Sunday, September 21, 2008

தனம் : ஓசியில் கூட போயிராதீங்கடே (A)



ஏற்கனவே உயிர் படத்தில் புருசனின் தம்ம்ம்பியை லவ்வி ஏதோ புரச்சி ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகை சங்கீதா "தனம்" படத்தில் ஐட்டமாக நடித்து அதை விட பெரிய புரச்சி ஏற்படுத்தியிருக்கிறார்...

இவரை "புரச்சி தீ" என்றோ "தீப்பொறி திருமகள்" என்றோ பட்டம் கொடுத்து அழைத்தோமானால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்...நேத்து வந்த பயக எல்லாம் புரச்சி, தளபதி, இளைய, புதிய என்ற வார்த்தைகளை முன்னாலும் பின்னாலும் நடுவாலும் கோர்த்து ஒரு பட்டத்தை உருவாக்கிவிடும்போது சங்கீதாவுக்கு பட்டம் தருவது என்ன பெரிய விஷயம் ?

படத்தின் ஆரம்பத்தில் மனோபாலாவும் இன்னோரு நடிகரும் தனம் (சங்கீதா) பற்றி ஐதராபாத் ஏரியாவில் பொட்டிக்கடை, ஜூஸ் கடை, பூக்கடை என்று விசாரிக்கிறார்கள்...

யாரும் தனம் பற்றி தகவல் சொல்ல முன்வரவில்லை...

தனம் பற்றி சொல்ல - பக்கோடா காதரோ போண்டா மணியோ, ஜூஸ் கடை வைத்துள்ளார், தன்னுடைய உடன் பிறவாத சகோதரி பற்றி, தனம் நடந்து வந்தா எப்படி இருக்கும் தெரியுமா...தனம் உக்காந்தா எப்படி இருக்கும் தெரியுமா ? என்று ஓவர் பில்டப் கொடுக்க...

கட் செய்தால் ஸ்லோமோஷனில் ஒயிலாக நடப்பதாக நினைத்துக்கொண்டு இடுப்பை வளைத்து, சேலையை பறக்கவிட்டு, ஆட்டி ஆட்டி நடந்துவருகிறார் தனம்...

மேட்டர் இது தான்.

தனம் ஒரு பஸ் ஸ்டாண்டு ஐட்டம். ரேட்டு ரூ 500. அங்கே உள்ள பிக்காரிகள், சைக்கிள் ரிக்சா லொட்டைப்பயல்களுக்கு சோறு வாங்கிபோட்டு, கிராக்கி பிடிக்கிறார். அதாவது இவருடைய பிம்ப்கள் இவர்கள்தான்...

காரில் பெரிய சேட்டு வந்தாலும் தனத்துக்கு பிடித்திருந்தால் தான் தனம் போவார். அப்படிப்பட்ட ஒஸ்தி - கவரிமான் பரம்பரை ஐய்ட்டம்.

இந்த லொடுக்கு பிகரை செட் செய்ய ஐநூறு ரூபாய் கொடுக்கும் அனைவரிடமும் போய் விடமாட்டார். சம்பள பணத்தை வாங்கி நேராக இஸ்கூல் பையன் போல வரும் நபரிடம் ஒதுங்கும் இவர், மூனு நாள் தாடியோடு தோளில் இடித்து செல்லும் நபரை கண்டுகொள்ளவில்லை...

இதில் இருந்தே தெரியவில்லையா, இவர் இந்த தொழிலில் ஏதோ கொளுகையை கடைபிடிக்கிறார்...

சைக்கிள் ரிக்சா கேரக்டர் ஒன்று பேசும் ஆரம்ப வசனம், படம் எதனை நோக்கி செல்லும் என்று சொல்கிறது..

ரிக்சா கேரக்டர் சொல்வது : அதாவது மும்பையில், கொல்கத்தாவில் செய்தால் அது அப்புரூவுடு பிஸினஸாம். அதே ஐதராபாத்தில் செய்தால் அது தப்பாம்...!!!

கட் செய்தால் அப்படியே கும்பகோணமோ, கும்மிடிப்பூண்டியோ !!!

பெரிய பெரிய பூணூல் எல்லாம் போட்டு அய்யர் பூஜை செய்கிறார். அத்திம்பேர் ஹைதராபாதுக்கு படிக்க செல்கிறார். அவரை அய்யர் வீட்டு பெண் அப்பாரு பெயரை சொல்லி மிரட்டி தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார்...

ஏதோ டி.வி நாடக நடிகர். திரைப்பட வாய்ப்பு வருகிறதே என்று இந்த படத்தை ஒப்புக்கொண்டு விட்டார் போலும். இவர் தான் ஹீரோ. ஐதாராபாத் படிப்புக்காக செல்லும் இவருக்கு சிகரெட், பீடி, குட்கா, தண்ணி, சாராயம், மாணிட்டர், ஓல்டு மங் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது...

ஆனால் ஐட்டம் தனத்தை பார்த்தவுன் இவருக்கு லவ் பீலீங்ஸ் வந்துவிடுகிறது. ஏதோ பீல் பண்ணி கனவு பாடல் எல்லாம் பாடுகிறார்.சகிக்கலை..

டேடேடேய்ய்ய்ய்ய் என்னை கொலைகாரனாக்காதீங்கடா !!! ஐட்டத்தை எதுக்குடா லவ் பண்றீங்க ?

கும்பகோணத்தில் இருந்து ஹீரோவின் மாமா கருணாஸ், கருப்பாக இருப்பதால் இவர் ப்ராமணரா என்று அக்கா புருஷனுக்கே சந்தேகம், படு மோஷமான காமெடி அய்யரே...

கருணாஸ் ஜீரோவை பார்க்க ஐதராபாத் வருகிறார், அவரும் சங்கீதாவை பார்த்துவிட்டு ஜொள் விடுகிறார், மாமாக்கள் ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள், ஆனால் இவரிடம் இருப்பதோ ஐநூறு ரூபாய் தான், அதனால் உலகப்புகழ் பெற்ற ஐட்டமான சங்கீதாவை...

அதுக்காக கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார்...அங்கே பிச்சைக்காரர்கள் சங்கம் அது இது என்று அரதப்பழசான ஜோக் டெக்னிக்ஸ் !!!

குறிப்பிட்டு சொல்லவேண்டியவர் ஆர்ட் டைரக்டர்...இரண்டு தெருவையும் ஒரு ஒத்தை புளிய மரத்தையும், அங்கே ப்ளாஸ்டர் ஆப் பாரீஸில் போடப்பட்ட பூக்கடை, மதில் சுவர், ஒரு சைக்கிள் ரிக்சா, மற்றும் போண்டா மணியின் தள்ளுவண்டி. இதை மட்டும் வைத்து ஐதராபாத் என்கிறார். அற்புதமான கலை இயக்குனர். நல்ல எதிர்காலம் இருக்கு தம்பீ உங்களுக்கு...(போண்டா மணியின் தள்ளுவண்டி இன்னும் கைவசம் இருக்கிறது தானே ?)

**********************************

கட் செய்தால தமிழ் பேசும் நார்த் இண்டியன் வில்லன் தமிழ் படங்களில் எப்போதும் இரண்டாவது ஹீரோயின் ஆக நடிக்கும் நடிகையை தாவணியை பிடித்து இழுக்கிறார். ஹூவுக்கு எல்லாம் பாலீஷ் போடும் அவளுடைய குருட்டு தம்பி நெற்றியில் ரத்த காயத்துடன் அதை தடுக்கிறான்..சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் வரும் ஐ.ஜியோ, டி.ஜி.பியோ (ஆனால் ராதாரவி) அதை கண்டும் காணாமல் போகிறார்.

"அண்ணா, மொபைல் ஹோட்டல் பாத்திருக்கேன், மொபைல் கோர்ட் பாத்திருக்கேன், மொபைல் ரேப் பார்த்ததில்லீங்னா" என்று ஒரு அல்லக்கை சொல்ல, ஓப்பன் வேனில் வைத்து செக்கண்ட் ஹீரோயினை - ஹைதராபாத் நடு ரோட்டில் - ரேப்பு ரேப்பு என்று ரேப்புகிறார் வில்லன்..


*********************************

ஆங்...சொல்ல மறந்த கதை அடுத்த பத்தி..

தனம் படத்தின் சதை பற்றி லைட்டாக அறிந்த விஜயகாந்த் ரசிகையான என் மனைவி, டக்கென சேனலை சன் டிவிக்கு திருப்பி "நான் கஜேந்திரா பார்க்கனும்" என்று தனம் படத்தை மாற்றிவிட்டார். அதனால் கடைசி இரண்டு பத்தி - உலகத் தமிழர்களுக்கு பதிமூன்றாவது முறையாக சன் டீவியில் சண்டே மாலை ஒளிபரப்பப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் "கஜேந்திரா" படத்தில் இருந்து...

நான் கஜேந்திரா பார்க்க போவனும், நீங்க தனம் படத்துக்கு ஓசியில கூட போயிராதீங்கடே...(நான் நாலு சீன் திருட்டு டி.வி.டியில பார்த்தேன்) !!!!


விமர்சனம் படித்தவர்கள் - ஓட்டு கீழே குத்தவும் !!!

***************************************

34 comments:

G.Ragavan said...

நானும் கொஞ்சோல பாத்தேன்... அப்புறம் தாங்க முடியலை....விட்டுட்டேன். அட.. படம் பாக்குறதங்க. :D

ரவி said...

ஓக்கே ஓக்கே !!! ஹைதராபாத்தில் இல்லையே நீங்க ? :))

Anonymous said...

ஹைதராபாத் இவ்ளோ சின்ன ஊரா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா காடு கழனிய வித்து வாங்கியிருக்கலாம்

வெண்பூ said...

ரவி,

உங்க விமர்சனத்த படிச்சி சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது. டாக்டர் செலவு உங்களோடதுதான்... :))))

Athisha said...

அண்ணா படத்தில பிட்டு எதாவது போட்டாங்களா , படத்தில எதாவது இருக்கா

எங்கூர்ல இடைவேளைக்கு முன்னாலயும் பின்னாலயும் முறையே ஐந்து நிமிடங்கள் பிட்டு போடுகிறார்களாம்

சின்னப் பையன் said...

சூப்பர் விமர்சனம். :-))))

ரவி said...

வெண்பூ, டாக்டர் புரூனோ பக்கத்தில் தான் இருக்கிறார், தொடர்புகொள்ளவும்...

ரவி said...

//எங்கூர்ல இடைவேளைக்கு முன்னாலயும் பின்னாலயும் முறையே ஐந்து நிமிடங்கள் பிட்டு போடுகிறார்களாம்///

அதான் பாக்க முடியாத ஆத்தாமையில இப்படி விமர்சனத்த போட்டுட்டனே ?

புதுகை.அப்துல்லா said...

அந்தப் படம் பார்த்தவுடன் கலைஞர் ஸ்டைலில் கொல பண்ராங்கப்பான்னு கத்தத் தோணூச்சு :))))

தறுதலை said...

//ஓசியில கூட போயிராதீங்கடே//

படத்துல நல்லாத்தான இருக்காங்க!

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

அது சரி said...

//
டேடேடேய்ய்ய்ய்ய் என்னை கொலைகாரனாக்காதீங்கடா !!! ஐட்டத்தை எதுக்குடா லவ் பண்றீங்க ?
//


நல்ல கேள்வி. ஆனா, ஐனூரு ரூவா இல்லாதவன் என்ன பண்ணுவான்? அதுக்குத்தேன். ;0)

கலக்கல் விமர்சனம் தல!

Anonymous said...

//
டேடேடேய்ய்ய்ய்ய் என்னை கொலைகாரனாக்காதீங்கடா !!! ஐட்டத்தை எதுக்குடா லவ் பண்றீங்க ?
//


நல்ல கேள்வி. ஆனா, ஐனூரு ரூவா இல்லாதவன் என்ன பண்ணுவான்? அதுக்குத்தேன். ;0)

கலக்கல் விமர்சனம் தல!//
ஓஸியில வோணுமா லவ் பண்ணு!.அட..அட..அட.. ரொம்ப நல்லாயிருக்கே இந்த கொளுகை! :)

Anonymous said...

Same blood...

Anonymous said...

100 க்கு 5 மார்க் வாங்கவேண்டிய படம். அதுவும் அந்த 5 மார்க் தனம் படத்தில் தனமாக நடிக்கும் சங்கீதாவின் சதைக்காகத்தான். நம்மூர் "இந்து வெறியர்கள்" படத்தின் மீது கேஸ் எல்லாம் போட்டு படத்தை பேமஸ் ஆக்காமல் இருந்தால் சரி.

Anonymous said...

வாங்க புதுகை அப்துல்லா மற்றும் அது சரி...

நன்றி !!!

Anonymous said...

//நம்மூர் "இந்து வெறியர்கள்" படத்தின் மீது கேஸ் எல்லாம் போட்டு படத்தை பேமஸ் ஆக்காமல் இருந்தால் சரி.///

இதுக்கு எதுக்கு "இந்து வெறியர்கள்" என்றெல்லாம் பின்னூட்டம் ??

இந்த சிண்டு முடிஞ்சுவிடும் வேலையை வேற எங்காவது போய் பாருடா பாடு..

பரிசல்காரன் said...

ஜூப்பரு.

விமர்சனமும், சங்கீதா இடையும்!

Anonymous said...

//
நல்ல கேள்வி. ஆனா, ஐனூரு ரூவா இல்லாதவன் என்ன பண்ணுவான்? அதுக்குத்தேன். ;0)
//

ஐ நூறு ருவா இல்லாதவன் "தன் கையே தனக்குதவி" என்று போகவேண்டியது தான்.

குசும்பன் said...

//"தனம் : ஓசியில் கூட போயிராதீங்கடே (A)"//

தள தனம் படத்தை தானே சொன்னீங்க????
மைல்டா ஒரு டவுட்!!!!

இப்படிக்கு
அப்பாவி ஆறுமுகம்

குசும்பன் said...

//கட் செய்தால //

தள பட இடங்களில் கட் செய்தால் கட் செய்தால் என்று வருது பேசாம ஒன்னே ஒன்னை கட் செஞ்சு இருந்தா ஹீரோ ஏன் தனத்திடம் போய் இருக்க போறார்!!!

குசும்பன் said...

எங்க ஊரில் இடைவேளைக்கு அப்புறம் மட்டும் தான்:(((((

குசும்பன் said...

படத்தில் எம்.எஸ் பாஸ்கரும் இருக்கிறார் போல அவரை பற்றி எதுவும் சொல்லவில்லையே!!!

குசும்பன் said...

//ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள், ஆனால் இவரிடம் இருப்பதோ ஐநூறு ரூபாய் தான், அதனால் உலகப்புகழ் பெற்ற ஐட்டமான சங்கீதாவை...

அதுக்காக கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறார்...அங்கே பிச்சைக்காரர்கள் //

பிச்னை புகினும் என்று ஒரு பழமொழிய தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ!!

Anonymous said...

///விமர்சனமும், சங்கீதா இடையும்!

Monday, September 22, 2008
///

இடையிடையே இதுபோன்ற பின்னூட்டங்கள் வருவதும் ஜகஜம்.

Anonymous said...

//படத்தில் எம்.எஸ் பாஸ்கரும் இருக்கிறார் போல அவரை பற்றி எதுவும் சொல்லவில்லையே!!!///

குசும்பா, அப்ப நீ படத்தை கம்ப்ளீட்டா பாத்திருக்க !!!

மாட்னியா ?

குசும்பன் said...

செந்தழல் ரவி said...
குசும்பா, அப்ப நீ படத்தை கம்ப்ளீட்டா பாத்திருக்க !!!

மாட்னியா ?//

அட நீங்க வேற தள இங்கே அந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆகாது, வீட்டில் டீவியில் ஒரு பாட்டு போட்டான், அது அவரு சுண்டலுக்கு கோவில் உட்காந்து இருப்பது போல் உட்காந்திருந்தார் அதான் கேட்டேன்.

narsim said...

//தனம் படத்தின் சதை பற்றி லைட்டாக அறிந்த //

அவ்வளவு சதையா தல??


நர்சிம்

Anonymous said...

///அவ்வளவு சதையா தல??
//

பிட்டுடன் படம் பார்த்த அதிஷாவை கேட்டால் சொல்வார் என்று நினைக்கிறேன்...

வால்பையன் said...

சங்க்கீதாவுக்குகாக பாக்கலாம்னு சொன்னாங்க

Cable சங்கர் said...

நானும் எவ்வளவு தடவதான் சொல்றது.. வேணாம்..வேணாம் அழுதுடுவீங்கன்னு ..சொல்ல சொல்ல கேட்காம படம் பார்த்தா இப்படிதான் நடக்கும்

K.R.அதியமான் said...

//நடிகை சங்கீதா "தனம்" படத்தில் ஐட்டமாக நடித்து அதை விட பெரிய புரச்சி ஏற்படுத்தியிருக்கிறார்...
/////

///தனம் ஒரு பஸ் ஸ்டாண்டு ஐட்டம். ரேட்டு ரூ 500./////

/////காரில் பெரிய சேட்டு வந்தாலும் தனத்துக்கு பிடித்திருந்தால் தான் தனம் போவார். அப்படிப்பட்ட ஒஸ்தி - கவரிமான் பரம்பரை ஐய்ட்டம்.

இந்த லொடுக்கு பிகரை செட் செய்ய ஐநூறு ரூபாய் கொடுக்கும் அனைவரிடமும் போய் விடமாட்டார்.
////////

நணபர் ரவி,

இவை ஆணாதிக்கம் மிகுந்த (ஏன் ஆணாவம் மிகுந்த) சொல்லாடலகளாக தெரிகின்றனவே. பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌ங்க‌ள். உல‌கிலேயே மிக‌ மிக‌ கொடுமையான‌, சுய‌ம‌ரியாதையை அழிக்கும் தொழில் அது. ம‌னிதனேய‌த்தோடு அவ‌ர்க‌ளை அனுக‌வேண்டும். அந்த கொடிமைகளை நீக்க முயல வேண்டும்.

படம் மோசமாக இருக்கலாம். ஆனால் விமர்சன சொல்லாடல்கள்....

Anonymous said...

தோழர் ரவி!

தோழர் சங்கீதாவின் இடுப்பு அபாரமாக இருக்கிறது தாங்கள் போட்டிருக்கும் படத்தில். படத்துக்கு நன்றி.

அனானியாக லக்கிலுக்

Anonymous said...

///இவை ஆணாதிக்கம் மிகுந்த (ஏன் ஆணாவம் மிகுந்த) சொல்லாடலகளாக தெரிகின்றனவே. பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌ங்க‌ள். உல‌கிலேயே மிக‌ மிக‌ கொடுமையான‌, சுய‌ம‌ரியாதையை அழிக்கும் தொழில் அது. ம‌னிதனேய‌த்தோடு அவ‌ர்க‌ளை அனுக‌வேண்டும். அந்த கொடிமைகளை நீக்க முயல வேண்டும்.

படம் மோசமாக இருக்கலாம். ஆனால் விமர்சன சொல்லாடல்கள்....///

ஆமாம் ஆணாதிக்கம் அதிகமாகத்தான் உள்ளது...!!! நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு...உண்மையில் எங்க வீட்டில் மீனாட்சி ஆட்சி நடைபெறுகிறது...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

- இப்படிக்கு, காலையில் ஆவி பறக்கும் இட்லியை வெறும் கண்ணால் பார்த்துக்கொண்டே ஓட்ஸ் கஞ்சியை குடித்துவிட்டு அலுவலகம் வந்த - செந்தழல் ரவி

Anonymous said...

////தோழர் ரவி!

தோழர் சங்கீதாவின் இடுப்பு அபாரமாக இருக்கிறது தாங்கள் போட்டிருக்கும் படத்தில். படத்துக்கு நன்றி.

அனானியாக லக்கிலுக்//

தாங்கள் போட்டிருக்கும் ப்ரிட்னி படம் மிகவும் சிறப்பாக உள்ளது...

நானே !!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....