நண்பர்களே கடந்த பதிவில் ஏழைப்பெண் மகாலெட்சுமியின் மேற்படிப்புக்கு உதவி கேட்டு பதிவு போட்டிருந்தேன். பதிவர் நிலா சில கேள்விகளை முன்வைத்து தனிப் பதிவு போட்டிருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமானால் என் நண்பர் ஒருவர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், அய்யா ஞான வெட்டியான் அவர்களை விசாரிக்கச்சொல்லி அந்த பதிவை அவசரமாக வலையேற்றினேன்.
நிலா மற்றும் பத்மா அவர்களின் நியாயமான கேள்விகள் என்னை துளைத்து எடுக்க, நான் நேரடியாக மகாலெட்சுமி குறித்து விசாரித்தேன். அதன் படி பெறப்பட்ட தகவலை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.
* தற்போது மகாலெட்சுமியின் குடும்பம் சீலப்பாடியில் இல்லை. அவர்கள் திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.
* எம்.எஸ்.சி வரை அவர் படித்து வந்ததே கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால் தான். அவரின் ஆசிரியரின் வழிகாட்டுதலால் தான் அவர் பி.எட் சேர்ந்துள்ளார். அதற்காக தங்கள் சொந்த வீட்டை விற்று பணம் கட்டி இருக்கிறார்கள். அதனால் குடும்பம் திண்டுக்கல்லுக்கு இடம் மாறி இருக்கிறது.
* வறுமையிலும் நேர்மை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மகாலெட்சுமியின் தந்தையிடம் பேசிய போது, "என் மகளைப் படிக்கவைக்க கிடைக்கப் போகும் பணம் இனாமாக வேண்டாம் சார். கடனாக கிடைத்தால் போதும். இயன்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னார். வறுமையிலும் தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த தமிழனைப் பற்றி பெருமைபட்டுக்கொண்டேன்.
ஆகவே, வலைப்பதியும் நண்பர்களே! கிடைத்த பணத்தை அவருக்கு வட்டி இல்லா கடனாக வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறேன். அவர் சிறுகச்சிறுக திரும்பக்கொடுத்த பின், உண்மையில் அவதிப்படும் வேறு யாருக்கேனும் அந்தே பணம் மீண்டும் உதவ பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.
தங்களின் மேலான கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். தன்மானம் இன்னும் மரித்துப் போய் விடவில்லை என்பதை அந்த ஏழைத்தமிழன் மூலம் அறிந்துகொள்ள உதவிய நிலாவுக்கும், பத்மாவுக்கும் ஏனைய பதிவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
7 comments:
பாராட்டுக்கள் நண்பா
இந்த சர்சைக்கு இப்படி ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை. என் பதிவிலும் உதவியை இவர் கடனாய் பெறுவது நல்லது என எழுதியிருந்தேன்.
இவுங்களுக்கு நிச்சயம் உதவவேண்டும்.
தகவலுக்கு நன்றி.
அசத்துறியே ரவி!
வாழ்த்துக்கள்!!
எப்படியான போதும் அவருக்கு உதவி செய்தல் அவசியம் அதையே தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
செந்தழல் ரவி
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து கொடுத்த பிறகு,அதைப்பற்றி கவலைப்பட விரும்பவில்லை.
கேட்டது யார்?கூட உழைக்க தயாராக இருப்பது யார் என்பதை பார்த்து கொடுக்கப்பட்ட பிறகு அதை அறுவை சிகிச்சை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
உழைத்த பணம் நல்லவர் கைகளுக்கு போய் சில நல்லவை நடந்தால் நல்லது,அவ்வளவு தான்.
நடப்பவற்றை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பின்னூட்டத்தில் போட சரியில்லாத மேட்டராக இருந்தால் போட வேண்டாம்.
எதிர்பாராத திருப்பம் தான். ஆனால் அனைவரும் திருப்திப்படும் நிகழ்வு. நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ரவி!
வர இருக்கும் புத்தாண்டு மகாலட்சுமிக்க நல்ல ஆண்டாக மலர வகை செய்திருக்கிறீர்கள். நன்றி!
Post a Comment