Tuesday, April 25, 2006

மாயவரத்தான் (ஹிந்தி எதிர்ப்பு) பதிவும் என்னோட பதிலும்..

பதிவு இங்கே...

http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

இந்த மாதிரி ஒரு தலைப்ப தானே இவ்வளவு நாள் எதிர் பார்த்தேன்...

இந்த திருக்குவள கிழவர ( கிழவர்தான ??) ரயில உட்டு நசுக்கி கொண்ணு இருந்தா நான் இப்படி கஷ்டபட வேண்டி இருந்து இருக்காது..

//ஒரு தலைமுறையையே ஹிந்தி படிக்க முடியல.//

இது கொப்புரான சத்தியமா உண்மை..மாயவரத்தாருக்கு எடுத்துக்காட்டு வேணுமா...என் பேர சொல்லுங்க...எவன் என்ன சப்ப கட்டு கட்டினாலும் நான் இருக்கேன்..

என்னால ஹிந்தி பேச முடியாது..என் வயசு கார தமிழர்கள் யாராலயும் பேச முடியாது..கொஞ்சம் வசதியான வீட்டு பசங்க அல்லது அய்யர் வீட்டு பசங்க அல்லது அரசு வேலைல இருந்தவங்க வீட்டு பசங்க ஹிந்தி படிச்சாங்க..ஆனா எல்லாரும் இல்ல..

படிச்சு முடிச்சு பெங்களூருக்கு வேல தேடி வந்தா, எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது...வேலயில சேந்து கொஞ்சம் உயர முயற்ச்சி எடுத்தா என்ன சுத்தி இருக்க எல்லாரும் ( மானேஜர் உள்பட) எல்லாரும் ஹிந்தி காரன் தான்...என்ன தான் திறமை இருந்தாலும் அவன் மொழி பேசுனாதான் மதிக்கறான்...

வெட்டி பய அனானி, பால்ராசு, அருன்மொழி இவங்களுக்கு சொல்லறது என்ன தெரியுமா ? மும்பை போங்க..தெலுங்கு தேசம் போங்க..கொஞ்ச நாள் இருந்து பாருங்க...அப்ப தெரியும்...சும்மா எதிர்(ப்பு) கருத்து போடனும் அப்படிங்கறதுக்காக கண்டத எழுதாதீங்க..

ஹிந்தி பேசனும்னு நினைக்கறது நல்ல ஹிந்தி பிகர டாவடிக்கறதுக்கு இல்ல ராசா...எல்லாருக்கும் தெரியர பாஷ நமக்கு தெரியல...அதுக்கு காரணம் ஒரு சட்டி பயலோட வெட்டி அரசியல்..

இன்னும் வாயில என்ன எனமோ வருது..

/////நான் கல்லூரியில் படித்தது 80களில். அது ஒரு அரசு கலை கல்லூரி. அங்கும் ஹிந்தி படிக்க வாய்ப்பு இருந்தது.////

நான் கல்லூரியில் படித்தது 98 களில்..அங்கு ஹிந்தி படிக்க வாய்ப்பு இல்லையே...இதுக்கு என்ன பதில்...

லக்கிலூக்கு..
////திமுகவின் சமூகநீதி கொள்கைகளால் தங்கள் அதிகாரம் பறிபோன பிராமண சமூகம் திமுகவுக்கு எதிராக சேறு வாரி பூச நினைக்கிறது... மே8ல் தமிழர்கள் அவர்களுக்கு சேறு பூச போகிறார்கள்.... //////

என்னய்யா உங்க சமூகநீதி கொள்க ? சுத்த பேத்தல் இது...நான் ப்ராமின் கிடயாது..திமுகவின் ( மட்டமான) சமூகநீதி கொள்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி (அட பாவி)

தயாநிதி ஹிந்தி படிக்கட்டும் என்ன வேனா பண்னட்டும்..எனக்கு எதுவும் இல்ல...என்ன ஏண்டா படிக்க விடல..

பதில் சொல்லுங்க சமூகநீதி கொள்(ளை)கையாளர்களே.....
http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

8 comments:

doondu said...

மாயவரத்தான் எல்லாம் ஒரு மனுஷன் என்று மதித்து பதில் சொல்ல உம்மை முதலில் சொல்லனும்!

ரவி said...

சரி, மேட்டர் சரியா தப்பா, அத சொல்லுங்க முதல்ல...

நாகை சிவா said...

அண்ணாத்த, இதை பற்றி நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். நீங்க முந்தி கிட்டீங்க. சத்தியமான உண்மைங்கனா. இந்தியாவிலாவது பரவாயில்லை, சுடானில் ஒரு வட இந்தியன் இந்தி தெரியாத என்னை அரை இந்தியன் எனக் கூறினான். அவனிடம் வாதிட்டு மன்னிப்பு கேட்க வைத்தது தனி கதை. இந்த ஒரு காரணத்திற்காவே தி.மு.க.விற்கு எங்கள் ஒட்டு கிடையாதுங்கோ! ஒரு சின்ன விண்ணப்பம், உங்கள் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் மரியாதை குறைவான வார்த்தைகளை தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
அன்புடன்
தி.சிவா

ரவி said...

இனிமே தவிர்த்திடுவேன் சிவா..கொஞ்சம் டென்ஷன்...அதான்..மன்னிக்க..

போலி டோண்டு பதிவு எதுவும் படிச்சதில்லையா நீங்க...அய்யோ அது ரொம்ப மோசம்...

இப்ப அப்படி எழுதறது இல்லன்னு கேள்வி..

மாயவரத்தான் said...

இப்ப எழுதறதில்லை இல்லே.. எழுத முடியாதபடி வெச்சாச்சு ஆப்பு!

ரவி said...

-என்னோட mail ல இருக்கு...ஏன் இங்க வரல - தெரியல..

\'ஹிந்தி தெரியவில்லை\' என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு எந்தளவுக்கு குற்ற உணர்ச்சியை எழுப்பி சாமானியர்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கவைக்க முடியும் என்ற விஷயத்துக்கு இது ஒரு உதாரணம். ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு அக்காலத்தில் நிகழ்ந்தது சரிதான் என்பது என் அபிப்ராயம் - திணிப்பை எதிர்க்கவில்லை, ஹிந்தியையே எதிர்த்தார்கள் என்று இப்போது குதர்க்கமாகச் சொல்வார்கள். ஹிந்தி தெரியாமல்தான் தமிழ்நாடு தொழில்துறையில், Hindi belt எனப்படும் BIMARU மாநிலங்களைவிட இவ்வளவு முன்னேறியிருக்கிறது - உங்களுக்கு தாய்லாந்தில் வேலை வாங்கிக் கொடுத்தது ஹிந்தியா? மாயவரத்தானின் பின்னூட்டத்தில் தாய் மொழியில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தீர்கள் - அதைக் கற்றுக்கொள்ள முடிகையில் ஹிந்தி கற்றுக்கொள்ள உங்களை யார் தடுத்தார்கள்? இல்லை கருணாநிதியும் பிற திராவிடக் கட்சிகளும் ஹிந்தி கற்றுக்கொண்டவர்களையெல்லாம் தூக்கி ஜெயிலில் போட்டார்களா? தயாநிதி மாறன் மந்திரியானது ஹிந்தி தெரிந்ததால் அல்ல - கருணாநிதியில் சொந்தம் என்பதால். தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரிந்திராவிட்டாலும், கருணாநிதியின் சொந்தம் என்ற ஒரே காரணத்தால் மந்திரி ஆகியிருக்கத்தான் செய்வார். இதை, ஹிந்தி தெரிந்ததால்தான் தயாநிதி மாறன் மத்திய மந்திரி ஆனார் என்று திரிப்பது போன்ற ஜல்லியடித்தல்கள்தான் இந்த \'குற்றவுணர்ச்சி காட்டிப் புழுங்கவைப்பதில்\' முக்கிய ஆயுதம்.

திணிப்பை ஏன் எதிர்க்கவேண்டும் என்பதற்கு: உங்கள் காஃபியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டுக்கொள்கிறீர்கள், உங்கள் சுவைக்கேற்ப. எவனோ ஒருவன் வந்து, உங்கள் விருப்பத்தைக் கேட்காமல், இன்னும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையைப் போடுகிறான். சர்க்கரை இனிக்கத்தான் செய்யும் என்பதற்காகத் திணிக்கப்படும் ஒன்றை திரும்ப முகத்தில் விசிறியடிக்காமல் இருந்தால், நாளைக்கு சர்க்கரைக்குப் பதில் மலத்தைப் போட்டாலும் அதேபோல இளித்துக்கொண்டே ஒப்புக்கொள்ளவேண்டும். இங்கு சர்க்கரையா மலமா என்பதல்ல விஷயம் - உங்கள் தனிமனித விழைவுக்கு எவ்வளவு தூரம் மதிப்பளிக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். ஹிந்தி திணிக்கப்பட்டது, எதிர்க்கப்பட்டது - அவ்வளவே. நீங்கள் ஹிந்தி கற்றுக்கொள்வதை யார் தடுத்தார்கள் என்று தெரியவில்லை - ஹிந்தி கற்றுக்கொண்டவர்களையெல்லாம் ஜெயிலில் தூக்கிப் போட்டிருந்தால், நீங்கள் சொல்வதுமாதிரி ஒருவேளை கருணாநிதி தலைமேல் ரயிலை ஏற்றி நசுக்கிவிடலாமென்று நானே சொல்லியிருப்பேனோ என்னவோ? அதுவா நடந்தது?

ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக உயரதிகாரி மதிக்கவில்லை என்றால், பன்முகத்தன்மையை ஒப்புக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தில் இருப்பதற்கு வெட்கப்படவேண்டியது, அதை உணர மறுக்கும் அவரும், அதை உணர வைக்கமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கும் நாமும் - இருவருமே. Single nation, single language is a decrepit and impractical idea for a country like India. தொழில் மொழி ஆங்கிலம், கலாச்சார மொழி அந்தந்தப் பிராந்திய மொழி, அவரவர் அனுகூலத்துக்கேற்ப ஹிந்தியோ ராஜஸ்தானியோ, மணிப்புரியோ காஷ்மீரியோ கற்றுக்கொள்ள சுதந்திரம் (எப்போதும் இருந்து வந்திருப்பது போலவேயான சுதந்திரம்) - அவ்வளவே.

நாகை சிவா said...

போலி டோண்டுவையும் படித்தேன், ஒரிஜினல் டோண்டுவையும் படித்தேன்.

doondu said...

தமிழ்நாட்டில் வசதியுள்ள அநேக பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஹிந்தியை கட்டாயமாக படிக்கச் சொல்கின்றனர். அதற்காக அவர்கள் எவ்வளவு செலவு செய்யவும் தயார்.

நான்கூட ஹிந்தி கற்கலாம் என எனது நண்பர்களோடு அக்கிரஹாரம் சென்று அங்கே இருந்த பார்ப்பன ஆசிரியரிடம் ஹிந்தி படித்தேன். பிரவீன் வரைக்கும் வந்தேன்.

அதன்பிறகு ஆவல் குன்றிவிட்டது. அவர்களை நான் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்:

பாங்க், ரயில்வே போன்ற துறைகளில் நுழைந்தால் அடிக்கடி மாற்றுவார்கள். வட இந்திய மாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தேவைப்படுகிறது. அதேபோல குவைத், சவுதி போன்ற நாடுகளுக்கு வேலைக்குப் போனால் அங்கே சமாளிக்க ஹிந்தி தேவைப்படுகிறது என்றார்கள்.

எனது கூற்று:-

வாழ்க்கையில் நமக்கு சிறிது அளவேனும் உதவும் என்றால் நாம் ஹிந்தி படிப்பதில் தவறு இல்லை. ஆனால் அதனை கட்டயமாக்குவதோ அல்லது நிந்தனை செய்து படிக்க வைப்பதோ தவறு.

ஹிந்தி படிக்காதவர்கள் எல்லாம் முட்டாள்கள், தமது இந்த பிறவிப்பயனை இழந்தார்கள் என்றெல்லாம் கூறிக் கொள்பவர்கள் முட்டாள்கள். ஆங்கிலம் மூலம் ஒருவர் தன் வேலைகளை சமாளிக்க முடியும் என்றால் ஹிந்தி படித்து என்ன பயன்?

(உங்கள் புதுப்பதிவில் பின்னூட்ட முடியவில்லை)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....