200 ரூபாய் திருடியது யார் ? நானா ?

இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்...என் பள்ளி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்தேன்...

நான் படித்த உள்விடுதியில் தலைவராக பாதிரியார் இருப்பார்...வார்டன் என்று ஒருவர் இருப்பார்..

அவருக்கு கீழ் பல மாணவர்கள், பல துறைகளை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள்...

கல்வி கொடுக்கும் ஸ்டடி ஹாலை கண்காணிப்பவர், ஜி.எம் ( ஜெனரல் மானிட்டர்), உணவகத்துக்கு ஒரு மாணிட்டர், படுக்கை அறைக்கு ஒருவர், சிக் ரூமில் மாத்திரைகள் வழங்க, காயம் படுபவர்களுக்கு முதலுதவி செய்ய ஒரு மாணவர், சர்ச் பாடல்கள் பாடுவதற்க்கு ஒருவர், விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பந்துகள், மட்டைகள் ஆகியவைகளை பார்த்துக்கொள்ள ஒரு தலைவர், டீ.வி / டேப் ஆகியவைகளை மெயிண்டெயின் செய்ய ஒருவர்...என்று மாணவர்கள் பல செயல்களில் இருப்பார்கள்..

இந்த பதவிக்கு தகுந்தபடி, பல சலுகைகளும் கிடைக்கும்...இது அந்த உள்விடுதியில் நீண்ட நாள் இருக்கும் மாணவர்கள், சிறப்பாக வேலைகளை செய்து முடிக்கும் திறன் / ஆளுமை திறன் உள்ள மாணவர்களை பாதிரியார்கள் நீண்ட நாள் கண்காணித்து இந்த பதவிகள் தருவர்...

நான் டார்மெண்டரி தலைவராக 1995 ஆம் ஆண்டு பொறுப்பேற்றேன்...எனக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது, மாணவர்களின் உடைமைகளை பொறுப்பாக பார்த்துக்கொள்வது, படுக்கை அறையை தேவையானபோது திறப்பது, மாணவர்களை காலையில் குறித்த நேரத்தில் எழுப்பி அனுப்புவது ஆகியன அடங்கும்...

நான் இந்த பதவிக்கு வருவதற்க்கு முன், மாணவர்களை எழுப்புவதற்க்கு வார்டன் 'மரிய அரசு' அவர்கள் கையாண்ட முறை, வெறுப்பை வரவழைக்கும்...

பிராண்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீண்ட வெண்கல மணி, சுவிட்ச் போட்டால் இறந்து கிடக்கும் பிணமே சத்தம் கேட்டு அலறி எழுந்துகொள்ளும், உறக்கத்தில் இருப்பவர் எம்மாத்திரம் ?

அந்த மணியை நான் வெறுத்தேன்...

காலையில் டடாங் டடாங் என்று அடிக்க ஆரம்பித்தால், மணிக்கு அருகில் படுத்திருக்கும் மாணவர்களுக்கு தலைவலியே வந்துவிடும்...

பெட்ரூம் மாணிட்டர் நீ தான் என்று கையில் சாவி கொடுக்கப்பட்ட மறுநாள், யாருக்கும் தெரியாமல் பெட்ரூமுக்கு சென்று சில டூல்ஸ் உதவியுடன் மணியை நிரந்தரமாக ஊணம் அடையச்செய்த பிறகு நான் அடைந்த மகிச்சிக்கு அளவே இல்லை...

விஷயத்துக்கு வருகிறேன்....

மாலை ஐந்து மணி இருக்கும்...

ஒரு மாணவர், தான் மெஸ் பீஸ் கட்டுவதற்க்காக வைத்திருந்த ரூ 200 ஐ காணவில்லை என்று என்னிடம் முறையிட்டார்...

உடனடியாக பாதிரியாரிடம் சென்று முறையிட்டுவிட்டேன்...

வார்டன் களத்தில் இறங்கினார்...

படுக்கை அறையில் இருக்கும் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்யுமாறு உத்தரவிட்டார்... அனைவரும் அவர் அவர் பெட்டிக்கு முன்னால் நிற்கவேண்டும், நாங்கள் சோதனை செய்துகொண்டே வருவோம்...இது தான் திட்டம்...படுக்கை அறைக்கு பிறகு எல்லாரும் ரேக் ரூம் எனப்படும் துனிகள் வைக்கும் அறைக்கு சென்று அவரவர் ரேக் முன்னால் நிற்க்கவேண்டும்...அங்கும் சோதனை...பிறகு அனைவரும் படிக்கும் அறைக்கு சென்று அங்கு அவரவர் டெஸ்க் முன்னால் நிற்கவேண்டும்...அங்கும் சோதனை...

இவ்வாறு சோதனை செய்துகொண்டே வரும்போது, என் வகுப்பு தோழர், என் நெருங்கிய நன்பர், கையை பிசைந்துகொண்டு வியர்த்து வடிய நிற்ப்பதை பார்த்துவிட்டேன்...

அங்கே பாருங்கள், இங்கே பாருங்கள் என்று கூறியபடி, அவன் அருகில் சென்றேன்...

டேய் என்னடா முழிக்கற, என்ன ஆச்சு...நீ எடுத்தியா...என்றேன்...

இல்லைடா, நான் சோப் எடுக்க பெட்ரூமுக்கு சாவி வாங்கிக்கிட்டு வந்தபோது வாசலில் காசு கிடந்தது...சரி யாராவது கேட்டால் கொடுப்போம் என்று என் பெட்டியில் போட்டேன் டா...இப்போ எடுத்தா நான் தான் திருடினேன் என்று எனக்கு திருட்டு பட்டம் கட்டி டி.சி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாங்கடா..நான் வீட்டுல போயி மாடு தாண்டா மேய்க்கனும் என்றான்...

சனியனே, முதலிலேயே சொல்லி தொலைக்கறதுக்கு என்ன, என்று எங்கேடா காசு ? என்றேன்..

வியர்வை ஈரத்தோடு நனைந்திருந்த கசங்கிய இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள்...பட்டென வாங்கினேன்...

எங்கே போடுவது...சோதனை செய்துகொண்டிருந்த வார்டன் மரிய அரசு எனக்கு அருகில் வந்துவிட்டார்...திருடனுக்கு தேள் கொட்டியது போல் சற்று விழித்தேன்....

யார் பெட்டியிலாவது போட்டுவிடலாம் என்றால் அவர்கள் வாழ்க்கை பாழாகும்...

என்ன செய்வது...என்ன செய்வது...இதயம் துடிக்கும் சத்தம் காதுக்கே கேட்டது..

அடுத்ததாக என் பெட்டி இருந்தது...பட்டென அதை திறந்து அதில் போட்டுவிட்டேன்.....

நான் என் பெட்டியை திறப்பதையும் அதில் எதையோ வைப்பதையும் வார்டன் மரிய அரசுவின் கழுகு கண்கள் பார்த்துவிட்டன...

வினாடி நேரத்தில் விரைந்து வந்து என் பெட்டியை திறந்தார்...கசங்கிய நிலையில் ரூபாய் நோட்டுக்கள், அதுவும் மேலேயே கிடந்தன...

ஒரு முறை என்னை முறைத்து பார்த்துவிட்டு, "நீயே இப்படி செய்வே என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்..

அவமானமும், அவப்பெயரும் வந்து சேர்ந்தது....என் மனதுக்கினிய நன்பர் ஒருவர் ரேக் ரூமில் நின்றுகொண்டிருக்கும்போது, எல்லார் முன்னிலையில் கேட்டார்...டேய் நீ தான் எடுத்தியா ? சொல்லுடா...என்று...

காரணம் என்னிடம் பணமுடை இல்லை என்பது அவருக்கு தெரியும்...

அமைதியாக நின்றேன்...

ஏனென்றால் என் ஒவ்வொரு வார்த்தையும் கண்காணிக்கப்பட்டது....

அடுத்த நாள் எனது பெட்ரூம் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.....

ஆனாலும் அடுத்த நாள் காலையிலும்...வழக்கம் போல அடிக்கும் மணி அடிக்கவில்லை.....

Comments

நல்லாவே எழுதி இருக்கிறீர்கள். நானும் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு ஏங்கியதுண்டு. ஏனென்றால் இப்படியான பசுமையான நினைவுகளுக்காக.. ஆனால் என்ன செய்ய இன்னும் அது கிடைக்கவே இல்லை. சில வேளை நீங்கள் மீட்டும் இந்த நினைவுகள் என்னில் பதியலாம்.
தொடர்ந்து எழுதுங்கள்
என்ன இன்று முழுவதும் பழைய கதைகள் தானா?.....
////என்ன இன்று முழுவதும் பழைய கதைகள் தானா?.....////

இன்றுதான் நேரம் கிடைத்தது. பதிவு செய்துவிட்டேன்.
////ஆனால் என்ன செய்ய இன்னும் அது கிடைக்கவே இல்லை. சில வேளை நீங்கள் மீட்டும் இந்த நினைவுகள் என்னில் பதியலாம்.////

அதனால் என்ன தலை, நம்ம பதிவுகளை படிங்க...
Anonymous said…
பதிவு இயல்பாக இருந்தது ரவி.
நான் Ball Room Monitor...
அதனாலே நான் ரொம்ப விளையாடிக்கிட்டே இருக்கேன் சரியா படிக்கலனு ஸ்கூல் மாத்திட்டாங்க :-(
செந்தழல் மாணவர் அணி said…
நண்பனை காப்பாற்றிய தல வாழ்க.
Anonymous said…
Ravi,
Really supper ur experience.
நன்றி அனானி...
வெட்டிப்பயல், நீங்க ஸ்கூல் மாறியது எந்த ஆண்டு ?

ஸ்கூல் மாறினப்புறமாவது சரியா படிச்சீங்களா ?
Anonymous said…
super da.

- B.R
shiyamsena said…
நண்பா உன் பதிவு சூப்பர் படிச்சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

பிஞ்சு S.J சூரியா !!!!!plz vote

http://www.tamilish.com/upcoming/category/FunnyImages

by shiyamsena
free-funnyworld.blogspot.com
shiyamsena said…
நண்பா உன் பதிவு சூப்பர் படிச்சு ஓட்டும் போட்டாச்சு , அப்டியே நம்ம பதிவையும் கொஞ்சம் கண்டுக்கோங்க

பிஞ்சு S.J சூரியா !!!!!plz vote

http://www.tamilish.com/upcoming/category/FunnyImages

by shiyamsena
free-funnyworld.blogspot.com

Popular Posts