Tuesday, July 17, 2007

கடகடகடகடகடகடகடகட !!!!

முந்தா நாள் ஜப்பானில் நில நடுக்கம் வந்தப்போ என்னுடைய அறை ஒரு மூன்று நிமிடம் கடகடவென ஆடுச்சு...நான் இருப்பதோ எட்டாவது மாடி...எங்கே நமக்கு ஆப்பு வெச்சுட்டதோ இயற்கை என்று நினைத்த்துக்கொண்டிருந்தபோதே ஆட்டம் நின்றுவிட்டது...

காலையில் நியூஸ் பார்க்க்கும்போதுதான் தெரிந்தது ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது..வாயை பிளந்துட்டேன்...ஹுவேசாவுல (ஆபீஸ்) போய் சொன்னதுக்கு நாளைக்கு நைட்டு இந்த மாதிரி ஆனா ரூமுக்கு வெளிய ஓடியாந்திரு என்று என்னுடைய புஜாங் நிம் ( மேனேஜர்) சொன்னாரு...

இன்றைக்கு மாலையில் இருந்தே விட்டுவிட்டு அறைக்கட்டில் நன்றாகவே ஆடுகிறது...நில நடுக்கம் வந்த இடம் என்னுடைய ஊரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தான்...அதனால் ஒரு வேளை இங்க ஹிப்ட் ஆகிட்டதோன்னு நினைக்கத்தோனுது...

சரி இதைப்பத்தி ஒரு பதிவை போட்டுடலாம் என்று அமர்ந்தால் ஜுராசிக் பார்க்ல க்ளாஸ் தண்ணி ஆடுமே அந்த மாதிரி லட்டா ஆட்டம் ஆரம்பிக்குது...

பாருங்க கட்டில் கூட லைட்டா ஆடுது...அது எப்படி தெரியுமா ஆடுது...கடகடகடகட....(எக்ஸ்கியூஸ் மீ...வெளிய ஓடுறதுக்கு முன்னால கொஞ்சம் திரட்டியில பிங் பண்ணிட்டு போயிடறனே...) கடகடகட !!!

6 comments:

Anonymous said...

இந்த நிலையிலுமா பதிவு???

கோவி.கண்ணன் said...

முதல்பாராவை படிச்சாலே நிசமாவே அதிருதுல்ல...

siva gnanamji(#18100882083107547329) said...

ஆபத்து ஏதுமின்றி தப்பியதற்கு
வாழ்த்துகள்!

ILA (a) இளா said...

உசுரோட இருக்கோமேன்னு சந்தோசப்படாம, அந்த ஊரு பொண்ணுங்களோட போட்டோ சூட்டிங்கா?

இதுக்குதான் "சும்மா அதிருதுல்ல"ன்னு தலைப்பு வெக்கனும்

ILA (a) இளா said...

உசுரோட இருக்கோமேன்னு சந்தோசப்படாம, அந்த ஊரு பொண்ணுங்களோட போட்டோ சூட்டிங்கா?

இதுக்குதான் "சும்மா அதிருதுல்ல"ன்னு தலைப்பு வெக்கனும்

லக்கிலுக் said...

அட அதிருதுங்கோ....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....