Tuesday, March 17, 2009

அறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 2


வாத்தியாரிடன் கேள்வி கேட்ட அல்ப்போன்ஸு

நம்ம அல்ப்போன்ஸுக்கு பள்ளியில் ஒதுக்கப்படுவது எப்போதும் முதல் பெஞ்சுதான். சார் அறிவாளி என்பதால் அல்ல. பயல் வழக்கத்தை விட குள்ளம்.

எங்கள் பள்ளியில் ஆங்கில மற்றும் கணிதம் எடுத்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் என்று ஒருவர், அவரது ஆங்கில பீரியட் மிகவும் பிரபலம்..

மெக்கனாஸ் கோல்ட், ட்ரஷர் ஹண்ட் போன்றதொரு ஆங்கில புத்தகத்தை படித்து அதை தமிழாக்கி சுவையாக கதைசொல்வார்.

அவரது ஆங்கிலப்பாட வகுப்பு தேன். அவரே எங்களுக்கு கணித பாடத்தையும் எடுத்துவந்தார். பொதுவாக வகுப்பில் எந்த தண்டனையும் வழங்காதவர், அதனால் அனைவருக்கு பிடித்தமானவர்.

பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் கேட்டால் அமைதியாக சொல்பவர்..பொறுமையாக விளக்கி புரியவைப்பார்...

அன்றைக்கு அப்படித்தான்...

ஏதோ ஒரு கணக்கை அப்படி இப்படி போர்டில் இழுத்துக்கொண்டிருந்தார். ஏனோ கணக்கு விடை பிடிபடவில்லை...புத்தகத்தில் எளிமையாக விடை கொடுத்திருந்தாலும், அவர் ஆரம்பத்தில் ஏதோ தவறிழைத்துவிட்டதால் இறுதி விடை வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது.

மொத்தத்தில் சார் கொஞ்சம் டென்ஷனில் இருந்தார்...

நாங்கள் சாரின் மூட் தெரிந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தோம்...

பை X 7 = 22 என்று ஒரு ஸ்டெப் எழுதினார்.

பை என்பது 22/7 என்று அதற்கு முந்தைய ஸ்டெப்பில் எழுதி விட்டிருந்தார்.

அதனால் 7 க்கு 7 ஐ அடித்துவிட்டு 22 என்று எழுதினார்.

திடீரென அமைதியை குலைத்துக்கொண்டு ஒரு குரல்...

குரலுக்கு சொந்தக்காரன் அல்ப்போன்ஸு...

சார்...அந்த 22 எப்படி வந்துச்சு ?????

சார் அமைதியாக அவனை அழைத்தார்...

இங்க வா சொல்றேன்...

இவனும் வெளந்தியாக கிட்டே நெருங்க...

டமால் டுமீல் என்று முதுகில் அடி போட்டார்...

நொக்கு நொக்கு என்று நொக்கிவிட்டு கேட்டார்...

இப்ப தெரிஞ்சுதா அந்த 22 எப்படி வந்ததுன்னு ?

தெரிஞ்சுது சார்...இது அல்போன்ஸு...

அப்ப போய் இடத்துல உக்கார்...

சந்தமில்லாமல் பய வந்து உட்கார்ந்தான்...

பீரியட் முடிஞ்சதும் வெள்ளந்தியாக என்னிடம் வந்து கேட்டான்...

டேய் சார் என்னை எதுக்குடா அடிச்சார் ? சாருக்கு அந்த இருவத்திரெண்டு எப்படி வந்துதுன்னு தெரியாதா என்ன ?

    மற்ற எபிசோடுகளை காண தவறாதீர்கள்


செஞ்சியாருடன் அல்ப்போன்ஸு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, பின்னால வந்த பாதிரியாரே
சாவியை தொலைச்ச அல்ப்போன்ஸு
பாவ மன்னிப்பு கேட்ட அல்ப்போன்ஸு
எலக்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங் குரூப்பில் அல்போன்ஸு
விக்கிபீடியாவில் வந்த அல்போன்ஸு
அல்ப்போன்ஸு பொங்கலில் புழு
காலையில் சப்பாத்தி சாப்பிட்ட அல்ப்போன்ஸு
சவுத் ஆப்ரிக்கன் மிஷனில் அல்ப்போன்ஸு

13 comments:

மாசிலா said...

ரவீ....... இன்னும் அதே ரவிதானா? கெட்டு போகாம இப்படியே வெகுளித்தனமா இருந்துட்டு போயா. Have a nice day man.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Thamira said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

இஃகிஃகி!!!

ரவி said...

மாசிலா...நன்றி...

ரவி said...

தாமிரா - நீங்க என்ன கமண்டு போட்டீங்க

ரவி said...

தாமிரா - நீங்க என்ன கமண்டு போட்டீங்க

ரவி said...

டிவிஆர் நன்றி

ரவி said...

பழமைபேசி நன்றிப்பா

ராஜ நடராஜன் said...

அதென்ன கணக்கு வாத்தியாருகளுக்கும் மொத்தரதுக்கும் அப்படி ஒரு ஏகப் பொருத்தம்?

ரவி said...

//அதென்ன கணக்கு வாத்தியாருகளுக்கும் மொத்தரதுக்கும் அப்படி ஒரு ஏகப் பொருத்தம்?//

:))))))

Thamira said...

ஸாரி செந்தழல்.. இன்னொருவருக்குப் போட வேண்டிய பின்னூட்டத்தை உங்களுக்குப் போட்டுவிட்டேன். தொடர்ந்து வேறு (பதிவு சூப்பர் என்று) போடாமல் போனதற்கு ஸாரி..

வால்பையன் said...

22 எப்படி வந்ததுங்குற சந்தேகம் எனக்கும் இருக்கு
அப்ப நானும் அல்போன்ஸா?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....