கிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்....

டேய் தம்பிகளா...வேண்டாம்டா...வேண்டாம்...அது நல்லதில்லைடா...நான் உங்களோட தாத்தா மாதிரிடா...என்று சேலத்தை சேர்ந்த சித்த வைத்தியர் தொலைக்காட்சியில் இப்போது புலம்பிக்கொண்டுள்ளார்...

ஆனால் அதைவிட ஒரு பெரிய பிரச்சினை..இந்த பாலித்தீன் பைகள்...சுற்றுச்சூழலை குத்திக்கிளறி புண்ணாக்கும் இந்த வீணாய்ப்போன பிரச்சினை, வரும் சமுதாயத்துக்கும் மாபெரும் கேடு...

நல்ல பதிவுகளை எழுதாமல் மொக்கை போட்டாலும் பரவாயில்லை...பாலித்தீன் பைகளை குப்பையாக போடுவதை முடிந்தவரை தவிருங்கள் மக்கா...இந்த பாலித்தீன் சம்பந்தமான பொருட்கள் - உலகம் முழுவதும் 60 மில்லியன் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகின்றன..

நீ புடுங்குற எல்லா ஆணியுமே தேவை இல்லாத ஆணி தான் என்பது போல எல்லாமே மக்காத குப்பைகள் தான்...

ஒரு ஜெர்மன்காரன் 1898ல ஆக்ஸிடெண்டலா கண்டுபிடிச்சது இந்த பாலித்தீன் என்னும் பொருள்...டயாஸோமித்தேனை சூடாக்கிக்கிட்டிருந்தானாம்...அப்போ வழவழன்னு வந்த இந்த சனியனை ஆராய்ஞ்சிருக்கான்...வந்திருச்சு பாலித்தீன்...

இந்த பாலித்தீன்ல ஒரு சில வெரைட்டீஸை ரீசைக்கிள் பண்ணமுடியும் தான்...ஹும்...இருந்தாலும் முக்காவாசி பாலித்தீன் ரீசைக்கிள் ஆகமுடியாத வகையிலேயே உருவாக்கப்படுதாம்...

டேனியல் பர்டுன்னு ஒரு பதினாறு வயசு கனடா பையன்...ஸ்ப்ஹின்கோஹோமஸ் அப்படீன்ற பாக்டீரியா பாலித்தீனை சாப்பிடுது, 40 சதவீதம் வரைக்கும் பாலித்தீன் பொருட்களோட வீரியம் குறைச்சு அழிக்கிது அப்படீன்னு இந்த வருஷம் (2008) மே மாசம் கண்டுபிடிச்சிருக்கானாம்...

எந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வரும்னு தெரியல...

நான் உங்களை கேட்டுக்கறது என்ன தெரியுமா ? முடிஞ்ச வரைக்கும் பாலித்தீனை அவாய்ட் பண்ணுங்களேன்....

கடைக்கு போகும்போது சணல் பைகளையோ, அல்லது கூடையையோ எடுத்துக்கிட்டு போங்களேன்...

அதுல என்ன பெரிய கவுரவ குறைச்சல் ?

பாலித்தீன் கவர்ல குப்பை எல்லாம் போட்டு வெளிய போடலாம் தெரியுமா ? அப்படீங்கறீங்களா ?

சார் / மேடம் ? அதுதானே வேண்டாம்னு இவ்ளோ கரடியா கத்திக்கிட்டு இருக்கேன்...

குப்பைக்கு ஏதாவது பர்மனெண்ட் குப்பைத்தொட்டி மாதிரி வீட்ல வெச்சுக்கோங்களேன்...

நமீதாவுக்கு இந்த விசயம் பற்றி மெயில் அனுப்பினேன்...

அவங்க மச்சீ...நான் சொன்னதா சொல்லு மச்சீன்னு திரும்ப மெயில் அனுப்பியிருக்காங்க...சந்தேகம் இருந்தா WWW.நமீதா.com க்கு மெயில் அனுப்பி நீங்களே கேட்டுக்கோங்க...ஜொள்ளர்களை ஏமாற்றவேண்டாம் என்றும், தன்னுடைய படம் ஒன்றை வெளியிட்டுக்கொள்ளுமாறும் தெரிவித்தார் நமீதா...நன்றி நமீதா சிஸ்டர் !!!! என்னைய மச்சான்னு கூப்பிடுறவங்க எல்லாம் வரிசையா வந்து பின்னூட்டம் வைங்க, ஆங்...மறந்துடாதீங்க...கடைக்கு போவும்போது வயர் கூடையோ, சணல் பையோ எடுத்துக்கிட்டு போங்க...ப்ளீஸ்...

Comments

Anonymous said…
tholar nameetha , kaiyil vaiththiruppathu plastic pola ullathe?
கப்பிப் பயல் said…
நமீதா வாழ்க!

செந்தழல் ரவி மச்சான் வாழ்க!
//tholar nameetha , kaiyil vaiththiruppathu plastic pola ullathe?//
Kabheesh said…
நல்ல நோக்கம் கொண்ட பதிவு!
கால கொடுமடா இத சொல்லவும் நமீதா பேரை சொல்ல வேண்டியிருக்கு
Anonymous said…
tholar nameethavin uduppil ulla embroidery velai nandraga ullathu.
Anonymous said…
//நல்ல நோக்கம் கொண்ட பதிவு!
கால கொடுமடா இத சொல்லவும் நமீதா பேரை சொல்ல வேண்டியிருக்கு//

intha oru rombaaaa nallavaru...
அப்போ இனிமே மஞ்சப் பை வச்சுகிட்டு வாரவுங்களையெல்லாம் ஊர் நாட்டான்னு சொல்லாம சுற்றுச் சூழல் ஆர்வலர்னு கூப்பிடலாமா?
Kabheesh said…
Anonymous said...
//நல்ல நோக்கம் கொண்ட பதிவு!
கால கொடுமடா இத சொல்லவும் நமீதா பேரை சொல்ல வேண்டியிருக்கு//

intha oru rombaaaa nallavaru...

யெஸ், யெஸ், ரொம்ப ரொம்ப நல்லவரு
Anonymous said…
சின்னப்பாப்பா கொஞ்சம் இளைச்சிருக்காப்ல இருக்கு.
//Kabheesh said...
நல்ல நோக்கம் கொண்ட பதிவு!
கால கொடுமடா இத சொல்லவும் நமீதா பேரை சொல்ல வேண்டியிருக்கு//

Repoteeyyyy!
Anonymous said…
நல்ல....அருமையான....கருத்துள்ள பதிவு. ஆனா, நமீதா இடுப்புல போட்டுருக்கற பாசி மணி பிளாஸ்டிக்கா இல்லையா? அவிங்களோட உடம்புல பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் இல்லைன்னு எப்ப்டி நம்பறது?
ILA said…
நல்ல பதிவு!ஆழ்ந்த கருத்துக்கள்!
//நல்ல நோக்கம் கொண்ட பதிவு!
கால கொடுமடா இத சொல்லவும் நமீதா பேரை சொல்ல வேண்டியிருக்கு///

ஆமாம்...என்ன செய்ய ?
SurveySan said…
indha matter pathi nenachaale, perumoochu perumoochaa varudhu.

ellaarum thirundhanum ;)
நமீதா உங்கள மச்சீன்னு கூப்பிடுறாங்க.... (உங்க பதிவுலதான் ) . நீங்க அவங்கள அக்கான்னு கூப்பிடுறீங்களே.... வீட்டுல கொஞ்சம் பயமோ.... ???

நல்ல கருத்துள்ள பதிவு....
Anonymous said…
//Anonymous said...

நல்ல....அருமையான....கருத்துள்ள பதிவு. ஆனா, நமீதா இடுப்புல போட்டுருக்கற பாசி மணி பிளாஸ்டிக்கா இல்லையா? அவிங்களோட உடம்புல பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் இல்லைன்னு எப்ப்டி நம்பறது?//

போய் ச்செக் பண்ணீட்டு வரவேண்டியதுதான்..
Anonymous said…
ச்செக்’ பண்ணீட்டு-ன்னுதான் எழுதியிருக்கேன்.

வேற எழுத்த சேர்த்துப் படிக்கக் கூடாது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ப்பா!
நமீதா போட்டோவை டவுனிட்டேன்..நன்றி.
அதுக்கு மேல என்னமோ எலுதிருக்கீங்களே..அதான் புரியல.
பரவால்ல வுடுங்க..அலுவாதீங்க...
ஹி ஹி கும்மீதா போட்டோ வேற ஏதாச்சும் இருக்கா?
This comment has been removed by the author.
Anonymous said…
நல்ல விஷயம் யார் சொன்ன என்ன ... எப்படியோ நல்லது நடந்தா சரி

Popular Posts