இப்படிக்கு ரோஸ் : விஜய் டிவியில் லிவிங் ஸ்மைல் வித்யா

வரும் வியாழன் இரவு பத்துமணிக்கு "இப்படிக்கு ரோஸ்" என்ற வித்யாசமான - ரோஸ் என்னும் திருநங்கையால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் நமது தோழி லிவிங் ஸ்மைல் வித்யா கலந்துகொள்கிறார்....

"அலி" என்ற வார்த்தையை கேட்டவுடனே தீயை மிதித்தமாதிரி ஓடிக்கொண்டிருந்த என்னுடைய நன்பர்களுக்கு - லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவை கொடுத்து படிக்கச்சொன்னவுடன், "திருநங்கை" என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள்...

திருநங்கைகளை நோக்கி கனிவான பார்வையையும் செலுத்த தொடங்குகிறார்கள்...

வலைப்பதிவினர் மத்தியிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய லிவிங் ஸ்மைல் வித்யா, இப்போது சின்னத்திரையிலும் தோன்றப்போகிறார்...

அவர்களுக்கு உண்மையான விடியல் என்பது - சமுதாயத்தின் பார்வை அவர்கள் மீது கனிவுடன் விழும்போது தான்...

அந்த பணியில் விஜய் டிவி முன்னோடியாக, "ரோஸ்" என்ற திருநங்கையை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஒரு மைல் கல் என்றுதான் சொல்லவேண்டும்...

திருநங்கைகளுக்கு, ஓட்டுரிமை, ரேசன் கார்டு எல்லாம் "அப்பாலிக்கா" பார்த்துக்கலாம்...

உஸ்ஸு என்று கூப்பிடாமல் சகோதரி என்று அழைக்கவைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி...

நம் சகோதரி, சக வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சியை வியாழன் இரவு பத்துமணிக்கு பாருங்கள் - விஜய் டிவியில்...!!!

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களே....

Comments

தகவலுக்கு நன்றி ரவி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யூடியூபில் எடுத்து போட்டால் தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Anonymous said…
முத்துக்குமரன், இதுவரை வந்த பகுதிகளும் தொடர்ந்து யூடியூபில் கிடைக்கிறது.
ரூட் www.techsatish.com

Popular Posts