சமீபத்தில் 2008ல் கோவை சென்றபோது...சும்மா சொல்லக்கூடாது...உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...மாலையில் மென்மையான க்ளைமேட்...பதிவர் மங்கை எப்போதும் சொல்வார்...எங்களோட கோவை மாதிரி வராது என்று...
என்னடா கோவைக்காரர்களோட ஊர்ப்பாசம் கொஞ்சம் ஓவராகவே இருக்கே என்று நினைப்பேன்...இப்போதுதான் தெரிகிறது கோவைவாசிகளால் ஏன் அவங்களோட ஊரை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்று...
அதிஷா செல்லாவின் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை அழைத்தார்...மருதமலையில் வலைப்பதிவர்களுக்கு காதுகுத்துவதாக...ச்சே..தங்கச்சி புள்ளைகளுக்கு காதுகுத்துவதாக...
செல்லா வழக்கம்போது மச்சினிச்சியை பார்க்க பழனி போய்விட்டதால் செல்லாவின் கார் கிடைக்காது...காலையில் பரிசலை அழைத்தபோது ராம் நகரில் இருந்து கிளம்புவதாக சொன்னார்...நான் வடவள்ளியில் இருப்பதாக சொல்லியபோது...அய்யோ பார்ட்னர் அங்கயே நில்லுங்க என்றார்...
ஒரு பெட்டிக்கடையில் உட்கார்ந்தேன்...ஏழு ரூபாய் பீடிக்கட்டுக்கு ஆறுரூபாய் கொடுத்து வேறு ப்ராண்ட் கேட்டுக்கொண்டிருந்தவரிடம்...ஏங்க...விலைவாசியெல்லாம் எப்படிங்க இருக்கு...என்றேன்...விலைவாசி எல்லாம் ரொம்ப குறைந்துவிட்டதாகவும், அரிசி கிலோ ரூ நூறுக்கு விற்றால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தெரிவித்துவிட்டு அவர்பாட்டுக்கு பீடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்...கோவை குசும்பு...
பரிசலோடு மொக்கைபோட்டுக்கொண்டே மருதமலை அடைந்து அங்கே ஒரு கடையில் பொரிகடலை செப்பரேட் பாக்கிங் வாங்கிக்கொண்டு அதிஷா வரும் படிநோக்கி இருவரும் அமர்ந்தோம்...மிள்காய் தூள் இட்ட ஒரு மாங்காய் வாங்கினேன்...சூரிய வெளிச்சத்தால் வெதும்பிய காய்...இரண்டு பீஸ்க்கு அப்புறம் வாங்கிய கடையிலேயே வைத்துவிட்டேன்...
அதிஷா குடும்பத்துடன் படியேறிவந்தார்...இட்லி,பொங்கல்,புளிசாதம், தயிர்சாதம் என்று பல ஐட்டங்களை தூக்கிவந்திருந்தார்கள்...பர்ஸ்ட் சாப்பாடு...என்று அழைத்துப்போய்...
இதற்கிடையில் ஈரவெங்காயம், வடகரையார் இருவரும் வந்து இணைந்தார்கள்...ரெண்டு வலைப்பதிவர்கள் சேர்ந்தாலே "சந்திப்பு சந்திப்பு" என்று பதிவு போடமுடியும்போது ஐந்துபேர் !!! ஹா !!! அப்புறம் என்ன..ஆனால் வழமையாக பதிவர் சந்திப்புகளில் பேசப்படும் எந்த விஷயங்களும் இல்லாமல், பொதுவாக பேசி கலைந்தோம்...எனக்கு தங்கமணி ஆணியை தயார்படுத்தியிருந்ததால் ஒரு மணிக்குள் போகவேண்டியாகவேண்டும் என்று சொல்லி ஈரவெங்காயம் காரில் ஏறி விரைந்து அட்டெண்டென்ஸ் போட்டேன்...
அடுத்த மேட்டர் : செல்லா, சஞ்ஜெய் மற்றும் நான் கேரளா சென்ற பயணம் பற்றியது...அது கண்டிப்பாக தனிப்பதிவாக எழுதவேண்டியது...பரிசல் பதிவில் இந்த பதிவுக்கான படங்கள் உள்ளது...என்னுடைய காமிராவை மருதமலை சந்திப்பின்போது எடுத்துசெல்லவில்லை...
ஞாயிறு மதியம் செல்லாவிண்ட காரில் ஞானும் செல்லாவும் பின்னே சஞ்ஜெயும் மலையாளக்கரையோரம் ஒதுங்கிய மேட்டரை விரிவாக எழுதுகிறேன், இப்'போதைக்கு கொஞ்சம் படங்கள்...!!!
என்னுடைய சோனி சைபர்ஷாட் பாய்ண்ட் அண்ட் ஹூட்டை வைத்து இப்படிக்கூட எடுக்கலாம் என்று காட்டிய செல்லா...
செல்லாவின் அலுவலகத்தில் நானும் சஞ்செயும்
நானும் சஞ்ஜெயும் ஏதோ ஒரு கரண்டு மரத்தின் அடியில்
நான் இருப்பது கேரளாவில். அண்ணை ஓசை செல்லா இருப்பது தமிழகத்தில். இருவரது பாஸ்போர்ட்டும் இந்தியாவில் வாங்கியது.
நானும் சஞ்ஜெயும் நிற்பது இதுக்கு கீழேதான்.
போற வழியில ஒரு ஆக்சிடெண்ட். எப்படியெல்லாம்ம் யோசிச்சு மோதுறானுங்கடா..
சஞ்ஜெய் மற்றும் ஓசையார் வாக்கிங் டுவேர்ட்ஸ் கேரளா. லாட்டரி சீட்டு வாங்கபோறாரா செல்லா ? இவ்ளோ சிரிப்பு...(இல்ல க்வாட்டர் ஒயினும், ராகி பக்கோடாவும் சாப்பிட்டதாலயா ?)
பி.கு : பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சஞ்ஜெயின் கோவை ஐப்பியை சப்ளைசெய்த நபர் யோசிக்கட்டும். பெங்களூர் என்றால் ரவி, கொரியா என்றால் ரவி, ஈரோடு என்றால் வால்பையன், திருப்பூர் என்றால் பரிசல், சென்னை என்றால் லக்கிலூக் என்ற மொக்கையான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கடா மொதல்ல. குண்டு சட்டியில் குதிரை ஓட்டினது போதும். நீங்கள் நினைப்பதைவிட இந்த மீடியா நன்றாகவே ரீச்சாகிக்கொண்டிருக்கிறது...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
51 comments:
12345 டெஸ்ட் மெஸ்ஸேஜ் (c) ஹரிஹரன்
படங்கள் அருமை ரவி.. அந்த ஆக்ஸிடென்ட் நிஜமாகவே புரியவில்லை, எப்படி இப்படியெல்லாம் ஆகும் :(
//சமீபத்தில் 2008ல் கோவை சென்றபோது...//
நீங்க பழம்பதிவர்னு நெனச்சேன். சமீபத்தில்னா 1968ன்னு தெரியாதா...
//சும்மா சொல்லக்கூடாது...//
அதுக்காக படிக்கிற எல்லாருக்கும் காசு குடுக்க போறீங்களா?
//உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...//
விடியறதுக்கு முன்னாலயே காலங்காத்தால போயிட்டீங்களோ?
// பதிவர் மங்கை எப்போதும் சொல்வார்...எங்களோட கோவை மாதிரி வராது என்று...//
ஓ... கோவையே அவங்களோடதுதானா? ஒரு கிரவுண்ட் எனக்கு எழுதி வைக்க சொல்லுங்களேன்.
//வெண்பூ said...
//உடலை உறுத்தாதாத மெல்லிய வெய்யில்...//
விடியறதுக்கு முன்னாலயே காலங்காத்தால போயிட்டீங்களோ? //
வெண்பூ,
அன்னைக்கு செந்தழலுக்காக ஸ்பெசல் கிளைமேட். 5 நிமிடம் தூறல் 5 நிமிடம் வெயில்னு கலந்துகட்டி ஜமாய்ச்சுருச்சு.
எங்க ஊரே சென்ட்ரலைஸ்டு ஏசில இருக்குங்க.
இப்போதான் புரிஞ்சுது....நீங்க ஏன் அவசரப் பட்டீங்கன்னு....எதுக்கும் உங்க தங்கமணி காதுல போட்டு வைக்கனும்...
பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்
அப்படி உங்களுக்கு வந்து காதிலே சொன்னாரா? அவர் இந்தப்பொடியன் ஓசையோட அடியாள் என்று நினைத்திருக்கக்கூடும். அவர் எழுதுவதை முதல் ஆளாகப் போய் நின்று புரியவில்லை என்று சொல்கிறவர் நீங்கள். உங்களுக்கு அவர் என்ன நினைக்கின்றார் என்றுமட்டும் சரியாகப் புரிவது அதிசயம்.
வேறு யாரோ பொடிப்பயல்தான் ஓசையும் சஞ்செயும் ஒருத்தரே என்று நினைத்துக்கொண்டிருப்பதாகப் பட்சி சொல்கிறது.
இத பாத்தேளே ழவி?
செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
14 August, 2008 2:02 PM
திருந்துங்கடா டேய்! கொரைஞ்சது டெக்னாலஜிய நீங்க கத்துக்கிட்டது போதாதுன்னாச்சும் self-realization பண்ணிக்குங்க. ஹூக்கும்! நடக்கற காரியமா?
///படங்கள் அருமை ரவி.. அந்த ஆக்ஸிடென்ட் நிஜமாகவே புரியவில்லை, எப்படி இப்படியெல்லாம் ஆகும் :(///
கொஞ்சம் மேட்டில் வண்டி வந்த வேகத்தில் துள்ளியிருக்கிறது. அதனால் பயலுக ப்ரேக்கை ஒரே அமுத்தாக அமுத்த, முன் சக்கரம் இரண்டும் நின்று 360 டிகிரியில் சுழன்று நங்கென சாலையோர கல் மற்றும் மரத்தில் பின் பக்கமாக இடித்தது. நல்லவேளையாக ஓட்டிசென்ற பயலுக இருவரும் 100% பிழைத்தார்கள். வண்டி போர்ட் பியஸ்டா. வேகம் 140 கி.மி
/////வேறு யாரோ பொடிப்பயல்தான் ஓசையும் சஞ்செயும் ஒருத்தரே என்று நினைத்துக்கொண்டிருப்பதாகப் பட்சி சொல்கிறது.
இத பாத்தேளே ழவி?
செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
14 August, 2008 2:02 PM
திருந்துங்கடா டேய்! கொரைஞ்சது டெக்னாலஜிய நீங்க கத்துக்கிட்டது போதாதுன்னாச்சும் self-realization பண்ணிக்குங்க. ஹூக்கும்! நடக்கற காரியமா?////
இந்த மாதிரி லிங்க் எல்லாம் வெச்சு கமெண்டு போடுறவர் வேற ஒருத்தராச்சே !!! கி கி கி
அய்யய்யோ கொண்டை !!!
///செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி///
Smily உடன் போட்டு இருப்பதை கண்டால் ஏதோ காமெடிக்காக என்று தோன்றுகிறதே பெயரிலி.
ஆஹா எங்க ஊருக்கு அதுவும் எங்கவீட்டுக்கு பக்கத்துல வந்து போயிருக்கீங்க...
அட அந்த காற்றாலை கம்பத்தில் இருந்து ஒரு 100 மீட்டர் வந்திருந்தால் எங்கவீட்டுக்கு வந்திருக்கலாமே.
சரி பாலக்காட்டுக்குள்(அட்டப்பாடி) நுழையுரோமே, இங்க ஒரு பதிவர் இருக்கார்னு உங்களுக்கு நினைப்பு வந்துச்சா?
அடுத்தமுறை வாங்க நாலு யானைகள் கிட்ட சொல்லி வைக்கிறேன். பயப்படாதீங்க என்னை நினைவவூட்ட தான்.
எங்க ஊரைபற்றி உங்க எண்ணத்தை பதிவில் படிக்க ஆவலா இருக்கு சீக்கிரம் எழுதுங்க....
ரவி...
ஜூப்பரு! (கேரளா மேட்டரைச் சொல்லவே இல்லையே? சஞ்சய் வீட்டுக்கு தங்கமணிகூட போறதாதானே சொன்னீங்க?..)
ஆமா... பஞ்சாயத்து இல்லாம ஒரு பதிவு கூட போடமாட்டீயளா மக்கா?
//எங்க ஊரே சென்ட்ரலைஸ்டு ஏசில இருக்குங்க.//
ரிப்பீட்டு...
என்னது அப்ப ஓசை செல்லாவும் , சஞ்சய்யும் வேறு வேறா!!! நம்பவே முடியவில்லை:)))
கரண்டு கம்பிக்கு கீழே நின்னாலும், கரண்டு கம்பி மேலே தொங்கி விளையாண்டாலும் ஒன்னும் ஆகாது!
அந்த காற்றாலை எல்லாம் அம்மா திட்டம் என்பதற்காக அதன் கீழ் நின்னு போட்டோவா?:)))
என்னுடைய சோனி சைபர்ஷாட் பாய்ண்ட் அண்ட் ஹூட்டை வைத்து இப்படிக்கூட எடுக்கலாம் என்று காட்டிய செல்லா...//
அதுலே ஒருவரையே இரண்டு மாதிரி எடுக்கும் வசதி எல்லாம் இருக்கா என்ன?
எப்படி ஓசை செல்லாவுக்கு வேறு முகம் வருது:)))
//நானும் சஞ்ஜெயும் ஏதோ ஒரு கரண்டு மரத்தின் அடியில்//
நீங்களும் சஞ்சயும் பண்ண ஆராய்ச்சில பவர்கட்ட நிறுத்துறதுக்கு ஏதாவது வழி பிறந்துச்சா??
கலக்கல் பதிவு..
நர்சிம்
//Anonymous said...
பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்
அப்படி உங்களுக்கு வந்து காதிலே சொன்னாரா? அவர் இந்தப்பொடியன் ஓசையோட அடியாள் என்று நினைத்திருக்கக்கூடும். அவர் எழுதுவதை முதல் ஆளாகப் போய் நின்று புரியவில்லை என்று சொல்கிறவர் நீங்கள். உங்களுக்கு அவர் என்ன நினைக்கின்றார் என்றுமட்டும் சரியாகப் புரிவது அதிசயம்.
வேறு யாரோ பொடிப்பயல்தான் ஓசையும் சஞ்செயும் ஒருத்தரே என்று நினைத்துக்கொண்டிருப்பதாகப் பட்சி சொல்கிறது.
இத பாத்தேளே ழவி?
செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
14 August, 2008 2:02 PM
திருந்துங்கடா டேய்! கொரைஞ்சது டெக்னாலஜிய நீங்க கத்துக்கிட்டது போதாதுன்னாச்சும் self-realization பண்ணிக்குங்க. ஹூக்கும்! நடக்கற காரியமா?
Wednesday, September 17, 2008
//
இந்த அனானி கமெண்ட் சூப்பர் ரவி! :-)
சில பேரு அனானியா வந்தாலும் யாருன்னு எல்லோருக்குமே தெரிவது தான் அவர்களது சிறப்பு. இன்னும் ரெண்டு வருடம் கழித்து இந்தப் பதிவின் ஹைபர்லிங்கை கொடுத்து நான் அங்கே ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருக்கிறேன் என்று சொல்வதும் அவர்களது சிறப்பிலும் சிறப்பு! :-)
ஒரு சிறு பயணத்தை (பிக்னிக்) இவ்வளவு வண்ணமயமாக (கலர்ஃபுல்) எழுதி தாங்கள் ஒரு மூத்தபதிவர் என்று நிரூபித்துவிட்டீர்கள் ;-). ஒரு சின்ன ரகசிய வேண்டுகோள் ;-) செல்லா அண்ணை ஏதாவது மலையாளக்கிளிகளை காமிராவால் சுட்டிருப்பார்தானே? அந்தப்படங்களையும் அடுத்தபதிவில் பிரசுரித்து எங்கள் கொலைவெறியை தணிக்கவும். அப்புறம் அந்த கார் படம், இன்னும் நம்பமுடியவில்லை. பத்திரிகையில் வாராவிட்டாலும் வலைப்பதிவில் இம்மாதிரி செய்திகள் உடனுக்குடன் வருவது நீங்கள் சொன்னமாதிரி இம்மீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தொடருங்கள் தழல்.
கொ.வெ.படை
பங்களூரு
////ஆஹா எங்க ஊருக்கு அதுவும் எங்கவீட்டுக்கு பக்கத்துல வந்து போயிருக்கீங்க...
அட அந்த காற்றாலை கம்பத்தில் இருந்து ஒரு 100 மீட்டர் வந்திருந்தால் எங்கவீட்டுக்கு வந்திருக்கலாமே.
சரி பாலக்காட்டுக்குள்(அட்டப்பாடி) நுழையுரோமே, இங்க ஒரு பதிவர் இருக்கார்னு உங்களுக்கு நினைப்பு வந்துச்சா?
அடுத்தமுறை வாங்க நாலு யானைகள் கிட்ட சொல்லி வைக்கிறேன். பயப்படாதீங்க என்னை நினைவவூட்ட தான்.
எங்க ஊரைபற்றி உங்க எண்ணத்தை பதிவில் படிக்க ஆவலா இருக்கு சீக்கிரம் எழுதுங்க....////
அங்கே உங்கள் எண்ணை தேடி ஒரு எஸ்.டி.டி பூத்தில் இருந்து வேறு டி.எஸ்.பி சாருக்கு அழைத்தோம். அவர் தருமபுரியில் இருந்தார். உங்கள் எண் கிடைக்கலை. அதனால் திரும்பிவிட்டோம். ( அப்புறம் : எஸ்.டி.டி பூத் சேச்சி சூப்பர்)
///நீங்களும் சஞ்சயும் பண்ண ஆராய்ச்சில பவர்கட்ட நிறுத்துறதுக்கு ஏதாவது வழி பிறந்துச்சா??
///
ஆறு நூறு மெகாவாட் உற்பத்திசெய்யும் அந்த சுஸ்லான் எனர்ஜி !!! சூப்பர் தெரியுமா ?
///அந்த காற்றாலை எல்லாம் அம்மா திட்டம் என்பதற்காக அதன் கீழ் நின்னு போட்டோவா?:)))///
அடியேன் திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் அட்டை பெற்று மாதம் மூன்றாகிறது குசும்பா !!!
///ஜூப்பரு! (கேரளா மேட்டரைச் சொல்லவே இல்லையே? சஞ்சய் வீட்டுக்கு தங்கமணிகூட போறதாதானே சொன்னீங்க?..)
ஆமா... பஞ்சாயத்து இல்லாம ஒரு பதிவு கூட போடமாட்டீயளா மக்கா?///
ஆமா, ஆனா சஞ்ஜெய் ஹோட்டலுக்கே வந்துட்டார். அப்புறம் தங்கமணியை அவுங்க சொந்தக்காரங்களோட ஷாப்பிங் (சென்னை சில்க்ஸ்) அனுப்பிட்டு (அதுல ஒரு ஆறுமணி நேரம் கிடைச்சுதுங்க) அப்புறம் செல்லாவோட ஆபீஸ் போனோம். அங்கிட்டு செல்லாவை வாரும் அய்யா திங்க போலாம் என்றால், மூலிகை விண்செண்ட் அய்யா தோட்டத்துக்கு போலாம் வா என்று கூப்பிட்டுக்கொண்டு போனார்.
பஞ்சாயத்து இல்லாமலா ? பதிவா ? கி கி கி
தோழர்!
கேரளாவெல்லாம் போயிருக்கிறீர்கள்.
ஏதாவது மஜா பிட்டை இம்சை வலைப்பூவில் போட்டு வலைப்பதிவர்களை அஜால் குஜால் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
///செல்லா அண்ணை ஏதாவது மலையாளக்கிளிகளை காமிராவால் சுட்டிருப்பார்தானே?///
கோவையிலேயே அற்புதமான கிளிகள் இருக்க அங்கே சென்று சுடுவானேன்...
அட்டப்பாடி வெறும் அட்டுப்பாடி. ஆனாலும் அற்புதமான சிலபல கிளிகள் கண்டோம், ஆனா அனுமதியின்றி படம் எடுத்தால் மரத்தில் கட்டிவைத்து உதைப்பார்கள் மல்லுக்கள்...
:)))
///சில பேரு அனானியா வந்தாலும் யாருன்னு எல்லோருக்குமே தெரிவது தான் அவர்களது சிறப்பு. இன்னும் ரெண்டு வருடம் கழித்து இந்தப் பதிவின் ஹைபர்லிங்கை கொடுத்து நான் அங்கே ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருக்கிறேன் என்று சொல்வதும் அவர்களது சிறப்பிலும் சிறப்பு! :-)///
சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த பின்னூட்டம்...
ஆகா சீக்கரம் கேரளா பதிவு போடுங்க...
போட்டோ இருக்குல்ல...
ஆளுங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு கொண்டையை மறைக்கிறது ஈசி. ஆனா அதுக்காக எதுக்கு கொண்டையை மறைக்கணும்? அதெல்லாம் மூர்த்திக்கு மாமா டோண்டுவுக்கு மருமகன் உறவு வைத்துக்கொள்கிறவர்களுக்குத் தேவையான விடயம். மற்றவர்களுக்கு எதுக்கு? கூகுள் சர்ச்சில கொண்டை தெரியாமலிருக்கத்தான் சில இடங்களிலே கொண்டையை மறைக்கவேண்டியதாப் போச்சு. ஏண்டா அந்த லூசு பதிவுல காமெண்டு போட்டு அவனல்லாம் ஒரு சூடான புள்ளி ஆக்குறேங்குறவுங்க ரோதனை தாங்க முடியல்லே.
இங்கே சிறப்பு என்னவென்றால், கூகுளிலே காமக்கதைகள் தேடி, மற்றவர்கள் பதிவிலே மிதந்து கொண்டையை மறைத்துக்கொண்டோமென்று லுக் விடுகிறவர்களெல்லாம் சிறப்பைப் பற்றிப் பேசுவது.
கொண்டையா இங்கே விஷயம்? உங்கள் குளறுபடி இல்லையா? ஓசை, சஞ்செயைக் குழப்பிக்கொண்டவர் ழவி. இதிலே எதுக்குத் தலைப்பிலே பெயரிலி பெயரிலே பரபரப்பு? சூடாக்கவா? இப்படி வித்தாத்தான் ஆயாகடை ஆப்பம் போணியாகும்.
///கொண்டையா இங்கே விஷயம்? உங்கள் குளறுபடி இல்லையா? ஓசை, சஞ்செயைக் குழப்பிக்கொண்டவர் ழவி. இதிலே எதுக்குத் தலைப்பிலே பெயரிலி பெயரிலே பரபரப்பு? சூடாக்கவா? இப்படி வித்தாத்தான் ஆயாகடை ஆப்பம் போணியாகும்.///
நீங்கள் சில பதிவுகள் மிஸ் பண்ணிடீங்கன்னு நினைக்கிறேன்...
நாங்கள் மூவரும் இந்த ட்ரிப்பில் ஓட்டிக்கொண்டிருந்தது அவதைத்தான் :))))
சஞ்ஜெயை சமீபத்தில் கலாய்த்தான் அண்ணை. அதைத்தான் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் :)))
//நானும் சஞ்ஜெயும் நிற்பது இதுக்கு கீழேதான்//
எச்சுச்மீ தொழிலதிபர் ரவி அவர்களே...
இந்த காற்றாலை உங்களுக்கு சொந்தமானது என்பதை மறைத்துவிட்டதற்காக ஞானி கைய்யால் உங்களுக்கு ஒரு குட்டு.. :)
.. ஜோக் இல்லை ஜெனங்களே.. மெய்யாலுமே இது ரவிக்கு சொந்தமான காற்றாலை தான்.. அங்க தான் எங்களை அழைத்து சென்றார்.. மேகத்தை கிழிப்பது போல் ஒரு போட்டோ எடுத்தேனே.. அது எங்க ராசா? :(
//படங்கள் அருமை ரவி.. அந்த ஆக்ஸிடென்ட் நிஜமாகவே புரியவில்லை, எப்படி இப்படியெல்லாம் ஆகும் :(//
இன்று விடியோகான் மேனேஜருடன் மீட்டிங்கில் இருக்கும் போது இதை சொல்லி யூகிக்க சொன்னேன்.. ஒரு நொடி கூட யோசிக்காம இது எப்டி நடந்திருக்கும்னு சொல்லிட்டார்.. :)
//செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
14 August, 2008 2:02 PM //
கொய்யால..எவனோ வாச்சி பண்ணிட்டே இருந்திருக்கான்...:))
\\நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...
\\
ஹா ஹா ஹா ஹா
:)) கிகிகி
14 August, 2008 2:02 PM //
கொய்யால..எவனோ வாச்சி பண்ணிட்டே இருந்திருக்கான்...:))
உண்மையிலேயே வயிறு குலுங்க சிரித்தேன்...!!!
///இன்று விடியோகான் மேனேஜருடன் மீட்டிங்கில் இருக்கும் போது இதை சொல்லி யூகிக்க சொன்னேன்.. ஒரு நொடி கூட யோசிக்காம இது எப்டி நடந்திருக்கும்னு சொல்லிட்டார்.. :)///
அட !!!
சரி இன்று படங்களை அப்லோட் செய்கிறேன்...!!!
//இந்த மாதிரி லிங்க் எல்லாம் வெச்சு கமெண்டு போடுறவர் வேற ஒருத்தராச்சே !!! கி கி கி
அய்யய்யோ கொண்டை !!!//
ஹாஹா... தேடி வந்து விழறான்யா மாப்ள.. :))
// குசும்பன் said...
என்னது அப்ப ஓசை செல்லாவும் , சஞ்சய்யும் வேறு வேறா!!! நம்பவே முடியவில்லை:)))//
என்னாது துபாய்க்கு சொதந்திரம் கெடைச்சிடிச்சா? நம்பவே முடியவில்லை :))
//குசும்பன் said...
என்னுடைய சோனி சைபர்ஷாட் பாய்ண்ட் அண்ட் ஹூட்டை வைத்து இப்படிக்கூட எடுக்கலாம் என்று காட்டிய செல்லா...//
அதுலே ஒருவரையே இரண்டு மாதிரி எடுக்கும் வசதி எல்லாம் இருக்கா என்ன?
எப்படி ஓசை செல்லாவுக்கு வேறு முகம் வருது:)))//
அதானே.. !
//இன்னும் ரெண்டு வருடம் கழித்து இந்தப் பதிவின் ஹைபர்லிங்கை கொடுத்து நான் அங்கே ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருக்கிறேன் என்று சொல்வதும் அவர்களது சிறப்பிலும் சிறப்பு! :-)//
ஹிஹிஹி.... எப்டி லக்கி இதெல்லாம்?.. அது சரி உங்க நண்பரை பத்தி உங்களுக்கு தெரியாமலா.. :))
//அப்புறம் அந்த கார் படம், இன்னும் நம்பமுடியவில்லை. //
இதுக்கே இப்டியா?.. ரோட்டோரம் நட்டு வச்சிருந்த ஒரு கல்லை இரண்டாக உடைத்து .. அந்த கல் சில மீட்டர் தூரத்தில் விழுந்து கிடந்தது.. அதை தாண்டி மரத்தில் இப்படி மோதி இருக்கு.. :(
/( அப்புறம் : எஸ்.டி.டி பூத் சேச்சி சூப்பர்)//
@#$#@$$#%%^&&$@#@$#@$$%^
&$%&#@$#@$#^&^&#@$#@$
%^$%^$#%$#@$#@$#@$%^$%^$@%#@$#
.. புரிய வேண்டியவங்களுக்கு புரியும்.. நல்லா இருங்க.. :((
// செந்தழல் ரவி said...
///நீங்களும் சஞ்சயும் பண்ண ஆராய்ச்சில பவர்கட்ட நிறுத்துறதுக்கு ஏதாவது வழி பிறந்துச்சா??
///
ஆறு நூறு மெகாவாட் உற்பத்திசெய்யும் அந்த சுஸ்லான் எனர்ஜி !!! சூப்பர் தெரியுமா ?//
கைண்ட்லி நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர்.. இந்த தகவலே ஆதாரம்.. இது ரவியின் காற்றாலை என்பதற்கு..
இப்டி மாட்டிக்கிட்டிங்களே ரவி.. :))
செந்தழல் ரவியின் காற்றாலைக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் - http://podian.blogspot.com/2008/09/blog-post_17.html
/
பி.கு : பெயரிலி ஓசையாரும் சஞ்ஜெயும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு சஞ்ஜெயின் கோவை ஐப்பியை சப்ளைசெய்த நபர் யோசிக்கட்டும். பெங்களூர் என்றால் ரவி, கொரியா என்றால் ரவி, ஈரோடு என்றால் வால்பையன், திருப்பூர் என்றால் பரிசல், சென்னை என்றால் லக்கிலூக் என்ற மொக்கையான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கடா மொதல்ல. குண்டு சட்டியில் குதிரை ஓட்டினது போதும். நீங்கள் நினைப்பதைவிட இந்த மீடியா நன்றாகவே ரீச்சாகிக்கொண்டிருக்கிறது...
/
:-)))))))))))))))))
ச்சின்னப்பையன் எங்கிருந்தாலும் வருக. இங்கே ஒருத்தன் மாட்டியிருக்கான். வந்து ஒன்னு ரெண்டு மூனு போட்டு பிப்டி அடிக்கவும்.
50
50
அப்பாடா.. நாந்தான் 50.. :)
Post a Comment