப்பது கடினமான ஒன்றாக உள்ள நிலை. மேலும் கைக்காசை போட்டும், புத்தகங்களின் மீதுள்ள தனியாத காதலினாலும் புத்தகங்களை பதிப்பிக்க நினைக்கிறவர்களுக்கு மேலும் சுமை கூட்டும் செயல் அல்லவா இது ? இதை கற்று உணர்ந்து முனைவரானவர்கள் சிந்திக்கவேண்டாமா ?
மேலும் இப்போது நான் தட்டச்ச உதவும் இ கலப்பை மென்பொருளை இயற்றிய முகுந்த் கூட மீண்டும் இந்த மென்பொருளின் நிரலியை தேடி, அதில் மாறுதல்கள் செய்து மீண்டும் அனைவருக்கும் அனுப்பவேண்டும். அதில் ஏற்படும் வழுக்களை சரி செய்யவேண்டும். இதற்கான நேரத்தை, நிதியை அவருக்கு தருபவர்கள் யார் ? இது போன்ற இலவச மென்பொருட்களை கூட இந்த மாறுதல்கள் பாதிக்குமே அய்யா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை ?
தமிழுக்கு உண்மையில் சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் என்ன பணியா இல்லை ? அறிவியல் தமிழாம் நான்காம் தமிழ் வார்த்தைகளை உருவாக்குதலும், அதை விவாதித்தலும் ஆகிய மிகப்பெரிய பணி காத்திருக்கிறதே ? தகவல் தொழில்நுட்ப துறையில், இயற்பியலில், வேதியலில் தினம் தினம் அறிஞர்கள் உருவாக்கும் சொல்லாடல்களையும் தமிழுக்கு கொண்டுவரவேண்டுமே ? செர்ன் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் (Large Hadron Collider) என்ற வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன ? சி.ஆர்.எம் ? பிங் பேங் ? அகலப்பாட்டை என்றால் ப்ராட்பேண்ட். Wireless LAN ? Wi-Max ? மூன்றாம் தலைமுறை அலைபேசியில் உள்ள RNC ? Node B ? இதை தமிழ்படுத்த யாரும் முயலக்கூட இல்லை என்பது வேதனை.
மேலும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி பீடியாவில் ஆங்கிலத்துக்கும் ஜெர்மனிக்கும் ரஷ்ய சீன மொழிகளுக்கும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் நாளும் உருவாகின்றன. ஆனால் நாமோ சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து, அல்லது வெறுமனே வெட்டியாகவேனும் எதாவது மொக்கை போட்டுக்கொண்டு இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறோமே தவிர - என்னையும் சேர்த்து, இன்றைக்கு இரண்டு உபயோகமான கட்டுரைகளை இணையத்தில் எழுதினேன் என்ற உள்ளார்ந்த திருப்தியுடன் யாராவது செயல்படுகிறார்களா - ஒரு சிலரை தவிர ? மனதுக்கு வலிக்கிறது..
பேரும் புகழும் கிடைக்கவேண்டுமாயின் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எங்களின் மன வருத்தத்தில் அல்ல. எங்களுக்கு தேவையில்லாத சுமையை ஏற்றி அல்ல. இந்த முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும். ஏதோ ஒரு சிலரின் ஆலோசனைகளை கேட்டு, அனைத்துலக தமிழரிடமும் விவாதிக்காமல் இந்த எழுத்து சீர்திருத்தம் செயல்படுத்தப்படுமாயின் இந்த தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். ஆகவே பெருந்தன்மையோடு இந்த முயற்சியை கைவிடுங்கள்.
பின் குறிப்பு
தமிழக அரசு, தமிழ் எழுத்துருக்காக லட்சக்கணக்கான தொகையினை செலவு செய்வதாக அறிந்தேன். ஒருங்குறி (unicode) என்று ஒன்று இருப்பதாக, அது முழுவதும் இலவசம் என்றும் யாரும் உங்கள் காதில் போடவில்லையா ? அண்ணாக்கண்ணன் முதல்வர் கலைஞரை சந்தித்தபோது இது பற்றி சொன்னதாக இணையத்தில் தெரிவித்தாரே ? அது பற்றி மேலும் விசாரித்து, தமிழக அரசின் இணைய தளங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒருங்குறியை பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.
கோவை மாவட்டத்தில் காலை சிற்றுண்டி கொடுக்கிறார்களாம் மாணவர்களுக்கு. இரண்டு கோடியாம் செலவு. கேட்டமாத்திரத்தில் கண் கலங்கியது எனக்கு. நீங்கள் சத்துணவுக்காக பசியாக காத்திருந்த மாணவர் எனில் அந்த வலி புரியும். அதைப்போல சென்னையிலும் செங்கல்பட்டிலும் விழுப்புரத்திலும் திருச்சியிலும் தஞ்சையிலும் மதுரையிலும் கொடுங்கள். இது போன்ற வீண் செலவுகளை தவிருங்கள் அய்யா..புண்ணியமாக போகும்..
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
35 comments:
நல்ல பதிவு
எழுத்து சீர்திருத்தம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
நன்றி நான்ரசிதா.
தொடர் மட்டுறுத்தலா?பிரபலமாகி விட்டாலே போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுது:)
விவாதிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை விட தேவையற்ற ஒன்று என்பதே என் கருத்து..
மட்டுறுத்தல் கொஞ்சம் வசதியாக உள்ளது. உங்கள் கருத்தை பதிவு செய்து பதிலும் எழுதவேண்டும் என்றால் மட்டுறுத்தல் சிறந்த வழி. சரி நீக்கிவிடுகிறேன்.
இவர்கள் சீர்திருத்துகிறார்கள்,சரி. தலைக்கவசம் அணிவதை போலவே தான் இதுவும் இருக்கும். பதிப்பகமோ, வர்த்தகமே அந்த சீர்திருத்தத்தை ஏற்கவில்லை எனில், தமிழகத்தில் இருவேறு தமிழ்வரி வடிவங்கள் புழங்கும். :)இவர்களின் சீர்திருத்தத்தை சட்டமாக மாற்றவும் முடியாது.
தமிழகத்தை காப்பியாத்த எல்லோரும் இருக்கிறார்கள் (மதுர சென்னை’ன்னு ரெண்டு வாரிசுகள்). தமிழை காப்பியாத்த யாரும் இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது. இருக்கின்ற மொழியை கட்டாயமாக்க துப்பில்லை, இதில் சீர்திருத்தி என்னத்த கிழிக்க போகிறார்களோ..
எப்படிங்க இவ்ளோ விஷயங்கள் சேகரிச்சீங்க?
//வெளிநாட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் தமிழ் கற்க வசதியாக தமிழை சீர்திருத்துகிறார்களாம். எந்த வெளிநாட்டு குழந்தை தமிழை கற்கிறது ?//
வெளிநாட்டு குழந்தைகள் கற்பது பற்றிதான் ரொம்ப கவலை. சென்னையில் வளரும் பசங்க எவ்வளவு பேருக்கு தமிழ் படிக்கத் தெரியும்? அதை முதலில் பாருங்கய்யா... ஸ்ரிரங்கத்தில் வளர்ந்த என் நண்பனுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. சென்னையில் என் பெற்றோர் வீட்டருகில் இருக்கும் பாதி குழந்தைகள் சாட்டில் நான் தமிழில் அடித்தால், அம்மாவைக் கூப்பிடுகிறார்கள்.
வந்து விட்டார்கள் வெளிநாட்டு குழந்தைகள் பற்றி சொல்ல...
பேசாமல் இதை விட்டு விட்டு சில்லறை வரும் விஷயத்தை மட்டும் கவனியுங்கள்.
அரசு சீர்த்திருத்தப் போவதாக அறிவித்திருக்கிறதா என்ன?
สาธุการแด่พระเจ้าผู้สูงสุดแห่งฟ้าสวรรค์และแผ่นดินโลก บัดนี้ข้าพระองค์กำลังจะศึกษาพระวจนะคำสั่งสอนของพระเจ้า ขอพระวิญญาณบริสุทธิ์แห่งความจริงของพระองค์สถิตอยู่กับพวกเราทุกคน ณ. ที่แห่งนี้ และขอพระองค์ได้โปรดพระเมตตาประทานสติปัญญาที่มาจากพระองค์ ให้พวกเราทุกคนที่เข้ามาศึกษาพระวจนะคำของพระองค์ได้มีความรู้ ความเข้าใจในพระคัมภีร์ ซึ่งพระองค์ทรงประทานให้พวกเราทุกคนด้วยความรัก และขอพระองค์ทรงเปิดเผยน้ำพระทัยของพระองค์แก่พวกเราทุกๆคน ที่เข้ามา ณ. ที่แห่งนี้ ด้วยเถิดพระเจ้าข้าอธิษฐานในพระนามพระมหาเยซูคริสต์เจ้า ขอบคุณพระเจ้า อาเมน….
&////அரசு சீர்த்திருத்தப் போவதாக அறிவித்திருக்கிறதா என்ன//
ஆல்மோஸ்ட் டன் என்று தான் சொல்கிறார்கள். உங்களுக்கு தெரியாத மேட்டரா ?
கவிதை காதலன். உங்களுக்கு நான் டைம் மெஷினில் இருந்தபோது பதில் எழுதினேன்.
சரியா சொன்னீங்க இசை.
நாகு. தமிழ் தெரியாத புள்ளைங்க எல்லாம் அய்யமாரு ஊட்டு புள்ளைங்களா இருப்பது இன்னொரு விவாதப்பொருள்.
இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? இருக்கின்ற வரிவடிவில் tera,zeta peta கணக்கில் Information ஏற்கனவே வலையில் நிரப்பியாகிவிட்டது. இது மேலும் மேலும் அதிகரிக்குமேயன்றி, குறைய வாய்ப்பில்லை. மொழியை வளர்க்க நினைப்பவர்கள் விக்கியில் நாளும் ஒன்றை நிரப்பி வைத்த படிதான் உள்ளனர். அரசின் காசில் குளிர்காய்ந்து, குளறுபடியான கருத்துக்களை அள்ளிவிடுவதில் பயனொன்றூம் இல்லை. சீர்திருத்தப்பட்ட மொழி, செத்துப்போன மொழியாகமல் இருந்தால் சரி.
/செந்தழல் ரவி said...
நாகு. தமிழ் தெரியாத புள்ளைங்க எல்லாம் அய்யமாரு ஊட்டு புள்ளைங்களா இருப்பது இன்னொரு விவாதப்பொருள்//
இந்த செய்தி விவாதத்துக்குரியது.
முன் குறிப்பு: நான் அய்யமார் இல்லை.
நான் வசிக்கும் ஊரில் கணிசமான அளவில் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் வசித்து வருகிறோம். நான் பார்த்தவரையில் இதுதான் நடக்கிறது.
1. அய்ய மார் ஊட்டுக் குழந்தைகள் தெளிவாகத் தமிழ் பேசுகிறது (அய்ய மார் ஊட்டுத்தமிழாக இருந்தாலும்)
2. அடுத்த உயர் சாதி இந்துக்களின் குழந்தைகள் டமில் கூடப் பேசுவதில்லை
3. அடுத்த நிலை சாதிப் பிள்ளைகள் மறந்தும் கூட தமிழ் பேசுவதில்லை
4. கிறிஸ்தவர்களின் பிள்ளைகள் வாட் இஸ் தமிழ் என்று கேட்கின்றன.
5. இஸ்லாமியத் தமிழர்கள் யாரும் இல்லாததால அவர்களைப் பற்றி கூற முடியவில்லை
6. இலங்கைத் தமிழ்க் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரில் ஒருவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராவிட்டால் குழந்தைகள் அழகு இலங்கைத் தமிழில் கதைக்கின்றன.
7. இலங்கைத் தமிழ்க் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் பட்டதாரிகளாயிருந்து ஆங்கிலம் சரளமாகப் பேசும் திறனுடையவர்களாக இருந்தும், அவர்கள் வீட்டில் அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா யாராவது இருந்தால் குழந்தைகள் தமிழிலும் கொஞ்சம் கதைக்கின்றன.
8. இலங்கைத் தமிழ் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் சரளமாக ஆங்கிலம் பேசினால் குழந்தைகளுக்கு தமிழ் தெரிவதேயில்லை. தெரிந்தாலும் பேசுவதில்லை.
i repeatic mukilan, why englisna here, i am not iyerna.
என் ஊர் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வகுப்பு எடுப்பவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே.
/செந்தழல் ரவி said...
நாகு. தமிழ் தெரியாத புள்ளைங்க எல்லாம் அய்யமாரு ஊட்டு புள்ளைங்களா இருப்பது இன்னொரு விவாதப்பொருள்//
உலகத்தில் எந்த தவறு நடந்தாலும் கடைசியில் அதற்க்கு அய்யமாருதான் பொறுப்பா?
:'(
ரவி இந்த இடுகை தமிழ் எழுத்து சீர்த்திருத்தம் தேவையில்லை என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றீர்கள்.
அய்யமார் பற்றிய கருத்து பின்னூட்டத்தில்... இன்னொரு விவாதப் பொருள் என்று சொல்லியிருப்பதால்... இடுகைப் பற்றி இங்கு விவாதித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அண்ணே, எழுத்து நடையில பயங்கர மேன்மை....அது என்ன குழம்பா இருந்தா என்ன? சமைக்கிற விதம் முதல்ல நல்லா இருக்கணுமா இல்லையா??
அண்ணன், ரெண்டுலயுமே கிளப்புறாரே?! +1
// அய்யமார் பற்றிய கருத்து பின்னூட்டத்தில்... இன்னொரு விவாதப் பொருள் என்று சொல்லியிருப்பதால்... இடுகைப் பற்றி இங்கு விவாதித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். //
சரியாக சொல்லவில்லை என நினைக்கின்றேன்..
இந்த இடுகையைப் பற்றி மட்டும் விவாதித்தால் நல்லது. மற்ற விஷயங்களை வேறு ஒரு இடுகையில் வைத்துக் கொள்ளலாம்..
வெளிநாட்டில் வாழும் தமிழரின் குழந்தைகளில் தமிழ் கற்கவேண்டுமெனும் ஆவல் உள்ள குழந்தைகள், இன்றைய தமிழைச் சிரமமின்றிக் கற்கிறார்கள்.ஐரோப்பாவில்
உள்ள தமிழரின் பாடசாலைகளில் இதைக் காணக்கூடியதாக உள்ளது.
எனவே இந்தத் திட்டம் தேவையற்றது.
இதன் மூலமும் ஆளும் அரசு கல்லா நிரப்புவதென முடிவெடுத்து விட்டால்,
தமிழை அழிக்க எவருமே தேவையில்லை.
புரிந்துணர்வுக்கு நன்றி ராகவன்.
முரளி. அதுதானே உண்மை தமிழ்நாட்டில்...
///முரளி. அதுதானே உண்மை தமிழ்நாட்டில்...///
எது உண்மை?
தமிழ்நாட்டை கெடுத்து கொண்டிருக்கும் கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் அய்யமாரா அல்லது அய்யமாரான ஜயலலிதாவை ஆட்டிபடைத்துக்கொண்டிருக்கும் சசிகலா குடும்பத்தினர் அய்யமாரா?அல்லது மற்ற அரசியல் வா(வி)திகள் எல்லோரும் அய்யமாரா?
பெரும்பாலான அய்யமார்கள் வெளிநாட்டிற்க்கு சென்று விட்டனர்.
மீதம் இருப்பவர்களும் ஏதோ காலத்தை ஒட்டிக்கொண்டுள்ளனர்.
ஏன் செத்த பாம்பையே அடித்துக் கொண்டிறிக்கிறீர்கள்.
இயலாமையில்தான் கோபம் வரும்.அது போலத்தான் இளிச்ச வாய் அய்யமார்களை தாக்குவது.
அந்த ஒரு செய்தியைத் தவிர...
எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்பது முழுக்க முழுக்க சரி..
நானும் என் வலைப்பூவில் தேவையில்லை என்பதைச் சுட்டும் பொருட்டு ஒரு படம் மாட்டி வைத்திருக்கிறேன்.
எழுத்து சீர்த்திருத்தம் பயனற்றது எனில் அது தேவையில்லை. ஆனால் அய்யம்மாரை இதில் இழுத்தது தேவையற்றது.
எழுத்து சீர்திருத்தம் தேவைஇல்லை. உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது. போதுமா
ந்அல்ல்அ ப்அத்இவ்உ
விவாதிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை விட தேவையற்ற ஒன்று என்பதே என் கருத்து
ந்அல்ல்அ ப்அத்இவ்உ
நல்ல பதிவு என்பதாக புரிந்துகொண்டேன்.
செம்மொழி மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் குறித்து விவாதிக்கத்தானே போகிறார்கள்.
இன்று விடுப்பில் தாயகம் திரும்பிய எனக்கு ஏற்பட்ட அனுபவம் . சென்னை சேலையூர் வங்கியில் , இரண்டு பேர் மிரண்டு போய் பணம் போடும் படிவத்தை தேடி பல பேர் உதவியுடன் கண்டு பிடித்து ,பூர்த்தி செய்ய என்னிடம் கொடுத்தார்கள் காரணம் படிவம் தமிழில் இருப்பதாம் ..ஆங்கிலத்தில் இருந்தால் எளிதாக பூர்த்தி செய்து இருப்பார்களாம் .. கடைசியில் கையொப்பம் என்னவோ ராமன் , குமார் என்று தமிழில் தான் இட்டார்கள் . இப்படி, அடிப்படைக்கு ஆட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மேல் சிக்கல்களை உருவாக்காமல் இருப்பதே தமிழ் வளர்ச்சிக்கு செய்யும் மாபெரும் சேவை ... நன்றாக எடுத்து சொல்லியுள்ளீர்கள் ... அதிலும் தலையெழுத்து
மாறாமல் தமிழ் எழுத்து மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் கால இயந்திர கற்பனை அருமை .. ( அவ்வப்பொழுது இப்படியும் எழுதலாம் ரவி )
இன்றைய நிலையில் எழுத்து சீர்திருத்தம் அவசியமே !
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Latest tamil blogs news
Post a Comment