ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஐந்து

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு


அவர் மனைவிக்கும் அவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை...புகைபிடிக்கும் நேரங்களில் எல்லாம் யாரிடமாவது சத்தமாக இதை பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்...

பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்த கருத்து வேறுபாடு, முழுக்க குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வது, வீட்டிலேயே வைத்து குடிப்பது, புகை பிடித்து குழந்தை முகத்தில் விடுவது என்று போனதாக சொல்லப்பட்டது...

அவரே இதை சொல்வார்...நானே டைவர்ஸுக்கு போனாத்தான் ஜீவனாம்ஸம் எல்லாம் கொடுக்கனும், அவளையே போகவெச்சிடேன்னு வெய்யு, ஒன்னும் கொடுக்கத்தேவையில்ல தெரியுமா...நாங்கள்ளாம் கோடம்பாக்கம்...எத்தனை பிரச்சினைகளை பார்த்தவங்க...

அவர் வீட்டில் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு முறை பஞ்சாயத்து நடந்தது, அந்த பஞ்சாயத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே கை நீட்டி முன்னாள் விமானப்படையின் அதிகாரியான மாமனாரை கை நீட்டி அடித்துவிட்டார், அவர்கள் தரப்பில் மகளின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக அதையும் பொறுத்து, அவரிடம் கையேந்தினார்கள், ஆனாலும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை...

இந்த குழந்தை இவ்ளோ கருப்பா இருக்கு, பார்ப்பதற்கு அவளோட கம்பெனி ப்யூன் முருகன் மாதிரியே இருக்கு, அவன் இவளை ரெண்டு மூனு தரம் நைட்ல வீட்டுல ட்ராப் பண்ணியிருக்கிறான் என்று வார்த்தையால் சுட்டார்...

இதை எல்லாம் அந்த பெண்மணி ஒரு நீண்ட மின்னஞ்சலாக எழுதி எங்கள் நிறுவன தலைவருக்கும் அனுப்பினார், அதை ஏன் அனுப்பினாய் என்று அவர் மனைவியை அடித்துள்ளார், எங்கள் ஹெச்.ஆர் இந்த மின்னஞ்சல் விவரம் எல்லாம் என்னிடம் சொன்னார், நீயும் விஜயும் அவருடன் க்ளோஸா இருக்கீங்களே, நீங்கள் கொஞ்சம் ப்ரெண்ட்லியாக சொல்லக்கூடாதா என்றார்..

நீங்க வேற மேடம், நாங்க சொல்லியா அவர் கேட்க போறார், ஆபீஸ்லயே மப்புல இருக்க ஆரம்பிச்சுட்டார் என்றோம், அப்போ அவரை ஸூ பன்றதை தவிர வேற வழியில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஹெச்.ஆர்..

இடையில் நாங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருந்தோம், எனக்கு ஒரு நிறுவனத்திலும் விஜய்க்கு ஒரு நிறுவனத்திலும் கிடைத்தது, போய் ஜாய்ண் பண்ணிவிட்டோம்...

சில வாரங்கள் கழித்து நந்தனம் சிக்னல் அருகே உள்ள ஏ.டி.எம் அருகே பஸ் கிடைக்காமல் நின்றிருந்தேன், அவரின் கார் வந்தது, அதில் அவர், என்னை பார்த்து கூப்பிட்டார், என்ன சார் எப்படி இருக்கீங்க என்றேன்...

வா ஏறு வண்டியில என்று ஏற்றிக்கொண்டார், ரெண்டு வருடமாக தினமும் பார்த்த முகம், கொஞ்சம் வெளுத்துப்போனதாக தெரிந்தது...

என்ன சார் வெய்ப் பிரச்சினை இப்போ எப்படி இருக்கு, உங்களோட குழந்தைக்காகவாவது நீங்க சமாதானமா போகக்கூடாதா சார் என்றேன்...

சம்பாதிக்கறோம்ங்கற திமிரு அவளுக்கு...அவளை எல்லாம் கல்யாணம் பண்ணேன் பாரு...ஏதோ கொஞ்சம் பணம் வருதேன்னு எங்க வீட்ல முடிச்சுட்டாங்க...குமுதம் குங்குமம்ல எல்லாம் எவ்ளோ ஜோக் வருது ? வேலைக்காரியோட படுக்கிறது எல்லாம் ஒரு தப்பா ? என்றார்...

சார் நான் இறங்கறேன் சார் என்னோட ஸ்டாப் வந்திருச்சு என்றேன்...!!!

அடுத்த வாரம் பார்ம் சிக்ஸ்டீன் வாங்க ஆபீஸ் போயிருந்தேன், வாட்ச்மேன் ஒரு அதிர்ச்சியான தகவலை சொன்னார்...

உனக்கு தெரியுமா, நம்ம பழைய மேனேஜர் விஷம் குடிச்சுட்டார் !!!!

நினைவுகள் தொடரும்...

Comments

Anonymous said…
when is the next part ?
அதான் இருக்கே சூடான இடுகையில பாருங்க. பாகம் ஆறு அல்ரெடி ரிலீஸ்
your blog is added at http://tamilmaanam.blogspot.com/ . all the post!
நன்றி ஓசையாரே
narsim said…
தல‌.. கலக்கல்..

வெளியூர் சென்றதால் தாமதம்.. மன்னிக்கவும்

நர்சிம்

Popular Posts