செந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...

வணக்கம் மக்கள்ஸ்....ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கிறேன்...

"எல்லோர் கையிலும் ஏன் ஆணி வைத்தாய் இறைவா"

இப்போ என் கையில் இருக்குற ஆணி கொஞ்சம் பெருசா, ஆணின்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு (கிட்டத்தட்ட ஆப்பு சைஸ்ல) இருக்கு...என்ன செய்ய புலி வாலை புடிச்சுட்டமே...

சேலம் சிவராஜ் சித்த வைத்தியரோட சுற்றுப்பயண அறிவிப்பு மாதிரி இல்லைன்னாலும் ( ஓசூர் பாகாலூர் ரோடு ஈஸ்வரி லாட்ஜ்ல அவரை மீட் பண்ணி சிட்டுக்குருவி லேகியம் வாங்கிய வலைத்தமிழர் ஒருவர் இருக்கிறார் என்கிறது காதோரம் சிறகடிக்கும் ஒரு பறவை) ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சுற்றுப்பயணத்தை செய்யலாமுன்னு இருக்கேன்...

நாம போற வழியில சுத்தியலோடு ஆணி புடுங்கிக்கொண்டிருக்கும் வலைத்தமிழர்கள் இருந்தால் அவர்களை சந்தித்து மொக்கை போட ஆவல்...

பெங்களூரில் இருந்து 15 ஆம் தேதி காலை கிளம்பி தாய்லாந்து...(ஈஸ்வரி லாட்ஜ் (அல்ல), பாங்காங்...)...இரண்டு நாள் டேரா...பிறகு அங்கிருந்து தாய்வான்...(தைபே)...அங்கேயும் இரண்டு நாள்...பிறகு அங்கிருந்து கொரியா...(கஸாந் தாங், சியோல்)....அங்கன ஒரு வாரம் ஆணி புடுங்கிய பிறகு, சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ ( என்னோட சாய்ஸ் இங்க உள்ள பாலித்தீவு தான்) கண்டினூ பண்ணலாம் என்று உள்ளேன்...

சந்திக்க விரும்புபவர்கள் ஆப்பை கையோடு கொண்டுவருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

என்னுடைய மொபைல் எண் : 98863 97051 ( வித் இண்டர்நேஷனல் ரோமிங் ஆணி)

வர்ர்ர்ர்ட்ட்டா !!!!!!!!!!!

ஆங் சொல்ல மறந்துட்டேனே...பெங்களூர் ப்லாகர் மீட்டுக்கு வரீங்க தானே ?

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

மலேஷியா/சிங்கப்பூரில் யாரையெல்லாம் சந்திக்கப் போகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
pamaran said…
அன்பு ரவி,
வணக்கத்துடன் பாமரன்.
சென்னையில் விஜய் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு செல்வதால் பெங்களூர் வர இயலாத சூழல். நமது வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற எமது வாழ்த்துக்களை மறவாமல் சொல்லுங்கள்.
தோழமையுடன்,
பாமரன்.
OSAI Chella said…
ட்ரைனுக்கு நேரமாச்சு கண்ணா... வந்துட்டே இருக்கேன்!
vaazththukkaL misdar ravi
korea is famous for your s...e soup
keep it in mind.
enjoy!!!!!!!!
Best of luck
என்னங்க! நாங்க இருக்கிற பக்கம் மட்டும் "Choice" சா?

Popular Posts