பாகம் 1
முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது....விடுதியில் இருந்த மாணவர்கள், விடுதியின் சட்ட திட்டங்கள் பிடிக்காமல் வெளியேறி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் முயற்ச்சியில்...
நான், கோவிந்து, கார்த்திக், மணி, மற்றும் இளமாறன் ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக தங்கிக்கொள்ளலாம் என்று பிரியப்பட்டோம்...
வீடு தேடும் பொறுப்பு என்னுடையது....
தெரிந்த டீக்கடைக்கு சென்றேன்...இளங்கோ அண்ணா தான் இதற்க்கு ஓனர்..எங்க க்ரூப் கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்..நாங்களும் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடுவோம்...
நான்: என்ன இளங்கோ அண்னே...ஒரு ஸ்ட்ராங் டீயப்போடுறது...
இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது..
நான்: என்னன்னே...இப்படி கேட்டா எப்படி...
இளங்கோ : வேற எப்படி ராசா கேக்குறது..
நான்: அட இருங்கன்னே...இந்த மாசத்தில இருந்து தனியா வீடு பாத்து தங்க போறோம்...செலவு கம்மியா ஆகும்..பழைய பாக்கி எல்லாம் கொடுத்துடுறோம்...
அண்ணன் ஒரு முறைப்பு லுக்கு கொடுக்கிறார்...
மீண்டும் நான்..அண்னே...தம்முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்கன்னே...
இளங்கோ அண்ணன்:ரொம்பத்தான் ஏத்தமாகிப்போச்சி டா உங்களுக்கு...(சட்டை பையிலிருந்து காசை கொடுக்கிறார்..)
நான்: அண்ணே...பசங்க வீடு பாக்கிற வேலையை என்கிட்ட கொடுத்திட்டாங்க...ஏதாவது வீடு ஊருக்குள்ள இருக்கா சொல்லுங்க..
இளங்கோ அண்ணன்: அந்த உரக்கடைக்கு பக்கத்துவீடு காலியாத்தாண்டா இருக்கு...சீக்கிரம் போ...இளங்கோ சொல்லிவிட்டேன் அப்படின்னு சொல்லு...
வேகமாக தலையாட்டிவிட்டு உரக்கடை நோக்கி சென்றேன்...
உரக்கடை பூட்டி இருந்தது....மதிய உணவுக்காக சென்று இருப்பர் போலும்..
பக்கத்துவீடு திறந்து இருந்தது...மெல்ல தட்டினேன்....
டக் டக்...யாருங்க வீட்டுல...
யாரோ நடந்துவரும் சரசர ஒலி....
க்ரீச்....
கதவு திறந்தது....
மின்னல் வெட்டியது போல வந்து நின்றாள் என் தேவதை...
அவள் : என்ன வேனும்....
அவளை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லை...
தலையை குனிந்தேன்...வீடு பாக்கலாமேன்னு...
அவள் : எந்த வீடு...
குனிந்த தலை நிமிராமல்...உரக்கடைக்கு பக்கத்துவீடு...இளங்கோ அண்ணா சொல்லிவிட்டார்...
அவள் : ஹல்லோ....வீடு பாக்கத்தானே வந்தீங்க...பொண்ணு பார்க்க இல்லையே...எதுக்கு இவ்ளோ வெக்கப்படுறீங்க...
அவமான உணர்ச்சி தலைதூக்க...சட்டென நிமிர்ந்து அவளை பார்த்தேன்...
அப்பா...அந்த கண்களில்தான் என்ன மின்னல்....என்ன தீட்சண்யம்...
என் தேவதை பேசும் என்பதே எனக்கு கனவு போல் இருந்தது....அதுவும் பட் பட் என பட்டாசாய் வெடிப்பாள் என்பது ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு...
ஏற்க்கனவே உங்க பிரண்டு கோயிந்தன் என்னை ஸ்கூல் கிட்ட பார்த்து கேட்டார்...எங்க அப்பா கிட்ட சொல்லி உரக்கடைக்காரர் கிட்ட ஏற்க்கனவே சொல்லியாச்சி...
இனிமே குட்டிசுவர் மேல உட்காராமல் மாடியில் இருந்தே நீங்க என்னை சைட் அடிக்கலாம்....
ஹய்யோ...என் இதயம் வாய்வழியாக துள்ளி வெளியே வரும்போல இருந்தது...நாம சைட் அடிக்கற விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கு....அதுக்குமேல...இந்த கோயிந்தன்....இவளோட பேசின விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம விட்டுட்டானே...பனியன் போட்ட சனியன்..அவன....
ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...
அவள் :ரொம்ப வழியாதீங்க....உங்க அறையில நீங்க கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்க விஷயம் எல்லாம் கோவிந்தன் சொன்னார்...எனக்கு எப்போவே தெரியும்...நீங்க பண்ணிக்கிட்டு இருக்கறது எல்லாம்....பொண்னுங்க என்ன எதுவும் தெரியாதவங்கன்னு நினைச்சிட்டீங்களா...
வெட்கம் பிடுங்கி தின்றது எனக்கு....
ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...
போதும்...எங்க அப்பா வர நேரம் ஆச்சு....நாளைக்கி மெஸ் பக்கத்தில வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்....
வந்திடுரேன் திவ்யா...
முதல் முதலில் அவள் பெயரை அவளிடமே உச்சரிக்கையில்....நான் இந்த உலகத்திலேயே இல்லை...
அங்கிருந்து எப்போது வந்தேன்...எப்படி வந்தேன்...என்பதே தெரியவில்லை....அறையில் படுத்திருந்தேன்.......
மெஸ் என்பது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம்...ஒரு ஓட்டல்காரர் கல்லூரி மாணவர்கள் சாப்பிடுவதற்க்காக அமைத்து இருந்தார்...
நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன....
*******************************************
காதல் பயணம் தொடரும்.....
Sunday, September 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
8 comments:
சரியான இடத்துல தொடரும் போட்டுத் தொலைகிறீங்களே நண்பா..
ஸ்டெல்லா புரூஸ் கதை படிக்கற மாதிரி இருக்கு..
தொடர வாழ்த்துக்கள்..
( தங்கமணிக்கு மேட்டர் தெரியுமா..? )
எக்ஸ்கியூஸ் மீ, இது கதை !!!!
when is the next part?
// செந்தழல் ரவி said...
எக்ஸ்கியூஸ் மீ, இது கதை !!!! //
நம்பிட்டோம்....!!!
நல்லா கதை விடறீங்க...
//நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன....//
தொடர்ச்சி அடுத்த பதிவு வரும்வரை.. நிமிடங்கள் யுகங்களாக கழிகின்றன..
கலக்குங்க தல
நர்சிம்
//இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது//
ஒரு சின்ன மேட்டர்.. உரையாடலின் போது என்ன பேசுகிறார்கள் என்பதை வைத்தே யார் பேசுகிறார்கள் என்பதை கணிக்க விட்டுவிட வேண்டும்.. கதாபத்திரத்தின் பெயர் : டயலாக் என்பதை விட மேலே சொன்ன சூட்சமம் சுவாரஸ்யத்தை கூட்டும்..
தப்பா இருந்தா தப்புனு சொல்லிறுங்க தல..
அடுத்த பதிவை மானிட்டர்மீது விழிவைத்து...
நர்சிம்
உங்க காதல் பயணம் நல்லாருக்குங்க
//
செந்தழல் ரவி said...
எக்ஸ்கியூஸ் மீ, இது கதை !!!!
//
ஓ அப்பிடியா
ரைட்டு
Post a Comment