Wednesday, April 26, 2006

தோழி.காம் இல் கவிதா...

திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் பற்றித் திரும்பத் திரும்ப எழுதுவது சலிப்பைத் தரும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் நம் திரைப்பட இயக்குநர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பதை எந்த வித அலுப்பும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் படங்களில் செய்யும்போது அதை எதிர்த்துக் குறைந்தபட்சம் தொடர்ந்து கட்டுரைகளாவது எழுதுவது தார்மீகக் கடமையாகத் தோன்றுகிறது.
தமிழ்த் திரையுலகின் சமீபத்திய கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? பெண்களுக்கு அழகு இருந்தால் போதும். படிப்பு, பட்டமெல்லாம் தேவையில்லை. பரமசிவன் படத்தில் தனக்கு படிப்பு இல்லை என்று வருந்தும் கதாநாயகி லைலாவுக்கு கதாநாயகன் அஜீத் தரும் அறிவுரை இது: _"பட்டம் இல்லேன்னெல்லாம் எதுக்கு வருத்தப்படறீங்க? உங்க அழகே உங்களுக்கு போதும்._"

அஜீத்தின் அறிவுரை எதை நினைவுபடுத்துகிறது? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற அரதப் பழசான வாதத்தைத்தான். பல சிக்கல்கள், தடைகள் தாண்டி பெண்கள் இப்போதுதான் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் திரைப்படங்கள் பெண்களை மீண்டும் அடுப்படிக்குள் தள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன் இன்னொரு விளைவுதான் பரமசிவன்.


எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் போல அடாவடியாக இல்லாமல் இதில் அஜீத் ஆறுதலுக்காக இப்படி ஒரு வசனத்தை அவிழ்த்து விடுகிறார். விஷத்தை வலுக்கட்டாயமாகத் தொண்டைக்குள் திணித்தாலும் பாயசத்தில் கலந்து பரிவோடு கொடுத்தாலும் விளைவு ஒன்றுதான். பெண்களை இழிவுபடுத்தியோ மட்டம் தட்டியோ பேசுவதுதான் ஹீரோயிசம் என்று நம் இயக்குனர்களும் கதாநாயகர்களும் நினைக்கும் அவலம் என்றுதான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை.
பெண்கள் என்று மட்டுமில்லை. இப்போது வரும் படங்களில் பல சமூக ரீதியான பிரச்சினைகளும் இருக்கின்றன. குட்டி ரேவதி சர்ச்சைக்காக சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சண்டக்கோழி படத்தில் நம் கவனத்துக்கு வராமல் போன ஆபத்தான விஷயங்கள் பல இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தை இது வரை இலைமறை காய்மறையாக மட்டுமே புகழ்ந்துவந்தன. சண்டக்கோழி அதை மிக வெளிப்படையாக செய்கிறது.

திரைப்படங்களில் சாதீய வன்முறையின் வெளிப்படையான குறியீடாகத்தான் சண்டக்கோழி படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை எதிர்த்து இது வரை பெரிய அளவில் எந்தக் குரலும் ஒலிக்காதது வேதனையான விஷயம். குட்டி ரேவதி சர்ச்சையைத் தொடர்ந்து சென்னையில் நடந்த 'திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை' குறித்த கருத்தரங்கத்தில் இந்தப் போக்கை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது ஓர் ஆறுதல்.

தமிழ்த் திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறையும் சாதீய வன்முறையும் அதிகரித்து வரும் அவலமான காலகட்டம் இது. வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்பதைத் தாண்டி சமூகத்தில் பல நச்சுகளை விதைக்கத் தொடங்கியிருக்கின்றன திரைப்படங்கள். இப்போதே இதை எதிர்த்துக் குரல் எழுப்பாவிட்டால் நாம் விபரீதமான விளைவுகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


* * *

திரையுலகத்தைத் திருத்த என்ன வழி? எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம்? பெண்களைக் கேவலப்படுத்தும் வசனங்களையும் காட்சிகளையும் கொண்ட திரைப்படங்களைப் புறக்கணிப்பது பலனளிக்குமா? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்!

5 comments:

ஜயராமன் said...

அழகாய் இருக்கும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?

சினிமா, டிவி, மீடியா என்று பலப்பல ஊடகங்களில் அவர்கள் தன் வடிவை காட்டியே வாழ்க்கையை வளமாக்கி கொள்கிறார்களே.

படிப்பு இவர்களை பட்டினிதான் போடும். இருபது வயதுக்குள் இவர்கள் நீங்கள், நான் என்று இல்லாத காசு சேர்த்து கோடிகளில் குவிக்கிறார்களே. ஏன் படிப்பு தேவை. மேலைநாட்டு படிப்பும் பணத்துக்காகத்தானே.

அப்படியே வயசானதும் அரசியலுக்கு வந்து ஒரு கும்பலில் சேர்ந்து கை காட்டி (இல்லை வாழைப்பழத்தையும் காட்டி...) காசு பாக்க வேண்டியதுதானே.

தாங்கள் பெண்களை எப்பொழுதும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பிற்போக்குவாதிதான். அழகான பெண்களை படிக்கசொல்லி அவர்கள் அழகையும் கெடுத்து வாழ்க்கையும் பாழாக்க நடக்கும் ஆணாதிக்க சதியை முறியடிப்போம்.

ரவி said...

ஜயராமன் அவர்கள் சொன்னது...

அழகாய் இருக்கும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?

சினிமா, டிவி, மீடியா என்று பலப்பல ஊடகங்களில் அவர்கள் தன் வடிவை காட்டியே வாழ்க்கையை வளமாக்கி கொள்கிறார்களே.

படிப்பு இவர்களை பட்டினிதான் போடும். இருபது வயதுக்குள் இவர்கள் நீங்கள், நான் என்று இல்லாத காசு சேர்த்து கோடிகளில் குவிக்கிறார்களே. ஏன் படிப்பு தேவை. மேலைநாட்டு படிப்பும் பணத்துக்காகத்தானே.

அப்படியே வயசானதும் அரசியலுக்கு வந்து ஒரு கும்பலில் சேர்ந்து கை காட்டி (இல்லை வாழைப்பழத்தையும் காட்டி...) காசு பாக்க வேண்டியதுதானே.

தாங்கள் பெண்களை எப்பொழுதும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பிற்போக்குவாதிதான். அழகான பெண்களை படிக்கசொல்லி அவர்கள் அழகையும் கெடுத்து வாழ்க்கையும் பாழாக்க நடக்கும் ஆணாதிக்க சதியை முறியடிப்போம்.

ரவி said...

கமண்ட் அடிக்க கொஞ்சம் பயமாதான் இருக்கு...எங்க பா.ம.க தொடப்பத்த தூக்குவாங்களோனு...ஹி ஹி ஹி

Prasanna said...

அதாவது, அந்த டயலாக் வந்து ஆறுதல் சொல்றதுக்காக உள்ளது. படிப்பு வரலன்னாலும் அத பிடிச்சி தான் தொங்கணுமா என்ன??

ரவி said...

இன்னாடா இது...இந்த பின்னூட்டம் திடீருன்னு சைடு பாரில் வருது ? ஏதோ பிரச்சினை போல :))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....