யாரையாவது நாய் கடிச்சிருச்சி அப்படீன்னு கேள்விப்பட்டா...உடனே என்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை..."ஹெ !!...என்னைய இதுவரைக்கும் நாய் கடிச்சதே இல்ல தெரியுமா"...!! என்பதுவேயாகும்...அதில் ஒருவகையான பெருமிதமும் கொப்பளிக்கும்...
வந்துருச்சில்ல அதுக்கு ஒரு ஆப்பு...
கருநாடக எப்பிடமிக் டிஸீஸ் மருத்துவமனை ஊசியில கொண்டுபோய் முடிச்சிருச்சில்ல இந்த முறை...
கேளுங்க என் கதையை....
வழக்கமா வெளிய சுத்தனும்னா அலுவலகம் முடிந்தவுடன் காரை கொண்டுபோய் வீட்ல பார்க் செய்துட்டு யமஹாவை ஒரு குத்து குத்துவது வழக்கம்...பெங்களூரு ட்ராபிக் பயம் தான் காரணம்...உங்களுக்கு தெரியாதா பெங்களூருவில் நடக்குறவங்களுக்கு கூட ட்ராபிக் ஜாம் ஆகும் என்று...
அன்னைக்கும் அதே மாதிரி தான்...ஆப்பு தெருவில காத்திருக்குன்னு தெரியாம வண்டியை எடுத்துட்டேன்...
சல்லுபுல்லுன்னு டொம்ளூர் ( ஒரு ஏரியா) பக்கமா போயிக்கிட்டிருந்தப்ப பின்னால உட்கார்ந்திருந்த ஆளு வெச்சது தான் இந்த ஆப்பு....இப்படி திரும்பு இப்படி திரும்பு என்று சொல்ல, நான் வண்டியை வளைக்க ரோட்டில் நின்றிருந்த இந்த "வள்" எங்க இருந்து தான் வந்ததோ தெரியல, லபக்குன்னு பாய்ஞ்சு காலைப்பிடிச்சு கடிச்சு வெச்சிருச்சு...
வீட்டுக்கு போய் காலைப்பார்த்தால், போட்டிருந்த ஜீன்ஸ் பேன்ட்டை தாண்டி ஒரு துக்ளியூண்டு காயம்...
பக்கத்து தெருவில் ஈஸ்வரி கிளீனிக்கில் இருக்கும் பேமிலி பிஸிஷியனிடம் போனேன்...
அவர் காலைக்காட்டு என்றார்..காட்டினேன்...வெள்ளையான ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து பரபரவென காயத்தில் வைத்தார்...
ஸ்ஸ்ஸ்ஸ் என்று எரிந்தது...
அப்போ ஊசி போட்டுத்தான் ஆகனும் என்றார்...ஒரு டி.டி இஞ்செக்ஷனை தலையை தட்டிக்கொண்டே ஒரு மேட்டரை சொல்ல, எனக்கு ஜில்ல்ல்ல் என்று ஆனது...
போன மாதம் இந்த மாதிரி தான் ஒருத்தர் நாய் கடிச்சு மேலோகம் போனாராம்...அவரை ஒன்னரை வருஷத்துக்கு முன்னால கடிச்சது பொறந்து மூனே நாள் ஆன குட்டியாம்...காயம் ஒன்னும் பெருசா இல்லையாம், வெறும் நக கீறல் தானாம்...
ஹய்யோ என்று கூட வந்த நன்பர் மெர்சலானார்...
அப்புறம் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எண்ணிக்கொண்டே இன்னோரு விஷயம் கூட சொன்னார்...இந்த மாதிரி வெறி நாய் எல்லாம் ரோட்ல ஒரு இடத்துல நிக்காதாம்...அப்படியே தலையை தொங்கப்போட்டுக்கிட்டு ( யாராவது அவமானப்படுத்தியிருப்பாங்களோ), சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்குமாம்...
உடனே ரேபிப்புர் இஞ்செக்ஷன் எடுக்கனும் என்றார்...
நீங்க நேரா ஐசொலேஷன் ஹாஸ்பிட்டல் போயிருங்க...இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷன் ஆப்போஸிட்ல பெரிய பில்டிங்...ஒல்டு மெட்ராஸ் ரோட்ல...மொத்தம் அஞ்சு இஞ்செக்ஷன் போடனும்...என்றார்...
கிறுகிறுவென்று இருந்தது...
நன்பர் காரை ஒட்ட, பக்கத்தில் நான்...
ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் ஹாஸ்பிட்டல் பார் எபிடமிக் டிஸீஸ் என்று எழுதி இருந்த பழைய கட்டிடத்தை நாங்கள் அடைந்தபோது மணி பத்து...ட்யூட்டி
சார்...டாக் பைட்...ஊசி போடனும்...
அவுதா...எல்லி ?
கால்ல தான் என்றான் பக்கத்தில் இருந்த நன்பன்...அவனை அடக்கிவிட்டு, இங்க தான் சார் டொம்ளூர் பக்கம் என்றேன்...
டாக்டர் ஓ.பிக்கு ஓகித்தே...சொல்ப வெயிட் மாடி என்றார் அட்டெண்டர்...நாங்கள் தமிழில் பேசியதும் தமிழில் பதில் சொல்ல ஆரம்பித்தார்...
முதல்ல டாக்டர்கிட்ட சீட்டு வாங்கிக்கிட்டு, முந்தே ஓகி...ஒரு பில்டிங் வர்து..அங்க சிஸ்டர் இருக்கும்...அவுங்க கிட்ட ஒரு புக்கு 5 ரூவாய்க்கு வாங்கு...அதுல டாக்டர்கிட்ட சைன் மாடி...பிறகு லெப்ட்ல இருக்க பில்டிங்ல போய்ட்டு ஊசி போட்க்கோ...என்றார் அட்டெண்டர்..
பெரிய பில்டிங்...உள்ளே கருநாடக அரசு வாகனங்கள் எல்லாம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன...எல்லாம் கடந்து 5 ரூபாய் கொடுத்து புக் வாங்கி, டாக்டரிடம் போனால்...
வெகு இளமையாக இருந்தார் டாக்டர்...தரமான ஆங்கிலத்தில் பேசினார்...தமிழும் புரியும் போல...
அந்த நாய் ஏன் கடிச்சது ? நீங்க தூண்டினீங்களா ? என்றார்...
அய்யோ நான் ஒன்னும் தூண்டலை...அதுவா பாய்ஞ்சு வள்ளுன்னு புடுங்கிருச்சி என்றேன்...
நாய்க்கு என்ன ஆச்சு ?
அதை பார்க்கலை டாக்டர்...
கன்னடத்தில் எழுதி இருந்த புத்தகத்தில் இப்படி தெளிவாகவே எழுதினார்...
Dog Bite at 7:00 PM on 5/7/07. by a street dog, unprovoked bite. condition of the dog : unknown. O/E:- Small wound around 2X2 mm on the lateral aspect of the left leg.
பின்னால் இருந்த அழுக்கடைந்திருந்த ஒரு காலண்டர் பார்த்து நாள் குறித்தார்..
அடுத்த பக்கத்தில்..
Rabipur 1M - 1CC
0 - 5/7/07
3 - 8/7/07
7 - 12/7/07
14 - 19/7/07
28 - 2/8/07
இப்படி எழுதிவிட்டு, 3 ர்ட் டே ஒரு ஊசி, அப்றம் 7 த் டே, அப்றம் 14த் டே, அப்றம் 28 டே...ஓக்கே...என்றார்...
ஓக்கே டாக்டர்...
ஓ.பில சிஸ்டர் இருப்பாங். ஓகி...என்றார்..
சுத்தி சுத்தி ஓ/பி வார்டை கண்டுபிடித்து, உள்ளே கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கும் 'சிஸ்டர்' அமர்ந்திருந்த இடத்தை கண்டுபிடித்தேன்...
அங்கே சிஸ்டர் ஒரு நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு ( ஊசிக்கான பீஸ்) - என்னுடைய புத்தகத்தில் ஒரு எண்ட்ரியை போட்டுக்கொண்டு, பெயர் ரவி, வயது 28 என்று அவரது புத்தகத்தில் எழுதிக்கொண்டு, (எனக்கு தெரிந்து - குமாரசாமி + லோக் அயுக்தா புண்ணியத்தால் லஞ்சம் என்பது துளியளவும் கிடையாது கருனாடக அரசு மருத்துவமனைகளில்...) டக்கென ஒரு ஊசியை உடைத்து, ஷோல்டரை விலக்கி காட்டும்படி செய்து ஸ்ஸ்ஸ்ஸ்...
எனக்கு தெரிந்து இப்போதுதான் முதல் முறையாக ஷோல்டரில் ஊசி போடுகிறேன்...வலி இல்லை...
ஊசி போட்ட பிறகு பரபரவென தேய்த்துக்கொள்ளலாம் என்று எத்தனித்தபோது...நோ...தேய்க்க கூடாது என்றார்...
ஒரு நன்றியை சொல்லிவிட்டு, வரும்போது டாக்டருக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்...அட்டெண்டர் வழியில் மடக்கி...தண்ணியெல்லாம் அடிக்காதீங்க...நான் வெஜ் கூடாது...கட்டுப்பாடா இருக்கனும் என்றார்...மண்டையை ஆட்டிக்கொண்டு...
காருக்கு அருகில் வந்தேன்...நன்பரிடம் சிகரெட் பாக்கெட் வாங்கி ஒரு கிங்ஸ் எடுத்து பற்றவைத்தேன்...வண்டியை நான் ரிவர்ஸ் எடுக்கிறேன் என்றார்...
உள்ளே சரளமாக நிறைய இடம் இருக்கிறது...சரி எடுங்க என்று...அப்படியே முன்னால் கேட் பக்கம் வந்தேன்...சற்று புகையை உள்ளே இழுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டே இன்னும் இரண்டடி எடுத்து வைத்தபோது...
கர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஒரு சத்தம்...
சற்றே இருட்டான காம்பவுண்டு சுவர் அருகில் எங்கிருந்தோ விழும் ட்யூப் லைட் வெளிச்சம் கண்களில் பட்டு பளபளக்கும் கண்களால் என்னை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார் அவர்...அது தான் நமது எதிரி...கரிய நிறம்...
கர்ர்ர்ர்ர் என்று மீண்டும் ஒரு உறுமல்...
பின்னால் நமது நன்பர் ரிவர்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று வளைத்து ஒடித்துக்கொண்டிருந்தார்...
அய்யோடா சாமீ ஆளை விடுப்பா என்று காரைநோக்கி ஓட்டமெடுத்தேன்...
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
7 comments:
//சல்லுபுல்லுன்னு டொம்ளூர் ( ஒரு ஏரியா) பக்கமா போயிக்கிட்டிருந்தப்ப//
டொம்ளூர் - ஏரியா பேரே ஒரு மாதிரியா கீதே நைனா?
நாய் கடிக்கசொல்லோ நீ தம்மு வேற போட்டியா? காலிடி நீ...ஆறே மாசத்துல உன்னோட லங்ஸ் கால் நகம் வழியா வெளீல வரும் பாரு...
அப்போ சீயர்ஸ் சொல்லுவோம்
வலையுலகில் தான்... கடினு பாத்தா ....
...உடம்ம பாத்துக்கோங்க ரவீ ....
/நீங்க தூண்டினீங்களா ?/
ஹி..ஹி.தல உங்கள பாத்தாவே தெரியுமா ?
/நாய்க்கு என்ன ஆச்சு ?/
ரொம்பத்தான் கிண்டலடிச்சிருக்கார்..பை தி வே எனக்கு இன்னும் நாய் கடிச்சதில்ல :)
தம்பி, தப்பிச்சிக்கிட்டே. மருத்துவத்துறையின் முன்னேற்றத்தால நீ தப்பிச்சுட்டே. இல்லன்னா, மக்கா, தொப்புளைச்சுத்தித்தாண்டீ ஊசி போடுவாளுக. அதுவும் 14 ஊசி. மகனே நீ அதிர்ஷ்டக்காரண்டா. நான் நாய் கடிச்சு, சாரி, நாய் என்னக் கடிச்சு, நான் பட்ட பாடு, சாமியோவ், கருப்புக்குக்கூட அந்த நிலைமை வரவேண்டாம்டோய்..
மெய்யாலுமா நாய் கடிச்சுருச்சு?
நான்கூட எதோ ஜோக்குக்கு எழுதியிருக்கார்( நாய் கடிச்சுருச்சுபா) னு நினைச்சேனே?
கவனமாக இருங்க.
take care
நாயைக் கண்டா கல்லைக் காணோம்னு சொல்வாங்க. நீங்க காலைக் காணோம்னு ஓடியிருக்கீங்க. நல்லதுதான். கால் முக்கியம். :))))
Post a Comment