Saturday, February 17, 2007

URGENT....கல்வெட்டு படிக்கலாம் வாங்க....+ ஊர்ப்பெருமை

உங்க ஊரு கோயிலுக்கு போறீங்க...சுவத்துல ஏதோ கிறுக்கியிருக்கு...அது கல்வெட்டு, பழந்தமிழ் எழுத்துன்னு தெரியும்...ஆனால் அது உங்களுக்கு புரியாது....என்னான்னு பார்க்கலாம்னு நினைச்சாலும் அதை படிக்க தெரியாது...

அட இப்படி வெச்சுக்கோங்க...ஒரு பழைய ஓலைச்சுவடியோ இல்லை கல்வெட்டோ உங்க கைல கிடைக்குது...அதுல என்ன மேட்டர் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும் இல்லையா உங்களுக்கு...அப்படி ஆர்வம் இருந்தா மட்டும் போதும்...இந்த பதிவை அப்படியே யூஸ் பண்ணி படிக்கலாம் நீங்க...நாங்கல்லாம் அப்படித்தான் எங்கூரு கோவில்ல நேரத்தை செலவிடுவோம்...(சைட் அடிக்கிற விஷயத்தை இதுல இழுக்காதீங்க..)

நாங்க உபயோகப்படுத்தின விவரம் அப்படியே ஒரு இணைய தளத்தில் இருந்தது..அப்படியே கடிச்சு இங்கே பதிவிடுறேன்...பழந்தமிழ் எழுத்துக்களை பார்த்தா இனிமே கொலைவெறியோட படிங்க...விக்கி பசங்க, எதாவது தப்பிருந்தா சொல்லுங்க...

எண்கள் / உயிர் / மெய் எழுத்துக்கள் நூற்றாண்டுகளில் எப்படி மருவி வந்ததுன்னு இங்கே படமா கொடுத்திருக்கேன், பாருங்க...







எங்க ஊர் திருக்கோவிலூர்ல உலகலந்த பெருமாள் கோவில்ல கடையெழு வள்ளல்களில் ஒருத்தர் 'காரி'யை பற்றி பல விஷயங்கள் கல்வெட்டுல இருக்கும்...( யாருக்காவது எல்லா ஏழு வள்ளல்கள் பெயரையும் சொல்லத்தெரியுமா ? சேலஞ்ச் !!! ) படிக்க அவ்வளவு அருமையா இருக்கும்...சும்மாவா, கபிலர் உறைந்த இடமாச்சே...அதை விட குட்டி குட்டி கோவில்களில் இன்னும் அழகான கல்வெட்டுகள் இருக்கும்....பல கல்வெட்டுகள் முன்னூறு நானூறு வருஷத்துக்கு முந்தையதா இருக்கும், கொஞ்சம் எரிச்சல் ஊட்டும், ஆனா மிகச்சிலது + மிக பழையது ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்காரன் கண்ணில் படாமல் அழகாக உட்கார்ந்திருக்கும்...படிக்க அவ்வளவு சுவாரசியமா இருக்கும்..

ஏதாவது புதையல் ரகசியம் ஓலைச்சுவடியில கெடச்சுதுன்னா, எனக்கு மட்டும் சொல்லுங்க...பதிவு பத்தி இப்போதைக்கு கருத்து மட்டும் சொல்லுங்க.

52 comments:

Isaac raja said...

இந்த மேட்டர் ஏற்கனவே பாத்துருக்கேன்.
ஆனா இத வச்சு ஒரு பதிவு போடலாங்கரதை இப்பத் தன் தெரிஞ்சுகிட்டேன்!

சென்ஷி said...

நல்ல பதிவு

\\...( யாருக்காவது எல்லா ஏழு வள்ளல்கள் பெயரையும் சொல்லத்தெரியுமா ? சேலஞ்ச் !!!\\

யாரப்பாத்து.....

1. காரி
2. ஓரி
3. பேகன்
4. அதியமான்
5. பாரி
6. எழினி
7. நள்ளி

கரீக்டா க்கீதான்னு பாத்து சொல்லு...

சென்ஷி

Anonymous said...

வாங்க இசாக் ராஜா அவர்களே. ஹி ஹி கண்டுபுடிச்சிட்டீங்களா ? இப்படித்தான் நாங்கள்ளாம் !!!

Anonymous said...

சென்ஷி,

இப்பவே ஆன்ஸர் சரியா தப்பான்னு சொல்ல முடியாது. நீங்க ஏதோ நெட்டுல இருந்து பாத்து அடிச்ச மாரி கீது ? மெய்யா ?

செந்தழல்

thiru said...

பயனுள்ள தகவல். இப்போ கல்வெட்டு ஆராய்ச்சியா ரவி?

Anonymous said...

வாங்க திரு...அது பத்தாவதுலேர்ந்து ஆட்டம்...சில கல்வெட்டுகளை அப்படியே தள்ளிக்கிடு வீட்டுக்கு கொண்டுவந்திருக்கேன் ஹி ஹி

Anonymous said...

ethukku veettuku kalvettu ?

சென்ஷி said...

அடப்பாவிங்களா,

ஒண்ணாப்புலேந்து கஷ்டப்பட்டு தமிழ படிச்சது இதுக்குத்தானா...
என் தாய்மொழியே.....இப்படி நிறைய வசனம்லாம் வருது, இப்ப வேலை இருக்கு. அப்புறம் கவனிச்சுக்கறேன்.

:((((

சென்ஷி

Anonymous said...

வேற எதுக்கு ? படிக்கத்தான் !!!

Anonymous said...

தலைவா, கொஞ்சம் மும்முரமா ஈடுபட்டீங்கனா எப்படியும் ஒரு புதையல் பற்றி தகவல் கிடைக்கும். எனக்கும் கொஞ்சம் சொல்லியனுப்புங்க. MacKenna's Gold மாதிரி கிளம்பிடலாம்.
ஜகன்

Anonymous said...

வாங்க தங்கவேல். மொத மொறை நம்ம வீட்டுப்பக்கம் வந்திருக்கீங்க...:)) வரவனையை தயிர்சாதத்தோடு கைது செய்ததுக்கு ஒரு ஓ..

Anonymous said...

ஜகன், இப்போதைக்கு எனக்கு தலைல கொஞ்சம் முடி இருக்கு...

அப்புறம் உங்களுக்கு எப்படி வசதி ?

நம்ம ஏரியாவுக்கு வாங்க ஒரு முறை கூகுள் செய்யலாம்...நிறைய விஷயம் இருக்கு...

Gurusamy Thangavel said...

கலக்குற ரவி (கலக்குற சந்துரு பாணியில் படியுங்கள்)

Anonymous said...

ravi, what is " கூகுள் செய்யலாம்..."

Gurusamy Thangavel said...

ரொம்ப டேங்ஸ் ரவி

Anonymous said...

தேடுறதை தான் அப்படி கூகுளறதுன்னு இப்போல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோம் எங்க ஏறியாவில்...

உதாரணமா, கோழியத்தேடு...கோழிய கூகுள் செய்...

Anonymous said...

is there any sambatham between "Thangamma" and "Thangavel"

Soorya

Anonymous said...

சூரி, அது வேற ஒரு மூத்த பதிவரோட ப்ராக்ஸி..இவர் தங்கவேல்...

நான் வரலைப்பா வெளாட்டுக்கு...

மாசிலா said...

//...(சைட் அடிக்கிற விஷயத்தை இதுல இழுக்காதீங்க..)//
ஓஹோ!
இதுக்கெல்லாம் கூட கோயிலுக்கு போகிர பழக்கம் உண்டா? பண்பாட்டு காவலர் ராம்தாஸ் கிட்ட சொல்லிபூடுவேன்!ஆமாம்!!!
:-)

Anonymous said...

//" கூகுள் செய்யலாம்..."//

கூகுளை எப்படி செய்வது?

-அனாதை ஆனந்தன்
அமுக
சிங்கை

Anonymous said...

shiyam
post Jan 14 2005, 06:59 PM
Post #9





Group: Members
Posts: 1,320
Joined: 1-July 04
From: france
Member No.: 454




கடையெழ வள்ளல்கள் பாரி. எழினி.மலையன்.ஆய் ஆண்டிரன்.நள்ளி.பேகன்.ஒரி என்பதே சரி.காரிஎன்பது பிழை


--------------------
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா

Anonymous said...

//பண்பாட்டு காவலர் ராம்தாஸ் கிட்ட சொல்லிபூடுவேன்!ஆமாம்!!!
:-)//

சரியா போச்சு போ...பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு போனதே கெடையாதா...அங்க வர்ரவாள பாக்கறச்சே நம்ம ஒடம்புல என்னன்னா நடக்கும்னு நோக்கு தெரியாதாடா அம்பி

மினி ஸ்கர்ட் என்ன? லோ கட் என்ன? லோ ஹிப் என்ன? இவா இப்படி வர்ரச்சே பகவான் எப்பிடி நம்ம மனசில வருவார்டா அம்பி?

நானெல்லாம் வெள்ளிக்கெழமை ஆச்சுனா குடுமியை இறுக்கி கட்டிண்டு அப்படியே போய் மண்டபத்து தூண்ல சாஞ்சு ஒக்காந்தாக்கா என்ன திவ்ய தரிசனம்...

அப்படி தான் எங்கண்ணா ரவியும் திவ்யாவ புடிச்சாருடா அம்பி

Anonymous said...

V Full Edit
V Quick Edit
shiyam
post Jan 15 2005, 01:50 PM
Post #16





Group: Members
Posts: 1,320
Joined: 1-July 04
From: france
Member No.: 454




என்ன மண்ணாங்கட்டி வள்ளல்கள். முல்லைக்கு தேர் கொடுத்த மன்னனே
முதலில் மரம்வெட்டி தேர்செய்திருக்கக்கூடாது


--------------------
மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா

Anonymous said...

thamizh.nila
post Jan 20 2005, 05:09 AM
Post #25





Group: Members
Posts: 613
Joined: 27-December 04
Member No.: 924




நான் இப்படி தான் எங்கோ வாசித்த நினைவு, இது தப்பா?

Paari, Ori, Kaari, Began, Adhiyaman, Nalli, Ai Kandiran


--------------------
[size=16][b]தமிழ்.நிலா

Anonymous said...

ஷ்யாம், நீங்க எங்கே இருந்து பின்னூட்டம் போடுறீங்க ? ஏன் ஏதோ ஆட் ஆன் டெக்ஸ்ட் வருது !!!

Anonymous said...

///அப்படி தான் எங்கண்ணா ரவியும் திவ்யாவ புடிச்சாருடா அம்பி ///

அதை மட்டும் மறக்காதீங்க...

செந்தழல் ரவி

மாசிலா said...

//சரியா போச்சு போ...பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு போனதே கெடையாதா...அங்க வர்ரவாள பாக்கறச்சே நம்ம ஒடம்புல என்னன்னா நடக்கும்னு நோக்கு தெரியாதாடா அம்பி

மினி ஸ்கர்ட் என்ன? லோ கட் என்ன? லோ ஹிப் என்ன? இவா இப்படி வர்ரச்சே பகவான் எப்பிடி நம்ம மனசில வருவார்டா அம்பி?

நானெல்லாம் வெள்ளிக்கெழமை ஆச்சுனா குடுமியை இறுக்கி கட்டிண்டு அப்படியே போய் மண்டபத்து தூண்ல சாஞ்சு ஒக்காந்தாக்கா என்ன திவ்ய தரிசனம்...

அப்படி தான் எங்கண்ணா ரவியும் திவ்யாவ புடிச்சாருடா அம்பி//

அபச்சாரம், அபச்சாரம். இந்த லோகம் ரொம்பவும் கெட்டு போச்சு போ! உங்க கிட்ட எனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு.

அதுசரி, ரம்யா லோ ஹிப்பா, மினி ஸ்கர்ட்டா?

Anonymous said...

"உலக வரலாற்று ஏடுகளைப் புரட்டுகின்ற பொழுது,
முதலில் தோன்றிய சமுதாய அமைப்பு, இனக்குழுக்களைக் கொண்டதாகவே
இருந்தது"
(நூல்:"தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்"1983 பக்:429)

அந்தக்-குறிப்பிட்ட-காலத்தில் ஆள்பவனும் இல்லை,ஆண்டவனும் இல்லை!
அதனாலேயே "சங்க"இலக்கியத்தில் 'இந்த'க்காலப் பாடல்கள்
சமயச்சார்பற்றவையாகவும் இருந்தன.
(Ref : 'A CULTURAL HISTORY OF INDIA' - Edited by
A.L.BASHAM, Oxford University Press 1975 Chapter
4,"The Early Dravidians''-by John R.MARR, Page
35)

Anonymous said...

டேய் நம்ம ஏரியா பிகரை ஒருத்தன் டாவடிக்கறான், வாங்கடே...

Anonymous said...

அத சியாம தான் கேக்கனும் அம்பி

Anonymous said...

ஒரு க்ரூப்பாத்தாம்யா கிளம்பியிருக்காங்க..

செந்தழல் ரவி

Anonymous said...

நீ எந்த ரம்யாவை சொல்ற? SIT yaa ? அவ ஆளு பேரு ஊத்தவாயி சுகுமார் தானே?

Anonymous said...

ரவி, இது too much. கந்தன்கள்வன்னு சொன்னது சரியாத்தான் இருக்கிறது.

Anonymous said...

நீ மூடுறியா ?

Anonymous said...

http://www.youtube.com/watch?v=aLbRjYq4bQ8

Anonymous said...

மதுரா, நீங்க என்னத்தை சொல்றீங்கன்னு புரியலீங்க. அமுகவினரை என்னால் கட்டுப்படுத்தவியலவில்லை. அவங்க ஏதோ ஜாலியா விளையாடிட்டு போறாங்க. உங்களுக்கு ஏங்க எரியுது ? நான் ரொம்ப பிஸி. உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. பின்னூட்டம் யாராவது போட்டா பப்ளிஷ் பட்டன் அமுக்கற்தோட சரி.

பை.

Anonymous said...

டேய் SIET ரம்யாவ யாரும் சொல்லல் இல்ல?

Anonymous said...

மதுராவா?

அவுங்க எந்த காலேஜிபா?

Anonymous said...

அமெரிக்கன் காலேஜ்.

Anonymous said...

மதுரா அக்காவுக்கு,

அமுக ஆதரவு வேணுமின்னா கேட்க சொல்லுங்க ரவி...

குஜால்பட்டி அமுக இப்போது உறங்கிக் கொண்டு தான் இருக்கிறது

அமுக
குஜால்பட்டி

மாசிலா said...

பண்பாட்டு களங்கம் கற்பிக்கும் உங்களது அனானிகளின் அடாவடி போக்கினால் உங்களது தளம் ராம்தாஸ் ஐயாவின் பண்பாட்டு காவல் பாசறையின் நேரடி கண்கானிப்பின் கீழ் வந்திருக்கிறது.

Anonymous said...

அமெரிக்கன் காலேஜா,

அங்க புரபசர் ரமனா கிட்ட சொல்லி வுட்டுருவோம்னு சொல்லுங்க

Anonymous said...

நல்ல பதிவு

கல்வெட்டு எதுவும் இதுவரை அகப் படலை. அகப் படும்போது உபயோகப் படும்.

Anonymous said...

பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா?
இந்திராகாந்தி பிரதமராக 1966இல் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மக்கள் அவரை வரவேற்றனர். பாராட்டவும் செய்தனர். அப்போது அவரை பேட்டி கண்ட ஒரு நிருபர் இந்திராகாந்தியிடம் ""ஒரு பெண்மணியால் நாட்டை ஆள முடியுமா?'' என்று கேட்டார்.

Anonymous said...

என்னா ஆச்சிபா? டிராபிக் ஜாமா?

Anonymous said...

டிராபிக் ஜாமா?

இல்ல. பன் பட்டர் ஜாம்

Anonymous said...

என்னோட கொமண்டை கமண்டலத்திருந்து ரிலீஸ் செய்யவும்

அகத்திய மாமுனி
குடகு மலை

Anonymous said...

நிலா! நிலா! ஓடிவா!
""நிலா நிலா ஓடிவா!'' பாடியபடி நிலாவைக் காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் தவறாமல் கேட்கிற கேள்வி ஒன்று உண்டு. ""நிலா நம்மகிட்ட வருமாம்மா?''

""நிலா நம்மகிட்ட வராதுடா கண்ணு! நாமதான் நிலாவுக்குப் போகணும்.''

மங்கை said...

நான் முதல்ல இப்பத்து தமிழ் படிக்கிறேன்..அப்புறம் வர்ரேன் புதையலுக்கு

சிவபாலன் said...

Ravi,

Good Post!

Thanks!

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப காலத்துக்கு முன்னடி இந்த மாதிரி கல்வெட்டுகள் மீது ஆர்வம் இருந்தபோது பார்த்த வரிவடிவங்கள் இவைகள் ரவி..

ஆனாலும் இப்படி கல்வெட்டுகளை படிக்கும் சில சமயம் அரிய விஷயங்கள் கிடைக்க வரும், ரவி

ஆதிபகவன் said...

என்ன ரவி, கல்வெட்ட படிக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டா, எல்லாரும் வேற ஏதோ படிக்கிறாங்க:)))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....