டோண்டு மீட்டிங் - முழுமையான கவரேஜ்...!!!

என்னுடைய வாடகைக்காரை நடேசன் பூங்கா வாசலில் நிறுத்திய நேரம் சரியாக மணி 6:00..அதியமான் ஏற்கனவே வந்து காத்திருந்தார்...அங்கே வாசலில் நின்று எலந்தப்பழம் விற்றுக்கொண்டிருந்த நன்பரை, வலைப்பதிவு மீட்டிங் உள்ளே நடப்பதாகவும் அதில் வந்து கலந்துகொள்ளுமாறும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்..

டங்கென எண்டரி கொடுத்த நான், வலைப்பதிவு முடிந்ததும் டட்ச் ட்ரீட் முறையில் ரத்னா கபேயில் சாப்பிடவும் அழைக்குமாறு சொல்லிக்க்கொண்டே, மீட்டிங் நடைபெறவிருந்த புல் தரையை நோக்கி நடையை கட்டினோம்...

நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சாலை தெளிவாக தெரிந்ததால் கரிய நிற ஸ்கோடா ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து ஆஜானுபாகுவான ஒருவர் இறங்கிவருவதும் தெரிந்தது...முகம் சரியாக தெரியவில்லை...

எங்களை நெருங்கியவுடன் அவர். திரு.எல்லே ராம் என்று நன்றாக விளங்கியது...அவரை வரவேற்று - அமர சரியாக இடம் கிடைக்கவில்லை, கையில் இருந்த துக்ளக் நடுப்பக்கத்தினை கிழித்து தரையில் போட்டு - அவரை அமரவைத்தோம்...

வேறு யாரும் வருவதை உறுதி செய்யவில்லை...இருந்தாலும் பாரதீய நவீன அரசன், குட்டிப்பையன் இருவரும் கடைசீ நேரத்தில் எஸ்கேப்பானது ஏன் என்று தெரியவில்லை...டட்ச் ட்ரீட் என்றதும் தெறித்து ஓடிவிட்டார்களோ ?

நான் தான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே...மீட்டிங்கு வந்துவிட்டு ரத்னா கபேக்கு வராதவர்கள் இந்த டட்ச் ட்ரீட் முறைக்குள் வரமாட்டார்கள் என்று ( ரத்னா கபேக்கு வராதவங்கிட்ட எப்படி காசு கேக்குறது ???) - இருந்தாலும் அட்லீஸ் டி.பி.ஆர் ஜோசப் அய்யா இருவரும் வந்திருந்தால் இன்னும் சிறப்படைந்திருக்குமே இந்த மீட்டிங் ?

இனி டயலாக் மோட்...!!!

டோண்டு: முதல்ல, சுஜாதா இறந்ததுக்கு ஒரு இரங்கல் கூட்டம் போட்டுக்கலாம்...

எல்லே ராம்: ரெண்டு மூனுபேரு வந்தா அது கூட்டமா டோண்டு சார் ?

அதியமான்: நான் இன்னும் ரெண்டு பேரை எதிர்பார்க்கிறேன் சார்...வெயிட் ப்ளீஸ்...ஹே அங்கே பாருங்க...யாரோ வருகிற மாதிரி இருக்கு...

உண்மைத்தமிழன் எண்ட்ரி...!!! சார், பக்கத்துல தான் வீடு...நான் டீ சாப்பிட வந்தேன்...

டோண்டு: நோ...இந்த பக்கம் க்ராஸ் பண்ணா உட்கார்ந்து தான் ஆகனும்...நீங்க போக விடமாட்டேன்...பக்கத்துலேயே சிக்கன் பிரியாணி ஸ்டால் இருக்கு...அதுல சிக்கன் பிரியாணி வாங்கித்தரேன்...இருங்க...

உண்மைத்தமிழன்: சார்...நான் வெஜிட்டேரியன்...

டோண்டு: ஆமாம், நீங்க தான் சொல்றீங்களே..."நான் வெஜிட்டேரியன்னு.." அப்ப நீங்க என்.வி தானே...எப்படி மொக்கை போட்டேன் பார்த்தீங்களா ?

உண்மைத்தமிழன் : தாங்கலை...ஆளை விடுங்க...

(அதியமான் வாக்கிங் பாத்தில் இருந்து தும்பைப்பூ நிற வேட்டியணிந்த ஒருவரை பிடித்து இழுத்து வருகிறார்)

டோண்டு: வாங்க சிவஞானம்ஜி. எப்படியோ மீட்டிங் வந்துட்டீங்க...தாங்ஸ்...உங்களுக்கு டட்ச் ட்ரீட்ல 5% டிஸ்கவுண்ட் தரேன் ஓக்கே ?

சிவஞானம்ஜி: யோவ் நான் வாங்கிங் வந்தேன்யா...

அதியமான்: அதெல்லாம் ஒத்துக்கமுடியாது...வலைப்பதிவு வெச்சிருக்கீங்க இல்லையா ? அப்போ நடேசன் பார்க் ஏன் வந்தீங்க ? நீங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டுத்தான் ஆகனும்...

சிவஞானம்ஜி: சரி விடுங்கப்பா...எத்தனைபேர் மீட்டிங்ல இருக்கீங்க ?

டோண்டு : உங்களோட சேர்த்து ஆறு பேர்...

சிவஞானம்ஜி: யோவ் எனக்கெண்ன கண்ணு பொடனியிலயா இருக்கு ? அஞ்சு பேரு தானே இருக்கீங்க ?

டோண்டு: ஹி ஹி இட்லிவடையோட சேர்த்து ஆறு பேர். அவர் எக்ஸல் ஷீட் ஹிட்டன் செல் மாதிரி. இருப்பார். ஆனா இருக்கமாட்டார். வருவார். ஆனா வரமாட்டார். இப்ப புரிஞ்சுதா ?

உண்மைத்தமிழன் : ஒரு மண்ணும் விளங்கல...

டோண்டு: நான் ஒன்னும் ப்ரெஞ்ச்லயோ, ஜெர்மன்லயோ சொல்லலியே...சரி இனிமே மீட்டிங்க ஆரம்பிச்சுடலாமா ?

அதியமான்: எஸ் ஸார்.

டோண்டு: முதலிலேயே சொன்னமாதிரி எல்லாரும் சுஜாதா இறப்புக்கான இரங்கலா, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம். எல்லாரும் எழுந்திரிங்க...நான் உட்கார்ந்தே செலுத்தரேன்...

எல்லோரும் மவுனமாகிறார்கள்...

டோண்டு: இப்படித்தான் சுஜாதா வீட்டுக்கே போய் நாங்க மவுன அஞ்சலி செலுத்தினோம் தெரியுமா, சமீபத்தில் 1971ல் சுஜாதாவை ட்ரெயினில் சந்தித்தபோது...

எல்லேராம்: ஷட்டப் டோண்டு. ஒரு நிமிட மவுன அஞ்சலின்னு சொல்லிட்டு பத்தாவது செக்கண்ட்லேயே பேசுறீங்களே...

டோண்டு: சாரி மிஸ்டர் எல்லே ராம். இப்படித்தான் ஐ.டி.பி.எல்ல ஒர்க் பண்ணும்போது...

உண்மைத்தமிழன் (டெண்ஷனாக): யோவ், இப்ப மவுன அஞ்சலி நடக்குதா இல்லையா ?

அதியமான்: மவுன அஞ்சலி ப்ளான் ட்ராப் ( எல்லோரும் உக்காருங்க), டோண்டு சாரை வெச்சுக்கிட்டு என்னத்த மவுன அஞ்சலி செய்யுறது ?

டோண்டு: சுஜாதா சார் வீட்டுக்கே போய் நானும் அதியமானும் அவர் பாடிக்கு லெப்ட் சைட்ல நிக்குறோம். தேசிகன் ரைட் சைட்ல கலங்கிப்போய் நிக்குறார். அப்போ ஒரு ஹாட் டிஸ்கஷன் செய்தோம் நானும் அதியமானும்...

சிவஞானம்ஜி: என்ன டிஸ்கஷன் சார் அது ?

டோண்டு: போலி டோண்டு இப்ப எல்லாம் பின்னூட்டம் போடுறதில்லையே, ஒரு வேளை நம்ம வலைப்பதிவு முகவரி அவனுக்கு மறந்துட்டதான்னு ரெண்டு பேரும் டிஸ்கஷன் செய்தோம்...

எல்லே ராம்: யோவ் அங்க போயும் விடலையா அதை நீங்க....

உண்மைத்தமிழன்: அங்க கமலஹாசன் கிட்ட என்ன சார் பேசுனீங்க ?

டோண்டு: நான் அய்யங்கார், அப்படி சொல்வதில் பெருமை கொள்கிறேன் அப்படீன்னேன்...அவர் கவனிக்கவே இல்ல...

சிவஞானம்ஜி: அப்புறம் ?

டோண்டு: மருதநாயகம் எப்ப சார் வருது ? அது ட்ராப் ஆணா மந்தைவெளி நாயகம்னாவது ஒரு படம் எடுங்க அப்படீன்னேன்...

உண்மைத்தமிழன்: அட...அதுக்கு அவர் என்ன சார் சொன்னார் ?

டோண்டு: அசமஞ்சமா நின்னார். பாவனான்னு ஒரு பாப்பா வந்திருக்கு ( துபாய் கும்மி கோஷ்டிகள் கவனிக்க), ப்ரெஞ்சு கிஸ்ஸுக்கு ஏற்ற உதடு அதனோடதுன்னேன்...ரொம்ப இண்ட்ரஸ்ட்டா கேட்டார்...

உண்மைத்தமிழன்: அப்புறம் ????

டோண்டு: நானும் ஒரு ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், ப்ரெஞ்சு கிஸ் பற்றிய சந்தேகங்களை என்னிடமே கேட்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டேன்...

சமீபத்தில் 1961ல் ஏவீஎம் திரைப்படத்தில் அம்மாவும் நீயே என்று அவர் பாடியதை ட்ரிப்ளிக்கேன் ஜலசா தியேட்டரில் மண்ணை குவித்து பார்த்ததை சொல்லி பழைய சம்பவங்களை நினைவு படுத்தினேன்...என்னன்னே தெரியல...நான் கிளம்புறேன் பாய் அப்படீன்னு சொல்லிட்டு போய்ட்டார்...

உண்மைத்தமிழன்: நானும் அங்கேயே தானே இருந்தேன்...அவரை பார்த்தா பாய் சொல்லிட்டு போன மாதிரி தெரியலியே...புடுங்கிக்கிட்டு ஓடினமாதிரி தானே தெரிஞ்சது ?

டோண்டு: அடப்போங்க சார்...அங்கே வந்திருந்த பிரபல எழுத்தாளர்கள் சாரு, எஸ்.ரா, ஜெயமோகன் ஆகியவர்களிடம் போய் நானே என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன்...

டோண்டுன்னவுடனே சும்மா அதிர்ந்தாங்க தெரியுமா...என்னுடைய ஜடிபிஎல் நினைவுகள், புதிர்கள் எல்லாத்தையும் படிச்சுக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...

சிவஞானம்ஜி: டோண்டுன்னவுடனே அதிர்ந்தாங்களா ??

டோண்டு: அட ஆமாம் சார்...நம்புங்க...

அதியமான்: அதில ஒரு ரகசியம் இருக்கு சார்...ஏன் டோண்டு சார் கை கொடுத்தவுடனே எழுத்தாளர்கள் தெரிச்சு ஓடினாங்கன்னு எனக்கு தான் தெரியும்...

எல்லே ராம்: அதியமான்...ப்ளீஸ்...கொஞ்சம் விளங்குற மாதிரி சொல்லுங்களேன்...

அதியமான் : நான் டோண்டு சார் பின்னாடி நின்னுக்குவேன்...

ஐ யம் டோண்டு, ப்லாக்கர் அப்படீன்னு டோண்டு சார் அறிமுகப்படுத்திக்கிட்டிருக்கும்போது, டோண்டு அப்படீங்க வார்த்தையை சார் சொல்லுறதுக்கு முன்னாடி, நான் பின்னால இருந்து "போலி" அப்படீம்பேன்...

சோ...சார் அறிமுகப்படுத்திக்கறதே, ஐ.யம்.போலி.டோண்டு அப்படீன்னு ஒலிக்கும்...அதான் எழுத்தாளர்களின் அதிர்ச்சி ரகசியம்...

உண்மைத்தமிழன்: அடப்பாவிங்களா ?

எல்லே ராம்: குப்பையான அறிமுகம்...என்னத்த சொல்ல...இந்த கொடுமையை எல்லாம் கேட்க நான் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியதா இருக்கு...

<<<< அதியமானின் தொலைபேசி அழைக்கிறது...>>>

ஹல்லோ, நான் உண்மைத்தமிழன் பேசுறேன், ஐ யம் சாரி, என்னால வரமுடியல...

அலறுகிறார் அதியமான்...(சத்தமாக) அப்போ இவ்ளோ நேரம் உண்மைத்தமிழன் என்கிற பெயரில் பேசிக்கிட்டிருக்கிறது யாரு ???

உண்மைத்தமிழன்: ஆக்சுவலி நான் அல்க்காட்டெல்லுல வொர்க் பண்றேன்...பாலா நான் இல்லை...

சிவஞானம்ஜி: ஏய் என்ன நடக்குது இங்க ?

டோண்டு: எல்லாரும் ஒரு நிமிடம் நான் சொல்லுறதை கேளுங்க...இந்த மீட்டிங்......இந்த அளவில்.........நிறைவு பெற்றது.......வாங்க எல்லோரும் ரத்னா கபேக்கு போலாம்...

இந்த முறை வழமையான முறை இல்லாமல், புதுமையாக வெங்காய போண்டாவுக்கு பதில் காலி பிளவர் போண்டா சாப்பிடலாம்...(இதுல என்ன புதுமை - எல்லே ராம் கமெண்ட்)..அதே டட்ச் ட்ரீட்....

மகர நெடுங்குழைகாதன் அருளால் போண்டா அருமையாக இருக்கும்...வாங்க போலாம்...என்று திரும்பி பார்க்கிறார்...

அதியமானை தவிர யாரையும் காணவில்லை...!!!!!!!!!!

Comments

என்னுடய புதிய அலுவலகத்தில் ப்லாகர் கூட ப்ளாக்கவுட்..அதனால் இனி சனி,sunday மட்டும்தான் பதிவு.. :(((((((
..நானே நானா
யாரோ தானா?
தம்பி said…
தல பேக் டு பார்ம். :)
///நானே நானா
யாரோ தானா?
///

சிவஞானம்ஜீ சார்...சண்டே ஆனா ப்ளாக் எல்லாம் படிக்கிறீங்களா ?

ஒரு முறை நானும் ஒரு ப்ளாகரும் ச்சேட்டினோம்...

அப்போ அவர் சிவஞானம்ஜியை எங்கே சந்திக்கலாம் என்றார்..

நான் சொன்னேன்..சண்டே ஆனா பெசண்ட் நகர் பீச்சுல தான் இருப்பார் என்று :)))
தம்பி, வாங்க...

பாவனாவப்பத்தி எழுதுனா தூண்டில்ல சிக்குன புழூ மாதிரி தம்பியோட எண்ட்ரி இருக்கும்னு ஒரு துபாய் பதிவர் சொன்னது சரியாத்தான் இருக்கு...:)))
Anonymous said…
ஞாயிறு மாலைதானே சந்திப்பு?
காலையிலேயே பதிவு போட்டுட்டிங்க!
எப்பிடி எப்பிடி?
Anonymous said…
பெண்களூர்ல இருந்து எப்ப வந்தீங்க?
Anonymous said…
ஸாரி மே ஐ ஸ்டார்ட் தெ ம்யூஜிக்?
நல்ல கிண்டல், ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
// கரிய நிற ஸ்கோடா ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து ஆஜானுபாகுவான ஒருவர் இறங்கிவருவதும் தெரிந்தது...முகம் சரியாக தெரியவில்லை... //

மூலிகை வைத்தியர் மூசிலாபனியன்மணி ::-

சந்தேகம் என்ற வியாதி வந்தால் திருடிய கோழி சூப் குடித்தால் கூட குணமாகாது.
////மூலிகை வைத்தியர் மூசிலாபனியன்மணி ::-

சந்தேகம் என்ற வியாதி வந்தால் திருடிய கோழி சூப் குடித்தால் கூட குணமாகாது.///

காமெடியா கூட எதையும் எழுதக்கூடாதுன்னா நான் என்ன தான் பண்ணுறதுங்னா ? லைட்டா எடுத்துக்கோங்க ப்ளீஸ்..
நன்றி திரு.டோண்டு அவர்களே.
//காமெடியா கூட எதையும் எழுதக்கூடாதுன்னா நான் என்ன தான் பண்ணுறதுங்னா ? லைட்டா எடுத்துக்கோங்க ப்ளீஸ்.. //

போன கொம(ண்)ட்டுல ஸ்மைலி மிஸ்ஸிங்... சோ, நோ உணர்ச்சிவசப்பட்டிங்..
ராசா..

பிட் கொடுத்தா முழு படத்தையுமே ஓட்டிருவீங்க போலிருக்கே..

நல்லவேளைடா சாமி..

உன் ஆபீஸ்ல பிளாக்கரை தடை செஞ்சிருக்கிறது நல்ல விஷயந்தான்..

டெய்லி இது மாதிரி ஒரு பதிவ போட்டன்னு வைச்சுக்க..

இதுக்குன்னே தனியா வாரத்துக்கு ஒரு வலைப்பதிவர் மீட்டிங் போட வேண்டி வரும்..

டோண்டு ஸாருக்கு ஏதோ வேற வேலையிருக்கு போலிருக்கு. அதான் லூஸ்ல விட்டிருக்காரு.. தப்பிச்ச..
நேரம் கிடைக்கிறபோது பதிவுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்களின் இப்பதிவை இரசித்தேன். வாழ்க!

அன்புடன், நா. கணேசன்
http://nganesan.blogspot.com
டோண்டு சார் கூட்டிய மாநாட்டில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டதும், அதுகுறித்த உங்களது கவரேஜும் அருமை திரு. ரவி அவர்களே!
///போன கொம(ண்)ட்டுல ஸ்மைலி மிஸ்ஸிங்... சோ, நோ உணர்ச்சிவசப்பட்டிங்..///

ஓக்கேய்ஸ்....நன்றீய்ஸ்...!!!! அடுத்த மேட்டருக்கு வருவோம்...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், பெங்களூரில் உலவிக்கொண்டிருக்கும் திரு.எல்லே ராம் அவர்கள் எனக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் வரை சென்று கொமண்டு போட்டுள்ளார். (ஐ.பி ட்ராக்கர் அப்படித்தான் சொல்லுது...)

ப்ளீஸ் இனிமே இந்த ரெண்டு பேரையும் சம்பந்தபடுத்துறத விட்ருங்கோவ்வ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

(ஒரு கிசு கிசு பதிவா போட்டு மொக்கை போடவேண்டியது, ஹும், நேரமின்மையால் இப்படி தனி பின்னூட்டமா போகுது...)
///நேரம் கிடைக்கிறபோது பதிவுகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்களின் இப்பதிவை இரசித்தேன். வாழ்க!///

அண்ணா நாஸாவுலயாண்ணா வேலபாக்குறீங்க ??

வாழ்க வளமுடன்...
///டோண்டு சார் கூட்டிய மாநாட்டில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டதும், அதுகுறித்த உங்களது கவரேஜும் அருமை திரு. ரவி அவர்களே!///

அதை திரு.டோண்டுல்கர் ரசிக்கும்படி தருவதுதான் கடினம் இல்லையா !!!!
jayakumar said…
வேலை வெட்டி எதுவுமே இல்லாத குருப்பா இருக்குமோ? எப்ப பார்த்தாலும் கிண்டல் கேலி கமெண்ட்ஸ் எழுதுவது. பதிவு போடுவது, தண்ணி அடிப்பது இன்னம் நிறைய இருக்கு. என்னால மட்டும் எதுவுமே செய்யமுடியலையே.
வயிறு குலுங்கி குலுங்கி (இந்த லு தானே) சிரித்தேன்.
இதே போல் நமது கோவை சந்திப்பை பற்றி நகைசுவையுடன் எழுதினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

வால்பையன்
எப்படிங்க இப்படி எழுதறீங்க.. சிரிச்சு சிரிச்சு... செம காமெடிப்பா..

Popular Posts