ஒரு சிறிய ப்ராஜக்ட், அதற்கு இரண்டே பேர் கொண்ட ஒரு டீம். நானும் அதில் ஒரு அங்கம். என் வேலைகளையும் சேர்த்து என் நன்பன் விஜய் பார்த்துவிடுவான். நான் வெப் உலகம் அது இது என்று ஏதாவது நெட்டில் மேய்ந்துகொண்டிருப்பேன்...
எங்கள் நிறுவனத்தில் அமெரிக்க ப்ராஜக்டுகளை செய்ய உள்ள பத்து பதினைந்து டீம்களில் எங்களுடையது தான் மிகவும் சிறியது...எங்கள் ஆன்சைட் கோ.ஆர்டினேட்டர் எங்களை அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார். நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்தது பாம், பாக்கெட் பி.சி போன்றவற்றுக்கான அப்ளிகேஷன்கள்...
பழைய மேனெஜர் ரிசைன் செய்து இரண்டு மாதங்களாகியும் எந்த புதிய மேனேஜரும் அமர்த்தப்படவில்லை...நாங்களே க்ளையண்ட் உடன் பேசுதல், டெலிவரி என்று அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்...
எங்களுக்கு ஒரு புதிய மேனேஜர் வந்துள்ளதாக மின்னஞ்சல் வந்திருந்தது...அவரே ஒவ்வொரு ப்ராஜட் டீம் உடனும் சென்று அறிமுகம் செய்துகொண்டுவந்தார். எங்கள் சிறிய டீமையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள்...
கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...
ஒரு ப்ராஜட்க் மேனெஜருக்கு உரிய எல்லாம் அவருக்கிருந்தது...ஆங்கிலத்தில் அரைகுறைகளான எங்களுக்கு அவரிடன் படபட ஆங்கிலம் பெப்பே என்றது...
சிங்கப்பூரில் ஜாவா ப்ராஜட் மேனேஜராக இருந்தவர்...மனைவி இங்கே சென்னையில் ஏதோ இ-பப்ளிஷிங் கம்பெனியில் உயரதிகாரி. ஒரு குழந்தை...
இது இரண்டு நாளில் அவரைப்பற்றி நாங்கள் விசாரித்து தெரிந்துகொண்டது...ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வெர்ட் மேனேஜர்களிடையே - உரிமையுடன் தோளில் கைபோட்டு பேசும் அவரின் அப்ரோச் அலுவலகத்தில் ரொம்ப பேருக்கு உடனெ பிடித்துப்போனது...
நான் வசித்தது திருவான்மியூரில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சரின் வீட்டு மேல் மாடியில். என் நன்பன் விஜய் வசித்தது திருவல்லிக்கேணியில்...
நாங்கள் இரவு இரண்டுமணிவரை இருந்து பணியாற்றினால் அவரும் எங்களோடவே அமர்ந்திருப்பார்...வேலை முடிந்ததும் விஜயை திருவல்லிக்கேணியிலும், என்னை திருவாண்மியூரிலும் ட்ராப் செய்துவிட்டு அவர் கோடம்பாக்கத்துக்கு - அங்கே வசித்துவந்தார், போவார்...
தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளர் என்றாலே கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுத்தான் பழகுவார்கள், இவரிடம் நாங்களே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுவோம்...
ஆனால் இவரே வரும்காலத்தில் வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் என்று கேட்பார் என்று நான் கனவிலும் நினைத்துப்பாராதது...
நினைவுகள் தொடரும்...!!!!!!!!!!!
38 comments:
'வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் '
இதை தலைப்பாக போட்டிருந்தால்
தமிழ்மணத்தில் ரகளையே நடந்திருக்கும் :).
//நான் வசித்தது திருவான்மியூரில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சரின் வீட்டு மேல் மாடியில்.//
அவர் முன்னாள் அமைச்சர் அல்ல தோழர், முன்னாள் எம்.பி.
//'வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் '//
சாரு ஆன்லைன் படிப்பது போல அபாரமாக இருக்கிறது. இன்றே எஞ்சிய பகுதிகளையும் பதிந்து விடவும் :-)
//ஆனால் இவரே வரும்காலத்தில் வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் என்று கேட்பார் என்று நான் கனவிலும் நினைத்துப்பாராதது...
//
ஹா...ஹா... ஆரம்பமே ஸ்போர்ட்ஸ் கார் ரேஞ்சுக்கு ஃபுல் த்ராட்டல். அடுத்தது என்னன்னு காத்திருக்க வெச்சீட்டீங்க ரவி.
கதை களைகட்டுதே.. சீக்கிரம் மிச்சத்தையும் போடுங்க..
கடைசிவரியில் பஞ்ச்சா.. பஞ்சர் ஆகிட்டாரா அவர்.
romba romba super start. You have a good command over the language and you know how to write a "Thodar kathai".
- Loose paiyan
என்னடா இது? ஆரம்பமே சரியில்லாம இருக்கு..
அடல்ட்ஸ் ஒன்லி பதிவா? முன்னாடியே சொல்ல வேணாம்..
என்னை மாதிரி சின்னப் புள்ளைங்கள்லாம் வராம இருந்திருப்போம்ல..
//இரண்டே பேர் கொண்ட ஒரு டீம். நானும் அதில் ஒரு அங்கம். என் வேலைகளையும் சேர்த்து என் நன்பன் விஜய் பார்த்துவிடுவான். //
அம்மா நான் ரேஸ்ல செகண்டு
அப்படியா எத்தனை பேர் ஓடினாங்க
ரெண்டு பேர்
:) :)
இந்த உண்மைத் தொடர் "ஒ" ஸாரி தொடர்கதை எதுவரைக்கும் போகும்
"ஒரு நடிகையின் கதை" மாதிரி நல்லாத்தான் போய்ட்டிருக்கு!
ஏதோ தொழில்நுட்பம் பற்றி எழுதப் போறதா சொன்னீங்கள். கடைசியில் இப்பிடியா? சியோலில் இதுக்கு மட்டும் நேரம் கிடைக்குதாக்கும். அங்கேயே எங்களுக்கும் ஒரு வேலை பாருங்களன்.சத்தியமாய் நான் அவரை மாதிரி ஒண்ணும் கேட்க மாட்டன். நானே தனிய டீல் பண்ணிக்குவன். உங்களுக்கு உலக நினைப்பு மறந்து போயிட்டுதோ? தைரியமாய் படமெல்லாம் போட்டுட்டு இப்பிடி போட்டுத் தாக்கிறீங்களே!! அது சரி படத்தில இருக்கிறது ஆரு?
பஞ்சாயத்து இல்லாம ஒரு பதிவா? ஆஹா...
ப்ராஜக்ட் மேனேஜரின் கதை என்ரதற்கு பதில் வேறு எதுவோ வந்திருக்க வேண்டுமோ?
நல்ல மேட்டர் நிறைய கைவசம் வெச்சிருக்கீங்க போல...
ஐயையோ... நான் மேட்டர்-ன்னு சொன்னது பதிவுக்கான மேட்டர்ங்க. வேற அர்த்தமெதும் எடுத்துக்காதீங்க...
//நான் வசித்தது திருவான்மியூரில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சரின் வீட்டு மேல் மாடியில்.//
அவர் முன்னாள் அமைச்சர் அல்ல தோழர், முன்னாள் எம்.பி.
//'வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் '//
சாரு ஆன்லைன் படிப்பது போல அபாரமாக இருக்கிறது. இன்றே எஞ்சிய பகுதிகளையும் பதிந்து விடவும் :-)
Wednesday, September 17, 2008
லக்கி, கொஞ்சம் உண்மைகளை மாற்றி கதைபோலவே கொண்டுசெல்கிறேனே ? ? ?
ஊட்டத்துக்கு நன்றி வெண்பூ...அடுத்த மேட்டர்...சே பதிவு இன்றே போடுகிறேன்...
//'வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம் '
//
அவர் ஏங்க உங்களைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியக் கேட்டார்? (கவுண்டர் வாய்சில் படிங்க)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................
வாங்க பரத், நிறைய சரக்கு உள்ள ஸ்டோரி, தொடர்ந்து எஞ்சாய் !!!
//கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...//
ஏங்க இப்படியெல்லாம் வர்ணிச்சிட்டு,
//ஒரு ப்ராஜட்க் மேனெஜருக்கு உரிய எல்லாம் அவருக்கிருந்தது...//
அப்புறம் இப்படி போட்டிருக்கீங்களே, நியாயமா?:):):)
வாங்க தமிழ் நெஞ்சம். வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி..!!!
'கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...'
'இப்ப நான் இருக்கர மாதிரின்னு' எழுதினா எங்களுக்கு புரியாதா :)
//'கொஞ்சம் குள்ளமாகவும், முகத்தில் ஆங்காங்கே பரு - புள்ளிகளுடனும், தலையில் சிறுநரைகளுடனும்...'
'இப்ப நான் இருக்கர மாதிரின்னு' எழுதினா எங்களுக்கு புரியாதா :)//
இல்லைங்களே புகைப்படத்துல இரவி உசரமா இருக்காருங்களே
//வாரியா நன்பா, நாம இருவரும் இணைந்து ஒரு விபச்சாரியை அழைப்போம்//
ச்சி..ச்சி.. பேட் பாய்ஸ்.. :P
//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது.//
ஏன் சரியா போணி ஆகலையா? :))
வாங்க பரிசல், ஆரதரவுக்கு நன்றி ...!!!
/////ஒரு ப்ராஜட்க் மேனெஜருக்கு உரிய எல்லாம் அவருக்கிருந்தது.../////
raap ஆங்கில புலமை, மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் போன்றவை...
///என்னடா இது? ஆரம்பமே சரியில்லாம இருக்கு..
அடல்ட்ஸ் ஒன்லி பதிவா? முன்னாடியே சொல்ல வேணாம்..
என்னை மாதிரி சின்னப் புள்ளைங்கள்லாம் வராம இருந்திருப்போம்ல..///
இந்த பின்னூட்டம் ஹார்ட் அட்டாக் வரவழைக்குது அண்ணே
///இந்த உண்மைத் தொடர் "ஒ" ஸாரி தொடர்கதை எதுவரைக்கும் போகும்///
கட்டையில போறவரைக்கும்
///'இப்ப நான் இருக்கர மாதிரின்னு' எழுதினா எங்களுக்கு புரியாதா :)///
அனானி இது என்னைப்பற்றிய கதை அல்ல, நான் ப்ராஜக்ட் மேனேஜரும் அல்ல. வெறும் சாப்ட்வேர் எஞ்சினீயர்
///'இப்ப நான் இருக்கர மாதிரின்னு' எழுதினா எங்களுக்கு புரியாதா :)//
இல்லைங்களே புகைப்படத்துல இரவி உசரமா இருக்காருங்களே///
கரெக்ட் ராப். அப்படி பிடிங்க பாய்ண்ட்ட
//ஏன் சரியா போணி ஆகலையா? :))
Wednesday, September 17, 2008
///
எல்லாரும் நல்லவர்களானதால் வந்த வினை :)))
முடிக்கும் போது ஆரம்பிக்க்றீங்க எங்க போயி முடியுதுன்னு பாப்போம்
///முடிக்கும் போது ஆரம்பிக்க்றீங்க எங்க போயி முடியுதுன்னு பாப்போம்///
வெயிட் பண்ணுங்க, முடிவு கண்டிப்பா தெரியும் குடுகுடுப்பை
Ex MP? O.S. Manian???
///Pot"tea"kadai said...
Ex MP? O.S. Manian???
///
அய்யா இது ஒரு புனைவு...
/////Pot"tea"kadai said...
Ex MP? O.S. Manian???
///
அய்யா இது ஒரு புனைவு...//
enna ezhavo...
ethachum oru peru pottaa naanum adhukku pakkaththu veettula thaan thangi irunthen...apdinnu kummi adikka vidungappaa
:)
Post a Comment