Thursday, July 26, 2007

தமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்

சமீபத்தில் வலையுலகில் ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது...ஹைய்யா ஜாலி ஜாலி...பிரச்சினை இல்லை என்றாலோ, பின்னவீனத்துவ கவிதை படிக்கவில்லை என்றாலோ பயங்கர போரடிக்குது...பல பதிவர்கள் இதை சொல்லி ஆதங்கப்பட்டார்கள்...அதனால் பின்னவீனத்துவமாக எழுதத்தெரிந்தவர்கள், அடிக்கடி ஒரு கவிதை போடவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்...பொட்டீக்கடை, வரவணை, மிதக்கும் வெளி, அய்யனார், பாவெல் கவனிக்க...

கம்மிங் பேக் டு த பாயிண்ட்...

தமிழச்சியின் ஆதங்க பதிவொன்று ( கும்மி பதிவுகளுக்கே அதிக கவனம் கிடைக்கிறது) இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது...அதனை கடுமையாக எதிர்த்த செல்லா, வாருங்கள், நீங்களும் வந்து கும்மி அடிக்கும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள் என்று அழைப்பு விடுத்து பதிவிட்டார்..இதே கருத்தை சொன்ன மாலனை கூட இப்படித்தான்(!!) கும்மியதாக தெரிவித்தார்..( நான் கூடத்தான் எம்.ஜி.ஆருக்கு டாட்டா காட்டுனேன்...அதை விடுங்க)...

ஆனால் தமிழச்சி இன்றைய பதிவில் செல்லாவை குமுறி இருக்கிறார்...அதை படித்ததும் இப்படி ஒரு பதிவிட்டு தமிழச்சியின் உக்கிர பார்வையில் இருந்து தப்ப செல்லாவுக்கு ஐடியா கொடுக்கலாமே என்று தோன்றியது...

இதோ ஐடியாஸ்...

1. பாண்டிபஜாரோ, வா.வூ.சி. பார்க்கோ சென்று உடனே ஒரு கருப்பு பெல்ட் வாங்கவும்...(தமிழச்சி கராத்தேயில் ப்ளாக் பெல்ட்டாம்)

2. பிரெஞ்சு பிரை, உருளை வருவல் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்...(தமிழச்சி இருப்பது ப்ரான்ஸ்)

3. பெரியவர்களையோ, பெரியார்களையோ பார்த்தால் இடதோ, வலதோ ஒதுங்கவும்...

4. சொந்தமாக துணி துவைப்பவராக இருந்தால், துணிகளை வாஷிங் மெஷினிலேயே போடவும்...கும்மி துவைக்க வேண்டாம்..

5. ஒரு நோட்டை எடுத்து பெரியார் பெரியார் பெரியார் என்று 100 தடவை இம்போசிஷன் எழுதவும்...

6. ஒரு குவளை சிறுவாணி தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடிக்கவும்...

7. குடிக்கும் ரெட் வைனில் "இம்போட்டர் ப்ரம் ப்ரான்ஸ்" என்று இருந்தால் தொடவேண்டாம்..
அம்புட்டுத்தேன்...!!!!!!!!!!

15 comments:

ILA (a) இளா said...

ஆகா, நான் வரலே இந்த ஆட்டத்துக்கு.

முரளிகண்ணன் said...

ஆஹா கிளம்பீட்டாய்ங்கய்யா கிளம்பீட்டாய்ங்க.
8.அடுத்த போட்டி பெரியாரை மையமாக வைத்து நடத்தவும்

துளசி கோபால் said...

கொரியா போனாலும் கை ச்சும்மா இருக்காதா? :-)))))

ரவி said...

// ILA(a)இளா said...
ஆகா, நான் வரலே இந்த ஆட்டத்துக்கு.
//

ஒக்கே, நானே நின்னு ஆடறேன்..!!!

ரவி said...

///ஆஹா கிளம்பீட்டாய்ங்கய்யா கிளம்பீட்டாய்ங்க.
8.அடுத்த போட்டி பெரியாரை மையமாக வைத்து நடத்தவும் //

அட ஆமாம், நல்ல யோசனையா இருக்கே...!!!!

ரவி said...

///கொரியா போனாலும் கை ச்சும்மா இருக்காதா? :-))))) ///

ஹி ஹி...

பொதுவா இந்த பதிவு மோகந்தாஸ் தான் போட்டிருக்கனும்...

Anonymous said...

சூப்பரப்பு இனிமே நமக்கும் போரடிக்காது

தலைப்ப இப்படி போட்டுருக்கலாம்

தமிழச்சியிம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு "நச்" னு 7 யோசனைகள்

TBCD said...

/*பொதுவா இந்த பதிவு மோகந்தாஸ் தான் போட்டிருக்கனும்...*/
இதை நாங்க தான் சொல்லனும்... பன்னுறது எல்லாம், மொள்ளமாறித்தனம், அதுல வியாக்கியானம் வேறா

dondu(#11168674346665545885) said...

செல்லாவோட கும்மிக்கும் வந்தேன். இங்கும் வந்தால் போயிற்று.

//ஒரு நோட்டை எடுத்து பெரியார் பெரியார் பெரியார் என்று 100 தடவை இம்போசிஷன் எழுதவும்...//
ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய்.

இவற்றில் எந்த நோட்டில் எழுத் வேண்டும்?

பிறகு அதை தி.நகர் சரவணா ஸ்டோர்சில் கொடுத்து ஏதாவது பந்து வாங்க இயலுமா?

//பொதுவா இந்த பதிவு மோகந்தாஸ் தான் போட்டிருக்கனும்...//
அவரை வைத்து எப்போது கும்மி போடுவீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

போண்டாவெல்லாம் கும்மியடிக்க ஆரம்பிச்சாச்சா. வலையுலகம் உருப்புட்டா மாதிரி தான்.

வவ்வால் said...

ரவி,
இதய நோய் தாக்காமல் இருப்பது எப்படினு புக் போட்ட கருப்பு கண்ணாடி தமிழ்வாணன் இதய நோய் தாக்கி தான் செத்தார் , அத போல ஓசைக்கு தப்பிக்க வழி சொல்லிட்டு நீங்க மாட்டிக்கிட்ட போல தெரியுதே!சொ.செ .சூ தான் :-))

விரைவில் செந்தழல் ரவிக்கு நெருப்பு வைப்போம் அப்படினு நான் சொல்லலைங்க பதிவு வரும் ! வர வேண்டியவங்க கிட்டே இருந்து

Osai Chella said...

http://osaichella.blogspot.com/2007/07/blog-post_3872.html

காயத்ரி சித்தார்த் said...

சிரித்தேன்.. ரசித்தேன்.. நல்ல ஐடியாஸ் தான் ரவி!

மாசிலா said...

செல்லாவுக்கு ஒரு குல்லாவையும் போடும்படி ஒரு கருத்து சொல்லி இருக்கலாம்.

Anonymous said...

ex6j7f Hello! Great blog you have! My greetings!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....