Friday, September 26, 2008

ஆதலினால் காதல் செய்தேன்..பாகம் ஒன்று

ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதியது !!! கொஞ்சம் மொக்கையாத்தான் இருக்கும் !!! பொறுத்தருள்க !!!

நான் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்...என் பள்ளிப் படிப்பு முடிந்தது...கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாயிற்று...என் மதிப்பெண் அவ்வளவு அதிகமில்லை...சராசரி தான்...இடம் கிடைத்தது திருச்சிக்கருகில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி...

கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிப் பருவத்தில் கல்லூரியைப் பற்றி பல கனவுகள் கண்டிருந்தேன்...அவை யாவும் நிறைவேறப்போகும் ஆவலில் நெஞ்சம் நிறைந்த படபடப்புடன் முதல் நாள் கல்லூரி விடுதியில்....

நண்பர் அறிமுகம் எல்லாம் முடிந்தது...பல ஊர்களில் இருந்து இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து மாணவர்கள் வந்திருந்தார்கள்...

கல்லூரி வகுப்புகள் ஆரம்பமாயின...அனைத்து சுகந்திரங்களும் ஒருசேர கைகளில்...

நினைத்த நேரம் சினிமா...அவ்வப்போது வகுப்பு...பல சிறகுகள் முளைத்தது போல் இருந்தது...

எங்கள் கல்லூரியில் இருந்து விடுதி அரை கிலோமீட்டர் தூரம் அமைந்திருந்தது...நடந்துதான் செல்ல வேண்டும்...

கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி....

மாலை கல்லூரி முடிந்ததும் அந்த பள்ளிக்கருகில் இருந்த ஒரு குட்டிச்சுவர் தான் மிக உதவியாக இருந்தது...அதில் அமர்ந்து கொண்டு போகும் வரும் இளம் சிட்டுக்களைப் பார்ப்பது....பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவிகள், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகள் போல் தோன்றினார்கள்...

அந்த தேவதைகளில் ஒன்றுதான் என் இதய ராணியாக பின்னாளில் ஆகிய திவ்யா...

ஆடம்பரமான உடை அணிவதில்லை அவள்...சராசரி உயரம்...சொல்லப்போனால் சற்று குள்ளம்...நீள கருங் கூந்தல்...பார்ப்பவரின் இதயத்தினை ஊடுருவும் கண்கள்....குத்தீட்டி போல் அமைந்த புருவம்.....செந்நிற சிறிய உதடுகள்.....

நளினமாக நடக்கும் நடை...பேசுகிறாளா இல்லையா என்பது போல மெல்லிய குரல்...

இது தான் திவ்யா...

நான் பெண்களிடம் அதிகம் பேசுவது கிடையாது...ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த திவ்யா, பிறகு என் உள்ளத்தினை கொள்ளை கொண்டாள்...

அவளைப் பார்க்காத நாட்கள் , எனக்கு நாட்களாகவே தோன்றவில்லை....அவளை மீண்டும் காணும்வரை, வலி நிறைந்ததாக மாறின...

அவளிடம் நான் முதல் முதலாக பேசும் தருணம் வாய்த்தது...அந்த நாள்....

..காதல் பயணம் தொடரும்..

***************************************************

18 comments:

rapp said...

//ஆடம்பரமான உடை அணிவதில்லை அவள்//

ஸ்கூல் யூனிபார்ம்ல என்னத்த ஆடம்பரமா உடுத்தறது?

லக்கிலுக் said...

//ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதியது !!! கொஞ்சம் மொக்கையாத்தான் இருக்கும் !!! பொறுத்தருள்க !!!//

தோழர் இப்பவும் முன்பைவிட மொக்கையாக தான் எழுதுகிறீர்கள். மொக்கை தான் நம் முகவரி என்பதை மறந்துவிட்டு ஆணவத்தோடு பேசவேண்டாம்.

கோபிநாத் said...

தினமும் வருமா???

mokkai said...

En naan comment ezhudhina vara maatenguthu???

mokkai said...

How to write in tamil????

வால்பையன் said...

//ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதியது !!! கொஞ்சம் மொக்கையாத்தான் இருக்கும் !!! பொறுத்தருள்க !!!//

இப்போ எழுதுறதெல்லாம் நல்லாருக்குன்னு வேற நினைப்பிருக்கா

வால்பையன் said...

//நான் குமார்..என் காதல் கதையை உங்களுக்கு இப்போது சொல்லுகிறேன்..//

"உங்கள் தலைவிதி கேட்டு தான் ஆகவேண்டும்"
அதை சேர்க்கவில்லை

வால்பையன் said...

//கல்லூரிக்கு அருகில் ஒரு பள்ளியும் அமைந்திருந்தது....முற்றிலும் மாணவிகள் படிக்கக் கூடிய பள்ளி...//

எங்க வச்சாரு பாருயா டிவிஸ்டு கதையில

வால்பையன் said...

//பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவிகள், வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதைகள் போல் தோன்றினார்கள்...//

இருக்கும் இருக்கும்,
கூடவே பாடிகாட் கணக்கா அவ அப்பனும் வந்தா தேவதை பின்னாடி எமன் வர்ற மாதிரி இருக்கும்

வால்பையன் said...

//அவள்...சராசரி உயரம்...சொல்லப்போனால் சற்று குள்ளம்...நீள கருங் கூந்தல்...பார்ப்பவரின் இதயத்தினை ஊடுருவும் கண்கள்....குத்தீட்டி போல் அமைந்த புருவம்.....செந்நிற சிறிய உதடுகள்.....//


வர்ணிக்கிரத்துக்கு வேற வார்த்தைகளே இல்லையா!

வால்பையன் said...

//நான் பெண்களிடம் அதிகம் பேசுவது கிடையாது..//

நம்பிட்டேன்

வால்பையன் said...

//..காதல் பயணம் தொடரும்.. //

உங்கள் கஷ்டமும் தொடரும்

Anonymous said...

// mokkai said...
En naan comment ezhudhina vara maatenguthu???//

அப்போ மேல இருக்கே அதுக்கு பேரு என்ன? பேருக்கேத்த மாதிரி செரியான மொக்கச்சாமியா இருப்பியளோ?

Anonymous said...

me the 15th

Anonymous said...

இன்னிக்கு ஃபூட்டில ஹாத்தார்ன் கெலிச்சிட்டாங்களே...

நா ஆஸி ரூல்ஸ் பாக்கமாட்டேன் ஏன்னா எனக்கு பிடிக்காது.

எனக்கு மெல்பேர்ண் ஸ்டார்ம்ஸும் பிடிக்காது. ஏன்னா அவிங்க என்னோட பேவரிட் டீமை கெலிச்சிட்டானுங்க.

ஆனாலும் இண்டியா கிரிக்கெட் டீமும் பிடிக்காது...அதானால நா எப்பவுமே வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் தான் சப்போர்ட் பன்னுவேன்

Anonymous said...

ஒரே போர்ர் ***யா இருக்கு
அதான் ஆளே இல்லாத எடத்துல டீ ஆட்டிக்கிட்டு இருக்கேன்

Anonymous said...

இது என்னோட 5005வது பின்னூட்டம் இந்த இரண்டு வருடங்களில். நிறைய் இடத்தில் என்னோட பின்னூட்டங்களை வெளியிடமாட்டார்கள். ஆனாலும் அனனிமஸாக நிறைய பின்னூட்டம் போட்டுள்ளேன். ஆனாலும் லில்லிலொக்கு பின்னூட்டத்துக்கு பதிவு போட்டேன் அதை அவர் எட்டிக்கூட பாக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இதை எனக்கிருக்கும் ஒரே ஒரு வெ*னா மீது சத்தியம் செய்கிறேன்.

Om Santhosh said...

மனதில் காதல் மலர்ந்த போதே சொல்லி விடனும். உங்களது காதல் பயணம் தொடர வாழ்த்துக்கள்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....