Friday, October 03, 2008

வீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்)

முதலில் ஒரு கவிதை

பேருந்து நிறுத்தம்
குப்பைத்தொட்டி
எச்சில் இலை
நான்
நீ
உன் கூச்சல் உனக்கு
என் கூச்சல் எனக்கு
இருவருடைய பேருந்து எண் என்னவோ 47D


*** தமிழில் மிகப்பெரிய சிந்தனையாளர் - ஏஞ்சலீனா கோவிந்தசாமீ aka (அஞ்சலை) ***


இன்று இரவு ஏழு மணி வாக்கில் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு நானும் தங்கமணியும் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு சென்றிருந்தோம்...இப்போதெல்லாம் எல்லாவற்றையும் பாக்கிங் செய்து விற்றுவிடுகிறார்கள்...பூண்டு, வெங்காயம் உட்பட - உரித்து - பாலித்தீன் கவர்களில் கட்டி - இரண்டு மூன்று ரூபாய்கள் அதிகம் தான், விற்றுவிடுகிறார்கள்...

நம்மை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் முயற்சியா அல்லது நமது சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியா தெரியவில்லை...

அன்னாசிப்பழத்தை (சின்ன ன் ஆ அல்லது பெரிய ண் ஆ தெரியவில்லை அன்னாசிக்கு) அப்படித்தான் டப்பாவில் அடைத்து பதினைந்து உரூபாய்க்கு விற்றார்கள்...

அது மற்றும் மாதுளையையும் உரித்து பெட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள்...இது முப்பத்து இரண்டு ரூபாய்...

வாங்கினோம், அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து லைட்டாக திறந்தபோதே உஷார் ஆகியிருக்கவேண்டும் நான்...

விதி வலியது...

படபடவென நாலைந்து துண்டங்களை உள்ளே தள்ளிவிட்டிருந்தேன்...

தங்கமணியோ, எனக்கு பழம் வேண்டாம் என்று பக்கத்து கடையில் வாங்கிய பப்ஸ் ஒன்றை பதம் பார்க்க ஆரம்பித்தார்...இப்படித்தான்...எனக்கு சோதனையான காலகட்டங்களில் தங்கமணி மட்டும் தப்பிவிடுவார்...

ஐந்தே நிமிடம்...லைட்டாக உமட்டிக்கொண்டுவர ஆரம்பித்தது...

ஏம்மா இதை கொஞ்சம் மோந்து பாரு, லைட்டா ஏதோ வாசனை வர்ராமாதிரி இருக்குல்ல ?

அட ஆமாங்க...கெட்டுப்போச்சு...வாசனை வரலையா ? இதை எப்படீங்க திங்கறீங்க ? உவ்வே...என்று வாந்தி எடுப்பது போல ஒரு ஆக்சன் காட்டுகிறார்...

எனக்கு உண்மையிலேயே எகிறிக்கொண்டு வருகிறது...

வாம்மா போய் ரிட்டன் பண்ணலாம் என்று வேகவேகமாக போய் காரை எடுத்து ஸ்டார்ட் செய்கிறேன்...

ஏற்கனவே லக்கிலூக் / அதிஷா / வரவணையான் இதே ரிலையன்ஸ் ப்ரஷ் எதிரே தங்கியிருந்தபோது சைடிஷ் என்ற பெயரில் வெறும் எக்ஸ்பையர்டு மிக்சர் பொட்டலங்களை கொடுத்த கோபமும் கொஞ்சம் பாக்கியிருந்தது...பண்ணிரண்டு மணிக்கு எங்கேயிருந்து போய் அதனை மாற்ற ? ரிலையன்ஸ் பனியன் போட்ட சனியன்கள்...!!!

அங்கே சென்று குதித்த குதி !!! நான் தமிழில், தங்கமணி கன்னட மொழியில்...அய்யோ அய்யா இதுக்கு ஈடா எதையாவது எடுத்துக்கிட்டு போயிரு ராசா என்று கெஞ்சும் வகையில் வந்துவிட்டார்கள் அம்பானியின் அடிப்பொடிகள்...

இதே அம்பானி என்னை ஏமாற்றி போன் பில் என்ற பெயரில் மூன்றாயிரம் திருடியவன்...அந்த காசில் தான் மும்பையில் கட்டும் பல கோடி அடுக்கு மாடி வீட்டுக்கு செங்கல் வாங்கியிருப்பான் ராஸ்கோல். அது தனி கதை...பின்னால் எழுதுகிறேன்...

ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி முப்பது வினாடிகளுக்குள் !!!

ஏதோ ஒரு அழுக்கு பின்னவீனத்துவ எழுத்தை படித்தவுடன் வரும் உணர்ச்சிங்க !!! அட தெரியலியா ?

உவ்வ்வே !!!!!!!!!!!!!!!

தங்கமணி : ஏங்க வீட்டுக்குள்ள வந்து வாந்தி எடுக்கக்கூடாதா ?

20 comments:

Anonymous said...

பொண்டாட்டிங்க தங்கமணிண்ணா புருஷனுங்களை நாங்க எப்படி கூப்பிடறது?

திமிரிச்சி

(இன்னும் பதில காணோம். முடிவு பண்ணிட்டேன். தங்கமணி கூட வெளியில போனா இருக்குபா புக்கே.)

Anonymous said...

யோவ் லீப்ரா?
அடிச்சி ஆடலமா?

டம்மிலிச்சி

Anonymous said...

அச்சச்சோ அவசரத்தில ப்ரெஞ்சில எளுதிடேன். கமுக்கமா எடுத்துடுபா

தலிச்சி

Anonymous said...

இல்லியா மாம்ஸ்?

Anonymous said...

இதுதான் Hygienic உணவுகளோ,
சந்தையில் அஞ்சு ரூவாய்க்கு விற்கும் பொருளை இதுபோல உள்ள பெரிய (Reliance, spencers,Foodworld)கடைகளில் ஐம்பத்து ரூவா கொடுத்து வாங்கினா தானே நல்ல இருக்கும் (நமக்கில்ல அம்பானிகளுக்கு)


என்ன நான் சொல்றது சரி தானே.

narsim said...

செந்தழல்

நல்ல பதிவு. சிரிப்பிற்கு ஊடே சில வரிகள்.. நான் ரிலையன்ஸ் போன்ற கடைகளில் அன்றாட காய்கரிகளை வாங்குவதில்லை.. தெருமுனைக்கடைகளும் வீடு வீடாக வந்து வெய்யிலையும் பொருட்படுத்தாது விற்கும் வியாபரிகளும் பாவமாய்த் தெரிவதால் முடிந்த வரை அவர்களிடமே வாங்க முற்படுகிறேன்..

ஒரு நாள் ரிலையன்ஸில் விற்கவில்லை என்றால் அதை வேறு பேக்கிங் செய்து மறு நாள் விற்கலாம் அல்லது அம்பானியின் மயிரே போச்சு என்று தூக்கி எறிந்து விடுவார்கள்

ஆனால் தெருவோர வியாபரிகளின் சரக்கு விற்கவில்லை என்றால் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது..


சீரியஸ் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

நர்சிம்

Expatguru said...

இது உங்க‌ளுக்கு ம‌ட்டும் ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌ம் அல்ல‌. அவ‌ர்க‌ளுடைய‌ காய்க‌றி ப‌குதிக்கு சென்றாலே ஒருவித‌ துர்நாற்ற‌ம் அடிப்ப‌தை க‌ண்கூடாக‌ அனுப‌வித்து இருக்கிறேன். அதிலிருந்து அந்த‌ க‌டைக்கு செல்வ‌தையே நிறுத்திவிட்டேன். உண்மையிலேயே freshஆக எதிரே உள்ள‌ ப‌ழ‌முதிர்ச்சோலை காய்க‌றி க‌டையில் தான் கூட்ட‌ம் இன்று கூட‌ அலை மோதுகிற‌து.

மங்களூர் சிவா said...

மங்களூரில் ஆதித்ய பிர்லா குரூப்பின் மோர் பரவாயில்லை தரமும் விலையும்.

ரவி said...

//மங்களூரில் ஆதித்ய பிர்லா குரூப்பின் மோர் பரவாயில்லை தரமும் விலையும்.//

இங்கே பெங்களூரில் மோர் மிகவும் கேவலம்...பொருளும் கிடையாது, தரமும் கிடையாது, விலையும் அதிகம்...

ரவி said...

///இதுதான் Hygienic உணவுகளோ,
சந்தையில் அஞ்சு ரூவாய்க்கு விற்கும் பொருளை இதுபோல உள்ள பெரிய (Reliance, spencers,Foodworld)கடைகளில் ஐம்பத்து ரூவா கொடுத்து வாங்கினா தானே நல்ல இருக்கும் (நமக்கில்ல அம்பானிகளுக்கு)


என்ன நான் சொல்றது சரி தானே.///

ஆமா சரிதான்...ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குபவன் கூட இப்ப நடுத்த வர்க்கமாகிடுட்டு வரானுங்க..

ரவி said...

///ஆனால் தெருவோர வியாபரிகளின் சரக்கு விற்கவில்லை என்றால் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது..
///

தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களுடைய வியாபாரம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது...சற்றே விலை அதிகம் என்றாலும் மார்க்கெட்டிலிருந்து ப்ரெஷ்ஷாக எடுத்துவருவார்கள்...

இனிமேல் சாலையில் அல்லது மார்க்கெட்டில் தான் காய்கறி வாங்கப்போறேன்.

அரவிந்தன் said...

அன்பின் ரவி,

ஃபோரம் மாலில் உள்ள "மோர்" அங்காடியில் நம்பி வாங்கலாம்.

Anonymous said...

//பொண்டாட்டிங்க தங்கமணிண்ணா புருஷனுங்களை நாங்க எப்படி கூப்பிடறது?

திமிரிச்சி
//

It so simple.. RANGAMANI !!!

வால்பையன் said...

அங்கேயே சாப்பிட்டு அங்கேயே வாந்தி எடுத்துரனும்

வால்பையன் said...

பதப்படுத்திய உணவுவகைகளை தவிருங்கள்

rapp said...

இங்கே ஐரோப்பாவில் இந்த மாதிரி சூப்பர்மார்க்கெட் கலாச்சாரத்தை எதிர்த்து ஒரு பெரிய இயக்கமாவே நடத்திக்கிட்டு இருக்காங்க. பலனும் நல்லா இருக்கு. தனியார் தொலைக்காட்சிகளும் மற்ற மீடியாக்களும் இதற்கு நல்ல ஆதரவளித்து வருகின்றன. உழவர் சந்தை மாதிரியான விஷயங்களை சிலத்தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி பெரியளவில் கொண்டுவரனும்.

Anonymous said...

அரவிந்தன்...

இந்திரா நகரில் நூறு அடி ரோட்டில் உள்ள மோர் ஒரு வேஸ்ட் !!!

Anonymous said...

வாங்க வால்ஸ் !!!!

வருகைக்கும் மொக்கைக்கும் நன்றி ...!!!

Anonymous said...

வாங்க ராப்...இப்பத்தான ஆரம்பிச்சிருக்கானுங்க...

இவனுங்களுக்கு இதோட தவறுகள் புரிஞ்சு போராட்டம் நடத்த ஒரு மாமாங்கம் ஆகிவிடும்..>!!!

rapp said...

me the 20th

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....