கிரெடிட் கார்டு வைத்திருக்கீங்களா ?

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துபவரா ? அப்போ நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது...மூன்று நான்கு வருடம் முன்பு ஒருமுறை நான் அவுஸ்திரேலியா போகும் முன் ஒரு ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் குருவி ரொட்டியோ குச்சு முட்டாயோ வாங்கினேன்....

பல கார்டுகள் இருப்பதால் அந்த கார்டை மறந்தும் போனேன்...ஆறுமாதம் கழித்து திரும்பி வந்தபோது ஐந்தாயிரம் குட்டி போட்டு பதினைந்தாயிரமாக இருந்தது...கட்ட மாட்டேன் என்று சொன்னதற்கு இரண்டே நாளில் வக்கீல் நோட்டீஸை எனக்கும் என்னுடைய அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டார்கள்...ஹெச்.ஆர் மேனேஜர் தமிழர், மேலும் எனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் நேரடியாக விஷயம் என்னுடைய பார்வைக்கே வந்தது...மேலும் என்னுடைய பிஸினஸ் யூன்ட் ஹெட்டுக்கு நான் செல்லப்பிள்ளை என்பதால் இது குறித்து நடந்த ஹை-லெவல் மீட்டிங் நீர்த்துப்போனது...

அந்த நாளில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயிருக்கவில்லை...அதிலும் இப்போது மக்கள்-சட்டம் என்ற பெயரில் சட்டங்களையும் சட்டம் சம்பந்தமான விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கும் வலைப்பதிவுகளும் எனக்கு தெரிந்திருக்கவில்லை...!!!

இந்த லிங்க் கிளிக்கி மக்கள் சட்டம் வலைப்பதிவு க்ரெடிட் கார்டுகள் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்களேஎன்.....!!!!!

Comments

அப்புறம் என்னதான் ஆச்சு..பணம் கட்டினிங்களா இல்லையா..


அன்புடன்
அரவிந்தன்
நமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன்.
சின்னக்குட்டி, சுட்டிக்கு நன்றி...!!!
///அப்புறம் என்னதான் ஆச்சு..பணம் கட்டினிங்களா இல்லையா..


அன்புடன்
அரவிந்தன் ///

கட்டிப்புட்டேன்...!@!
Anonymous said…
////நமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன். ///

அஸ்க்கு புஸ்க்கு நீங்க சந்தடிசாக்குல தட்டி உட்டுட்டு பூடுவீங்க, தல உக்காந்து மொக்க போடனுமாக்கும்
///நமக்கு கிரெடிட் கார்டு வாங்கத் தெரிகிறது. ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகள் தெரிவதில்லை. சரியான முறையில் உபயோகித்தால், கிரெடிட் கார்டு அருமையான தேர்வு. இது குறித்து ஒரு பதிவு இடுங்களேன். ///

நன்பரே அந்த தளத்தில் கொடுத்துள்ளார்களே...

இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
அதெப்படி மறக்க முடியும்? மாசாமாசம் ஸ்டேட்மெண்ட் வந்துருமுல்லெ?

க்ரெடிட் கார்டு ஒரு நல்ல விசயம்தான். ஆனா சரியானபடிப் பயன்படுத்தணும்.
எப்படியும் ஒரு 40 நாள் இருக்குல்லே? வட்டி இல்லாத கடன்.
ஒரு ஆபத்துக்குச் சட்னு கை நீட்டறது இந்த கார்டுகள்தான்.
இல்லேன்னா காசை மூட்டைக் கட்டிக்கிட்டு ஊர் ஊரா நாடு நாடா
அலைய முடியுமா?

ஆனா மலேசியாலே மட்டும் கார்டைப் பயன்படுத்தக்கூடாது.
அங்கே பயன்படுத்திட்டா, நம்ம பேங்கே நம்மளைத் திட்டிட்டு,
அந்தக் கார்டைக் கேன்ஸல் செஞ்சுட்டு வேற தரும்:-)

ஒரே 420 ஆம்(-:

Popular Posts