ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் அய்ந்து
இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு...லைனில் பழைய மேனேஜர்...என்னடா இந்தாள் விஷம் குடிச்சான் செத்து போனான் என்று கேள்விப்பட்டால் இன்றைக்கு தொலைபேசியில் அழைக்கிறானே என்று ஆச்சர்யம்...
யாரை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவரிடம் இருந்தே போன், ஒரு எம்.என்.ஸி பெயரை சொல்லி அதில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் சொன்னார்...என்னிடம் பேசும்போது புல் மப்பு, என்னுடைய டீட்டெயில்ஸ் வேறு ஒரு பழைய எம்ப்ளாயி மூலம் கிடைத்ததாகவும், இந்த ஊரில் அவருக்கு தெரிந்தது நான் மட்டும் தான் என்றும் சொன்னார்...
நானே வந்து பார்க்கிறேன் சார் என்றேன், ஹாலிவுட் ஹீரோக்கள் பேய் இருக்கிறது என்று தெரிந்தும் கதவை போய் திறந்து பார்ப்பது மாதிரி என்றும் சொல்லலாம், இவரால் வேறு யாராவது டேமேஜ் ஆகாமல் காக்கும் எண்ணமும் ஒரு பக்கம், அவருடைய குடும்பத்தினர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இன்னொரு பக்கம், உண்மையிலேயே இவர் என்னதான் பண்ணுகிறார் என்று தெரிந்துகொள்ளும் விருப்பம் இன்னொரு பக்கம் என்று கலவையான சிந்தனைகளோடே நானும் என்னுடைய நன்பனும் அவருடைய அப்பார்ட்மெண்டுக்கு போனோம்...
அங்கே போகும்போதே இரண்டு பெண்கள் ஹாலில் அமர்ந்திருந்தார்கள், அவர்களிடம் ஹிந்தியில் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார், கொஞ்சம் தயங்கினோம், நாங்க அப்புறமா வரோம் சார் என்றேன்..நோ நோ இரு அனுப்பிட்டு வரேன் என்று கத்தையாக பணம் கொடுத்து அனுப்பினார், காசுக்கு வரவளுங்க, என்னோடது சரியில்லைங்கறாளுங்க என்று பேசினார்...
இன்னும் திருந்தலையா நீ என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே விசாரித்தேன், அவருக்கு இன்னோரு கல்யாண ஏற்பாடு நடந்திருக்கிறது, தூத்துக்குடி பக்கம் பெண் பார்த்து, இன்னும் டைவர்ஸ் கூட ஆகவில்லை, இருந்தாலும் இந்த விஷயம் சொல்லாமலேயே அவருடைய குடும்பத்தினர் லம்ப்பான வரதட்சணைக்காக இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்...
மேலும் இவர் வாங்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் அவரது மச்சான் போட்ட பத்து லட்ச ரூபாய்க்கு நாற்பதாயிரம் மற்றும் அவரது அக்கா வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனுக்கு இருபதாயிரம் மற்றும் அவரது அம்மா அப்பா செலவுக்கு பதினைந்தாயிரம், மற்றும் இவர் தினமும் குடிக்க ஆயிரம் என முழுதும் செலவாகிவிடுகிறது என்றும் சொன்னார்...
அது மட்டும் இல்லாமல் மேட்ரிமோனியலில் பணம் கட்டி ப்ரொபைல் போட்டு அதன் மூலம் பெண்களிடம் பேசி டேட்டிங் செய்வதாகவும், முப்பது வயசு பெண்களை தனியாக சந்திப்பதாகவும், செட் ஆவதாகவும், இப்பல்லாம் பெண்கள் மேட்ரிமோனியலிலேயே சிக்குவதாகவும் பெருமையாக சொன்னார்...
பொதுவாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன், குடி குடி என்று பெரும் தொந்தரவு செய்தார், வயிற்றில் அல்சர் என்று தப்பித்தேன்...
மெதுவாக அந்த பெண் யார் என்ன என்று விசாரித்தேன், தகவல் சொன்னார், இரவு வீட்டுக்கு வந்து அந்த பெண் வீட்டாரிடம் தகவல் சொன்னேன்...அவர்களும் திருமணத்தை நிறுத்தியதாக கேள்விப்பட்டேன்...
அட்லீஸ்ட் ஒரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்ற முடிந்ததே என்ற திருப்தியோடு அந்த நாளை நிறைவு செய்தேன்...
வெகு விரைவில் இவருடைய ஆட்டங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று தெரிந்திருதால் அன்றே இன்னும் சந்தோஷம்பட்டிருப்பேன்...
நினைவுகள் தொடரும்....!!!!
30 comments:
எப்படிங்க ரவி இவ்வளவு அருமையா எழுதிறீங்க.உண்மையிலேயே உங்கள் நடை எந்த வித தடுமாற்றம்ய்ம் இல்லாமல் சீராகச் செல்கிறது.ஹூம் ...நானெல்லாம் எப்பங்க இந்த மாதிரி எழுதுறது..அது சரி சட்டியில இருந்தாத்தானே அகப்பையில் வரும்.வாழ்த்துக்கள்!.வாழ்க ரவி!.
இதே கமெண்டை கிரி சைட்டிலயும் போட்ட்டு இருக்கேன்..உங்கள் இருவருடைய நடையும் சூப்பர்!..
படிச்சு பின்னூட்டம் போடறாதுக்கே விடாத அளவு டக் டக்ன்னு அடுத்தடுத்த பார்ட் போடறீங்க.
சபாஷ் நடை. சபாஷ் டாபிக்!
வாங்க நல்ல தந்தி !!!
ரீயூஸபிளிட்டி ? இன் கமெண்ட்டிங் ? கலக்குங்க...!!!
நன்றி !!!
வாங்க பரிசல், நன்றி !!!
கதை நல்ல வேகம் ரவி.. பாராட்டுக்கள்...
//அவளையே போகவெச்சிடேன்னு வெய்யு, ஒன்னும் கொடுக்கத்தேவையில்ல தெரியுமா.//
எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்
கதையில் ஒரு உயிரோட்டம் இருக்கிறது. உளவியல் சம்பந்தமாக எடுத்து செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
இது கதையா...
நான் கூட ரயில்ன்னு நெனச்சுட்டேங்க....
என்னா வேகமா போகுது...
இன்னிக்கு புல்லா உங்க தளத்துலையே கட்டிப்போட்டுட்டீகளே...
என்னைய யாராவது அவுத்து விடுங்க... நான் போகணும்...
உப்பை திண்ணவன் தண்ணிய குடிச்சு தானே ஆவனும்
வாழ்த்துக்கள் ரவி, ரொம்ப நல்லா இருக்கு. நான் கூட முதலில் ஏதோ பரபரப்புக்காக தான் எழுதறீங்களோன்னு நினச்சேன்
///எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்//
அதை அந்த புராஜக்டு மேனேஜருக்கிட்ட இல்லா கேக்கோனும் வாலு ?
///இது கதையா...
நான் கூட ரயில்ன்னு நெனச்சுட்டேங்க....
என்னா வேகமா போகுது...
இன்னிக்கு புல்லா உங்க தளத்துலையே கட்டிப்போட்டுட்டீகளே...
என்னைய யாராவது அவுத்து விடுங்க... நான் போகணும்...////
நன்றி நவநீதன் டாக்ங்குயூ.
வாங்க மருதநாயகம், உங்கள் கொமெண்டுக்கு நன்றி !!!
boss kadhai romba nalla irruku. keep it up. manichikonga tamila type eppadi type panradhnnu theriyala.
விறு விறு விறு விறுன்னு எகிறுது கதை (அல்லது உண்மை சம்பவம்). அது சரி, அத்தியாயம் நாலுல ரிசார்ட்டுக்கு கூட்டீட்டு போன பொண்ணுக்கு வேலை கிடைச்சுதா?
நடத்து மாப்ளே! நல்லாகூட எழுதுறே.. :)
செம ஸ்பீடு...
நல்ல விறுவிறுப்பு...
அப்போ Project managerரோட வேலை இதுதானா?
நல்லா எழுதறிங்க ரவி...
வணக்கம் செல்லா அவர்களே :)
மேலிருக்கும் பின்னூட்டம் வேண்டுமென்றே எழுதப்பட்டது தான், படித்து கோபம் வருகிறது இல்லையா? அதே போல தான் எனக்கும்.
Sorry about being so rude, just wanted to get my point across. Other than that, all your stories and articles are very nice.
வாங்க இளா மாம்ஸ்...அப்புறம், மேலுக்கு சுகம்தானே !!!
வாங்க வெட்டிப்பயல், நன்றி !!!
வாங்க கிங், மற்றும் கயல், நன்றி !!!!
வருண் நல்லா இருக்காரா ?
அம்பி,
பார்ட் ஏழு எப்பப் போடுறேள்?
ஜெட் வேகத்தில் 6 பார்ட் வந்துச்சு.. முக்கியமான கட்டத்துல wait பண்ண வெச்சுடீங்களே?? சீக்கிரம் நினைவுகளை தொட்ருங்கள்..
நீங்கதானே கொஞ்ச வாரத்துக்கு முந்தி வலைப்பதிவால நாங்கெட்டேன்
அது போச்சு இது போச்சுன்னு புலம்பினது, இப்ப அதெல்லாம்
திரும்ப கிடைச்சிருத்தா இல்லை
வலைப்பதிவு புகழ் போதையில
பழசெல்லாம் மறந்திட்டுச்சா.
test
///திரும்ப கிடைச்சிருத்தா இல்லை
வலைப்பதிவு புகழ் போதையில
பழசெல்லாம் மறந்திட்டுச்சா.///
டேய் இதுல என்னடா புகழு போதை ? கம்பியூட்டர ஷட்டவுன் பண்ணா நாலு பேருக்கு நம்மள தெரியுமா ?? ஊரு ஒலகம் கம்பியூட்டர விட பெருசு தம்பி, போய் புள்ளகுட்டிவள படிக்கவெக்குற வழியப்பாரு !!!
பேரை போட்டு கமெண்டு போட துப்பில்லாத பொசக்கெட்ட பய, இவன் கொஸ்டின் கேக்கவந்துட்டான் மடப்பய மருமவன்...
உங்கள் கருத்துக்கு நன்றி நன்பர்களே !!!
Post a Comment