காண்டு கஜேந்திரன் பதில்கள் பாலஸ்தீனம் சம்பந்தமாக

இஸ்ரேலில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப பாலஸ்தீனம் பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் வருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

குறைசிம்மா:

1. பாலஸ்தீனியர்கள் அழிவது யூதர்களுக்கு நல்லதா?


ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.

மலையகபாலஸ்தீனியன்

1) தன்னையே கொல்ல திட்டமிட்ட யாசர் அராபத்தை மன்னித்து, பாலஸ்தீனத்தில் அவனால் கஷ்டப்படும் மக்கள் மீது கூட இஸ்ரேல் ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கோல்டா மேயர் பாராட்டுக்குரியவர்தானே?


தன்னை கொல்லத் திட்டமிட்ட யாசர் அராபத்தை கோல்டா மேயர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஏன் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் மேல் இந்த கொலை வெறி உங்களுக்கு?


2) காசா தெற்கு முனையில் இஸ்ரேலிய ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் பாலஸ்தீனியர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஆயிரம் விளக்கு பகுதி வாழ் பாலஸ்தீனியர்களும், காசா முனைக்கு வடக்கில் ராணுவம் யாசர் அராபத்தின் கல்லறையை நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் காசா முனை மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?

பதில்: கண்டிப்பாக சொல்லலாம்.

3) யூத கோல்டா மேயர் கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த பாலஸ்தீனியர்களை கொன்றொழித்த யாசர் அராபத் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?

பதில்: கோல்டா மேயர் இதற்காக பணம் கொடுத்தார் என எங்கும் படித்ததில்லை. இருப்பினும் தன் சுயமுனைப்புடனேயே கொலைகளை செய்வித்து வரும் யாசர் அராபத்தின் சீடர் முகமது அப்பாஸின் பங்கை உங்கள் கேள்வி குறைத்து மதிப்பிடுகிறது என நினைக்கிறேன்.

4.நேற்றுவரை பாலஸ்தீனியர்களை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?

பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

ஆனந்த குமார்:

1. பாலஸ்தீனியர்கள் ஐ.நா அமைதி படையை எதிர்த்து சண்டை போட இஸ்ரேல் ராணுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?


பதில்: அவ்வாறு ஆயுதம் பெற்றது பற்றி தெரியாது. ஆனால் இருவருக்குமே ஐ.நா அமைதிப்படை ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

2. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர்கள் நம்ப கூடியவர்களா?

பதில்: இல்லை

3. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?

பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?

4. காசா முனை பாலஸ்தீனியர்களால் வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியர்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்களா?

பதில்: பாலஸ்தீன சிக்கல் ஒரு இடியாப்பச் சிக்கல். காசா முனை பாலஸ்தீனியருக்கும்
வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியருக்கும் ஆகாது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், பாலஸ்தீன யூதருக்கும் ஆகாது. இன்னும் யாருக்கும் யாருக்கும் ஆகாது என்பது தெளிவாக இல்லை.

5. இஸ்ரேலில் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் இருக்கிறார்களாமே, தனி பாலஸ்தீனம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?

பதில்: யாருக்கு தீமையோ தெரியாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தனி பாலஸ்தீனம் கிடைப்பது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் நலனுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறேன்.

6.யாசர் அராபத் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?

பதில்: ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

7. இதிலும் யூத துவேஷம் காட்டுவோர் பற்றி?

பதில்: அப்படி காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

..

..

..

வணக்கம் எல்லாருக்கும்...டோண்டு சாரின் பதிவை மிமிக்ரை செய்ய முயற்சி செய்துள்ளேன்...கலகலப்பை உருவாக்கும் என்று நம்புகிறேன்...(பல விஷயங்கள் எடிட் செய்யாமல் அப்படியே பொருந்துகின்றன...நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன்..)

..

..

..

தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணம் கருவி பட்டையில் ஓட்டு குத்தவும்...

Comments

பதிவெல்லாம் இருக்கட்டும்...

//தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணம் கருவி பட்டையில் ஓட்டு குத்தவும்...//

இப்பல்லாம் இப்படியே நேரடியாக கேட்கலாமா?
ரொம்பவே ரசிக்கறா மாதிரி இருந்தது ரவி !
யூதர்கள் இன்னும் விடுதலை பெறவில்லையா!
நான் தனி நாடே அமைத்துவிட்டார்கள் என்று நினைத்துகொண்டிருக்கிறேன்
G.Ragavan said…
ravi... oru + pottutean... :-)
Anonymous said…
போண்டா பாலஸ்தீனத்தில் செய்வது எப்படி என்ற சமையல் குறிப்பையும் எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-தீவு -
Pot"tea" kadai said…
ஹஹாஹா...

இஸ்ரேலியர்கள் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களாமே?
//இப்பல்லாம் இப்படியே நேரடியாக கேட்கலாமா?///

தனக்கு தானே குத்திக்கொள்வதை விட உங்களை கேட்பது நல்லது தானே கூடுதுறை அவர்களே ?
நன்றி மணிகண்டன்...
///யூதர்கள் இன்னும் விடுதலை பெறவில்லையா!
நான் தனி நாடே அமைத்துவிட்டார்கள் என்று நினைத்துகொண்டிருக்கிறேன்///

யூதர்கள் இஸ்ரேலில் தனி நாடு அமைத்துவிட்டார்கள்...

பாலஸ்தீன முஸ்லீம்களும் தனி நாடு அமைத்துவிட்டார்கள்...

யார் அமைக்கவில்லை, அதை யார் தடுக்கிறார்கள், அப்படி அமைந்தார் யாருக்கு எரிச்சல் என்று சிந்திக்கவும் வால்ஸ்...!!
ஹாய் ஜி.ரா...

நன்னி !!!!
///இஸ்ரேலியர்கள் போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களாமே?///

இப்போதெல்லாம் போண்டாவே அவர்களுக்கு ஆவறதில்லை பொட்டீக்கடையாரே ?

இஸ்ரேலியர்களின் மொபைல் கம்பேனி

http://www.modumobiles.com or http://www.modumobile.com பாருங்க...
Great said…
முதல் கேள்வியாக - உலக வரைபடத்தில் சம்பந்தப்பட்ட நாடு எங்கே உள்ளது என்று கேட்டிருக்க வேண்டும்.
Anonymous said…
This is the the worst posting I have ever read. I thought bloggers are adequately informed abt the subjects they choose to write. But u proved to be an exception.
Anonymous said…
நேற்று பெய்த மூத்திரத்தில் இன்று பிறந்த காளான்களான கண்ட கண்ட‌ கஸ்மாலங்கள் உங்களை பற்றி பின்னூட்டத்தில் தவறாக பேசுகிறார்கள் செந்தழல்.

http://valpaiyan.blogspot.com/2008/10/blog-post_31.html
:))

கொழுப்பு.. :))

Popular Posts