சுவீடன் வாழ் தமிழர்கள் இருக்கீங்களா ??

அல்லாருக்கும் வணக்கங்னா...!!!!!

இப்பாலிக்கா புதுசா ஆணி புடுங்க ஆரம்பிச்ச இடத்துலேங்னா, நெறைய ஆணிங்னா....நம்மளோட தொல்லை பொறுக்கமுடியாம, ஒரு மூனுமாசம் 'ஒழிஞ்சு போ' அப்படீன்னு தொரத்துற இடம் சுவீடனுங்னா...

நம்ம புது டேமேஜர் இருக்காரே, படா பேஜார் புடிச்ச ஆளுங்னா...மதுரைக்காரர்...மொபைல் வேர்ல்டு காங்கிரஸாமே, அதுக்கு போயிட்டு வந்ததுலருந்து, அத்தப்பண்ணு இத்தப்பண்ணுன்னு ஒரே பேஜார் பண்ணிக்கினு கீறார்...

ஹும்...ஸ்டாக்குஹோமுல ஆணி புடுங்குன்னு தொரத்துறாருங்கன்னா...

ஸ்வீடன் வாழ் தமிழர்கள் ஆராவது வலைப்பதியுறீங்களா ? அதிகம் தொந்தரவு ஒன்னும்மில்ல, அரிசி பருப்பு கிடைக்குதா, இட்லிக்கடை ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கொஸ்டின்ஸ் தானுங்க...

உங்களோட அலைபேசி எண்ணை பின்னூட்டமா கொடுங்க, அடுத்த வார இறுதியில அங்கே மனைவியோட வந்திருவேனுங்க...கொஞ்சம் லொக்கேஷன் ஹெல்ப்ஸ் !!!!

ஆங்...ஆணி அதிகமாயிட்டதால இந்த வருஷம் இது கடைசி பதிவுங்னா..(ஹை ஹை, யாரை ஏமாத்தப்பாக்குற :)))) )

வரேனுங்க...!!!!!

Comments

Anonymous said…
you may be coming to stackholm? norm SE ppl come over there. I m bit away from the city. come over here, i will catch u up ~_~
அட, உடனே மாட்டிக்கிட்டீங்க :))))

நீங்க இருக்கும் இடம் எது ? அங்கிருந்து ஸ்டாக்ஹோம் எவ்ளோ தூரம் ????
Anonymous said…
i am in Uppsala, Its also a big town.
இதுக்கு மேல நான் மெயில்ல வரேங்னா. உங்க பின்னூட்டத்தை எடிட்டிட்டேன். நீங்க புதுசு என்பதால் சிலபல மேட்டர்கள் தெரியல. வலைப்பதிவுகள்ள இதே போல உங்கள் காண்டாக்ட் இண்பர்மேஷன் எங்கும் தரவேண்டாம் :)))))
SP.VR. SUBBIAH said…
///ஸ்வீடன் வாழ் தமிழர்கள் ஆராவது வலைப்பதியுறீங்களா ? அதிகம் தொந்தரவு ஒன்னும்மில்ல, அரிசி பருப்பு கிடைக்குதா, இட்லிக்கடை ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கொஸ்டின்ஸ் தானுங்க...///

கொரியாவுல கெடச்ச மாதிரி அங்கின
'ஸ்நேக் சூப்' எல்லாம் கிடைக்கலீங்களா தம்பி?
//கொரியாவுல கெடச்ச மாதிரி அங்கின
'ஸ்நேக் சூப்' எல்லாம் கிடைக்கலீங்களா தம்பி?///

வாத்தியார் அவர்களே, கொரியாவுல ஸ்னேக் சூப் எல்லாம் இருக்காது. அவங்க அதெல்லாம் சாப்பிடமாட்டாங்க. :))

(ஆணா அதுக்கு பதில் வழ வழன்னு ஒரு பெரிய புழுவ வெவிச்சி பெப்பர் போட்டு ஸ்லைஸ் செஞ்சு சாப்பிடுவாங்க)
சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செஞ்சிட்டு
ஸ்வீடன் தேனிலவு கிளம்பிட்டீங்களா
ஏம்பா ரவி. அங்கே தமிழச்சி, தமிழ்மணம், ஓசை செல்லா இன்னும் ஒருசிலர் அடிச்சிக்கறாங்க. நீங்க மட்டும் இங்கே பொழப்ப பார்த்துகிணு இருக்கறீங்களா. போய் சமாதானம் செய்யறத விட்டுப்புட்டு...

Popular Posts