Sunday, October 05, 2008

ஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலைவர்கள் !!!!

உலகத் தமிழர் தலைவர் டாக்டர் கலைஞர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள சூடான கடித்ததில் இந்திய இலங்கை கூட்டு ரோந்து தேவையில்லை என்று சாடியுள்ளார்...



புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா விடுத்துள்ள சூடான அறிக்கையில் இந்திய அரசு அரியானா மாநிலத்தில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்த விவரம், இந்திய அதிகாரிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை இலங்கை செல்வது, இந்திய ரேடார்கள் இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களை கொல்ல உபயோகப்படுவது என்று மத்திய அரசை கிழி கிழி என்று கிழித்துள்ளார். மத்திய அரசை கையில் வைத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மத்திய அமைச்சர்கள் என்ன ஆணி புடுங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார்...




டாக்டர் அய்யா திரு ராமதாசு அவர்கள், சமீப காலங்களில் எந்த தமிழக அரசியல் தலைவரும் தெரிவிக்காத சூடான ஆதரவு கருத்துக்களையும் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கலைஞரையும் சாடியுள்ளார். இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவிகள் வழங்கும் இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் பதினெட்டு நாளில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் அதனை எதிர்த்து தமிழ் ஈழத்துக்காக சட்டமன்றத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று தமிழக அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்...



இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமான திரு.வைகோ அவர்கள் இலங்கையில் நடக்கின்ற இனப் படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது என்று சாடியுள்ளார்..ஐ.நா.வின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சியங்கள்...

உணவும், மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் சாகிறார்கள். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். மத்திய அரசு உணவும், மருந்தும் அனுப்ப மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்...

என்று மத்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக சாடியுள்ளார்....




சிறிலங்காவில் உள்ள மகிந்த அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண்டவை. உணவுப் பஞ்சம் என்று கூறி யாழ்ப்பாணத் தமிழர்களை சிறிலங்கா அரசு பட்டினிபோட்டு வருகிறது. உணவை ஆயுதமாக பயன்படுத்தும் இரக்கமற்ற அரசாக மகிந்த அரசு உள்ளது.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்....



தேசிய கட்சியான பாரதீய ஜனதா ஈழத்தமிழர்களை ஆதரித்து கருத்து வெளியிடுவது இது முதல் முறையாகும்...பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தால் ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்று புதினத்துக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்...



செந்தழல் ரவி என்ன தெரிவிக்கிறார் என்று பார்க்க கீழே !!!





















தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

30 comments:

Anonymous said...

செந்தழல் ரவி சொல்வதுதான் டாப்.

Anonymous said...

மிஸ்டர் செந்து நீங்கள் பருப்பு வடை மாதிரி இருக்கேளே...

அத்திரி said...

தேர்தல் வந்தாதான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். இன்னும் என்ன கூத்து அடிக்கப்போறாங்களோ?. பதிவு மிக அருமை

சுரேஷ் ஜீவானந்தம் said...

செந்தழல் ரவி,
தேர்தலுக்காகத்தான் இவை அனைத்தும் என்று கூறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ~2.5 ஆண்டுக்கு ஒரு தேர்தல் வருகிறது. அதனால் எல்லாப் பிரச்சினைகளையும் தேர்தலுக்காகத்தான் என்று சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல எனது அனுபவத்தில் தமிழர்கள் பெரும்பாலும் சொரணையற்றவர்கள்/ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்பதால் ஈழப் பிரச்சினைக்கென்று ஓட்டு வங்கி ஏதும் இல்லை. அதனால் இது தேர்தலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

மேலும் ஒட்டு மொத்தமாக தேர்தலுக்காக என்று கூறுவது இதில் உண்மையான் தமிழின உணர்ச்சியுடன் போராடுபவர்களையும் கொச்சைப் படுத்துவதாகும்.

அதி அசுரன் said...

//தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...//

இதற்கு முந்தைய தேர்தல்களில் ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான அரசியல் இதுவரை நடந்ததில்லை.

இலவச டி.விக்கும் 2 ருபாய் அரிசிக்கும் தமிழனின் சுயமரியாதையை ஏலம் போட்ட நிலை இப்போதாவது மாறினால் மகிழ்ச்சி தானே தோழர்?

முன்னாள் பிரதமர் இந்திராவைக் கொன்ற கொலையாளி இந்தியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக ஆகும் அளவுக்கு அரசியல் நடந்தபோதுகூட அதை யாரும் அரசியலாகப் பார்க்கவில்லை.

காந்தியைக் கொன்ற மதவெறியன் பார்ப்பான் கோட்சே படத்தை பாராளுமன்றத்தில் வைத்த போதும் யாரும் அதை அரசியலாகப் பார்க்கவில்லை. தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகத் தான் பார்த்தனர்.

ஈழத் தமிழர் படுகொலையை எதிர்த்துப் பேசினால் ஒன்று அது தேசவிரோதம் என ஊடகங்களி்லும் அரசுகளாலும் சொல்லப்படுகிறது. அல்லது இது தேர்தல் அரசியல் எனச் சொல்லப்படுகிறது. இது சரியாகுமா தோழர்?

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு மிக முக்கியப் பங்கு வகித்த, இராஜீவ் காந்தியைக் கொன்றதாக பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாரேனும் - வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலோ அல்லது இனி வர உள்ள ஏதோ ஒரு தேர்தலிலோ மிக அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆனால்கூட அதை அரசியல் என்று சொல்ல வேண்டாம் தோழர்.

எம்.கே. நாராயணன் வகையறாக்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளட்டும். நாம் அப்படிப் பார்க்க வேண்டாம். நன்றி.

Unknown said...

மிக நல்ல பதிவு
ஆனால் எம் சனங்கள் படும் வேதனை புரியாத அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதும் மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போடுவதும் எதற்கு.
விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை முழுமூச்சாகச் செய்யும் தலைவியும் ஆதரிப்பதே குறிக்கோள் என்னும் தலைவரும் கூட்டணியாக உள்ளவரை நாடு எப்படி உருப்படும்.

ரவி said...

///தேர்தல் வந்தாதான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். இன்னும் என்ன கூத்து அடிக்கப்போறாங்களோ?. பதிவு மிக அருமை///

புரிந்துணர்வுக்கு நன்றி அத்திரி...

ரவி said...

சுரேஷ்...

வருகின்றது பாராளுமன்ற தேர்தல், மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கப்பட்ட புள்ளி தோழர்களின் ஸ்டண்ட்.

அப்புறம் அய்யோ நாம் இதில் கலந்துகொள்ளவில்லை என்றால் நம்மை தமிழின விரோதி என்று சொல்லிவிடுவார்களே என்று ஒவ்வொருவரும், ஏன் ஜெயலலிதா உட்பட இந்த பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள்...

ஏற்கனவே தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஒரு சிலரை தவிர, மற்ற அனைத்தும் ஸ்டண்ட்...

ரவி said...

மற்றபடி அதி அசுரன் மற்றும் சுரேஷ்,

இந்த பதிவு ஏதோ ஒரு ஆற்றாமையில் எழுதப்பட்டது...

என்னுடைய உணர்வுகளை இதில் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்....

ரவி said...

///
மிக நல்ல பதிவு
ஆனால் எம் சனங்கள் படும் வேதனை புரியாத அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதும் மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போடுவதும் எதற்கு.
விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை முழுமூச்சாகச் செய்யும் தலைவியும் ஆதரிப்பதே குறிக்கோள் என்னும் தலைவரும் கூட்டணியாக உள்ளவரை நாடு எப்படி உருப்படும்.

////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

சைட் கேப்பில் பல பொய் தகவல்கள்.

//கொலையாளி இந்தியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக ஆகும் அளவுக்கு அரசியல் நடந்தபோதுகூட அதை யாரும் அரசியலாகப் பார்க்கவில்லை.//

எப்போது என்று நடந்தது? ஆதாரம் ப்ளீஸ்..

//காந்தியைக் கொன்ற மதவெறியன் பார்ப்பான் கோட்சே படத்தை பாராளுமன்றத்தில் வைத்த போதும் யாரும் அதை அரசியலாகப் பார்க்கவில்லை. தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாகத் தான் பார்த்தனர்.//

கோட்சே படம் என்றும் பாராளுமன்றத்தில் வைக்கபடவில்லை..ஏன் இந்தாளு இப்படி பொய் மூட்டைகளாக அவிழ்த்து விடுகிறார்?

சுரேஷ் ஜீவானந்தம் said...

// என்னுடைய உணர்வுகளை இதில் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்....//
சரி. எப்பொழுதாவது பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

சுரேஷ் ஜீவானந்தம் said...

// வருகின்றது பாராளுமன்ற தேர்தல், மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கப்பட்ட புள்ளி தோழர்களின் ஸ்டண்ட். //
நான் அப்படிப் பார்க்கவில்லை.

Anonymous said...

1989 பாரளுமன்ற தேர்தல்..
இலங்கை பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம்..
கலைஞர் அவர்கள் இந்திய அமைதிபடையை வரவேற்க்க செல்ல மாட்டேன் என்று சொன்ன சமயம்..பதமநாபா போன்றவர்களை புலிகள் அழித்த நேரம். அதற்க்கு திமுக துணை போன நேரம்.

தேர்தல் .பாரளுமன்ற தேர்தல்..அப்போது ராஜீவும் இருந்தார் கூடவே அதிமுக கூட்டணி

ஈழ விடுதலைக்கு ஆதரவான திமுக பெற்றது 1 இலக்கம் தான். அதுவும் இந்திய கம்யூணிஸ்ட் தங்களில் கோட்டையான நாகபட்டந்த்தில் மட்டும் சொற்ப எண்னிக்கையில் ஜெயித்தார்கள். 29/40 என்ற கணக்கில் அதிமுக காங்கிரஸ் வெற்றி பெற்றது..

1991 ல் நாகபட்டிணமும் காலை வாரியது.

தமிழ்நாட்டு அரசியலில் ஈழ பிரச்சனை என்பது எந்த வித தாக்கமும் ஏற்படுத்தாது. இணையத்தில் வேண்டுமானலும் வீர வசனம் பேசலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு ஈழமோ பிரபாகரனோ அவர்களில் வாழ்க்கையை பிரதிபலிப்பது இல்லை. இதுவே உணமையும் கூட.

சுரேஷ் ஜீவானந்தம் said...

// தமிழ்நாட்டு அரசியலில் ஈழ பிரச்சனை என்பது எந்த வித தாக்கமும் ஏற்படுத்தாது. இணையத்தில் வேண்டுமானலும் வீர வசனம் பேசலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு ஈழமோ பிரபாகரனோ அவர்களில் வாழ்க்கையை பிரதிபலிப்பது இல்லை. இதுவே உணமையும் கூட.//
இதுதான் உண்மை. இப்படி இருக்கக்கூடாது என்று நாம் விரும்பினாலும் கூட.

நல்லதந்தி said...

பகுத்தறிவு சிங்கம் ஆன்மீக கம்பிகளுக்கு நடுவில் காரணம் என்ன?.உங்களுக்கும் தேர்தல் வந்து விட்டதா?

நல்லதந்தி said...

அதிலேயே போட்டு இருக்கவேண்டியது இப்போ போடறேன்.:))

RATHNESH said...

கிட்டத்தட்ட நிஜம்.

கோவிலுக்குச் செல்பவர்கள், சண்டிகேஸ்வரர் சந்நிதி முன் எதற்கென்றே தெரியாமல், ஆனால் எல்லோரும் செய்கிறார்கள்; நாமும் செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் மட்டுமே கைதட்டி விட்டுச் செல்வது போல் ஆகி விட்டது அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்னையைக் கையாளும் விதம்.

mokkai said...

sir, my no is 9916920942

Anonymous said...

அகில உலக காக்கை தமிழர் பேரவை

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழர்களையும்,தமிழ் நாட்டையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள்
கச்ச தீவு விவகாரம்
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு பிடித்துசென்று சிறையில் அடைத்து துன்புறுத்துவதும்
,சுட்டு தள்ளுவதும்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடத்தி அவர்களை அழிக்கும் விவகாரம்
கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நதி நீரை தராமல் சண்டித்தனம் செய்வது
கேரளா அரசு முல்லை பெரியாறு அணை கரையை உயர்த்த மறுப்பது,
பவானி ஆற்றின் குறுக்கே ஆணை காட்டுவது
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது,
இன்னும் தீர்வை எதிநோக்கி இருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன
.இவைகளை தேவைப்படும் நேரத்தில் எடுத்து அரசியல் பண்ணுவதை விடுத்து
எங்களைப்போல் எதிரும் புதிருமாக உட்காராமல்
அனைத்து வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் நிம்மதியாக தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் ஒருமித்த கருத்துடன் அணுகி பிரச்சினைகளை
முடிவுக்கு கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு அகில உலக காக்கை தமிழர் பேரவை.

வால்பையன் said...

உங்களுக்கு முன்னாடி நிக்குதே அதுக்கு பேர் தான் ஆப்பா

வால்பையன் said...

சிலரின் அனல் பறக்கும் உரைகளை கேட்டீர்களா

வால்பையன் said...

நான் தான் 25

Anonymous said...

///கோட்சே படம் என்றும் பாராளுமன்றத்தில் வைக்கபடவில்லை..ஏன் இந்தாளு இப்படி பொய் மூட்டைகளாக அவிழ்த்து விடுகிறார்?/////

வீர் சாவர்க்கரை சொல்கிறார் என்று நினைக்கிறேன்...

Anonymous said...

////பகுத்தறிவு சிங்கம் ஆன்மீக கம்பிகளுக்கு நடுவில் காரணம் என்ன?.உங்களுக்கும் தேர்தல் வந்து விட்டதா?

Sunday, October 05, 2008
///

சாமி கண்ணை குத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் நல்ல தந்தி...!!!

ஆறு அறிவுள்ள என்னை ஐந்து அறிவுள்ள சிங்கத்துடன் ஒப்பிட்டு என்னை கேவலப்படுத்திவிட்டீங்க நல்ல தந்தி...

rapp said...

இந்த மாதிரி உணர்ச்சிப்பொங்க போஸ் கொடுக்க எங்க கத்துக்கிட்டீங்க:):):)

Anonymous said...

சிஸ்டர், மெய்யாலுமேதானா ?

ஒரு உணர்ச்சியும் இல்லாம மொக்கையா இருக்குன்னு இல்லை நான் கேள்விப்பட்டேன்...

Anonymous said...

செந்தணலின் அறிக்கை தான் மிகச்சூடானது.
தேர்தல் வரவுள்ளதால் ஈழத்தமிழர் தேவையும் வந்து விட்டது.
நம்மை இதுகூடப் புரியாத அடி முட்டாளெனதானே இவங்க எல்லாம்
நினைக்கிறாங்க....
இவங்களும்...இவங்க அரசியலும்...ஆதரவும்...மண்ணாங்கட்டியும்

Itsdifferent said...

I think we all have been taught history in the "Con" gress way.
In retrospect, it would have been better if Gandhi was shot little earlier, that is before Mountbettan played his divide and rule philosophy to Jinnah and encouraged him to ask for partition. Its because of his stupiditiy and dhimmitude, Pak/Kashmir has become such a big mess.
Remember he did the right thing upto a point, then Nehru poinsoned him with his utter nonsense.
Then we had this idiot Nehru, whose dhimmitude shrunk our borders with Pak and China. If it had been left to Lal Bahadur, our country need not have to have wasted so much of valuable energy and money in Kashmir and we could have regained our powerful status soon after indepandance.
For those who may not know, India had been No 1 in GDP in the recorded history upto the 15th Century, and after that we were pushed down to 2nd after China. Only our model of Tolerance towards other people (religion/nationality and such), family values, culture will work in the long run, as it had been proven in this century, western model is a failure.
China wins over the West by their sheer money, manufacturing power.
India wins over the West by our sheer softpower, our brains, our family values, culture spread etc.
I would urge each and everyone read the history in the right way, and come to your conclusions. To start with read https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html and google around, there are so many artifacts regarding our glorious history. Its unfortunate that our pols have become too greedy, and encouraged hatred towards each other (remember tolerance as our strength) for their vote bank politics.
We have a moral obligation to understand our history and spread the word of our greatness, and regain what is our right in this world. So many success stories everywhere else, where you have to start fresh, our people have been so successful, just because, they can win just by their sheer strengths, not by sucking upto the powers as in India.
We have a powerful medium in our hands, lets write correct perceptions, and positive articles, gather enough support and momentum, to make a change.

Anonymous said...

//கோவிலுக்குச் செல்பவர்கள், சண்டிகேஸ்வரர் சந்நிதி முன் எதற்கென்றே தெரியாமல், ஆனால் எல்லோரும் செய்கிறார்கள்; நாமும் செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் மட்டுமே கைதட்டி விட்டுச் செல்வது போல் ஆகி விட்டது அரசியல்வாதிகள் இலங்கைப் பிரச்னையைக் கையாளும் விதம்.//
ஆம் இது தான் சரியான காரணம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....