Friday, December 08, 2006

இதோ வெற்றியாளர்கள் !!!!!!!!!

பின்னி பெடலெடுத்திட்டீங்க மக்களே !!!! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது மக்களே !!! பரிசுக்குரியவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீநாத், பாலு, வனிதா, ராஜீவ் , தீனா ஆகியவர்களுக்கு நன்றி...முக்கியமாக பாலு, அனைத்து பின்னூட்டங்களையும் தனியாக வேர்ட் டாக்குமெண்டில் வைத்து, பெயர்களுக்கு பதில் நெம்பர் கொடுத்து நடுவர்களுக்கு அனுப்பியது மிகவும் சிறப்பான பணி !!!! ஆனால் தான் நடுவராக அமர்த்தப்படாதது குறித்து கோபித்தான்..

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் எண் இடப்பட்டு அவை வகைப்படுத்தப்பட்டன...ஒவ்வொரு நடுவருக்கும் அதிகபட்ச மதிப்பெண் கொடுக்கப்பட்டது...மதிப்பெண்கள் இடப்பட்டு மீண்டும் பாலு அந்த மதிப்பெண்களின் ஆவரேஜ் எடுத்தார்...டன் டன்டன்ன்னன்...

இதோ வெற்றியாளர்கள்....

முதல் பரிசு...

லக்கிலூக்... ( LG KG300 Mobile - LG Dinamite - Worth RS 10,000.

இரண்டாம் பரிசு

சந்தனமுல்லை / பத்மகிஷோர் (புத்தகங்கள்)

பன்னிரண்டு மணிக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிறகு சில பின்னூட்டங்கள் வந்தன...அவையும் அருமையாக இருந்தன...இருந்தாலும் அவைகளை ஆட்டத்தில் சேர்க்க முடியவில்லை...அவைகளை எழுதியவர்கள் இரா.அரங்கன், வேலவன், மற்றும் மதுமிதா...இரா அரங்கன் சூப்ப்ராக எழுதி இருந்தார்...

நடுவர்குழுவிடம் இருந்து வந்த ரிசல்ட் ஓக்கே...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் வெற்றி பெறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது கலக்கலாக இருந்த தமிழி, சேதுக்கரசி, வானமே எல்லை, ஆதிரை, அருள்பெருங்கோ,சயீத் மற்றும் ஜி.ராகவன் ஆகியோரது பின்னூட்டங்கள்...

முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் நடுவர்கள் குழுவில் இருவர் மிகவும் அப்போஸ் செய்தார்கள்...ஜீவன் பின்னூட்டங்கள் அருமையாக இருக்கின்றன என்று...ஆனால் இது மதிப்பெண் அடிப்படையில் அமைந்ததால் லக்கியார் மீண்டும் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கிறார்...

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, வெற்றி பெற்றவங்களுக்கு பரிசை அனுப்பும் வேலையை ஆரம்பிக்கிறேன்...!!!!! முயற்ச்சி செய்தவர்களுக்கும் மிகவும் நன்றி.....என்னோட நட்பை அவங்களுக்கு பரிசாக தருகிறேன்...!!!

36 comments:

நாமக்கல் சிபி said...

//என்னோட நட்பை அவங்களுக்கு பரிசாக தருகிறேன்...!!!//

இதை விடப் பெரிய பரிசு வேண்டுமோ எங்களுக்கு?

:)
நன்றி!

ஜோ/Joe said...

செந்தழல்,
பரிசு பெற்ற கமெண்ட் எதுண்ணு போட்டா நல்லா இருக்குமில்ல.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் லக்கி லுக்

சென்ஷி

லக்கிலுக் said...

:-)))) என்ன வெளையாட்டு இது?

லேட்டஸ்ட் தடலாடிப் போட்டி அறிவிப்பு பாத்தீங்களா? :-(

ஸயீத் said...

\\ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் வெற்றி பெறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது கலக்கலாக இருந்த தமிழி, சேதுக்கரசி, வானமே எல்லை, ஆதிரை, அருள்பெருங்கோ,சயீத் மற்றும் ஜி.ராகவன் ஆகியோரது பின்னூட்டங்கள்...\\

பரிசைவிட இதே பெரிய பரிசு.

SP.VR. SUBBIAH said...

லக்கியாருக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

தங்கள் தெரிவு மிக மிகச் சரியானது ரவி அவர்களே!
தமிழ்சினிமாவின் இவ்வளவு அபத்தங்களையும் ஞாபகம் வைத்திருப்பதே பெரிய விசயம். அதிலும் ஒவ்வொண்டையும் அக்குவேறு ஆணிவேறா பிச்சு பிச்சு வச்சாரு பாருங்கோ...! லக்கி லூக் அடிச்சாரு டபிள் சிக்ஸரு. அடுத்ததா தழிழ் சினிமாவில தணிக்கை எந்தளவில பல அரசியல் நோக்கங்களோடெல்லாம் செய்யப்படுது என்றத பட்டும் படாமலும் சொல்லலாம் எண்டு நான் யோசிச்சிருக்கிறன்.
"வானம்பாடி" கலீஸ்

SP.VR. SUBBIAH said...

நடுவர்கள் தீர்ப்பை அனைவரும் வணங்கி வரவேற்போம்.

பங்கு கொண்டவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவரைப் பாராட்ட மட்டுமே இந்தப் பதிவிற்குரிய பின்னூட்டத்தை பயன்படுத்தினால் நல்லது,அதுதான் நாகரீகமும்கூட!

என்ன சரிதானே நண்பர்களே!
SP.VR.SUBBIAH

லக்கிலுக் said...

நடுவர்களுக்கு நன்றி!

அன்புள்ள வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி (என் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டதற்காக)

சந்தனமுல்லை said...

லக்கிலுக்கு-க்கு வாழ்த்துக்கள்!!

நாமக்கல் சிபி said...

//பங்கு கொண்டவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவரைப் பாராட்ட மட்டுமே இந்தப் பதிவிற்குரிய பின்னூட்டத்தை பயன்படுத்தினால் நல்லது,அதுதான் நாகரீகமும்கூட!
//

ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் வாத்தியார் அவர்களே!

நானும் இதனை வழிமொழியும் விதமாக

வெற்றி பெற்றவர்களுக்கு மனதார வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு செந்தழலாரின் நட்பைப் பெற்ற அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

லக்கிலுக் said...

நன்றி சந்தனமுல்லை...

முகில் நலமா?

நாமக்கல் சிபி said...

//(என் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டதற்காக) //

லக்கியாரே! ஜஸ்ட் லீவ் இட்!

Sivaram said...

//என்னோட நட்பை அவங்களுக்கு பரிசாக தருகிறேன்...!!!//

தேர்தலில் நிக்க ,சீட் கொடுக்காதவங்களுக்கு கருணாநிதி சொல்லும் வசனம் மாதிரியில்ல இருக்கு!
"மயிலாப்பூரில் இடம் கிடைக்கவில்லை என்றால் என்னடா , தம்பி, என் மனதில் என்றென்றும் உனக்கு இடம் உண்டு"..அதுபோல...சும்மா ஜோக்கு தான் ரவி..
உங்கள் போட்டியை மிகவும் ரசித்தேன்..அதற்காக என் நன்றிகள்..தேர்வு முறையை இப்படி ப்ரொஃபஷனலாக நடத்தியதற்குப் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
நட்புடன்
ஜீவன்

Anonymous said...

யோவ் லக்கி அடங்கமாட்டியா நீ? என்றாலும் மனமுவந்த வாழ்த்துக்கள். கலக்குற மச்சி....

G.Ragavan said...

லக்கிலுக்கிற்கு எனது வாழ்த்துகள். சந்தனமுல்லை மற்றும் பத்மா கிஷோருக்கு எனது வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

லக்கிலுக் விஜயகாந்தையே ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஒரு ஓட்டல் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதற்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் முடிவுகள் வந்ததால் இங்கேயே சொல்கிறேன்.

காஷ்மீர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கேப்படனுடன் தமிழில் பேசுவார்கள் என்று ஒரு ஓட்டல் இருந்தது. சமீபத்தில் மைசூரில் பிடிபட்ட மூன்று தீவிரவாதிகளுக்குத் தமிழும் தெலுங்கும் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கன்னடம் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருந்தால்..ஊர் அது இது என்று மாட்டிக் கொள்ள நேரிடும் என்று தமிழும் தெலுங்கும். அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டவர் தமிழ்நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர் என்று நினைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீடு வாடகைக்கு விடுவது குறித்து மிகவும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரில் எங்கள் அப்பார்ட்மெண்ட்டிலும் இருப்போர் தகவல்களும் புகைப்படமும் திரட்டி அதை அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் வைத்திருக்கும் வகை செய்து கொண்டிருக்கிறோம். சமயத்தில் கிண்டல் உண்மையாகும் பொழுது வியப்புதான் ஏற்படுகிறது என்பதற்காக இந்தச் செய்தியைச் சொல்ல விரும்பினேன்.

Sivaram said...

மற்றொரு விஷயம், போட்டியில் கலந்து கொள்ளும் போது, உண்மையிலே இவ்வளவு க்ராண்ட் ஆன பரிசை தர இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை..
முதலிலேயே தெரிந்திருந்தால், ஃபுல் நைட் கூட போட்டு விளையாண்டிருக்கலாம்..

நட்புடன்,
ஜீவன்.

Hari said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

லக்கிலுக் said...

//லக்கிலுக் விஜயகாந்தையே ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஒரு ஓட்டல் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதற்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் முடிவுகள் வந்ததால் இங்கேயே சொல்கிறேன்.//

ஜீரா!

இனிமேலாவது கண்ணாடியைக் கழட்டிப் போட்டு விட்டுப் பாருங்கள். நான் பரிசுபெறும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வந்து குறை கண்டுபிடிப்பதே உங்கள் வாடிக்கையாகி விட்டது. (தடாலடிப் போட்டி ஒன்றிலும் கூட)

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தமிழ் தெரிவது பற்றி நான் ஓட்டவில்லை. யாரோ ஒரு அன்பர் ஓட்டினார்.

கேப்டனை பற்றி மூன்று அல்லது நாலு கமெண்டுகளில் மட்டுமே ஓட்டியிருந்தேன். பொதுவான தமிழ்சினிமா அபத்தங்களை கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழிந்தே எழுதியிருந்தேன். உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றே நம்புகிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லக்கியாரே
வாழ்த்துகள்!

சந்தனமுல்லை& பத்மா ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

செந்தழலாருக்கு....
ம்ம் என்னாத்தெ சொல்றது?
வாழ்த்துகள் ஸ்டாக் தீர்ந்துடிச்சு...
சேர்ந்ததும் அனுப்பறேன்.......
நன்றி!

Anonymous said...

//இனிமேலாவது கண்ணாடியைக் கழட்டிப் போட்டு விட்டுப் பாருங்கள். //

சரியா சொன்னீங்க லக்கி.

இந்த ராகவன் நல்லவன், நடுநிலை முகமூடி போட்டு எத்தனை காலத்துக்கு தான் ஏமாத்திக்கிட்டு இருக்க போறாரு.

G.Ragavan said...

//// luckylook said...
//லக்கிலுக் விஜயகாந்தையே ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது ஒரு ஓட்டல் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அதற்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் முடிவுகள் வந்ததால் இங்கேயே சொல்கிறேன்.//

ஜீரா!

இனிமேலாவது கண்ணாடியைக் கழட்டிப் போட்டு விட்டுப் பாருங்கள். நான் பரிசுபெறும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வந்து குறை கண்டுபிடிப்பதே உங்கள் வாடிக்கையாகி விட்டது. (தடாலடிப் போட்டி ஒன்றிலும் கூட) //

ஐயோ லக்கி லுக்...மன்னித்துக்கொள்ளுங்கள். ஸ்மைலி போடாமல் சொன்னது தவறாகப் போய் விட்டது. ஜாலியான பதிவு என்பதால் சற்று ஜாலியான சொற்களைப் பயன்படுத்தினேன். அது வேறு மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்டது. எந்தக் காரணமும் சொல்ல விரும்பவில்லை. மன்னிப்பை மட்டும் கோருகிறேன். (நான் கண்ணாடி போடுறேன்னு ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? எனக்கு சின்ன வயசுல இருந்தே அந்த வருத்தம் உண்டு. அதுனாலதான் காண்டாக்ஸ் போட்டுக்கிறது. :-) )

// காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தமிழ் தெரிவது பற்றி நான் ஓட்டவில்லை. யாரோ ஒரு அன்பர் ஓட்டினார். //

சரியாப் பாக்காம சொல்லீட்டேனோ. தப்புதாங்க. மன்னிச்சிருங்க.

// Anonymous said...
சரியா சொன்னீங்க லக்கி.

இந்த ராகவன் நல்லவன், நடுநிலை முகமூடி போட்டு எத்தனை காலத்துக்கு தான் ஏமாத்திக்கிட்டு இருக்க போறாரு. //

அனானி நண்பரே. நடுநிலைமை என்பதே ஒரு மாயை. என்னைப் போய் நடுநிலை என்று நினைத்தீர்களே. எனக்குத் தெரிஞ்சதே கொஞ்சம். அதை வைத்து பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். மத்தபடி ஏமாத்துற எண்ணமெல்லாம் ஒன்னும் கிடையாது. அதே போல என்னை நல்லவன் என்று எண்ண வேண்டாம். நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரியும். நானும் ஒரு சராசரி மனிதந்தான். நிறைகளும் குறைகளும் உண்டு. தவறுகளும் செய்வதுண்டு. அது புரிந்தால் திருத்திக் கொள்வதும் உண்டு.

Anonymous said...

லக்கிக்கு கிஃப்ட் கொடுக்கரதுன்னா சொம்மாவே கொடுத்து இருக்கலாமே...அதுக்கெதுக்கு போட்டி, கொடலு எல்லாம்...

Anonymous said...

Congrats Luckylook. This is a Good Answer to the whole Blog World! Hope this victory will be special to you.

My hearty congratulations to the (other) winners.

Srinivas from Dubai

Anonymous said...

//பொதுவான தமிழ்சினிமா அபத்தங்களை கொஞ்சம் மூளையைக் கசக்கிப் பிழிந்தே எழுதியிருந்தேன். உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றே நம்புகிறேன்.//

தோ பாருடா டயலாக்கை...
ங்கொக்காமக்கா...எனிவே முதல் பரிசை வென்றதற்கு வாழ்த்துக்கள்

லக்கிலுக் said...

//லக்கிக்கு கிஃப்ட் கொடுக்கரதுன்னா சொம்மாவே கொடுத்து இருக்கலாமே...அதுக்கெதுக்கு போட்டி, கொடலு எல்லாம்...//

சூப்பரப்பு :-)really I enjoy this comment.

செந்தழலார் போட்டியெல்லாம் வெச்சிருக்கவே தேவையில்லை :-)

அப்புறம் பாலபாரதி ஸ்கூல்லே எடுத்த சின்னவயசு போட்டோல அவரை கரெக்டா அடையாளம் கண்டுபுடிச்சி சொன்னேன். அதுக்கு இன்னமும் கிப்ட் வரலை :-(

லக்கிலுக் said...

ஜீரா

கூல் டவுன் :-)

பத்மகிஷோர் said...

romba nanRi, nAn ethir pArkkavillai. lakkiyArukkum
santhanamullaikkum vAzththukkaL,

intha pOttiyin pinnuuttam ellaththayum serththa super thiraikathai ready

inimE ellA natchchathira pathivarum 10000+ selavu seyyanum ;-)

(sorry for not typing in tamil, have problems with OS)

ஷோபன் said...

ரவி,
முதலில், வெற்றி பெற்ற லக்கிலுக், சந்தனமுல்லை / பத்மகிஷோர் மற்றும் நீங்கள் எதிர்பார்த்த தமிழி, சேதுக்கரசி, வானமே எல்லை, ஆதிரை, அருள்பெருங்கோ,சயீத் மற்றும் ஜி.ராகவன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு போட்டியும் வைத்து, பரிசும் கொடுப்பதே பெரிய விசயம். இதற்கு நடுவர் குழுவெல்லாம் வைத்து ஏதோ +2 பரீட்சை பேப்பர் திருத்துவது போல் எல்லாம் வேலை செய்திருக்கிறீர்கள் :-) நன்றி.

நடுவர் குழு ஸ்ரீநாத், பாலு, வனிதா, ராஜீவ் , தீனாவிற்கு நன்றி.

உங்கள் நட்பை பரிசாகப் பெற்ற எனக்கும் வாழ்த்துக்கள் :-) (அப்புறம் என்னைய யாரு வாழ்த்துவாங்களாம்)

நட்பை பரிசாகக் கொடுத்த உங்களுக்கும் நன்றி.

சேதுக்கரசி said...

லக்கியான லக்கிக்கும், சந்தனமுல்லை, பத்மகிஷோருக்கும் வாழ்த்துக்கள்.

அட நான் கூட வெற்றி பெறுவேன்னு நினைச்சீங்களா? நினைச்சதுக்கே நன்றி ரவி!

குறிப்பா எந்தெந்த அபத்தங்களுக்கு 1,2,3 பரிசுகள் என்ற பட்டியல் வருமா? ப்ளீஸ்.

Anonymous said...

//நடுவர்குழுவிடம் இருந்து வந்த ரிசல்ட் ஓக்கே...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் வெற்றி பெறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது கலக்கலாக இருந்த தமிழி, சேதுக்கரசி, வானமே எல்லை, ஆதிரை, அருள்பெருங்கோ,சயீத் மற்றும் ஜி.ராகவன் ஆகியோரது பின்னூட்டங்கள்...//

அபத்தக்களஞ்சியம் தமிழ்சினிமா என்ற தலைப்பு மிகவும் ரசிக்கதகுந்ததாக இருந்து கலந்து கொள்ள வைத்தது.
நன்றி.


பெயரிலே அதிர்ஷ்டம் கொண்டவரே!

உங்கள் அதிர்ஷடப் பார்வை என்ற பெயர்,பெயரியல் பேராசன் பார்த்து வைக்கப்பட்டதோ!

:)

உண்மையில் இது உங்கள் மூளைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது!

வாழ்த்துகள். நீங்கள் இன மன பேதமின்றி இன்னும் சீரிய பணிகளை தொடர விரும்புகிறேன்.

//என்னோட நட்பை அவங்களுக்கு பரிசாக தருகிறேன்...!!//

நன்றி ரவி.
வணக்கம்.

ஸயீத் said...

வாழ்த்துக்கள் lucky look
இதுக்கு பேர்தான் அதிர்ஷ்டப் பார்வையோ(?!).

Anonymous said...

parisaium, natpaium vendra nanbargaL anaivarukkum vaazhthukkaL...

azhiyaadha anbudan,
arutperungO.

மஞ்சூர் ராசா said...

எப்பவும் போல கொஞ்சம் தாமதமா வந்தாலும் நான் நினைத்தவர்களுக்கே பரிசு கிடைத்ததில் ஒரு மகிழ்ச்சி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Ranganathan. R said...

அன்புத் தோழமைக்கு,

வணக்கம்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தேன். சரியான தேர்வுதான்.

நட்போடு வலம் வரும் ரவிக்கு என் அன்பு என்றும் உண்டு...

+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

Anonymous said...

பரிசு டிஸ்ட்ரிப்யூசன் முடிஞ்சிடுச்சா? லக்கிக்கு கொரியர் அனுப்பிச்சிட்டீங்களா?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....