தேடுங்க !

Wednesday, July 25, 2007

ஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும் கிளைகள் இல்லை)

சமீபத்தில் நன்பர் ஒருவர் சாம்சங் பென் ட்ரவ் (Pen Drive) ஒன்றை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வாங்கி இருக்கிறார்...வீட்டுக்கு வந்து பிரித்து உபயோகப்படுத்த முயன்றதில் ஓட்டை...ஒன்றும் சரியாக வேலை செய்யவில்லை...

சாம்சங் கஸ்டமர் கேர் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை இணையத்தில் இருந்து எடுத்து, பிரச்சினையை பற்றி விளக்கியபோது, சாம்ஸங் நிறுவனத்தார், அப்படி ஒரு பென் ட்ரைவை தாங்கள் தயாரிப்பதே இல்லை என்று கூறிவிட்டனர்....

அதிர்ந்து போன நன்பர், மீண்டும் சரவணா ஸ்டோர் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, இந்த கஸ்டமர் கேர் நம்பருக்கு போடுங்க என்று ஒரு எண்ணை கொடுத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தார்...

இந்த எண்ணை தொடர்புகொண்ட போது ( இது எலக்ட்ரானிக் பொருட்கள், கடத்தல் பொருட்கள், போலி பொருட்கள் கிடைக்கும் சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு எண்) வழ வழா கொழ கொழா என்று பதில் கொடுத்துள்ளார்கள்...

அரைகுறையாக வேலை செய்த பென் ட்ரைவ் இன்னும் இரண்டு முறை உபயோகித்த பிறகு சுத்தமாக படுத்துவிட்டது...

சரவணா ஸ்டோர் நிறுவனத்தை மீண்டும் தொடர்புகொண்ட போது, வாங்கினது வாங்கினது தான், உன்னால ஆனதை பார்த்துக்கோ என்று பதில் வருகிறதாம்...

சமீபத்தில் ஈழத்து தொழிலதிபரை பந்து திருடினார் என்று தாக்கிய பிரச்சினையின் ஈரம் காய்வதற்குள் இப்படி ஒரு குற்றச்சாட்டு வெளிவருகிறது...

மலிவு விலை என்று கண்ட கருமத்தையும் இது போன்ற கடைகளில் வாங்குபவர்கள் இனிமேலாவது உஷாராக இருக்கவேண்டும்...!!!!

29 comments:

வடுவூர் குமார் said...

சரி.
:-))

வரவனையான் said...

ம்ம் ஆமாம் ரவி , ஆனால் அதே வேளை உள்ளே போனால் தேவையான பெரும்பாலான பொருட்கள் கிடைப்பதும் விலையும் ஓரளவு சரியானதாக இருப்பது அங்கு தொடர்ந்து ஈர்க்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் பலமுறை அந்நிறுவனத்தின் மீது எழுந்துள்ள போதும் தொடர்ந்து அரசாங்கங்கள் அமைதியாக இருப்பது முறையல்ல

delphine said...

நம்ப மக்கள் எவ்வளவு ஏமாந்தாலும் .\, திருப்பி திருப்பி அஙகத்தான் போவாங்க. அண்ணச்சியும் இப்படி ஏமாற்றவங இருக்கிறவரைக்கும் அவர் சம்பாதிச்சுட்டு இருப்பார்...

சிவகுமார் said...

நானும் கேள்விபட்டேன்!

சுந்தரராஜன் said...

நண்பரே ஈழத்து நண்பரை சட்டரீதியான போருக்கு தயாராக்கி வருகிறோம்.
உங்கள் நண்பரின் பென் டிரைவ்க்கு பில் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.

அன்புடன்.
சுந்தரராஜன்
98402 46661
www.makkal.sattam.blogspot.com

Hariharan # 03985177737685368452 said...

எவர்சில்வர் அலுமினியச் சொம்பு வாங்க வேண்டிய இடத்தில போய் எதை வாங்கியிருக்கார் பாருங்க உங்க நண்பர்!

Senthil Alagu Perumal said...

இது மிகவும் சரி. சரவணா ஸ்டோர்ஸ் கடத்தல் பொருட்கள், நகலான (Duplicate) பொருட்களைத் தான் வியாபாரம் செய்கிறது. ஆனால் அவரிடம் இதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. கேட்டால் அவர்களது பவரைக் காட்டுவார்கள். எனது நண்பர் ஒருவர் அங்கு ராடோ (Rado) கைக் கடிகாரம் 250 ரூபாய்க்கு வாங்கினார் என்றால் நம்புவீர்களா, ஆனால் அது நிஜம்.

லக்கிலுக் said...

நியூ சரவணா ஸ்டோர்ஸ் கொஞ்சம் பரவாயில்லைன்னு நெனைக்கிறேன்!

செந்தழல் ரவி said...

சரி.
:-))///


அப்ப ஓக்கே வடுவூராரே

செந்தழல் ரவி said...

////ம்ம் ஆமாம் ரவி , ஆனால் அதே வேளை உள்ளே போனால் தேவையான பெரும்பாலான பொருட்கள் கிடைப்பதும் விலையும் ஓரளவு சரியானதாக இருப்பது அங்கு தொடர்ந்து ஈர்க்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் பலமுறை அந்நிறுவனத்தின் மீது எழுந்துள்ள போதும் தொடர்ந்து அரசாங்கங்கள் அமைதியாக இருப்பது முறையல்ல ///

அமவுண்டை வெட்டும்போது அரசாங்கம் என்ன செய்யும் ? ச்ச்ச்சும்மா கை கட்டி வேடிக்கை தான் பார்க்கும்...

செந்தழல் ரவி said...

///நம்ப மக்கள் எவ்வளவு ஏமாந்தாலும் .\, திருப்பி திருப்பி அஙகத்தான் போவாங்க. அண்ணச்சியும் இப்படி ஏமாற்றவங இருக்கிறவரைக்கும் அவர் சம்பாதிச்சுட்டு இருப்பார்... //

டெல்பின் அக்கா அண்ணாச்சி போய் சேர்ந்துட்டாருங்கோ...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது உலக இயல்பு...

நான் டி.நகர் ரங்கநாதன் தெருவில் தங்கி இருந்தபோது, ஒரு சந்து வழியாக அலுவலகம் போவேன்...

அதாவது சரவணா ஸ்டோர் பின்புறம்...

அங்கே கோடவுன் இருக்கும்...

அங்கே முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் சேர் போட்டு அமர்ந்திருப்பார்...

நான் ரெகுலராக வருவதால் மென்மையாக புன்னகைப்பார்...

பிற்பாடு கேட்டு தெரிந்துகொண்டேன்...

அவர்தான் சரவணா ஸ்டோர் பெரிய அண்ணாச்சி என்று...!!!

செந்தழல் ரவி said...

///எவர்சில்வர் அலுமினியச் சொம்பு வாங்க வேண்டிய இடத்தில போய் எதை வாங்கியிருக்கார் பாருங்க உங்க நண்பர்! //

வாங்க ஹரி...

வேற என்ன, சீப்பா கிடைக்குமேன்னு தான் மக்கள் அங்க போறாங்க...

இதுல சினேகாவை வெச்சு விளம்பரம் வேற...

போகமாட்டாங்களா என்ன ?

செந்தழல் ரவி said...

///நண்பரே ஈழத்து நண்பரை சட்டரீதியான போருக்கு தயாராக்கி வருகிறோம்.
உங்கள் நண்பரின் பென் டிரைவ்க்கு பில் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.

அன்புடன்.
சுந்தரராஜன்
98402 46661
www.makkal.sattam.blogspot.com ///


இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறீங்களா ? வெரிகுட்...

மகிழ்ச்சி...உடனே அந்த நன்பரை இ-மெயிலில் தொடர்புகொண்டு சொல்கிறேன்...

செ. நாகராஜ் said...

அங்கே வாங்கும் எந்த பொருளுக்கும் பில் தர மாட்டார்கள். வேண்டும் என்றால் நீங்கள் கடந்த முறை வாங்கிய பொருளின் பில்லை பாருங்கள் estimate என்று தான் இருக்கும். பில் நம்பர், tngst, cst, vat tin number ஒன்றும் இருக்காது. நீங்கள் எதை ஆதராமக வைத்து வழக்கு போடுவீர்கள்.
இந்த வரி ஏய்ப்பு அதிகாரிகளுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்.

செந்தழல் ரவி said...

///சிவகுமார் said...
நானும் கேள்விபட்டேன்!

Wednesday, July 25, 2007
////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

தமிழன் said...

//நண்பரே ஈழத்து நண்பரை சட்டரீதியான போருக்கு தயாராக்கி வருகிறோம்.
உங்கள் நண்பரின் பென் டிரைவ்க்கு பில் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.

அன்புடன்.
சுந்தரராஜன்
//
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் ...
வெற்றி வாய்மைக்கு....
ஒரு தமிழனாக பெருமையடைகிறேன்.

Anonymous said...

do you think they are selling all original things at Mustafa in Singapore?
how can you expect original things for cheap price?
first you should be ready to pay the right price for right stuff...
it looks like nothing wrong with Saravana store..
that lankan man would have talked or tried to show his ltte'ness with the store people...

புதுவைக்குயில் பாசறை said...

நண்பரே ஈழத்து நண்பரை சட்டரீதியான போருக்கு தயாராக்கி வருகிறோம்.
உங்கள் நண்பரின் பென் டிரைவ்க்கு பில் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் ...
வெற்றி வாய்மைக்கு....
ஒரு தமிழனாக பெருமையடைகிறேன்
திருடராய் பார்த்து திருந் தாவிட்டால்
திருட்டை ஒழிக்கமுடியாது.

PRINCENRSAMA said...

ஏனய்யா! பிறந்தநாளாமே! வாழ்த்துக்கள்!
http://kusumbuonly.blogspot.com/2007/07/blog-post_9098.html

Anonymous said...

Saravana store-la poi pen drive vaangaatheenga! plastic porutkal, chappal, ever silver item, low level household item ithellaam vaangalaam. Vela jaasthi ulla item-na, go to saravana stores, get to know the price, don't buy there, go to specialist shop, negotiate for the price u saw in saravana stores! this is how u have 2 do shopping in SS!!!

கீதா சாம்பசிவம் said...

பெண்கள்தான் அதிகமாய் ஏமாந்தாங்கன்னு நினைச்சால் இப்போ ஆண்களுமா? எங்க வீட்டைப் பொறுத்த வரை தி.நகர். சரவணா ஸ்டோர்ஸுக்கும் சரி, ஜி.ஆர்.டி.க்கும் சரி போகவே மாட்டோம்! அவ்வளவு ஏன்? தி.நகரில் பொருட்கள் வாங்குவதே எப்போவாவது நல்லியில் மட்டும்தான், அதுவும் பட்டுச் சேலைகளின் தேவை இருந்தால் மட்டுமே!

கீதா சாம்பசிவம் said...

இறந்து போனவரின் மகன் நடத்துவது தான் "நியூ சரவணா ஸ்டோர்ஸ்" அவரின் மூத்த சகோதரர்கள் நடத்துவது ஒரிஜினல் "சரவணா ஸ்டோர்ஸ்", என்று இருப்பது, ஆனால் எல்லாமே ஒன்றுதான் தரத்திலும், வாடிக்கையாளர் சேவையிலும்! :((((((

வெற்றி said...

ரவி,
இது பதிவுக்கான பின்னூட்டம் இல்லை.

இன்று உங்களின் பி.நாள் என அறிந்தேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

நான் அவரை மாதிரி எல்லாம் தலைப்பு போட முடியாது.

"நாயிங்களா ஏண்டா சரவணா ஸ்டோர்ஸ் போறீங்க?"

Anonymous said...

சரவணா ஸ்டோர்ஸ் ஒரு அடவாடித்தனம் செய்யும் கடை என்பதை ஒரு முறை அன்பவித்தேன். தரம் இல்லை என்றால் திருப்பிக் கொடுக்க முடியாது. கொடுக்க முயன்று கழுத்தில் பிடித்து தள்ளாத குறை மட்டும்தான். ஐயோ சாமி அந்தப்பஃப்க்கம் நினைத்துப்பார்க்க முடியாது.

நிலவு நண்பன் said...

அப்படின்னா சரவணா ஸ்டோர்ஸ் சொல்றது சரிதான்ங்க...

ம் இதுபோன்ற கடை வேறெங்கும் கிடையாது


பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி..

புதுத்துணி அங்கதான் வாங்கப்போனீங்களோ? :)

Anonymous said...

இந்த செய்தியின் நாயகர் திரு இளஞ்செழியன் அவர்கள் சரவணா ஸ்டோர்ஸிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

இந்த உரிமைக்கான போராட்ட குணமே அத்துமீறல்களையும், அராஜகங்களையும் கட்டுப்படுத்தும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கான இணைப்பு: http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070801005203&Page=9&Title=Chennai&Topic=0&aDate=8%2F1%2F2007

மாசிலா said...

சமூக நுகர்வோர் அக்கறையுள்ள நல்ல பதிவுக்கு உங்களுக்கு ஒரு ஜெ!

ஏ! 'நியூ சரவணா ஸ்டோர்ஸ்', உன் அடாவடித்தனத்தை நிறுத்து. நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களை எதிர்த்து எவனும் நீண்ட காலம் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. இது செய்திகள் மய உலகம். இனிமேல் யாரும் யாரையும் ரொம்ப காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டு வரமுடியாது.

ரவியோட நண்பருக்கு நீதி கொடு.

இல்லையென்றால், உன் வண்டவாலம் தண்டவாலம் ஏறிக்கொண்டே போகும்.

ஸ்ஸ்ஸ்... அபாடா.

இது போதுமா ரவி ஐயா?

வேனும்னா வாங்க ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தி அவங்க டங்கு வாரை கிழிச்சுடலாம்.

Galleryrub said...

இந்த சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கொடுப்பதே இல்லை...நான் ஒரு முறை என் மொபைலுக்கு headset வாங்குவதற்காக சென்றேன்,ஆனால் அந்த சேல்ஸ் மேன் என் மொபைலின் மாடலை கூட பார்க்காமல் இல்லை என்று சொல்லி போய்விட்டார்.