ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று
யாஹூ குழுமத்தில் விஜய்க்கு பரிச்சயமான பெண் அவள். கேம்பஸ் இண்டர்வியூ எட்டிப்பார்க்காத ஏதோ ஒரு எஞ்சினீயரிங் கல்லூரியில் படித்துவந்தாள், மின்வாரிய ஊழியர் தந்தை...
மூன்று பெண்களில் மூத்தவள், குடும்பம் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்தது, படிப்பை முடித்தவுடன் விஜயை ஏதாவது வேலைக்கு உதவுமாறு கேட்டிருந்தாள்...ரெஸ்யூமையும் எனக்கும் விஜய்க்கும் அனுப்பியிருந்தாள்...
எல்லாரையும் ஆக்ரமிக்கும் காதல் பிரச்சினை அவள் மனதையும் மையம் கொண்டு இருந்தது, அவள் காதலன் சொந்த அத்தை மகன், ஐ.டி.ஐ முடித்துவிட்டு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தான், அட்லீஸ் நாம் நல்ல வேலைக்கு போய், காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி அசைக்கும்படி செய்யலாம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்கு...இதெல்லாம் பின்னால் விஜய் சொல்லி தெரிந்துகொண்டேன்...
எங்க ரெண்டுபேருக்கும் ஒரே எக்ஸ்டென்ஷன் போன், அடிக்கடி அந்த அலுவலக எக்ஸ்டென்ஷன் போனுக்கும் அழைத்து, விஜயை எப்படி இருக்கேப்பா என்று கேட்பாள்...நானும் அவ்வப்போது ரெண்டொரு வார்த்தை பேசியதுண்டு...ரெஸ்யூமை மேனேஜருக்கு அனுப்பினால் எப்படியும் ஜாவா டீமில் ஒரு ட்ரெயினியாகவாவது சேர்த்து ஒரு மூவாயிரம் சம்பளம் கொடுத்தால் அப்படியே பர்மணட் ஆக்கிவிடுவார்கள் என்று கணக்கிட்டான் விஜய்....
அனுப்பிவிட்டு அதுபற்றி கேட்டு அதிகம் தொந்தரவு செய்யவில்லை அவன்....அதிகம் பேசாத டைப் அவன்...
ஒருவாரமாக மேனேஜர் தொலைபேசியில் இரண்டு மணிநேரம் மூன்று மணி நேரம் யாரிடமோ என்று பேச ஆரம்பித்தார், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்போனாலும் அப்புறம் அப்புறம் என்று ரூமில் இருந்தே கையாட்டுவார்...
ஒரு சனிக்கிழமை மதிய வேளை, அடுத்த வாரத்துக்கான துணி எல்லாம் துவைத்துவிட்டு பக்கத்தில் இருந்த செட்டிநாட்டு ஹோட்டலில் நன்றாக கட்டிவிட்டு, தூக்கமோ தூக்கம்..வீட்டுக்கு வெளியே கார் ஹாரன் சத்தம், எங்கேயோ கேட்ட சத்தமாக இருக்கே என்று கண்ணை திறக்காமல் படுத்திருந்தபோது வீட்டு அலாரமும் அடித்தது, திறந்தால் இவர்....
பர்முடாஸ், டி ஷர்ட், க்ளாஸ் என்று ஏதோ பிக்னிக் போவதுபோல் கிளம்பியிருந்தார், மொபைலில் பேசிக்கொண்டே கிளம்பு கிளம்பு என்பதுபோது சைகை செய்தார், வேற வழி, பேண்டை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்...
காரில் ஏறும்போது தான் கவனித்தேன், பின் சீட்டில் மிக இளவயது பெண், என்ன ஒரு இருபது வயதிருக்கலாம், கோழிக்குஞ்சு போல இடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்...
எந்த விதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் முன் சீட்டில் ஏறி அமர்ந்தேன், சர்ர்ர் என வண்டியை கிளப்பினார்..
எங்க சார் என்றேன், மகாபலிபுரம் என்றார்...
பொதுவாக வண்டியில் ப்ரேக்கை அதிகம் அப்ளை பண்ணமாட்டார், திடீர் திடீர் என்று ப்ரேக் போடுவார், உயிரே போய்விடுவது மாதிரி இருக்கும்..சார் ப்ரேக், வண்டி சார் வண்டி சார் என்றால், ஏன் அவன் கால்லயும் தான் ப்ரேக் இருக்கு, அவன் போடட்டுமே என்று அதிரடியாக சொல்வார், எதிர்த்து பேசமுடியாத அந்த சிச்சுவேஷனில் என்ன செய்வது என்று தேமே என்று அமர்ந்திருப்போம் நானும் விஜயும்...
சார், விஜய் கூட ப்ரீயாத்தான் சார் இருப்பான், அவனையும் கூப்பிடலாம் சார் என்றேன், ம்ஹும் அதெல்லாம் வேண்டாம் என்றார், அந்த நேரத்தில் அந்த பெண் பேசினாள்...விஜய் உங்களுக்கு தெரியுமா, நான் உங்களோட எக்ஸ்டென்ஷனுக்கு பேசியிருக்கேன் என்று அந்த பெண் சொன்னதும் தான், ரொம்ப நாளாக டெஸ்க்டாப்பில் இருக்கும் ரெஸ்யூம் இந்த பெண்ணோடது என்று புரிந்தது..
ஏதோ ஒரு ரிசாட்டில் கார் நின்றது, எனக்கு ஒரு மாதிரியாக புரிந்தது, ஆனால் எதையும் சொல்லமுடியவில்லை, இந்த பெண்ணே இப்படி இருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை, சார் நான் ஏதாவது ப்ரவுஸிங் செண்டர் போய்ட்டு வரேன் சார் என்றேன், நானே சொல்லனும்னு நினைச்சேன், கார் எடுத்துட்டு போறியா என்றார்..சார் எனக்கு கார் ஓட்டத்தெரியாதுன்னு உங்களுக்கு தெரியுமே என்றேன், நான் பஸ்ல போய்க்கிறேன் சார் என்று மனதெல்லாம் பாரத்துடன் வெளியே வந்தேன்..
வெளியே பஸ்ஸை பிடித்து மஹாபலிபுரம் பஸ்ஸ்டாண்ட் போய் அங்கே ஐவேயில் உட்கார்ந்தேன், மெயில் செக் பண்ணக்கூட தோன்றவில்லை, ஏதோ வெப்சைட்டுகளை சுமார் ஒரு மணிநேரம் ப்ரவுஸ் செய்துகொண்டிருந்தபோது, சரி என்னவானாலும் பரவாயில்லை, அங்கே போய் பார்த்துவிடுவது என்று ஒரு ஆட்டோ பிடித்து அங்கே போனேன்...
ரிசார்ட் ஹோட்டலை அடைந்து அவர் பெயரை சொன்னபோது அப்படி யாரும் ரூம் எடுக்கலை என்றார்கள், அந்த வெள்ளை நிற காரில் வந்தவர் என்றபோது மூன்றாம் எண், சூட் என்றார்கள்...
கதவை தட்டினேன், உள்ளே சேரில் விசும்பலுடன் அந்த பெண், கையில் ஏதோ ஒரு டம்பளருடன் இவர் டி.வியில் சேனலை திருப்பிக்கொண்டிருந்தார், ஒரு போர்வை சுருட்டிக்கிடந்தது, அதில் மேலுக்கு எல்லாம் துளித்துளியாக ரத்தம்...
இவளை கொண்டு போய் பஸ் ஏத்திவிட்டிரு என்றார், காசு வேண்டுமா என்றார், இருக்கு சார் என்று, அந்த பெண்ணை, வாங்க என்றேன், மனதை ஏதோ ஒன்று பிசைந்தது...என்னவானாலும் இதை விஜயிடம் மட்டும் சொல்லக்கூடாது, அவன் உடைந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டேன்...
அவளை பஸ் ஏற்றிவிடும்போது கலங்கிய கண்களோடு அவள் கேட்ட கேள்வி இன்னும் கூட சில ஆழமான தூக்கங்களில் வரும் கனவுகளில் இதயத்தை துளைக்கிறது...
"வேலை கிடைச்சுரும் இல்ல..."
நினைவுகள் தொடரும்...!!!!!!!!
8 comments:
சும்மா கிர்ருனு டெம்ப்போ எகிறுது தல.. கன்டினி கன்டினி...
நர்சிம்
தொடருங்கள்
நன்றி நர்சிம் !!
நன்றி முரளி, உங்க விஜயகாந்த் பதிவுல அதர் ஆப்ஷன் இல்லாததால பின்னூட்ட முடியல...
please don't stop this, we need the awareness of this IT field. i thank u for this story.
Man the knot is getting tighter.. little disturbing too.. good narration
mamaaaaaaaaa...
ரவி, மற்றவர்களின் கதைகளுக்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உண்டு! சுலபமாக இவ்வளவு விசயங்களை அடுக்கி அசத்துகிறாயே! கலக்கல்! இந்த பகுதி மனதை மிகவும் நெருடியது. எதற்கும் பெயர்களை மாற்றி எழுது! காரணம் மறுமுறையும் அவள்/அவர்கள் பாதிக்கப்படக்கூடாது!
Post a Comment