தங்க மங்கையின் தங்க அறிவிப்பு

தலைப்பை கேட்டவுடனே, எதோ பி.டி.உஷா ஒலிம்பிக் அறிவிப்பு கொடுக்கிறார் என்று நினைக்க வேண்டாம்.

முதல்வரின் அறிவிப்பு. " திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1/2 பவுன் தங்க தாலி"

எதிர் அணி ஆடிப்போய் நிற்க்கிறது..

தி.மு.க. தரப்பில் இருந்து நான் எதிர் பார்க்கும் அடுத்த அறிவிப்பு.." திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1 பவுன் தங்க தாலி", காலுக்கு மெட்டி, இரண்டு ஜோடி கண்ணாடி வளையல் மற்றும் சமையலுக்கு சக்தி மசாலா பாக்கெட் இரண்டு ஆகியவை கிடைக்கும்.

ஆக மொத்தம் தமிழன் அனைத்து இலவச பொருளையும் வாங்கி வீட்டில் வைத்துவிட்டு நடு தெருவில் தான் நிற்க்கவேண்டும் போல இருக்கே ?

Comments

Unknown said…
சோதனையப்பு
ஏற்பது இகழ்ச்சி என்று ஒரு காலத்தில் நினைத்திருந்த தமிழர்களுக்கு இப்படியொரு அவலம்..

சுனாமியில் பழைய துணிமணிகளை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிய மீனவர்களை நினைத்துப் பாருங்கள்..

நீயும் வேணாம் உன் இனாமும் வேணாம் என்று ஓட்டுச்சாவடிக்கே செல்லாமல் இருந்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்?

நினைப்புதான் பொழப்ப கெடுக்குது என்கிறீர்களா? இருக்கலாம்.. :-)
krishjapan said…
அம்மா, சொத்துக் குவிப்பு வழக்கில மாட்டியிருக்கற நகைகளையெல்லாம் வழக்க ஜெயிச்ச உடனே மக்களுக்கே தர்றேன்னு சொல்லியிருக்காங்க. இப்பொ தேர்தல்ல ஜெயிச்சா எப்படியும் வழக்கிலயும் ஜெயிச்சிடலாம் - நம்ம, தேவகவுடா பையன் தான் அங்க இருக்கான். அந்த நகைகள அரை அரை பவுனா கொடுத்தா எல்லா ஏழைப் பெண்களையும் கவர் பண்ணிடலாம்னு நினைச்சி இந்த அறிவிப்ப வெளியிட்டிருப்பாங்க ரவி....
ராஜா said…
I think after this election if those offers made by the political parties is met there is no one going to be there below powerty line(TV, 2 Acre Land, Gas Money for women).

What i wonder is what they will do for the next time when they gave every thing this time May be Hyundai CAR or BOEING 707
Unknown said…
வருகைக்கு நன்றி ஜோசப் / கிருஷ்ணா..

Popular Posts