ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு
2004 வாக்கில் எல்லாம் சென்னையில் நார்த் இண்டியன் பெனிட்ரேஷன் அவ்வளவாக இல்லை...இப்போது எல்லாம் தூவினாற்போல ஆங்காங்கே நார்த் இண்டியன் முகங்கள் தெரிகின்றன இல்லையா...எல்லாம் உபயம் ஐ.டி கம்பெனிகள் என்று நினைக்கிறேன்...
அப்போது எங்கள் அலுவலகத்தில் புனே பக்கம் படித்து வளந்த மமதி சேர்ந்திருந்தாள்...என்.ஐ.ஐ.டி முடித்த கையோடு இங்கே பணியாற்ற வந்தவளின் தாயார் ஏதோ வெளிநாட்டு தூதரகத்தில் பணியிலிருந்தார்...
ஐந்தரை அடி உயர நீலக்கண் அழகியான அவள் தாயார் புனேவை சேர்ந்தவர், தந்தையார் ஏதோ மத்திய தரைக்கடல் நாட்டவர். இயல்பான அழகி, இறுக்கமான உடையணிவாள், எங்கள் அலுவலகமே அவளை தேவதைபோல் பார்த்தது...
ஒரு வார்த்தை பேசமாட்டோமா என்று வாச்மேன் ப்யூன் உட்பட எல்லோரும் ஏங்கும் வேளையில் அவளை எங்கள் இருநபர் குழுவில் ட்ரெயினீயாக நியமித்தார் எங்கள் மேனெஜர்.
வாரம் ஒரு முறை ஏனோ தானோவென்று எங்கள் ப்ராஜக்டை பற்றி கேட்கும் அவர் - அதுவும் நாங்களாக போய் சொல்லவேண்டும், இரண்டு நாளைக்கொருமுறை எங்கள் இருப்பிடத்துக்கே வந்து க்ளையண்ட் என்ன சொல்கிறான், ஆன்சைட் கோ-ஆர்டினேட்டர் என்ன சொல்கிறார், எத்தனை டிபெக்ட்ஸ், மென்பொருள் நல்ல ஸ்டேபிளாக இருக்கிறதா என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார்...
இந்த வெள்ளந்தி மனதுக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை, இருந்தாலும் ம.பி.ப.ந குழுவில் (மமதியை பிரப்போஸ் பண்ணவிருக்க்கும் நபர்) அடியேனும் இணைந்துகொண்டு, நாளொரு வண்ணமும் பொழுதொரு கடலையுமாக என் காதலையும் வளர்த்துவந்தேன்...என் டீம் மேட் விஜய் எப்போதும் அடுத்த அசைன்மண்ட், கேரியர் க்ரோத், பெங்களூரில் வேலை தேடுவது என்று மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி திரிந்துகொண்டிருந்தான்...
மமதியின் யாஹூ மெஸன்ஜர் ஐ.டி பெற்று, "had your lunch ya ? " என்பது போன்ற மொக்கை கேள்விகளுக்கு மத்தியில் நமக்கே மாட்டும் என்று மற்றவர்போல் சிந்தனை செய்து பொழப்பை ஓட்டிவந்த வேளையில் மமதியின் பர்சனல் விருப்பு வெறுப்புகள் கொஞ்சம்போல அறிந்துவந்தேன்...
இதுபோன்ற சின்ன கம்பெனியில் வேலை செய்ய மமதிக்கு சற்றும் பிடிக்கவில்லை...மமதி விரும்புவதெல்லாம் விப்ரோ, இன்போஸிஸ், கோவன்ஸிஸ் போன்ற கம்பெனிகளில் வேலை செய்யவேண்டும், அவரது தாயார் விருப்ப ஓய்வு பெற்று புனே செல்லும்போது, நிறுவனத்தில் ட்ரான்ஸ்பர் பெற்று செல்லுமாறு அமையவேண்டும் என்பதுதான்...
இதை அவள் வெளிப்படையாக பலமுறை சொல்லியிருக்கிறாள் இந்த ஆறு மாதத்தில்...ப்ராஜக்ட் மேனேஜரின் நன்பர்கள் பலர் இது போன்ற கம்பெனியில் மேனேஜர்களாகத்தான் இருப்பார்கள் என்பது அவளது அசைக்க முடியாத நம்பிக்கை...அதனால் அவரிடம் கேட்குமாறும் என்னிடம் அடிக்கடி சொல்வாள்...
ப்ராஜக்ட் மேனேஜரின் நன்பர்கள் பார் ஓனர்களாகவும், கவர்ச்சி நடிகையின் கணவர்களாகவும் இருப்பதை சொல்லமுடியுமா என்ன அவளிடம்...
ஒரு முறை ஆறு மணி வாக்கில் மேனேஜர் மமதியை அவர் ரூமுக்கு அழைத்தார், அவரது மனைவி பாரின் ட்ரிப் போனதாக மதியம் தான் சொல்லியிருந்தார்...அதனால் கொஞ்சம் திக் திக் உணர்வோடு நான் இதை கவனித்துக்கொண்டிருந்தேன்...
கொஞ்ச நேரம் வேலையில் பிஸியான பிறகு ஆறறை மணிவாக்கில் பால்கணியில் இருந்து பார்த்தபோது மமதியும் அவரும் அவருடைய வெண்ணிற ஆல்டோவில் ஆபீஸுக்கு வெளியே யூ டேர்ண் அடித்துத்துக்கொண்டிருந்தார்கள், வாட்ச்மேன் விஸில் அடித்துக்கொண்டிருந்தார்...
திரும்ப சீட்டுக்கு வந்தேன், வேலை செய்யப்பிடிக்கவில்லை, டி டிரைவில் ஸாங்ஸ் போல்டர் ஓப்பன் செய்து, ஒரே நாள் உனை நான், நிலாவில் பார்த்தது என்ற ஏதோ ஒரு பழைய பாடலை கேட்டபடி நேரத்தை ஓட்டினேன் கொஞ்சநேரம், அதன் பிறகு விஜயிடம், டேய் இன்னைக்கு நீ பஸ்ல போயிருடா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கினேன்...
சில நாட்களில் தரமணியில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்தின் ஆபர் லெட்டர் பெற்று, எங்கள் எல்லோரிடமும் சந்தோஷமாக விடைபெற்று மமதி டேக் ஆப் ஆனாள்...ரிலீவிங் லெட்டர் மற்றும் பாண்ட் ப்ரேக் செய்வது உட்பட எல்லா விசயங்களையும் இவர் பார்த்து பக்காவாக முடித்து கொடுத்தார்...
பிறிதொருமுறை மேனெஜரின் ஆல்டோ காரின் டிக்கியில் மமதியின் பட்டர் பிளை ஹேர் க்ளிப் கிடந்தது, அதை நான் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன்...
மூன்று நான்கு வருடங்கள் கழித்து நான் யாஹூ மெசன்ஜர் ஓப்பன் செய்தபோது மமதி ஆன்லைன்...சியாட்டில் நகரத்தில் இருக்கிறாளாம்...
ஒரே கேள்வி தான் கேட்டேன்...
I Know everything. why you did like that ?
அவளும் உடனே புரிந்துகொண்டாள்...
That time I got somethine he needs.
He got something I need...
என்றாள்...
சைன் அவுட் செய்து யாஹூ மெஸன்ஜரில் இருந்து வெளியேறினேன்...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
23 comments:
// ஐந்தரை அடி உயர நீலக்கண் அழகியான அவள் தாயார் புனேவை சேர்ந்தவர் //
அவளை வர்ணீங்க.. அவங்க அம்மாவை எதுக்கு வர்ணீக்கிறீங்க? :)))))
//That time I got somethine he needs.
He got something I need...
என்றாள்...//
ம்ம்ம்.... பொறாமையாத்தான் இருக்கு.. என்ன செய்ய????? :))))
அங்கே ஒரு புள்ளியோ கமாவோ மிஸ்ஸிங்.
என்ன மூச்சூடும் ஆன்லைன் ? வீட்ல திட்டலையா ???
சென்ற தொடரின் தொடர்ச்சி வராமல் கதை திசை திருப்ப படுகிறது,
அதை தனி மடலிலாவது தெரிவிக்கவும்
தூங்கப்போகும் முன் சிறிது நேரம் வலையளாவி விட்டு செல்வதற்கு பர்மிஷன் உண்டு (ஒரு சில நாட்கள் மட்டும்தான்).. :)))
Template பாருய்யா.. ஒரே said மட்டும்தான் வருது... பேரக் காணோம்
கொஞ்சம் அந்த யாஹூ ஐடி கொடுங்க
//That time I got somethine he needs.
He got something I need...//
வாழ்க்கைத் தத்துவம்...இரண்டே வரிகளில்.
என்னாதுய்யா BIT,bita.. ஒரு கோர்வையே இல்லாம?
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (4)
யாஹூ தூதுவரில் இருந்து வெளியேறிய உடன், வேகமாக மற்றொரு யாஹூ ப்ரொபைஇல் உருவாக்கினேன்! ஐ டி : it_tastes_nice என்றும், இருப்பிடம் புனே என்றும், தொழில் IT என்றும் பதிவு செய்தேன்.... உடனடியாக இந்த ஐ டியில் இருந்து சாட் செய்தால் சந்தேகம் வர வாய்ப்பு இருப்பதால், மற்றொரு நாள் சாட் செய்து கொள்ளலாம் என்று இருந்த பொழுது எனது கை பேசியில் ஒரு குறுஞ்செய்தி ...
///Template பாருய்யா.. ஒரே said மட்டும்தான் வருது... பேரக் காணோம்///
இளா அத எப்படி பன்றது ??
///தூங்கப்போகும் முன் சிறிது நேரம் வலையளாவி விட்டு செல்வதற்கு பர்மிஷன் உண்டு (ஒரு சில நாட்கள் மட்டும்தான்).. :)))///
அந்த சிறிது நேரம் பத்து நிமிடம் என்கிற முப்பது நிமிடமா ? சேம் ப்ளட்
/// குடுகுடுப்பை said...
கொஞ்சம் அந்த யாஹூ ஐடி கொடுங்க
///
எக்ஸ்கியூஸ் மீ, இது கதை !!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமரபாரதி
//என்னாதுய்யா BIT,bita.. ஒரு கோர்வையே இல்லாம?///
பிட்டு பிட்டாவா இருக்குன்னு சொல்றீங்க ?
களப்பிறர், பேசாம அடுத்த பகுதியை நீங்களே போட்டுடலாம் போல அவ்ளோ வேகம் :)))
"காரின் டிக்கியில் மமதியின் பட்டர் பிளை ஹேர் க்ளிப் கிடந்தது, அதை நான் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன்..."
எல்லாம் முடிஞ்ச பிறகு அதை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க?
சரியான குஜிலிகும்பாவா இருப்பார் போல அந்த டாமேஜர்....
இது குஜிலி கதையா, பீலிங் கதையா ஒண்ணுமே புரியல...:((((
///எல்லாம் முடிஞ்ச பிறகு அதை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க?//
கதை எழுதும்போது எடுத்து பார்த்துக்கிட வேண்டியதுதான்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!!
///சரியான குஜிலிகும்பாவா இருப்பார் போல அந்த டாமேஜர்....
இது குஜிலி கதையா, பீலிங் கதையா ஒண்ணுமே புரியல...:((((///
கதை முடியும் வரை காத்திருக்கவும் !!! மேட்டர் பிரியும்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!!
பொறாமை!!
:)))))))))))))))))))))
வாசிக்க ரொம்ப சுவாரசியமா (வம்பு கேக்கறா மாதிரி) இருந்தது, ரவி :)
இவ்வளவு நல்லா எழுதுவீங்களா என்ன ? ;-)
Post a Comment