Friday, July 06, 2007

அ.தி.மு.க - பா.ம.க இணையுமா ?

வேலூர்: திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் பாமகவுக்கு இல்லை என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

திமுக, பாமக இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தலோடு, திமுகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. இப்போது பாமக எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி என்று கூறினார். இது திமுக, பாமக வட்டாரத்தில் பலவித எதிர்பார்ப்புகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா, அதிமுக கூட்டணியில் இணையுமா என்று கேட்டனர். அதற்கு மணி, திமுக அரசை ஆதரிக்கிற முதல் கட்சியாக பாமக இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாமக கண்டிப்பாக இணையாது. முடிந்து விட்ட விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றார்.

டாஸ்மாக் மது விற்பனை நேரம் குறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இன்னும் குறைக்க வேண்டும் என்றார் மணி.


நன்றி - தட்ஸ் தமிழ்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

4 comments:

திருவடியான் said...

தேர்தல் நேரத்தில் சீட்டைக் குறைத்துக் கொடுத்து அல்லது கேட்காத சீட்டுக்களைக் குறைத்து, பா.ம.க.வைத்துரத்தும் ராஜந்திரம் கலைஞருக்கும் தெரியுமாக்கும். அப்ப இருக்கு, இந்த ஆளுக்கு வேட்டு. விஜயகாந்த் ஏற்கனவே பாமகவுக்கு இனிமா கொடுத்திருக்கிறார். தற்போது ஜெயலலிதாவுக்கும் இனிமா கொடுத்து வருகிறார். பாமகவைக் கழட்டி விட்டால், விஜயகாந்த் அதிமுகவையும் பாமகவையும் முன்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்து விடுவார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பாருமய்யா, இது நான் நடக்கப் போகிறது.

Anonymous said...

Only if you would ever get two Iyengar girsl. In your dream.

Anonymous said...

நல்ல கேள்வி. என் ஆத்துகாரருக்கும் அரசியல் ரொம்ப பிடிக்கும்

மாயன் said...

ஆமா ஆமா சரிதான் மாத்தி மாத்தி இவங்களுக்குள்ளயே தான் முன்னுக்கு வந்துட்டுருப்பாங்க... மக்கள் முன்னுக்கு வரவே முடியாது...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....