Wednesday, November 19, 2008
ஹொக்கேனக்கல் : கலைஞர் அரசு தூங்கவேண்டாம்...!!!!
ஹொக்கேனக்கல் அருவியில் நான் குளித்தது ஒரே முறை...குற்றாலம் கூட ஒரிரு முறை சென்றிருக்கிறேன்...
அருவி என்றால் ரொம்ப உயரத்திலிருந்து விழுவது தான் என்பது என்னுடைய மூளையில் பதிவான ஒன்று...
ஹொக்கேனக்கல் கொஞ்சம் சிறப்பானது...
சட்டென தோளுக்கு சற்று மேலே தட தடவென விழும் நீரில் உடலின் உள்ள அத்துனை வலிகளும் பறந்துபோகக்கூடும்...
மீன் வாங்கி கொடுத்து சமைக்க சொல்லிவிட்டு போயிருதீர்கள் என்றால் குளியல் முடிந்தவுடன் அற்புதமாக ஒரு வெட்டு வெட்டலாம்...
விஷயத்துக்கு வருகிறேன்...
கருநாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்துவிட்டு அளித்த பேட்டி மிக முக்கியமானது...
முதலில் குறைவான அளவு நீரே எடுக்கப்படும் என்று சொல்லியிருந்த தமிழக அரசு, இப்போது 2.5 டி.எம்.சி அளவு நீரை எடுக்கப்போவதாக சொல்கிறது...
இதை எதிர்த்து இரண்டு விஷயங்களை செய்யப்போவதாக அவர் கூறுகிறார்..
1. உச்சநீதிமன்றத்தில் ஹொக்கேனக்கல் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்த வழக்கு..
2. ஜப்பானுக்கு கருநாடக அரசு சார்பான குழு ஒன்றினை அனுப்பி, அங்கே இந்த திட்டத்துக்கு நிதியளிக்கும் துறையினரை சந்தித்து, தங்கள் எதிர்ப்பை சொல்லி, தமிழக அரசுக்கு வழங்கவிருக்கும் நிதியை தடுக்கும் திட்டம்...
கருநாடக அரசு இந்த விடயத்தில் உச்சநீதிமன்றத்தினை அணுகுவது, கீழ்க்கண்ட காரணங்களுக்காக இருக்கலாம்...
முடிந்தவரை இந்த திட்டத்தினை கிடப்பில் போடவைப்பது...அதன் மூலம் ஜப்பான் நிதித்துறையையும் நிதியை கொடுக்காமல் தடுப்பது...
டெல்லி சென்று மத்திய நீர்பாசனத்துறை அதிகாரிகளையும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாளர்களாக ஆக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை கருநாடக அரசு ஏற்கனவே ஆரம்பித்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டதாக கருதுகிறேன்...
இப்போது தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பதை காணும் முன், சில விடயங்களை சொல்லவேண்டும்...
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையை மரமாக்கி, அதில் வரும் பழத்தையும் தின்று கொட்டை போடும் கலைஞர் அவர்களின் அரசியல் அனுபவத்துக்கு முன் ஹொக்கேனக்கல் திட்டம் ஒரு ஜுஜுபி என்று தான் நான் நினைக்கிறேன்...
கலைஞர் அவர்கள் சமீபகாலமாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் இந்த பிரச்சினையை மறந்துவிட்டாரா அல்லது வேறு மறைமுக அழுத்தங்களின் காரணமாக இந்த பிரச்சினையை கிடப்பில் போட்டுவிட்டாரா தெரியவில்லை...
இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை வரை கலைஞர் சிறப்பாகவே கையாளுகிறார் என்று எண்ணுகிறேன்...
மின்வெட்டு பிரச்சினையில் தமிழக அரசு தோல்வி அடைந்தது போல பிரச்சாரம் செய்யப்பட்டாலும், உண்மையில் முந்தைய ஜெயலலிதா அரசில் மின் துறை பொறியாளர்கள் நன்கு உண்டு உறங்கியது தான் இந்த மின்வெட்டுக்கு காரணம்...
இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும், ஆந்திராவிலும், ஏன் கருநாடகத்திலும் இருக்கிறது...
மெட்ரோபாலிட்டன் சிட்டி, இந்தியாவின் சிலிக்கான் முள் வேலி என்றெல்லாம் அழைக்கப்படும் பெங்களூரின் இதயப்பகுதியான எம்.ஜி ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய பகுதிகளில் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின் வெட்டு இருப்பது, இந்த பிரச்சினை ஒரு பொதுப்பிரச்சினை என்பதை தெளிவாக சொல்கிறது...
மாறிவரும் சமூகச்சூழலில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பூம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதனங்கள் அதிக அளவில் பொதுமக்களால் வாங்கப்பட்டது, அவற்றின் விலை குறைப்பு, பொதுமக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு, இண்ப்ரா ஸ்ட்ரக்சர் க்ரோத் காரணமாக புதிய மின் இணைப்புகள் என்று பல காரணிகளை அலசி ஆராய்ந்து, மின் தேவைகளை கணிக்காமல் போனது அரசியல்வாதிகள் அல்ல, பொறியியல் படித்து அரசு ஊழியர்களாக வேலை பார்த்து சம்பளம், கிம்பளம் வாங்கும் அதிகாரிகளே...
லெட்ஸ் கோ பேக் !!!
கலைஞர் இந்த பிரச்சினையை சற்று ஆற விட வேண்டும் என்று தான், கருநாடகத்தில் தேர்தல் முடிந்தபிறகு இந்த பிரச்சினையை பேசி தீர்ப்போம் என்றார்...
ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை கையில் எடுக்கவில்லை...அல்லது வசதியாக மறந்துவிட்டார்...அல்லது திரு.நாகநாதனின் ஹொக்கேனக்கல் சம்பந்தமான டைரிக்குறிப்புகள் தொலைந்துபோய்விட்டன...
மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரருக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதை சோ.ராமசாமியே ஒத்துக்கொள்வார்...அவருக்கென்ன சொல்லியா தரவேண்டும் ?
மற்றவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பது போல ஹொக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாத மைனாரிட்டி தி.மு.க அரசு உடனே பதவி விலகவேண்டும் என்று நான் முழங்கவில்லை...
ஸ்டாலின் போட்ட மேம்பாலங்களில் பயணம் செய்துகொண்டே நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கையுமாக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவை பற்றி கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் உண்மையான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது அவா...
விஜயகாந்த்...பெரிய இரு கட்சிகளில் பிசினஸ் செய்ய ஒரு கிளைச்செயலாளர் பதவி கூட வாங்கமுடியாத இளைஞர்களின் பெருங்கூட்டதை பின்னால் வைத்துள்ளார், சிவந்த கண்களுடன் ஏதாவது ஒரு பேட்டி கொடுத்து கலைஞர் அவர்களை சீண்டுகிறார்...இவரை கண்டுகொள்ளாமல் கலைஞர் அவர்கள் மற்ற விடயங்களை கையில் எடுத்து செயல்படவேண்டும்....
கலைஞர் அவர்கள் உடனடியாக செய்யவேண்டியது இதுதான்...
1. உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு சார்பில் அணுகி, இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பித்து, "நோ அப்ஜெக்சன், கேரி ஆன்" என்ற சர்ட்டிபிக்கேட்டை வாங்கவேண்டும்...
2. ஜப்பான் அரசு திட்டக்குழுவை தொடர்புகொண்டு, இந்த பிரச்சினையின் உண்மை நிலையை விளக்கவேண்டும்...
3. மத்திய அரசு நீர்ப்பாசன துறை அதிகாரிகளை உடனே தொடர்புகொண்டு அவர்களுக்கு பிரச்சினையை முழுமையாக விளக்கி, அவர்களை "என்ன விலை கொடுத்தாவது" தமிழக அரசின் பால் திருப்பவேண்டும்...
அவ்வளவு தான்...
இதை படிக்கும் நீங்கள் தமிழ்மணத்துக்காரர் எனில் பின்னூட்டம் போடவும் அல்லது ஒரு மகுட ஓட்டை குத்தவும்...
தமிழ்ஷ் என்றால் ஒரு ஓட்டை குத்தவும்...
தமிழ்வெளிக்காரர் என்றால் பின்னூட்டம் போடவும்...
கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))
:))
நன்றி !!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
22 comments:
//இந்த மின் வெட்டுப்பிரச்சினை, தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும், ஆந்திராவிலும், ஏன் கருநாடகத்திலும் இருக்கிறது...//
இவங்கலுகெல்லாம் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.
கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு இல்லை என்பது தான் என் கருத்து.
வேரென்ன சொல்ல!!
+ குத்து குத்திட்டேன்!
பின்னூட்டமும் போட்டுட்டேன்!
\\இலங்கை பிரச்சினையில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை வரை கலைஞர் சிறப்பாகவே கையாளுகிறார் என்று எண்ணுகிறேன்...//
இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி இருக்கக்கூடாது. சிரித்து சிரித்து வயறு புன்னாகிவிட்டது போங்கள்.
//மானேஜ்மெண்ட் / மேலாண்மை என்பது திருக்குவளைக்காரருக்கு தண்ணீர் பட்ட பாடு என்பதை சோ.ராமசாமியே ஒத்துக்கொள்வார்//
நெஜம்மாவாஆஆஆஆஆ சொல்றீங்க?
\\கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))//
கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.
Tamilan never allowed live tamilan in peace. All that was happened on this issue till date is political gimmicks and nothing else. As usual Karnataka will get this on their hand. Tamil People will look like a jokers as our tamil politicians are not capable.
கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரியான நேரத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.
// அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையை மரமாக்கி, அதில் வரும் பழத்தையும் தின்று கொட்டை போடும் //
பழம் தின்று கோட்டை போட்டு, தின்ற பழத்தை விட்டையாகவும் போட்டவர் ...
//\\கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு.நாகநாதன் என்றால் இதை ஒரு ப்ரிண்ட் எடுத்து கலைஞர் அவர்களிடம் காட்டவும்...:))))))))))))//
கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.//
இது பின்னோட்டம் வாங்க வேண்டுமென்றே எழுதப் பட்டதாக இருக்குமோ??? என்று சந்தேகிக்கிறேன்....
1. கர்நாடகாவில் தங்களது கூட்டணி கட்சிக்கு (காங்கிரஸ்) தேர்தலில் ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக
2. அப்போது போராட்டம் நடத்திய அனைவரையும் முட்டாள்களாக்கி விட்டு,
3. சட்ட ரீதியான தமிழனின் உரிமையை அடகு வைத்து விட்டு
4. தேவையே இல்லாமல் போராட்டத்திற்கு அடுத்த நாளே பேச்சு வார்த்தை நடத்துவேன் என கூட்டணி பிச்சை ஏந்திய
உயர்திரு.கருணாநிதியை நம்பிக் கொண்டே நாம் சாக வேண்டியது தானா ? அட என் தமிழ் சகோதரர்களே ?!
//இவங்கலுகெல்லாம் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது.///
கரண்டு கம்பத்துல இருந்து தான் லொள்பையன்...!!!
:)))))))
//கர்நாடகாகாரனுக்கு இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு இல்லை என்பது தான் என் கருத்து.
வேரென்ன சொல்ல!!///
ஆமா, கன்னடருக்கு தனி மஞ்சக்கொடி கூட இருக்கு..
கலைஞர் சித்திரை ஒன்னை தமிழ் புத்தாண்டாக்கினமாதிரி தமிழருக்கு தனிக்கொடி உருவாக்கித்தந்தால் வரலாறு இதை பேசும்...
//+ குத்து குத்திட்டேன்!
பின்னூட்டமும் போட்டுட்டேன்!//
பின்னூட்டம் எங்கே போட்டீங்க ? இதுக்கு பேரு அட்டெண்டென்ஸ்..
///இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி இருக்கக்கூடாது. சிரித்து சிரித்து வயறு புன்னாகிவிட்டது போங்கள்.///
உங்களுடை சிரிப்புக்கு என்னுடைய பதிவு காரணம் எனில் நன்றி !!!
///நெஜம்மாவாஆஆஆஆஆ சொல்றீங்க?///
ஆமாம் கபீஷ் !!!
///கலைஞரின் நேர்முக உதவியாளரின் பெயர் திரு. சண்முகநாதன். திரு. நாகநாதன் அவர்கள் தமிழக திட்டக்குழு துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பவர்.///
எனக்கு தெரிந்து திரு.நாகநாதன் தான் கலைஞர் பின்னாலேயே இருக்கிறார்...அதனால் அப்படி நினைத்துவிட்டேன்...
இப்ப என்ன, இந்த பின்னூட்டத்தின் வழி கோபாலபுரம் வீட்டில் இருக்கும் சண்முகநாதன் அய்யாவிடமும் ரெக்வெஸ்ட் பண்ணா போச்சு..
///கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரியான நேரத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள். ///
நன்றி நவநீதன்...நீங்களாவது சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே !!!!
வீரன் அவர்களே...
உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை...
கலைஞர் அவர்கள் நினைத்தால் இப்போது கூட கிளம்பி வந்து, ஜெயநகரில் இருக்கும் அவரது மகள் திருமதி.செல்வி வீட்டில் தங்கி எடியூரப்பாவிடம் நேரடியாக பேச்சு நடத்த முடியும், தமிழரின் உரிமையையும் பெற்றுக்கொடுக்க முடியும்...
என்ன, முரசொலி செல்வத்துக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை...
அது விரைவில் தீரும், ஹொக்கேனக்கல் பிரச்சினையும் தீரும்...
தயவு செய்து எனக்கு கோவிக்கண்ண தோஷம் வந்துவிட்டதாக யாரும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டாம்...
என்னுடைய பதிவை மீள் வாசிப்பு செய்யும்போது எனக்கே அது தோன்றித்தொலைகிறது...
//ஆனால் பல்வேறு சூழல்களினால் இன்னும் இந்த விடயத்தை கையில் எடுக்கவில்லை...அல்லது வசதியாக மறந்துவிட்டார்...அல்லது திரு.நாகநாதனின் ஹொக்கேனக்கல் சம்பந்தமான டைரிக்குறிப்புகள் தொலைந்துபோய்விட்டன...//
கலைஞர் அரசு தூங்குதா, பதுங்குதான்னே, தெரியலீங்க! அண்மையில 'இந்து' நாளிதழ்-ல ஓகேனக்கல் (புகைப்பாறை) கூட்டுக் குடிநீர்த்திட்டத்துக்கு அஞ்சாண்டுக்கு வேறவேற பணிகள் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் "குத்தகை ஒப்பந்த அறிவிப்பு" ஒண்ணு வெளியிட்டிருந்ததுங்க, அதே நேரத்தில் இது நடக்குதுன்னோ, நடக்கலைன்னோ அன்னைக்கு செய்தில கூட வரலை!
எப்பிடியும் யப்பான் காரான் கழட்டப் போறான், அப்புறம் எங்க திட்டம்?
அவரு ஒரு நல்ல குடும்பத் தலைவர். அதையாவது ஒழுங்காப் பாக்க விடுங்கப்பா!
Post a Comment