பா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்சி..

பாலாவே அல்லது பா.க.ச உறுப்பினர்களோ தகவல் தெரிவிக்காத நிலையில், ஜெயா டி.வியில் இருந்து வந்த ஒரு செய்தி வயிற்றில் புளியை கரைத்தது...

அது என்னவென்றால் பா.க.ச தலைமைப்பொறுப்பில் இருக்கும் பாலபாரதி, நேர்முகம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் நேரடியாக நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்போகிறார் என்பது தான்...

அலுவலகத்திலோ தலைக்கு மேலே ஆணி..ச்சே..வேலை...இருந்தாலும் பா.க.ச பெங்களூர் கிளை ஒக்கே ஒக்க தலைவரான நான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழையாகிவிடுமே என்று கிலி கிளம்ப, அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு பாதி நாள் கட்டடித்தேன்...

12:00 மணிக்கு சரியாக எழுந்து பார்க்கவேண்டும் என்று அலாரம் வைத்துவிட்டு (பகல் பண்ணிரண்டு மணிக்குத்தான்)...படக் என விழித்து பார்த்த போது மணி பண்ணிரண்டு நாற்பத்தைந்து...

அய்யோடா என்று டி.வீயை உசுப்பினால் திடுக்கென தூக்கி வாரிப்போட்டது...எதிர்த்தாமாதிரி பாலா லைட்டாக முடிவளர்ந்த மொட்டைத்தலையோடு அட்டகாசமாக சிரித்தபடி கோவையிலிருந்து கேள்வி கேட்ட பிரதீபாவுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார்...

அடக்கொடுமையே என்று பார்த்துக்கொண்டிருந்தால்...டி.வி காம்பியரர், சார் இன்னொரு நேயர் லைன்ல காத்துக்கிட்டிருக்கார்...என்றார்...

கவிஞர் முத்துலிங்கம் மும்பைல இருந்து பேசுகிறேன் என்று ஒருவர் ஆரம்பித்தார்...

வணக்கம் சொல்லுங்க என்றார் பாலா...(எனக்கு தோன்றினது, அட நானும் மும்பைல தான் பத்திரிக்கையாளரா குப்பை கொட்டினேன் தல...என்று ஆரம்பித்துவிடுவாரோ என்று பயந்தேன்...)

பேக் டு கவிஞர் முத்துலிங்கம்..அவர் தமிழ் போரம் என்ற இணைய தளத்தில் 400க்கு மேற்ப்பட்ட கவிதைகளை மற்றும் கதைகளை அடிச்சு தூள் கிளப்பிய பிறகு அந்த போரத்தை இழுத்து மூடிட்டானுங்களாம்...இப்போ இன்னா செய்யது என்றார்...

ஆர்ச்சீவ்ஸ் டாட் காம் என்று ஒரு தளத்தில் இது போன்ற பழைய பக்கங்கள் எல்லாம் இருக்கும் என்று ஒரு முறை பாலாவே என்னிடம் சொல்லி இருக்கார்...ஆனாலும் அதை மறந்துட்டார் போல...முத்துலிங்கத்திடம் கூகிள்ல போய் டைப் பண்ணுங்க, அதில் வரும் கேச்சுடு பேஜஸ் கிளிக் செய்யுங்க என்று ஏதோ உழப்பி அமுக்கினார்...

அப்புறம் மதுரையில இருந்து ஒரு அக்கா அழைத்து, ப்லாக் செய்து பணம் செய்வது எப்படி என்று கேட்க, அதுக்கு பாலா விளக்கம் கொடுத்தார்...

பொறவு, இ-கலப்பை பற்றி காம்பியர் செய்த அக்கா ( இது நியாயமா, அடுக்குமா) கேட்க, அதுக்கு ஏ எம் எம் ஏ அப்படீன்னு அடிச்சா அம்மா வரும் என்று குழந்தைக்கு விளக்குவது போல பாலா விளக்க...

எனக்கு என்னமோ அடி வயித்துல தீய வெச்ச மாதிரி இருந்தது...

பிறகு வேற எதாவது விசயம் தெரியனும்னா ஜெயா டிவி. அலுவலகத்துக்கு போன் போடுங்க என்று சொல்லி, பாலாவின் பெரிய வணக்கத்துடன் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது...

பிறகு செயா டி.டி செய்திகள் ஆரம்பமானது...கூட்டுறவு தேர்தலை மைனாரிட்டி தி.மு.க அரசு ரத்து செய்தது பற்றியதான அம்மாவின் அறிக்கையை விரிவாக படிக்க ஆரம்பிக்க, நான் சன்னுக்கு மாறி, இளையராஜா - கங்கை அமரன் இனைந்து தயாரித்து, உப்பிலியப்பன் விஜயகாந்த் கொழுகொழுவென்று கழுத்தில் சதையோடு நடித்த, கோயில் காளை (படத்துல கனகா ஹீரோயினி..உப்பிலியப்பன் நம்ம கேப்டனோட பேரு)...படத்தை வெறிக்க ஆரம்பித்தேன்....

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

தம்பி said…
என்ன கொடும கோபாலா இது...
Deepa said…
சரி.. உங்க பாசக்கார குடும்பத்திலே யாருக்கவது..( நிகழ்ச்சி குறித்து முன்னமே தெரிஞ்சவங்களுக்கு).. இதை ரெகார்ட் பண்ணி வைக்கணும்ன்னு தோணிச்சா.. தோணலையா.. உண்மையை சொல்லணும்.. ஏற்க்கணவே என்னை மாதிரி சில பேர்..announcement இல்லைன்னு கடுப்பிலே இருக்கோம்.. யாருமே ரெகார்ட் பண்ணலை... vedio file ஐ ஜயா டிவி தரலைன்னு சொன்னா.. நொந்து போய்டுவோம்... என்ன நான் சொல்லறது.. சரிதானே
ஆமா ரவி லக்கியும் பாலாவும் நேத்து போன் பன்னும் போது கூட சொல்லலை

என்னை ஏமாற்றி விட்டார்கள்
// மகேந்திரன்.பெ said...
ஆமா ரவி லக்கியும் பாலாவும் நேத்து போன் பன்னும் போது கூட சொல்லலை

என்னை ஏமாற்றி விட்டார்கள் //

என்னை காப்பாற்றி விட்டீர்கள்:-))
Anonymous said…
பா.க.ச - என்ன என்று விளக்குங்களேன்.
vathilai murali said…
கலாய்க்கிறீங்களே ரவி

Popular Posts