நமது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தொழில்கள் சம்பந்தமான பதிவு இது...உங்களுக்கு தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள்....நான் ப்ளாகர், அதனால டிஸ்கவுண்ட் கொடுங்கள் என்றெல்லாம் டார்ச்சர் தரக்கூடாது ஆமாம்..
http://www.makkal-sattam.org/
மக்கள் சட்டம் என்ற பதிவை நடத்திவரும் சுந்தர்ராஜன், க்ரெடிட் கார்டு சம்பந்தமான பல்வேறு விடயங்களை டீல் செய்கிறார்...அவருடைய http://www.creditcardwatch.org/ என்ற தளத்தில் பாமரருக்கும் புரியும் வண்ணம் தமிழில் அற்புதமான விளக்கங்கள் தருகிறார்...க்ரிமினல் மற்றும் சிவில் சட்டத்துறை நிபுனர், உங்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு நாடவும்...
http://www.eeravengayam.blogspot.com/
ஈரவெங்காயம் என்ற பெயரில் எழுதும் AKS ஒரு வியாபார காந்தம். கார்மெண்ட் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் செய்கிறார்...நான் கூட எங்கள் அலுவலகத்தில் அனைவருக்கும் தேவைப்படும் கஸ்டமைஸுடு டி-ஷர்ட்ஸ் தயாரிக்க அவருடைய நிறுவனத்தை நாடலாம் என்று உள்ளேன்...இவர் இங்கே தயாரிக்கும் டிசர்ட் மற்றும் கார்மெண்ட்ஸ், வெளிநாடு சென்று அங்கே இருந்து ஏதோ ஒரு ப்ராண்ட் நேமுடன் மீண்டும் இந்தியா வரும் வாய்ப்பு கூட உண்டு. தரம் வாய்ந்த கார்மெண்ட்ஸ் தயாரிக்கும் இவர் திருப்பூரிலேயே நிறுவனம் வைத்துள்ளார். தேவைக்கு அணுகவும்...
http://osaichella.blogspot.com/
ஓசை செல்லா, ஒரு இணைய நாடோடி என்பது எல்லோருக்கும் தெரியும்...அவருடைய தொழில் இணைய பக்க வடிவமைப்பு மற்றும் டொமைன் நேம் பதிவது...ஏற்கனவே இவரிடம் ஒரு இணைய முகவரி பெற்றுள்ளேன், மேலும் சொந்த பெயரில் வலைப்பதிவு அமைக்க இவரை நாடவிருக்கிறேன்...வலைத்தளங்களை உருவாக்க நாடலாம்...
http://kuttapusky.blogspot.com/
வரவணையான், Fright Forwarding துறையில் இருக்கிறார்...தூத்துக்குடி துறைமுகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்...ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான எந்தவொரு பணிக்கும் இவரை நாடலாம்...இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி / இறக்குமதி செய்வதில் மிருந்த அனுபவம் உள்ளவர்...
http://dondu.blogspot.com
மொழிபெயர்ப்பு மற்றும் துபாஷி பணிகளுக்கு (ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி மற்றும் வைஸ் வர்ஸா). பொறியாளரான இவர் இந்த துறையில் மிகுந்த அனுபவம் உள்ளவர். ஆனால் பைசா சுத்தமாக தொழில் செய்வார். வலைப்பதிவர் என்பதற்காக மீட்டரை குறைத்துக்கொள்ளமாட்டார், ஜாக்கிரதை :))
http://vadakaraivelan.blogspot.com/
கோவையை சேர்ந்த வடகரை வேலன் அண்ணாச்சி, சொந்தமாக ஆப்செட் ப்ரஸ் வைத்துள்ளார்...தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன, வடிவேல் கூட வ.மு.க ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார் போல தெரிகிறது, அண்ணாச்சியை உங்கள் ப்ரிண்டிங் சம்பந்தமான பணிகளுக்கு அணுகலாம்..
http://tvmalaionline.blogspot.com/
நன்பர் ஜிம்ஷா, இணைய வடிவமைப்பு பணியில் உள்ளார். க்ராபிக்ஸ், லோகோ டிசைன், போன்ற மேட்டர்களுக்கு ஜிம்ஷாவை நாடலாம்...படு சுறுசுறுப்பாக பணிகளை முடித்து தருதல் இவரின் சிறப்பு...
http://dailycoffe.blogspot.com/
நன்பர் இளைய கவி, இப்போது டூரிசம் துறையில் கொடிகட்டி பறப்பதாக கேள்வி...அலுவலகங்களில் இருந்து மொத்தமாக டூர் செல்பவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே இவரின் கைட் இருப்பார்கள், பேக்கேஜ் டூர்ஸ் எல்லாம் கலக்குகிறார்...கேரளா போகனுமா, சிங்கப்பூர் போகனுமா, எதுவானாலும் சிறப்பாக செய்கிறார்கள்..
http://valpaiyan.blogspot.com/
தோழர் வால்பையன், முன்பேர வர்த்தகத்தில் இருக்கிறார்...முன்பேர வர்த்தகம் என்றால் ஒரு பத்தாயிரத்தை கட்டி 100 கிராம் கோல்டு வாங்கி வைத்துவிடுதல், அதை இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அதிக லாபத்துக்கு விற்றல் அல்லது நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கிய விலையில் அன்றைக்கு வாங்கி கொள்ளுதல்...அதாவது நமது பெயரில் தங்கம் வாங்கி ரிசர்வ் செய்துவிடுவார்கள்...நான் கூட 100 கிராம் வாங்கப்போறேன்....நீங்கள் தொடர்புகொள்ள அவர் வலை முகவரியை தந்துள்ளேன்... அவரிடமே உங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள்...
http://truetamilans.blogspot.com/
உண்மைத்தமிழன் அண்ணாச்சி, நன்றாக டைப்புவார் என்பது ஊரறிந்த விசயம்...தமிழில் டைப்பிங் செய்ய வேண்டுமென்றால் அவரை தொடர்புகொள்ளவும்....ஓய்வு நேரங்களில் அதனை செய்து தருவார்...
http://sanjaigandhi.blogspot.com/
தோழர் சஞ்ஜெய், கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கிறார்...கம்பெனியிடமிருந்து வாங்கி டீலர்களுக்கு சப்ளை செய்கிறார்..எக்ஸாம்பிள், எல்.ஜியிடம் இருந்து வாங்கி வசந்த் அன் கோவுக்கு தர்ர மாதிரி. எலக்ட்ரோலக்ஸ், சாம்ஸங் எல்லாம் செய்யுறார்...மொத்தமாக கன்ஸூமர் கூட்ஸ் தேவைப்படுபவர்கள் அணுகலாம்...அப்படி அணுகும்போது, ஹல்லோ மிஸ்டர் செல்லா என்று அறிமுகம் செய்துகொள்ளவும்...
http://kasiblogs.blogspot.com/
தமிழ்மணம் கண்ட காசி அவர்களுடைய கண்டுபிடிப்பு இந்த சேவை மேஜிக் ஆட்டோமேட்டிக் குக்கர். அனைத்து விவரங்களும் http://www.sevaimagic.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது...இணையத்திலேயே ஆர்டர் செய்யும் வசதியும் உள்ளது...
http://tvpravi.blogspot.com
தோழர் செந்தழல் ரவி, உருப்புடியாக எதையாவது செய்யனும் என்று இந்த பதிவு போட்டிருக்கிறார்..இதில் ஓட்டு குத்தவும், எப்போதும் நெகட்டிவ் ஓட்டு குத்திச்செல்லும் நன்பரே, இதிலாவது பாஸிட்டிவ் ஓட்டு போடவும் ப்ளீஸ்...
எனக்கு தெரிந்த அளவில் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட துறைகளை பற்றி எழுதியிருக்கிறேன்...எதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
23 comments:
nan koolipadai vaithullen. addressum photovum koduthal pottu thalluven. pathivarkalukku 10 percent discount.
நன்றி பொய்யன்...உங்கள் கூலிப்படை மேட்டரை மெயின் மேட்டரிலே இணைத்துவிடவா ?
கை எடுக்க எவ்ளோ, கால் எடுக்க எவ்ளோ என்று தனித்தனியாக சொன்னால் இன்னும் வசதியாக இருக்கும்...
கடன் தரும் (கந்து வட்டிக்கு அல்ல), திருமணப் புரோக்கர் வேலை செய்யும்,ஜாதக பொருத்தம் பார்க்கும்,லவ் லெட்டர்
எழுதித் தரும், டைவர்ஸ் வாங்க
உதவும், பெயில் எடுக்க உதவும்,
பதிவர்களையும் அறிமுகப்படுத்தவும் :)
Thanks for all your informations...
ரொம்ப நன்றி தலைவா!
நானும் "தங்கம் வாங்கலாம் வாங்க" என்று ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.
அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிய அடி வாங்கி இருப்பதால் தங்கம் மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது, இருப்பினும் இம்மாத இறுதிக்குள் கொஞ்சம் கீழே வர வாய்பிருக்கிறது.
அங்கே கண்டிப்பாக சொல்கிறேன்
உருப்படியான பதிவு ரவி!
என்னமோன்னு நெனைச்சேன். கலக்கீட்டிங்க!!
//நான் கூட 100 கிராம் வாங்கப்போறேன்//
தங்கம் இப்போ வாங்குறதுக்குப் பதிலா இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு வாங்கலாம்னு நினைக்கிறேன்.
//உருப்புடியாக எதையாவது செய்யனும் என்று இந்த பதிவு போட்டிருக்கிறார்// உங்களோட காற்றாலை தொழில் பத்தி யாரோ எழுதப் போறதா சொன்னாங்க. இன்னும் கானும்.
வாலு,
//அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிய அடி வாங்கி இருப்பதால் தங்கம் மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது//
இது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.
ஒரு நாதாறிக்கு (இன்னமும்) அல்லக்கையாக செயல்படுபவர்கள் லிஸ்ட்டையும் முழுமையாக வெளியிடுங்களேன்.
//அப்படி அணுகும்போது, ஹல்லோ மிஸ்டர் செல்லா என்று அறிமுகம் செய்துகொள்ளவும்...//
ங்கொக்க மக்க.. அடங்க மாட்டேன்றங்கய்யா சிலர் நாட்ல.. :D
... நல்ல பதிவு ரவி... பல நிஜத் தொழிலதிபர்களை( என்னை மாதிரி டுபுக்ஸ் இல்லை :P ) அறிந்துக் கொள்ள உதவியதற்கு நன்றிங்கோ.. :)
... மைண்ட்ல வச்சிக்கிறேன்.. :))
வருகைக்கு நன்றி லோகன்..
நன்றி பரிசல் !!!
///உங்களோட காற்றாலை தொழில் பத்தி யாரோ எழுதப் போறதா சொன்னாங்க. இன்னும் கானும்.//
சரியாக காற்று வராததால் நாமளே பேன் போடவேண்டியிருக்கு !!!
////ஒரு நாதாறிக்கு (இன்னமும்) அல்லக்கையாக செயல்படுபவர்கள் லிஸ்ட்டையும் முழுமையாக வெளியிடுங்களேன்.///
வெளியிட்டு ?
அடடா...எதுக்குங்க ரவி இந்த விளம்பரம் எல்லாம்..??
இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியலையப்பா சாமீ...
நம்ம ஊர்ல தான் பருத்திக் கொட்டை விக்கறவன், புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் தொழில் அதிபருங்க...
அப்படியே சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கற மேட்டர சொல்லாம விட்டுட்டீங்க...
thanks !
//வியாபார காந்தம்//
நல்ல தமிழாக்கம் தல
தகவல்கள் கொண்ட பதிவு
நர்சிம்
நன்றி AKS மற்றும் நர்சிம். ஏதோ ஒரு கமல் படத்துல வருமே ?
தாங்கள் தங்கள் அறிமுகம் சூப்பர் நன்றி. அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு. எனக்கு இணைய வடிவமைப்பு பற்றி எதுவும் தெரியாது.
பா.ராகவன் என்ற போட்டாஷாப் புலியை விட்டுவிட்டீர்களே :).
பட்டியலில் நூல் வெளியீடும் பத்ரி,
வசனம் எழுதும் பைத்தியக்காரன்,
ஆடுமாடு, உண்மைத்தமிழன்
குறும்படம் இயக்கும் வளர்மதி
உட்பட பலரையும் சேருங்கள்.
//
அப்படி அணுகும்போது, ஹல்லோ மிஸ்டர் செல்லா என்று அறிமுகம் செய்துகொள்ளவும்...
//
சரி ரைட்டு அப்பிடியே செஞ்சிடுவோம்!!
:)))))))
20
ஹெச் எம் டி. அன்சாரி
DUBAI, MALASIA, INDIA.
ansareee@yahoo.com, 00971508406322
என் அன்புள்ள, தொழில் அதிபர்களே! தமிழ்
நண்பர்களே ! நான், ஹெச்.எம் .டி.அன்சாரி.
துபாயிலிருந்து, என்னிடம் 20 க்கும். மேற்
ப்பட்ட புத்தம், புதிய புதிய, தொழில்களும்,
இன்னும்,பழைய,நடை முறையில் உள்ள,
பழைய பழைய , தொழில்களும் இன்னும்,
யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து
செய்ய முடியாத தொழில்களும், என்னி
டம் இருக்கின்றது. தாங்கள் என்னைத்
தொடர்புக் கொள்ளவும் இன்னும் விசயங்
களையும், விபரங்களையும்,,, விளக்கங்க
ளையும், இலவசமாக அறிய,
ஹெச் எம் டி. அன்சாரி.
DUBAI, MALASIA, INDIA.
ansareee@yahoo.com,
00971508406322
ஹெச் எம் டி. அன்சாரி
DUBAI, MALASIA, INDIA.
ansareee@yahoo.com, 00971508406322
என் அன்புள்ள, தொழில் அதிபர்களே! தமிழ்
நண்பர்களே ! நான், ஹெச்.எம் .டி.அன்சாரி.
துபாயிலிருந்து, என்னிடம் 20 க்கும். மேற்
ப்பட்ட புத்தம், புதிய புதிய, தொழில்களும்,
இன்னும்,பழைய,நடை முறையில் உள்ள,
பழைய பழைய , தொழில்களும் இன்னும்,
யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து
செய்ய முடியாத தொழில்களும், என்னி
டம் இருக்கின்றது. தாங்கள் என்னைத்
தொடர்புக் கொள்ளவும் இன்னும் விசயங்
களையும், விபரங்களையும்,,, விளக்கங்க
ளையும், இலவசமாக அறிய,
ஹெச் எம் டி. அன்சாரி.
DUBAI, MALASIA, INDIA.
ansareee@yahoo.com,
00971508406322
ஹெச் எம் டி. அன்சாரி
DUBAI, MALASIA, INDIA.
Welcome Sir,
I have interest on this Small Bussiness Idea.Please Contanct at my ID in Tamil.
Email ID- darshan_raji123@ymail.com
Post a Comment