யார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு

கண்மணி அக்காவோட இந்த பதிவோட தலைப்பை (மட்டும்) பார்த்ததும், தமிழ்மண பதிவர்களை கண்டுபிடிக்கும் ஆட்டம் விளையாடலாம் என்று ஒரு எண்ணம்...

இப்போ ஆரம்பிக்கலாமா...போட்டி நடுவர்களாக மூனு தலையாட்டி பொம்மை இங்க வேனாமே...( லூசுப்பயலுக... எதுக்கெடுத்தாலும் எஸ் எஸ் எஸ் னு மூனுபேரும் சொல்லுவானுங்க)

இப்போ போட்டி என்ன அ(ஆ)ப்படின்னா, நான் உங்க எதுர்த்தாப்புல இருக்கேன்...நீங்க தமிழ்மண புதிய பதிவர்...(புதுசா வந்திருக்கிற பிரமிட் சாய்மீரான்னு வெச்சுக்கலாம்) நீங்க தமிழ்மணத்தை வெறுமனே ஒரு லுக்கு விட்டு, ஏதாவது ஒரு பதிவரை மனசுல நெனைச்சுக்கறீங்க...நான் அதை இருபத்தோரு கேள்வியில கண்டுபிடிக்கப்போறேன்...

ரெடி ஸ்டார்ட் மியூஜிக்...தொண்டைய கனைத்துக்கொண்டு, ஒரு பில்டப்புக்காக மலையாளம் கலந்த தமிழில் "ஆர் மனசுல ஆரு பிரமிட் சாய்மீரா உங்கள் மனஷில ஆரு" என்று ஆரம்பிக்கிறேன்...

செந்தழல் : உங்கள் மனதில் இருக்கும் நபர் ஆணா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் அதர் அனானி ஆப்சன் ஓப்பன் செய்திருக்கிறாரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: அவர் ஆசிய கண்டத்து பதிவரா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:அவருடைய எந்த பதிவுக்காவது நூறுக்கு மேற்பட்ட பின்னூட்டம் வந்திருக்கா ?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:அவருக்கு போலிப்பதிவு இருக்கா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:அவருக்கு போண்டா பிடிக்குமா?
பிரமிட் சாய்மீரா: இல்லை...

செந்தழல்:24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான பதிவுகளை பிரித்து மேய்பவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மேலே பிஸ்ஸடிக்கும் இந்த குழந்தைகள் இன்னும் வளரவில்லை என்பது தெரியாத பிரபல எழுத்தாளரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க இது போன்ற கட்சிகளின் அடிமட்ட தொண்டரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:அடிக்கடி சூடான இடுகைகளில் வரும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்:ஈழப்பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: காற்றடித்தால் பறந்துபோகும் அளவில் இருப்பவரா ?
பிரமிட் சாய்மீரா : இல்லை

செந்தழல்: மொக்கைகளில் சிறந்துவிளங்கும் துபாய் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: வகுப்பறை வைத்து பாடம் நடத்துபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்:போலி பின்னூட்டம், போலிப்பதிவு என்று போட்டு மாட்டிக்கொண்டவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பா.க.ச, பொ.க.ச என்பது போன்ற கலாய்க்கும் சங்கம் தனியாக இருக்கும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: கோவையில் இருந்து எழுதும் 'நச்', 'இச்' பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிய பதிவரா?
பிரமிட் சாய்மீரா:இல்லை

செந்தழல்: தனக்கு தானே நூற்றுக்கனக்கில் பின்னூட்டம் போட்டு போலீஸ்காரரால் பிடிபட்டவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: காமிக்ஸ் ரசிகரா?
பிரமிட் சாய்மீரா: ஆம்

செந்தழல்: சற்றுமுன்னால, கொஞ்ச நேரத்து மிந்தி போன்ற செய்தி தளங்களில் உறுப்பினரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மூஞ்சு மூடி எழுதும் பதிவரா?(கொஞ்சம் ஓரத்தில் யாரென்று தெரியும்)
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: வழவழா கொழகொழாவென சினிமா விமர்சனம் எழுதும் பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பெண்ணீய விரோதி என்று அறியப்பட்ட பிரபல பதிவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: இந்தியாவில் இருந்துகொண்டு இஸ்ரேலுக்கும், ரஷ்யாவுக்கும் வக்காலத்து வாங்குபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: புரச்சி, மலர்ச்சி என்று பிறாண்டுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பின்னவீனத்துவமாக கவிதை (ஆயி, மூச்சா என்று) எழுதும் கவிஞரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: யாரையாவது போனை போட்டு மிரட்டுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மேக்ரோமீடியா பிளாஷ் வைத்து மொக்கை போடக்கூடிய ஓரே ஒரு பதிவரா ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: மொக்கையான சமையல் குறிப்புகள் வெளியிடுபவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: பரிசே இல்லாத போட்டி வைப்பவரா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அவருக்கு சர்க்கரை வியாதியா?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அவருக்கு உள்மூலம் வெளிமூலம் என்று ஏதாவது ?
பிரமிட் சாய்மீரா: இல்லை

செந்தழல்: அப்புறம் எந்த வெண்ணைடா அவன் ?
பிரமிட் சாய்மீரா: இருவத்தோரு கேள்வி கேக்கிறேன் என்று இருவத்தொம்போது கேள்வி கேட்கும் நீ தாண்டா அது...!!!!!!!

செந்தழல் : ங்ஏஏஏஏஏஏஏ !!!!!!

Comments

முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே...யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்...
//செந்தழல்: அப்புறம் எந்த வெண்ணைடா அவன் ?
பிரமிட் சாய்மீரா: இருவத்தோரு கேள்வி கேக்கிறேன் என்று இருபத்தேழு கேள்வி கேட்கும் நீ தாண்டா அது...!!!!!!!//

சூப்பர்........!
ILA(a)இளா said…
தற்பெருமை, ஹெட் வெயிட், கர்வம் இப்படி எதுவுமே இல்லாந்த அந்த வெள்ளந்தி மனுஷன் யாருங்க?
TBCD said…
/*செந்தழல்: அப்புறம் எந்த வெண்ணைடா அவன் ?
பிரமிட் சாய்மீரா: இருவத்தோரு கேள்வி கேக்கிறேன் என்று இருபத்தேழு கேள்வி கேட்கும் நீ தாண்டா அது...!!!!!!!*/

உன்ன பத்தி நீயே எழுதிக்கிற..."நீ ரொம்ப நல்லவன்டா"
vathilai murali said…
தமிழ்மனத்தில் அதிகமான மொக்கை போட்டவரா?
ஆமாம்
புகைப்பட போட்டியில் டெபாசிட் இழந்தவரா?
ஆமாம்
மூன்றாம் உலகப்போருக்கு காரணமானவரா?
ஆமாம்
/////செந்தழல்: அப்புறம் எந்த வெண்ணைடா அவன் ?
பிரமிட் சாய்மீரா: இருவத்தோரு கேள்வி கேக்கிறேன் என்று இருபத்தேழு கேள்வி கேட்கும் நீ தாண்டா அது...!!!!!!!//

சூப்பர்........! ///

என்னை திட்னா உங்களுக்கு சந்தோஷமா கோவியாரே...படிக்காமலே தான் இந்த பின்னூட்டம் போட்டிருப்பீங்கன்னு எனக்கு ஒரு டவுட்...
///தற்பெருமை, ஹெட் வெயிட், கர்வம் இப்படி எதுவுமே இல்லாந்த அந்த வெள்ளந்தி மனுஷன் யாருங்க?

Tuesday, July 24, 2007
//

அது இப்போ உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே ..!!!
///உன்ன பத்தி நீயே எழுதிக்கிற..."நீ ரொம்ப நல்லவன்டா" ///

ஏ.பி.சி.டி, ஏதோ ஒரு டீக்கடைக்காரன் போட்டோவை புரொபைலில் போட்டுட்டமாதிரி இருக்கு
///தமிழ்மனத்தில் அதிகமான மொக்கை போட்டவரா?
ஆமாம்
புகைப்பட போட்டியில் டெபாசிட் இழந்தவரா?
ஆமாம்
மூன்றாம் உலகப்போருக்கு காரணமானவரா?
ஆமாம் ///

:)))))))))) பின்னூட்டியதுக்கு நன்றீ
ILA(a)இளா said…
//முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே...யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்.//

கோச்சுக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?
TBCD said…
/*ஏ.பி.சி.டி, ஏதோ ஒரு டீக்கடைக்காரன் போட்டோவை புரொபைலில் போட்டுட்டமாதிரி இருக்கு */
கன்பூயுஸ் ஆன தமிழன தேடினா இப்படி இருப்பான் அப்படின்னு.. நான் நினைச்சேன்.. நீங்க என்ன நினைக்கிறிங்க... ( அப்புறம் ஏன் இப்படி போன் பன்னி தொல்லை பன்னுரீங்க.. உங்களால இன்னைக்கு வீட்டுல வச்சிட்டு வந்துட்டேன் ..)
///கோச்சுக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?///

ஒன்னும் பண்ணமுடியாது...போவவேண்டியது தான் பதிவ க்ளோஸ் பண்ணிட்டு...!!!
செந்தழல்: காமிக்ஸ் ரசிகரா?
பிரமிட் சாய்மீரா: ஆம

இந்த கேள்வியிலயே நான் பதில் கண்டுபுடிச்சுட்டேன் . . . . .்
எச்சூஸ் மீ, கும்மி அலவ்டா?
எப்படி...எப்படி?
மிதக்கும்வெளி ?

எப்படி எப்படின்னா ?

இப்படி மொக்கை போடுவது எப்படின்னு கேக்குறீங்களா ?
சரிதான், ஏற்கெனவே போட்ட தலைப்பை நான் ஜி3 பண்ணியதை, அதாவது காபி, பேஸ்ட், பண்ணிட்டேனோன்னு பார்க்க வந்தீங்களா? சரியாப் போச்சு போங்க, என்னோட பதிவின் மகத்துவத்தைப் பற்றி நான் எண்ணியதெல்லாம் வீணாப் போச்சே! :)))))))))))))
ரவி,
கொரியாவுக்கு போனதுல இருந்து அடுத்தவங்களை எல்லாம் சொரியவச்சுகிட்டு இருக்கிங்களே நியாயமா? ஒரு வேளை இம்சை தாங்காம உங்க அலுவலகத்தில் உங்களை வேலை இருக்குனு கொரியாவுக்கு நாடு கடத்திடாங்களா? அப்படித்தான் இருக்கும் பின்ன இந்த மாதிரி பிறாண்டுனா?
Anonymous said…
தலைப்பை பார்த்தாபோதே தெரியும் உங்களை பற்றித்தான் கேட்கபோகீறிர்கள் என்று... எத்தனை நாள் ரும்ல எங்களை மொக்க போட்டிருப்பிங்க...

-----சிங்கிலா வந்த சேலத்து சிங்கம்
Anonymous said…
தலைப்பை பார்த்தாபோதே தெரியும் உங்களை பற்றித்தான் கேட்கபோகீறிர்கள் என்று... எத்தனை நாள் ரும்ல எங்களை மொக்க போட்டிருப்பிங்க...

-----சிங்கிலா வந்த சேலத்து சிங்கம்
Anonymous said…
ராஜ்மோகன்

Popular Posts