Monday, October 20, 2008

கஞ்சா குடிக்கி...



நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன ? நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...

தம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா ? தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா ? இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...

கஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...

நமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட தான் சுத்துவேன்...சுத்துறதுக்கு பெரிய பெரிய இடமெல்லாம் கிடையாது எங்க ஏரியாவில...மொத்தமே நாலுதெரு...அதுல நடுவுல பஸ்ஸ்டாண்டு...அப்புறம் கடைத்தெரு...கபிலர் குன்று கோயிலு...தென்பெண்ணை ஆத்துல முருகம்பாற...உலகளந்த பெருமாள் கோயிலு..கேள்ஸ் ஐஸ்கூல்...பஸ்டாண்டை ஒட்டி பாய்ஸ் ஐஸ்கூல்...தெப்பக்குளம்...தபோவனத்து நீச்சல் கொளம் ( கிணறுதான்) அவ்ளோதான்...

வெள்ளிக்கிழமை ராத்திரி வந்திட்டேன்...நைட்டு வீட்ல சாப்ட்டு படுத்திட்டேன்..காலையில் ஏந்திரிச்சவுடனே ( ஒம்போது மணிக்கு) பெரிமா வீட்டுக்கு போனை போட்டேன்...பெரிமா, எங்கே அது...(வீட்ல தலைவருக்கு பயங்கர மரியாதைன்னு வெச்சிக்கங்களேன்)...அதுவா...காலையில ஏந்திரிச்சி முடிவெட்றேன்னு ஒரு இருவது ரூபாய வாங்கிக்கினு போச்சு...என்னா விஷயம் ? ......அப்படீன்னாங்க... ஒன்னுமில்ல பெரிமா சும்மாத்தான்...சரி பெரிமா நான் போனை வெச்சிடறேன்...

இவனுக்கு வீட்ல காச வாங்கறதுக்கு இத விட வேற ஐடியாவே கிடைக்காதே...என்று மனசுல நினைச்சிக்கிட்டே...எங்கே இருப்பான் இவன்....கழுதை கெட்டா குட்டிச்செவுரு...கோபு காலையில கிளம்பிட்டா அங்கவை சங்கவை பெண்கள் பள்ளி காம்பவுண்டு...அத்தை வீட்டு டீவிஎஸ் பிப்டியை எடுத்துக்கிட்டு ஒரு அழுத்து...வழக்கம்போல நாய் அங்கேதான் இருந்தது...என்னை பார்த்ததும் வாயெல்லாம் பல்லு...ஹி ஹி என்று இளித்தது...காரணம் இது "பச்சை பாவாடையில் வரவும்" என்று ஒரு ஸ்கூல் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்த காலம் அது...

நலம் எல்லாம் விசாரித்து முடிந்த பிறகு, என்னடா...என்ன செய்யலாம்...என்று கேட்டபோது, கஞ்சா அடிக்கும் தன் முற்போக்கு திட்டத்தை முன்வைத்தது பன்றி கோபு...(குண்டாயிருக்கறதால பன்றி என்று பாசமுடன் அழைப்பது வழக்கம்)..அறகண்ட நல்லூர் (சங்க காலத்தில் அறம் கண்ட நல்லூர் - ஒரு ராஜா சாமியார் வேசம் போட்டுக்கிட்டு அவனை கொல்ல வந்தவனை மன்னிச்சி ஊருக்கு வெளிய உட்டுட்டு வரச்சொன்ன எடமாம்..தத்தன், முத்தநாதன் அப்படீன்னு பேரெல்லாம் ஸ்கூல் புக்ல வருமே...ராஜா பேரு மறந்திருச்சி...) ரயில்வே ஸ்டேஷன் போகலாம் என்பது தான் பிளான்...அதுக்கு முன்னாடி சைலோம் அருகில் பத்து ரூபாய்க்கு கஞ்சா பொட்லம் வாங்குவது...பிறகு சாதா சிகரட் ஒரு அரை பாக்கெட் வாங்கி அதில் போட்டு இழுப்பது...

குறு குறு என்று இருந்தது...தான் கஞ்சா குடிப்பதில் கின்னஸ் சாதனை செய்தது போல ஒரு கம்பீர பார்வை பார்த்தான் கோபு....டிவிஎஸ் பிப்டி மின்னல் வேகத்தில் பறக்க, சைலோம் அருகே வண்டியை நிறுத்தி ஒரு தம் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக பத்து ரூபா கொடுத்து வாங்கிய பொட்டலத்தை கைலிக்குள் போட்டுக்கொண்டு, எடு எடு எடு வண்டியை என்று நாட்டாமை சரத்குமார் ஸ்டைலில் துள்ளினான் கோபு...

விரைவாக ரயில்வே ஸ்டேஷன்...சாதா கோல்டு பிளாக் முன்பே வாங்கியாச்சு...ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே ரயில் வரும் மாநிலத்திலேயே சிறந்த ஸ்டேஷன்..."பயனிகளின் உடன் வருபவர்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கி செல்லவும்" என்று ஒக்கே ஒக்க போர்டு...இங்கிட்டு ஒரே ஒரு ப்ளாட்பார்மை வெச்சிக்கினு இந்த நாயிங்களோட அளும்ப பாருடா என்று திருச்சி பாசையில் ஒரு தெறிப்பு...

கஞ்சா இலை பொட்டலமாக வரும்...பத்து ரூபாய்க்கு ஒரு 50 கிராம் இலை இருந்தால் அதிகம்..அதை கையில் எடுத்து கொஞ்சம் கசக்கி, சாதா கோல்டு பிளாக் சிகரெட்டில் ( பஞ்சு வைக்காத சிகரெட்) இருக்கும் புகையிலையை கொஞ்சம் எடுத்துவிட்டு அதில் உள்ளே அடைத்து, மீண்டும் புகையிலையை வைத்து மூடி பத்தவெச்சு இழுக்க வேண்டியதுதான்...

ஆளுக்கு ஒரு சிகிரெட்டு தயாரித்தான் கோபு...ஏதோ பி.ஹெச்.டி வாங்கியவன் போல கையில் வைத்து உருட்டி நெளித்து இலையை அருமையான துகள்களாக மாற்றி சிகரெட்டில் அடைத்தான்...

காலை பதினோரு மணி இருக்கும் அப்போது...ப்ளாட்பார்ம் அருகில் வேப்ப மரத்து நிழலில் இருந்த மர பெஞ்சில் கஞ்சா பயணத்தை ஆரம்பித்து, கஞ்சா குடிக்கி என்ற பட்டத்தை பெறும் வேளை...

ஒரு நாலு இழுப்பு...லைட்டா தலை சுத்துது...கோபுவுக்கும் தான்.....அவன் அதிக கஞ்சாவை சுயநலத்தோடு அடைச்சிக்கிட்டான் போலிருக்கு...பய அப்படியே பெஞ்சில சாயறான்...நான் இன்னோரு இழுப்பு இழுத்துக்கிட்டே நாங்க நிறுத்தின டி.வி.எஸ் பிப்டி பக்கம் கழுத்தை சாச்சு வண்டி இருக்கான்னு பாக்கறேன்...கண்ணுல பட்டாம் பூச்சி பறக்குது...


டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...

தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....

எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...

தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...

பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...

விஷயம் என்னன்னா ட்ரெயின் மிக அருகில் வந்துவிட்டது...நான் கோபுவை இழுக்கும்போது ட்ரெயின் கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரத்தில் இருக்கு...அதுதான் ரயில் ஓசை மண்டைக்குள் ஒலித்தமாதிரி ஒரு ப்ரமையை ஏற்ப்படுத்த காரணம்...ஸ்டேஷன் இன்சார்ஜ் யாரும் இல்லை, காரணம் தெரியவில்லை...

ஒரு வழியாக அவனை இழுத்துவந்து பெஞ்சில் படுக்க வைத்து, நானும் படுத்து தூங்கி, எழுந்தோம்...டிவி.எஸ் வண்டி அப்படியே இருந்தது...அடி பம்பில் தண்ணி அடித்து முகம் கழுவி, அவன் மூஞ்சியில் கொஞ்சம் ஊத்தி எழுப்பி இழுத்துவந்து வண்டியில் ஏறு டா என்றேன்...

அவன் கொஞ்சம் தெளிவாகியிருந்தான்...

என்னை பார்த்து சொன்னான்....

பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...

நான் வண்டியை நிறுத்தி, திரும்பி, எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன்...

56 comments:

Anonymous said...

good post.

Pot"tea" kadai said...

கடைசி லைன் தான் மாம்ஸ் உம்மோட "பன்ச்"...

செக்ரேட்டரி என்னையே மொறச்சிட்டிருக்கா...:-))))))))))))))

ரவி said...

வாங்க பொட்டிக்கடையாரே...

நன்றி !!! செக்கரெட்டரி பேரு திவ்யா இல்லையே !!!

SP.VR. SUBBIAH said...

ஆகா, ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது நண்பர் ரவி அவர்களே!

எல்லா மனிதர்களுக்குமே வேறு பட்ட அனுபவங்கள் இருக்கும்.பலரும் கேள்விக்குறிகளுக்குறிய அனுபங்களை வெளியில் சொல்லாமல், அச்சரியப்படும் செயல்களையே சொல்வார்கள்.

சிறுவயதில் யாருக்குத்தான் எந்த கெட்ட அனுபவங்கள் தான் பார்வைக்கோ அல்லது செல்படுவதற்கோ கிடைத்திருக்காது?

அதுவா முக்கியம்?

இல்லை! அதை வெளிப்படுத்துவதற்கும் ஒரு தில் வேண்டும் சாமி! அது உங்களுக்கு நிறைய இருக்கிறது! பதிவிட்டமைக்குப் பாராட்டுக்கள்!

அதைவிட முக்கியமான பாராட்டு உங்களுடைய நட்சத்திர வாரத்திற்கு. கலக்குங்கள். அடித்துப் பதிவுகள் போடுங்கள். நெகிழவைக்கவும் சில பதிவுகளைப் போடுங்கள்

அன்புடன்
SP.VR.சுப்பையா

ரவி said...

சரிங்க சின்னத்தம்பி...

SP.VR. SUBBIAH said...

//ஊர் : உலகலந்தபெருமாளும் கபிலரும் உறையும் திருக்கோவிலூருக்கு அருகில் பாரியின் மகள்கள் அங்கவைக்கும் சங்கவைக்கும் திருமணம் நடந்ததால் மணம்பூண்டி என்று கபிலரால் சூடப்பட்ட, தென்பெண்ணையாற்றினை ஒட்டிய மணம்பூண்டி கிராமம்... //

உங்களுடைய இந்த மனங்கவரும் வரிகளுக்காகவே அந்த மணம்பூண்டி கிராமத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிவிட்டது.

ரவி said...

வாத்தியார் அவர்களே...உங்களை கண்டிப்பாக அழைத்துச்சென்று எங்க ஊரை சுத்திக்காட்டுறேன்...நீங்க எப்போ ப்ரீன்னு சொல்லுங்க...

எங்க ஊர் விஷேஷம் இன்னொன்று..

மெய்ப்பொருள் நாயனார் உறைந்த ஊர்...பக்கத்து நாட்டு அரசன் முத்தநாதன் சிவனடியார் வேடத்தில் உள்ளே நுழைந்து ஓலைச்சுவடியில் வைத்திருந்த கத்தியை எழுத்து குத்தியது இங்கெதான்..ஆனான் மன்னிப்பின் பெருமை உணர்ந்த அந்த மகான், கொலையாளியை துண்டாடவந்த தனது மெய்க்காப்பாளன் தத்தனை அழைத்து கொலையாளி முத்தநாதனை ஊருக்கு வெளியே விடச்சொல்லிய சம்பவம் நடந்த ஊர்..காரணம் வினவிய தத்தனுக்கு அவர் சிவனடியார் வேடத்தில் இருக்கிறார்...வேடமிட்டிருந்தாலும் சிவனடியாரை துன்புறுத்தேன்...என்று பதிலிறுத்தார் மெய்ப்பொருள் நாயனார்...தத்தன் அவரை ஊருக்கு வெளியே விட்ட இடத்தின் பெயர் அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது இப்போது ( அறம் கண்ட நல்லூர்)

டிபிஆர்.ஜோசப் said...

ரவி,

முதல்ல நட்சத்திர வார வாழ்த்துக்கள்..

சரி அது முடிஞ்சாச்சி..

யார் என்ன சொன்னாலும் இந்த பதிவ நட்சத்திர பதிவா ஏத்துக்க முடியாது..

அதுவுமில்லாம இது போன வெள்ளிக்கிழமை டேட் லைன்ல இருக்கு..

இன்னைக்கித்தான் ஒங்க நட்சத்திர வாரம் தொடங்குது..

அதனால.. ஒங்க நட்சத்திர பதிவு லிஸ்ட்ல இத சேர்க்க முடியாது.

உருப்படியா ஒரு பதிவ எழுதி வாரத்த தொடங்க.. க்விக்:))

டிபிஆர்.ஜோசப் said...

சிறுவயதில் யாருக்குத்தான் எந்த கெட்ட அனுபவங்கள் தான் பார்வைக்கோ அல்லது செல்படுவதற்கோ கிடைத்திருக்காது?//

இது ஒங்களுக்கு கெட்ட அனுபவமா ரவி? உண்மைய சொல்லுங்க..

இன்பா (Inbaa) said...

//சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...//

அப்புறம் வண்டிய யார் ஓட்டுனது?

ரவி said...

பாரியின் விஷயம்...

குறிஞ்சிக்கோர் கபிலர் என்று பாராட்டுப்பெற்ற கபிலர், பாரியின் உயிர்த்தோழர்....பாரி பறம்பு மலையை மையமாக கொண்டு ஆள்கிறான்..அது திருவண்ணாமலை என்று நினைக்கிறேன்...பாரியின் ஈகையால் அவன் புகழ் எட்டுத்திக்கும் பரவுகிறது...அதனால் மூவேந்தர் கூடி படைநடத்தி வருகிறார்கள் - பாரியை அழிக்க...

கோட்டையும் மலையும் முற்றுகை இடப்படுகிறது....தோல்வி தன்னை நெருங்குகிறது என்றுனர்ந்த பாரி, தன் அன்பு மகள்களான அங்கவை மற்றும் சங்கவையை தன் தோழர் கபிலருடன் தப்புவிக்கிறான்...

கபிலர் திருக்கோவிலூரை அடைகிறார்..திருக்கோவிலூர் அரசனாகிய காரி, ஈகைத்திறத்தில் சிறந்தவன், சிவபக்தன்...அவனின் விருப்பம் கேட்டு பாரியின் மகள்களை அவனுக்கு திருமணம் முடித்துவைக்கிறார்..

திருமணம் முடிந்த சில நாழிகையில் பாரி போரில் வீரமரணம் அடைந்த செய்தி எட்டுகிறது...கதறுகிறார் அவர் மக்கள்...சொல்லொனா துயரடைகிறார் கபிலர்...

பிறகு, தென்பென்னை ஆற்றில் வடக்கு பக்கம் பார்த்திருக்கும் பெரும்பாறை ஒன்றின் மீதமர்ந்து வடக்கிருந்து உயிர்துறக்கும் முகத்தான், உணவு உண்ணாமல் எவர் சொல்லியும் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல், கண் துஞ்சாமல், தன் இன் உயிர் நீந்தார்...

ஒரு குறிஞ்சிப்புலவன், குறிஞ்சிக்கோர் கபிலன், நட்புக்காக உயிர்நீத்த அவ்விடத்தில் திருக்கோவிலூர் சிற்றரசன் காரி, கோவில் ஒன்றை எழுப்புகிறான்...

அந்த கோவில் இன்னும் கம்பீரமாக, நட்புக்கு இலக்கணமாக, பல வெள்ளம், நீரோட்டத்தாலும் அடித்து செல்லப்படாமல், நிற்கிறது தென்பென்னை ஆற்றில்...

ரவி said...

நன்றி இன்பா !!!!

ரவி said...

சொல்லிவிட்டேன் டிபிஆர் அவர்களே !!!

உண்மை !!!

siva gnanamji(#18100882083107547329) said...

உண்மையான கஞ்சாகேஸாலே கூட
இப்படி தத்ரூபமா எழுதியிருக்க
முடியாதில்லே.....?
காதுல்லாம் பெரிசு;
எவ்ளோவ் பூ வேணாலும் சுத்தலாம்;
தாங்கும்!

Sridhar V said...

ரவி அவர்களே,

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

//டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம்//


:-)))) நன்றாக இருக்கிறது நீங்கள் எழுதும் விதம். தொடர்ந்து எழுதுங்கள்.

//மெய்ப்பொருள் நாயனார் உறைந்த ஊர்...//

சிறு வயதில் படித்த ஞாபகம். அருமையான விளக்கத்திற்கு நன்றி!!!

நட்சத்திர வாரத்தில் "சிறப்பு வேலை வாய்ப்பு மலர்" உண்டா? :-)

ரவி said...

நன்றி சிவஞானம்ஜி...தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்க...

ரவி said...

நன்றி ஸ்ரீதர் வெங்கட்...கட்டாயம்..இல்லாமலா :))

கருப்பு said...

உள்ளோன்று வைத்து புறமொன்று பேசாமல் அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.

கஞ்சா என்றால் என்னவென்று அறிய நானும் ஒரு இழுப்பு(ஃபப்) இழுத்ததுண்டு. வானத்தில் மிதப்போம் என்றார்கள், ஆழ்கடலில் பயணிப்போம் என்றார்கள்.

ஆனால் ஒன்னுத்தையும் காணோம்.

ரவி said...

ஒருவேளை அது போலி கஞ்சாவா இருக்கும் கருப்பு அவர்களே...கஞ்சா என்று புளியமரத்து இலையை புதியவர்களிடம் விற்றுவிடுவார்கள்...நம்மாளும், கஞ்சா கஞ்சா என்ற நினைப்பிலேயே குடித்து "செவனப்பை குடித்து மப்பானதுபோல்" விழுந்து கிடப்பார்கள் ஹி ஹி

இறையடியான் said...

//டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம்//

பாத்துங்கனா தல கானம போயிடும்

மத்தபடி நட்சத்திர வார வாழ்த்துக்கள்

கருப்பு said...

அனுபவம் பேசுது!

கார்மேகராஜா said...

என்னையா இது! பதிவுல நாளைக்கு தேதி தெரியுது.

--------

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா,
சின்ன குழந்தையும் சொல்லும்.

அட உன் பேரைத்தான்.

இந்த வாரம் செந்தழல் ரவி வாரம்னு சன் டிவியில விளம்பரம் குடுத்தரட்டா?

கார்மேகராஜா said...

///கஞ்சா என்றால் என்னவென்று அறிய நானும் ஒரு இழுப்பு(ஃபப்) இழுத்ததுண்டு. வானத்தில் மிதப்போம் என்றார்கள், ஆழ்கடலில் பயணிப்போம் என்றார்கள்.

ஆனால் ஒன்னுத்தையும் காணோம். ///

நான் சிகரெட் குடித்திபார்த்து ஒன்றும் இல்லையென கீழே போட்டுள்ளேன்.

இது அளவுமீறிய சோதனையா இருக்கே!

கார்மேகராஜா said...

ரவி! கஞ்சா அடிச்சா என்ன பிரிவுல தண்டனை? சொல்லுங்களேன்.

இதனை என் போலிஸ் மாமா கேட்கச் சொன்னார்.

ஸயீத் said...

இப்போவும் அந்தப் பழக்கம் இருக்கா?. இல்லையா?

எனக்கு ஒரு சந்தேகம். கஞ்சா அடிப்பதா? குடிப்பதா? அல்லது இழுப்பதா?.

கார்மேகராஜா said...

///எனக்கு ஒரு சந்தேகம். கஞ்சா அடிப்பதா? குடிப்பதா? அல்லது இழுப்பதா?.///

புகைப்பது என்று நினைக்கிறேன்.
இல்லையா ரவி? (அண்ணே)

Viji said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!.
"கஞ்சா குடிக்கி"ய படிச்சிட்டு மானிட்டர பாத்து சிரிக்கவும் , என்ன சுத்தியும் ஆபீஸ்ல உக்காந்து இருக்கற மூனு பேரு ' இந்த பய வெள்ளிக் கிழம வீட்டுக்கு போற வரைக்கும் நல்லாதான இருந்தான்னு ' ஒரே கலக்கத்துல இருக்காங்க.
நீங்க கலக்குங்க தலைவா இந்த வாரம் முழுதும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
நட்சத்திர வாழ்த்துக்கள்!
தங்கள் பதிவும்;பின்னூட்டங்களும் எனக்கு நிறைய அறியாத தகவல்களை அள்ளித் தந்தது.
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

வணக்கம்..ரவி... நட்சத்திர வாழ்த்துக்கள்... கலக்குங்க.. இந்த வாரத்தை...

Unknown said...

ரவி,
உங்கள கொலைக்கஞ்சா சிங்கம் னு இல்ல கொலவெறிப்படையெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க... அதுல பாதி தான் உண்மை போல :)))))

Sivabalan said...

ரவி,

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.!!

ecr said...

கதை கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு!

ஆனா அந்த கோபு கிட்ட கேட்டாத்தான் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துக்கு வரும்!

குழலி / Kuzhali said...

செந்தழல் ரவி, நட்சத்திர வார வாழ்த்துகள், அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கிங்க இந்த வாரத்தை, என்ன ஒரு எள்ளல், என்ன ஒரு நையாண்டி, பொதுவாக சு.ரா.வின் எழுத்தில் துள்ளிவிளையாடும் எள்ளல் (டேய் உனக்கு முதல்ல சு.ரா. தெரியுமா அப்படினு யாரும் கேட்கப்படாது கேட்கப்படாது கேட்கப்படாது) இங்கே உள்ளது, தன்னைத்தானே நையாண்டி செய்துகொள்வதில் 'சோ'வும் பெயர் வாங்கியவர், அதே போல பதிவில் பட்டையை கிளப்பியிருக்கிங்க.... இயல்பாக ஏதோ நெருங்கிய நண்பன் அருகிலிருந்து பேசுவது போன்றிருந்தது இந்த பதிவு, பதிவோ கதையோ படிக்கும் போது வாசிப்போடு ஒரு படமும் நம் கண்முன் ஓடினால் அதுவே அந்த எழுத்தாளனின் பெரிய வெற்றி, ஒரு நொடி என் கண் முன் சட்டென்று இரயில்வே நிலையமும், பெஞ்சும் பிளாட்பாரமும் அங்கே இருவரும் இழுத்துக்கொண்டதும் ஓடியது... அனேகமாக இந்த பதிவை வாசித்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பதிவின் ஊடாக ஏதேனும் படக்காட்சி நிச்சயம் ஓடியிருக்கும் என நம்புகிறேன்.

அப்புறம் சொன்னீங்களே ஒரு விசயம், கஞ்சா கிடைக்காத ஊரே இல்லைனு, எனக்கு கல்லூரியின் மூன்றாம் வருடத்தில் தான் தெரிந்தது, சீனியர் நண்பரோடு வெளியே போனபோது சட்டென்று கஞ்சா வாங்கி வந்த போது கொஞ்சம் அரண்டு தான் போனேன், நீங்களெல்லாம் கஞ்சாவுக்கு இத்தனை பில்டப், நான் ஒரு பில்ட்டர் கோல்ட் பிளேக் சிகெரெட் அடிக்க கிளம்பியது ஒரு பெரிய திரில்லர் சம்பவத்துக்கு இணையானது....

சுவையான நட்சத்திர வாரத்தின் எதிர்பார்ப்பை இந்த பதிவின் நடை அதிக அளவில் ஏற்படுத்திவிட்டது, அருள், பொன்ஸ் இப்போது ரவி என தொடர்ந்து கலக்கலான நட்சத்திரங்கள்....

நன்றி

ரவி said...

குழலி அவர்களே...இவ்வளவு சிறப்பான திறனாய்வை எதிர்பார்க்கவில்லை, இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க...

siva gnanamji(#18100882083107547329) said...

/பாரிமகளிரை மணந்தவர் காரி/

காரிக்கு தெய்வீகன் எனும் பெயரும்
உண்டா?

ரவி said...

ஆம் சிவஞானம்ஜி அவர்களே...அவர் நான்கைந்து பெயர்களில் வழங்கப்பட்டார்...எனக்கு மற்ற பெயர்கள் சரியாக நினைவில்லை எனினும், திருக்கோவிலூர் வரலாறு என்ற புத்தகத்தை படித்தபோது இந்தப்பெயர் இடையிடையே வரக்கண்டேன்...

நாமக்கல் சிபி said...

நட்சத்திரமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்!!!

வெளிகண்ட நாதர் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
நற்சேத்திரமாகச் சொலிக்க வாழ்த்துகள்.
சரித்திரத் தகவல்களை அருமையாகத் தந்துள்ளீர்கள்.

Anonymous said...

:):)))

வெண்பூ said...

அடப்பாவி.. கஞ்சா எல்லாம் குடிக்கிற அளவு பெரிய குடிகாரனா நீயி... :)))

ரவி said...

வெண்பூ...

இது கதை !!!

ரவி said...

இது ஒரு மீள் பதிவு !!!!!!!!

ரவி said...

மே 17 2006 ல் எழுதியது...

ரவி said...

இதுல பர்ட்ஸ் கமெண்ட் ராப் ஆல போட முடியாது...

சினேகிதி said...

தலைப்பைப் பார்த்து உள்ள வந்திட்டன்:- ..எங்கட ஊரிலயும் கஞ்சா அடிக்கிற பெடியங்கள இப்பிடித்தான் சொல்றது.......குடு அடிக்கிறதென்றது சொல்றதெல்லா அதும் கஞ்சாவா?

சினேகிதி said...

அது சரி ஏன் டிசம்பர் 10-2008 என்று போட்டிருக்கு??

ரவி said...

குடுன்னா என்னான்னு தெரியலியே ? ஒரு வேளை அபினா ?

விஜய் ஆனந்த் said...

:-)))...

// செந்தழல் ரவி said...
வெண்பூ...

இது கதை !!! //

கதை நல்லா இருக்கு!!!

Athisha said...

nice post annatha....

50....

நவநீதன் said...

எல்லாத்துலயுமே கிளைமாக்ஸ் முக்கியம்....
இதுல கிளைமாக்ஸ் நல்லாருக்கு...

வால்பையன் said...

//நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா//

சில அனுபவங்கள் கெடுத்தது இல்லையா என்று கூட சொல்லலாம்

வால்பையன் said...

//களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...//

அவரா சொன்னாரு

நவநீதன் said...

இரண்டு வார்த்தையில் ஒரு கவிதை சொல்லவா??

நட்சத்திரம் மின்னுகிறது...
ஹி .. ஹி ...

Anonymous said...

"பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்..."

Awesome punch in the ending!

வால்பையன் said...

ஒரே தமாசு
கஞ்சா அடிச்சா இப்படியெல்லாம் இருக்குமா
அதுவும் சரி தான்
செத்தா தானே சுடுகாடு தெரியும்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....