நட்சத்திர வாரத்தில் ஒரு மீள் பதிவாவது போடனும் என்று ஏதோ ரூல்ஸ் இருக்காமே....பொன்ஸ் சொல்றாங்க...அதனால எனக்கு பிடிச்ச ஒரு பதிவை மீள்பதிவாக்குகிறேன்....நிறையபேர் சொல்வது "கோழித்திருடன்" பதிவை நீ நல்லா எழுதி இருக்கடா என்பது தான்...ஆனால் என் நன்பன் விஜயராகவனுக்கு பிடித்த பதிவு இது தான்..அதனால்...பிடிங்க மீள்பதிவு...இனி ஓவர் டு மீள்பதிவு...
**************************************************************************
எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...என்னாது...அப்படியெல்லாம் இல்லையா...சரி பரவாயில்லை...நான் என் மேட்டரை சொல்லுறேன்..
சம்பவம் நடந்து சுமார் 15 வருடம் இருக்கும் நான் அஞ்சாப்பு (5th) படிச்சேன் என்று நியாபகம்...சில நன்பர்களோட கோயில் பக்கமா போயிருந்தேன்...
ஏதோ பண்டிகை நாள்...
கோயில் வாசலில் ஒரு கருங்கல்...தேங்காய் உடைப்பதற்க்கென்றே போல...
அய்யரா - அருணாச்சலமா தெரியவிலை...
ஒரு தேங்காயை கொண்டுவந்து - படார் என்று உடைத்தார்..
என் கூட இருந்தவனுங்க ஓடி ஓடி பொறுக்கினாங்க..
நான் கொஞ்சம் தேமே என்று வேடிக்கை பார்த்தேன்...
என்னோட கூட வந்த ஒட்டு என்றழைக்கப்பட்ட - ஜஹாங்கீர் பாய்க்கு ஒரு முழு பீஸ் கிடைத்தது - அதாவது தேங்காயில் அது பாதி...
ஹிஹி என்று இளித்துக்கொண்டு மென்றான்...
அடுத்த தேங்காயை கொண்டுவந்து உடைத்தார்...
பரபரவென பசங்க ஓடினாங்க...
இந்தமுறை - ஒரு புதிய தோழர் அந்த ரேஸில் கலந்து கொண்டார்...
அட - நாந்தாங்க அது...
தவ்வி - பாய்ந்து - தாவியதில் - அதிஷ்டமோ என்னம்மோ தெரியவில்லை - அகப்பட்டது பெரிய துண்டு ஒன்று...
வெற்றி வெற்றி வெற்றி.... !!!!!!
வீடு திரும்பி அம்மா கொடுத்த அடுத்த வீட்டு பலகாரங்களை தின்று கொண்டே காமிக்ஸ் புத்தகம் ஒன்றை 154 ஆவது தடவையாக படிக்க ஆரம்பித்தேன்...
அப்பா வீடு திரும்பும் நேரமாச்சு...
அம்மா - உஷார் செய்ய - பாட புத்தகம் ஒன்றை எடுத்து கையில் வைத்துக்கொண்டு
ஆக்டிங் - ஸ்டார்ட்டிங்.......
உள்ளே வந்த அப்பா - முதலில் வாசல் கதவை அடைத்தார்...
பிறகு - தோட்டத்து பக்கம் உள்ள கதவை அடைத்தார்...
பிறகு எதையோ தேட ஆரம்பித்தார்...
நான் கேட்டேன்...என்னப்பா தேடுற என்று...
அட இங்கே தாண்டா இருந்தது...ஆண்டனா கம்பிங்க...என்றார்..
<< அப்போது : டீ.வி ஆண்டனா போய் கேபிள் வந்திருந்த காலம் - அதனால் பழைய ஆண்டணா கம்பிகளை தான் தேடுகிறார் >>>
அட அதுவாப்பா - மாடியில இருக்க ஸ்டோர் ரூமில இருக்கு என்றேன்...சொன்னதோடு இல்லாமல் - படபடவென மாடியேறி எடுத்தும் வந்திட்டேன்...
எடுத்துவந்து - கையில் கொடுத்தது தான் தாமதம் - சும்மா விழுது பாருங்க அடி...
டமால் டுமீல்... அய்யோ யம்மா என்று நான் அலற....
அத்தோட இல்லாமல் - மொத்தமாக முடியை பிடித்து தூக்கி - லெப்ட் கையால் ஒரு அடி கொடுக்கிறார் கண்ணத்தில்...<<< அவர் இடக்கை பழக்கமுள்ளவர்>>>
ஜிவ்வ்வ்வ் என்று தலையை சுற்றி பட்டாம்பூச்சி பறக்குது...
ஏண்டா - தேங்காயா பொறுக்கற....பொறுக்கி.....என்று...
காப்பாற்ற முயற்ச்சி செய்யும் அம்மாவிற்க்கு கையில் ஒரு ஆண்டனா அடி விழுது...அதனால் அவர் ஒதுங்கி கொள்கிறார்...
மேலும் ஒரு நாலு சாத்து - முதுகில் ரெண்டு மாத்து...
விஷயம் என்னான்னு கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிகிறது...
அதாவது அவர் அந்த வழியாக ஜீப்பில் வந்திருக்கார்...அவரோடு மற்ற போலீசாரும் வந்திருக்காங்க...
அப்போ ஒரு ஏட்டைய்யா என்னை கவனிச்சிட்டார்...அவர் என்னை பார்க்கும் சமயம் சரியாக நான் தேங்காய் பொறுக்க பாய்ந்து கொண்டு இருக்கிறேன்...
உடனே - அய்யா - பாருங்க உங்க மகன் - தேங்காய் பொறுக்குவதில் வெற்றி அடைஞ்சிட்டான் என்கிற மாதிரி ஏதாவது சொல்லி இருக்கனும்...
அழுதபடி தூங்க போய் - அடுத்த நாள் - காலையில் வலியோடு எழுந்தேன்...
காலையில் சூடாக இட்டிலி தட்டில் வைத்தார் அம்மா...
என்னா தொட்டுக்க என்றேன்...
தேங்காய் சட்டினி என்றார் அம்மா சமயலறையில் இருந்து...
அவர் உள்ளேயிருந்து வெளியே வந்து கண்டிப்பாக யோசித்திருப்பார்...
இட்டிலியை வச்சிட்டு இந்த பையன் எங்கே ஓடினான்....??
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
32 comments:
ரவி!
நான் சைவப்பழம் கோவில் தேங்காய் பொறுக்காமல் வளர்ந்திருப்பேனா!? ஆனால் அதுக்குபின் ஒங்க வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றமான திருப்பம் எதுவும்;என் வாழ்வில் இல்லை. நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.
யோகன் பாரிஸ்
:-))))
//இந்தமுறை - ஒரு புதிய தோழர் அந்த ரேஸில் கலந்து கொண்டார்...
அட - நாந்தாங்க அது...//
அது நாங்க எதிர் பார்த்தது தான்..
//சும்மா விழுது பாருங்க அடி...
டமால் டுமீல்//
ரசிச்சேன்..எங்க அண்ணன் (அவரும் ரவீந்திரன் தான்) என்னால அடி வாங்கினது நியாபகத்துக்கு வருது..
ரசிக்கக்கூடிய பதிவு. பதிவுக்கு நன்றி.
//எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...என்னாது...அப்படியெல்லாம் இல்லையா...சரி பரவாயில்லை...//
இப்படியெல்லாம் பட்//எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...என்னாது...அப்படியெல்லாம் இல்லையா...சரி பரவாயில்லை...//
இப்படியெல்லாம் பட்டின்னு போட்டு ஒடச்சி ... சபை நடுவில் சொல்லச் சொன்னால் எப்படி சொல்கிறது .. எனக்கு கால் முட்டியில் உள்ள காயம் தேங்காயால் வந்தது அல்ல :) இதை நான் எந்த கோவிலில் வேண்டுமானலும் வந்து சூடம் கொளுத்தி ... தயார் :)ன்னு போட்c ஒடச்சி ... சபை நடுவில் சொல்லச் சொன்னால் எப்படி சொல்கிறது .. எனக்கு கால் முட்டியில் உள்ள காயம் தேங்காயால் வந்தது அல்ல :) இதை நான் எந்த கோவிலில் வேண்டுமானலும் வந்து சூடம் கொளுத்தி ... தயார் :)
:))
எனக்கும் இந்தமாதிரி அனுபவம் இருக்குங்க... எங்கம்மா போட்டா போடுல நடுமண்டையில் ரத்தம் வந்திருச்சி... வடுவா அது இன்னும் என்னோட தலை நடுஉச்சிலே இருக்கு ... :-)
பிலாக் கொஞ்ச நாள் வேலை செய்யவில்லை....(ரெண்டு நாளு)...
அதான் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லி பின்னூட்ட கயமை செய்ய முடியாம இருந்தது...
நன்றி ராம்...
நன்றி கோவி.கண்ணன்....
'அழுதபடி தூங்க போய் - அடுத்த நாள் - காலையில் வலியோடு எழுந்தேன்...'
அய்யோ பாவம்!அதற்கு அப்புறம் தேங்காய் பொறுக்க ஆசை வந்திருக்காது என்று நினைக்கின்றேன்
'எல்லாரும் ஒரு முறையாவது செய்திருப்பீங்க...சும்மா மறைக்காதீங்க...'
ஆனால் நான் சத்தியமா தேங்காய் பொறுக்கியது இல்லை.சிரித்தேன் ரசித்தேன்.Keep up the good work!
http://www.youtube.com/watch?v=0TFk7P6jU34
i dunno why u cannot view it!Because I can!anyway this is the link.check it out!
///எனக்கு கால் முட்டியில் உள்ள காயம் தேங்காயால் வந்தது அல்ல :) இதை நான் எந்த கோவிலில் வேண்டுமானலும் வந்து சூடம் கொளுத்தி ... தயார் :) ////
போதும் கலாய்ச்சது....தேங்காய் பொறுக்கி முட்டியில் எப்படி அடிபட்டது ? அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி தாவி தாவி பொறுக்கினீங்களா
:-)))
//எடுத்துவந்து - கையில் கொடுத்தது தான் தாமதம் - சும்மா விழுது பாருங்க அடி...
டமால் டுமீல்...//
எந்த ஊர்லய்யா ஈயக்கம்பில அடிச்சா டமால் டுமீல் னு சத்ட்தம் வரும்?
எனக்கு தெரிஞ்சி டுபாக்கியால சுட்டாதான் டமால் டுமீல்னு சத்தம் வரும்
புரியதா?
//எடுத்துவந்து - கையில் கொடுத்தது தான் தாமதம் - சும்மா விழுது பாருங்க அடி...
டமால் டுமீல்...//
எந்த ஊர்லய்யா ஈயக்கம்பில அடிச்சா
டமால் டுமீல்னு சத்தம் வரும்?
எனக்கு தெரிஞ்சி டுபாக்கியால சுட்டாதான் டமால் டுமீல்னு சத்தம் வரும்
காமிக்ஸ் படிச்சு படிச்சு அது மாதிரியே எழுதிடறதா?
ரவி
அப்பா
அம்மா
ஆக்டிங்
நானும் அப்படிதாங்கோ!!எங்கவீட்டிலும் அதே கதை.
ஆனால் நான் தேங்காய் பொருக்கியதை எங்கப்பா பார்கலை.தப்பித்தேன்.
தேங்காய் பொறுக்குவதும் மார்கழி மாதம் கோவில்களில் பொங்கல் வாங்குவதும் இந்தக் காலத்தில் எத்தனை சிறுவர்களுக்குக் கிடைக்கும் சொல்லுங்கள்...
ரவி ... என்ன இது தேங்காய் பொறுக்கி !!! - இதை தமிழ் மண முகப்பில் குறிசொற்கள் 'கோவி.கண்ணன்' என்று வகைப் படுத்தியிருக்கிறீர்கள் ... தெரிஞ்சு செஞ்சிங்களா ? தெரியாமால் செஞ்சிங்களா ?
என்னமோ ஆனால் நான் ரசித்தேன் என்பது உண்மை :)))
வேணுமுன்னே தான் செய்தேன் :))
அது என்னா நீங்க உங்க பேருல குறிச்சொல்லை கிரியேட் பன்னிக்கிட்டீங்க...
எல்லாரும் அப்படி கிரியேட் பன்னா என்னா ஆகுறது...
ஹி ஹி
ரவி ... இங்க பாருங்க ... நான் மட்டுமா ? எல்லோரும் தான் செய்கிறார்கள் ... !
********************
குசும்பு யூத-தீவிரவாதம் தொடர் ஹாரிபாட்டர் சம்திங்.... சம்திங்.... உறவுகளின் வேர்! மகளிர் கால்கரி கருத்துச்சுதந்திரம் சூர்யா-ஜோதிகா பெரியார் தத்துவம் இட்லிவடை உமர் செய்தி இலக்கியம் தமிழரங்கம் sree SPB சிறுகதை ச்சும்மா ஆட்டோ அரசியல் IIT வாரியார் ரயில்நிலையம் அண்ணாகண்ணன் பிடித்தவை டாட்நெட் சாதி சிவமுருகன் புதிய காற்று தத்துவம் மனிதர்கள் திருத்தம்பலேஸ்வரம் இஸ்லாம் கிராமம் சுஹாசினி திருப்பதி கர்னாடக சங்கீதம் சும்மா குசும்பு சாப்பாடு விவசாயி கலாய்த்தல் இசையரசி கிரிக்கெட் மறுகாலனியாதிக்கம் பெண்ணியம் கோவி.கண்ணன் இட மாயவரத்தான் அறிவியல் புனை கதை குமரன் கண்டரரு ரொம்ப நல்லவரு அறிபுனைவு ஜஸ்வந்த்சிங் போர் மகேந்திரன்.பெ சினிமா இயற்கை வேதாளம் ஞாபகங்கள் கவிதைகள் ஈழம் வரலாறு மார்க் 100 தேன்கூடு நட்சத்திரம் ஆறு சிறுவர்கள் தமிழ் நிழற்படம் உறவுகள் தில்லானா மோகனாம்பாள் சிறுவர் பாடல் குவிஸ் நியூஸிலாந்து இந்தியா அணுவாற்றல் சமூகம் கதை கண்கள் வலைப்பதிவுகள் கட்டுமானத்துறை கதை பொதுவானவை இடஒதுக்கீடு குறுநகை பதிவர் நட்பு சதயம் சிந்தனை கோழி திருடன் ஓவியம் புத்தகம் மகேஸ் பட்ஜெட் கலாய்த்தல் பிரிட்டன் அழகிய திரைப்படங்கள் தேன்கூடு போட்டி ஆகஸ்ட் கார்திக்வேலு சங்கப்பலகை இட ஒதுக்கீடு கைப்புள்ள கம்யூனிசம் தேர்தல் திருப்புகழ் கணிணி திருநங்கைகள் இலங்கை அணுகுண்டு கவிதை சாத்தான்குளத்தான் விவசாயி சிறுகதைப் போட்டி இஸ்ரேல் அமெரிக்க ஆதிக்கம் சிற்றிதழ் பின்நவினத்துவம் கந்தரநுபூதி பதிவர் பாடல்கள் குழந்தைப் போராளி உணர்ந்தது சிறுகதைப் வாழ்க்கை பினாத்தலார் city of god, amelie ஒலிப்பதிவு துளசிதளம்
************************
//மார்கழி மாதம் கோவில்களில் பொங்கல் வாங்குவதும் //
நல்ல நினைவூட்டல். எங்க ஊரில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை சென்று காலைச் சாப்பாடு(சக்கரைப் பொங்கல் தான்!!) முடித்து விட்டு வருவது வழக்கம்.
அய்யோ பாவம்.
ஒரு சில் பொறுகியதுக்கா இவ்வளவு அடி.
அப்படினா நான் என் வாழ்கையில் பொறுகிய தேங்காய்க்கும், பிகருக்கும் ்ம்வாங்்கி இருக்க வேண்டியத நினைதால் பயமாக இருக்கு....
:)))
தேங்காய் பொறுக்குதல், மார்கழிமாத விடிகால பஜனை,
பொங்கல்,
சுண்டல்,
கார்த்திகை சோமவார அவல் பொறிகடலை....
இதெல்லாம் இந்தக்கால இளைய தலைமுறைக்குத் தெரியுமா.....?
வாய்ப்பே இல்லை...வீடியோ கேம்ஸ், கிரிக்கெட், டி.வி...அவ்ளோதான்...
நாங்கள் ஆடிய
பம்பரம்
கில்லி
கோலி
இது கூட மறந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்...
பா.க.சங்கத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், குறிப்பாக
பதிவு போடச் சொல்லி நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்த பொன்ஸ் அம்மணி ஆகியோர்களின் கவனத்திற்கு!
எங்கள் பாலபாரதி அவர்களுக்கு சின்ன வயதில் இது போன்று தேங்காய்க்காக தன் தந்தையாரிடம் மாத்து வாங்கிய அனுபவம் எதுவும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒப்புக் கொள்கிறீர்களா?
இல்லையென்றால் தெரிவியுங்கள்
மீண்டும் வருகிறேன் - சும்மா அல்ல தகுந்த ஆதாரங்களுடன்!
SP.VR.சுப்பையா.
:-)))))))))))))))))))
எங்க வீட்டுலயும் தேங்கா பொறுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அதே நேரத்தில அந்தக் கோயில் பொங்கலும் புளியோதரையும் தயிர்ச்சோறும். அடடடா!
தூத்துக்குடிப் புதுக்கிராமத்துப் பிள்ளையார் கோயில்ல பெரிய பண்டிகை இருந்தா ஒரு சாம்பார்ச் சோறு குடுப்பாங்க. கொஞ்சம் நெறையவே இருக்கும். வீட்டுல இது மாதிரி ஏன் செய்ய மாட்டேங்குறாங்கன்னு ஏங்க வைக்கும். அதோட ருசியோட ஒரு பகுதிய பெங்களூர் எம்.டி.ஆர்ல ருசிச்சேன். அதே மாதிரி தூத்துக்குடி பழைய ஹார்பர் எதுக்க இருக்குற சின்ன மதச்சார்பற்ற பிள்ளையார் கோயில்...அங்க கிருத்துவர்களும் பூஜைக்குக் குடுப்பாங்க. கோயிலுக்கு வர மாட்டாங்க. ஆனா கட்டளைக்குன்னு ஒரு தொகை குடுப்பாங்க. அங்க ஒரு பொங்கலும் புளியோதரையும் போடுவாங்க...ஆகா! ஆகாகா!
///மார்கழி மாதம் கோவில்களில் பொங்கல் வாங்குவதும்///
அது மட்டுமா? கோவிலில் போய் மத்தளம், மணி அடிப்பதெல்லாம் நம்ம வேலைதான்.
என்ன நேரம் காலை 3மணி என்பதுதான் பிரச்சனையாக இருக்கும்.
ஊருப்பக்கம் இன்னும் சிறு குழந்தைகள் இன்னும் செய்துகொண்டுதானிடுக்கின்றனர்.
//அது என்னா நீங்க உங்க பேருல குறிச்சொல்லை கிரியேட் பன்னிக்கிட்டீங்க...
எல்லாரும் அப்படி கிரியேட் பன்னா என்னா ஆகுறது...//
http://valai.blogspirit.com/archive/2006/12/08/தமிழ்மணமும்-குறிச்சொற்களும்.html
அய்யோ! அய்யோ!
நீங்க "வீட்டுக்குத் தெரியாமல் தேங்காய்ப் பொறுக்குவது எப்படி?"ங்குற 21 டேஸ் புக்கப் படிக்கலையா?
:))))
super
Post a Comment