Thursday, October 23, 2008
கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்
நானும் மணிவண்ணனும் சேர்ந்து பி.எஸ்.ஸி ப்ராஜக்ட் செய்தோம்..."இண்ட்ரப்ட் For பிகினர்ஸ்" என்று "C" மொழியில்...
ஒரு எம்.சி.ஏ சீனியர் (பெயர் கண்ணன், புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம்), கொடுத்த ஐடியா, சி எடிட்டரில் மெனு, சப் மெனு, ஹெல்ப் பைல்ஸ் எல்லாம் போட்டோம்...
சின்ன ஐடியாவை ஊதி ஊதி பெரிதாக்கியது மணிவண்ணன் தான்...நான் அவ்வளவாக காண்ட்ரிப்யூட் செய்யவில்லை என்றாலும் ஒரு அல்லக்கை நொள்ளக்கையாக கூடவே இருந்தேன்...
திருச்சி துறையூரில் ப்ராஜக்ட் டாக்குமெண்டேஷனுக்காக ஒரு இரவு ஒரு ப்ரவுஸிங் செண்டரை வாடகைக்கு எடுத்து டைப்போ டைப்பு என்று டைப்பினான்...
நான் கண்கள் சொருக தூங்கினேன்...அப்பப்போ "தம்" போட மணிக்கு கம்பேனி கொடுத்ததோடு சரி...
வைவாவின் போது நான் அதிகமாக சைட் அடித்த மேடம் மற்றும் ஹெச் ஓ டி எதிரில், என்னவோ மணி அதிகம் பேசவில்லை...நான் ஏதோ உளறிக்கொட்டி படபடவென்று பேசி எப்படியோ ஒப்பேத்தினேன்...
ரிசல்ட் வந்தபோது, என்னுடைய மார்க் 99. மணிவண்ணன் 98...
எப்போதும் 75 சதவீத மதிப்பெண் வைத்திருக்கும் மணி என்னை விட ஒரு மார்க் கம்மி...
நாற்பது மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று போராடும் நான் அவனை விட ஒன்று அதிகம்...
ஓ என்று ஒரே அழுகாச்சி...
சரி என்று நான், இளமாறன் அப்புறம் செல்வமணி தம்பி ஸ்டீபன் (மலை மாடு மாதிரி இருப்பான்), நாலு பேரும் கள்ளு குடிக்க பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு போனோம்...ஓமாந்தூர் என்று நியாபகம்...
நான் கொஞ்சம் விவரம் தெரிஞ்சு கள்ளு குடிப்பது அது தான் முதல் முறை, ஏற்கனவே பதனி தண்ணீர் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், அது தான் கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
ஸ்டீபன் தான் எல்லாருக்கும் கள் வாங்கினான்...இளமாறன் காசு கொடுத்தானா என்று தெரியவில்லை..(அவன் ஒரு முடிச்சு அவிழ்க்காத முடிச்சவுக்கி...அதான் காசு எப்பவும் தரமாட்டான் ஹி ஹி சாரிடா இளம..எல்லாம் ஒரு பில்டப்பு தாண்டா)
படபடவென குடித்தேன்..கொஞ்சம் புளிப்பாக...கொஞ்சம் துவர்ப்பாக...மாங்காய் ஊறுகாயோடு கொஞ்சம் அஜால் குஜாலாகத்தான் இருந்தது...
மணிவண்ணனின் அழுகாச்சி அடங்கியதா என்று நினைவில்லை...!!
போதை சுமாராக ஏறியது...டி.வி.எஸ் பிப்டியிலோ, நடந்தோ, பஸ்ஸிலோ ரூமுக்கு வந்தோம்..சரியாக நினைவில்லை...
நிற்க !!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நான் பார்த்தவரை சாராயத்துக்கு வாரம் 1000 ரூபாய், கள்ளுக்கு வாரம் 500 ரூபாய் மாமூல்...
ரைட்டரிடம் மாமூல் கட்டியவர்கள் தாராளமாக தொழில் செய்யலாம்...
என்னோட சித்தப்பா ஏட்டைய்யாவாக இருந்த காவல் நிலையத்தில் இதனை கவனித்திருக்கிறேன்...
வாழ்க வளமுடன்...
நிற்க !!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...அரசு ஆணை...
பனைப்பொருள் வாரியத்தலைவர் பெயர் குமரி அனந்தன் என்று நினைக்கிறேன்...
காந்தியவாதி...
காந்தி கள் குடிக்காதே என்று சொன்னாராம்..
அதனால் யாரும் கள் இறக்காதீர்கள் என்கிறார்...
இதனால் மரபு சாரா தொழிலாளர்கள் உண்மையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்...பனை பொருள் சங்கத்தலைவர் நல்லசாமி என்பவர், தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் ஜனவரி 21 முதல் அறிவித்துள்ளார்...
பனைமரத்தில் இருந்து கள் மட்டுமல்ல, பதனீர் போன்ற சாதாரண பொருட்களை கூட தயாரிக்க குடுவை கட்ட முடியாது..
அப்படி குடுவை கட்டவேண்டும் என்றால் மாமூல் கட்டவேண்டும்...வாரம் 500 ரூபாய் மாமூல் கட்டவேண்டும் என்றால் பெரும் வியாபாரியாக இருந்தால் தான் முடியும்...
ஆறு மாதம் ஒரு முறை, கேஸ் கிடைக்கவில்லை என்றாலோ, அதிகாரிகளில் ப்ரஷர் தாங்கமுடியவில்லை என்றாலோ, உங்கள் மீது பெட்டி கேஸ் விழும், நீங்கள் உள்ளே இருக்கவேண்டியிருக்கும்...
யார் கண்டா...குண்டர் சட்டம் கூட பாயலாம்..
டாஸ்மாக் கடைகள் மூலம் அரசாங்கமே மது சப்ளை செய்துகொண்டிருக்கும் நிலையில், உயிருக்கு தீங்கு விளைவிக்காத கள்ளை இறக்கவும், விற்பனை செய்யவும் தடுப்பது ஏன் ?
தமிழகத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதில்லை என்று யாராவது சொன்னால் அவர்களிடம் பந்தயம் கட்டத்தயார்...இன்றைய நிலைமைக்கு ஒவ்வொரு கிராமத்திலும் சாராயம் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது...
சட்டரீதியாக அட்லீஸ்ட் கள் இறக்க அனுமதித்தால் எத்தனை குடும்பங்கள் வாழும் ?
60 ரூபாய் கொடுத்து க்வாட்டர் ஓல்ட் மங் அடிப்பதற்கு 10 ரூபாய் கொடுத்து கள்ளை குடித்துவிட்டு போகட்டுமே ?
வலைப்பதிவு செய்யும் பத்திரிக்கை நன்பர்கள் இதனை வெகுஜன ஊடகங்களுக்கு கொண்டு சென்று ஒரு நல்ல தீர்வை கொண்டுவரவேண்டும்...
லாட்டரியை அழித்தீர்கள்...அதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்று தெரியுமா ?
இலங்கை தமிழர்களுக்காக உணர்வோடு எழும்பும் குரலை மனமார பாராட்டுகிறேன்...அதே நேரம் தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்க தயங்காதீர்கள் முதல்வர் அவர்களே !!!!
நிற்க !!!!!!!!!!!!!!!!
ப்ளீச்சிங் பவுடர் என்று ஒரு கொண்டை எழுதிய பதிவை படித்தேன்...அது கொண்டை என்று தெரிந்துவிட்ட பிறகு எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை...கொண்டையை தலைகீழாக பார்த்தாலும் அது கொண்டை தான்...
ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றிய ஜோசப் பால்ராஜ் காஷ்மீர் பிரச்சினை பற்றி சரியான தெளிவின்றி இருக்கிறார் என்பது என்னுடைய எண்ணம்..ஜோசப் பால்ராஜ்..தமிழ் சசி காஷ்மீர் பிரச்சினை பற்றி எழுதிய நான்கு இடுகைகளையும் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஹோம் ஒர்க் மற்றும் இம்போசிஷன் தருகிறேன்...
நிற்க !!!!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
37 comments:
http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=6958&cls=row3&ncat=TN
இதே குமரி அனந்தனோட காங்கிரஸ் கட்சி தான் பாண்டிச்சேரியில் சாரயக்கடை, கள்ளுக்கடை, பிராந்திக்கடை என்று எல்லாவற்றையும் திறந்துவைத்துள்ளது....
அங்க மட்டும் தேவைப்படாத காந்தி இங்க எதுக்கு ?
//டேய் எத்தனை ஸ்ப்லிட் பர்சனாலிட்டிடா கெளம்புவீங்க ?//
... மனசுக்குள்ளேயே கொதிச்சுகிட்டு இருந்தேன் தலைவா .... பொழந்து கட்டிடீங்க...
கண்டிப்பா டாக்டர பாக்கணும். மனவியாதியின் அறிகுறி. பெண்மைத்தன்மை அதிகம் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்
you know... its a very good article... but in US.. we........
தலைவரே...அவங்க ரெண்டு பேரு சேட்ட தாங்க முடியல...இதுல ஒருத்தருக்கொருத்தரு ஊக்கம் வேற தர்றாங்களாம...ங்கொய்யால....கைலகண்டி சிக்கினாய்ங்க..சின்னாபின்னமாய்டுவாய்ங்க...முக்குனது..மூத்திரம் போனதெல்லாம் பதிவா போட்டு சாவடிக்கிறாங்க...
LOL! LOL!! LOL!!!
//
வலைப்பதிவு செய்யும் பத்திரிக்கை நன்பர்கள் இதனை வெகுஜன ஊடகங்களுக்கு கொண்டு சென்று ஒரு நல்ல தீர்வை கொண்டுவரவேண்டும்...//
வரவேற்கிறேன் ...
ஒரு பனைஏறி யாக
\\ அவன் ஒரு முடிச்சு அவிழ்க்காத முடிச்சவுக்கி...அதான் காசு எப்பவும் தரமாட்டான் ஹி ஹி சாரிடா இளம..எல்லாம் ஒரு பில்டப்பு தாண்டா \\
ஐயா தங்களது இந்த பதிவில் முடிச்சவிக்கி என்னும் சொல்லாடலை கண்டேன்
அது என்ன முடிச்சவிக்கி
முடிச்சை அவிழ்ப்பது குற்றமா
அதை ஏன் ஒரு வசை சொல்லாடலாக எழுதுகிறீர்கள்
என்னை போல டம்மிகளுக்கும் திம்மிகளுக்கும்
முடிச்சவிக்கி பார் டம்மீஸ் என்று ஒரு பதிவு போட வேண்டுகிறேன்
என்றும் உங்கள் பாசறையில் பயிலும் மாணவன்
))')) said... //
))')) said... //
இப்படியே வருது , template சரி செய்யவும்
//முடிச்சவிக்கி//
முடிச்சவிக்கி என்றால் என்ன என்பதை சபீனா போட்டு விளக்கவும்..
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுதும் வலைப்பதிவர்கள் கைது செய்யப்படுவார்களா?
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=520
Credit Suisse Group, Japan oru nalla kampaniyaa?
juper
சாரு நிவேதிதாவும், அறிவழகன் என்ற சொந்த பெயரை மாற்றி, பெருமாள் என்று தன்னையே கடவுளாக நினைத்துகொண்டிருக்கும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி தான்.
தல,
இக்கட சூடு
http://surveysan.blogspot.com/2008/10/shoot-em-up.html
நல்ல'மந்தி', கொண்டையை (பா. அடிவருடியை) விட்டுவிட்டீர்கள்
//தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நான் பார்த்தவரை சாராயத்துக்கு வாரம் 1000 ரூபாய், கள்ளுக்கு வாரம் 500 ரூபாய் மாமூல்...//
ப்ராஜக்ட் செய்வதோ.. ப்ரவ்சிங்க் செண்டரில் டைப்புவதோ.. மாமுல் வாங்குவதோ... எதுவாயினும் ரவியின் கடன் வேடிக்கை பார்ப்பதே போலும்.. :))
.. அந்த ஹிட்ஸ் மேட்டர் குஜால் ஐடியா ரவி.. :))
தல, நீங்க பாட்டுக்கு நிக்க சொல்லிடீங்க ...
நான் பாட்டுக்கு நின்னுகிடே படிச்சுக்கிட்டு இருக்கேன்...
ஆமா... நிக்கும் போதே நீங்க ஏன் மறுபடியம் நிக்க சொல்றீங்க...
(ஒரு வேள, நிக்குரனா இல்லையான்னு செக் பண்றீங்களோ....???)
அமா... நீங்க ஒக்காரவே சொல்லலையே... நா ஒக்காரலாமா....
முதல்ல கஞ்சா... தண்ணி.... இப்போ கள்ளு ...
இதுக்கு பேரு தான் பதிவு போதை...
ஒமாந்துர்ல உடுக்கு அடிக்கறது கேட்டு இருக்கீங்களா ?
சஞ்ஜெய்.
சோத்துக்கே சிங்கி அடிக்கும் வேளையில் வேடிக்கை பார்ப்பதை தவிர வேற என்ன செய்யமுடியும் சகா ?
வாங்க நவநீதன்...
ஏதோ பின்னூட்டம் போட்டிருக்கீங்க, என்னான்னு தான் புரியல :)))
சந்திரன் கடை, பால்ராஜ் கடை பத்தி எல்லாம் எழுத மாட்டீங்களா ?
//பயல்வழி said...
LOL! LOL!! LOL!!!
//
Super
// செந்தழல் ரவி said...
இதே குமரி அனந்தனோட காங்கிரஸ் கட்சி தான் பாண்டிச்சேரியில் சாரயக்கடை, கள்ளுக்கடை, பிராந்திக்கடை என்று எல்லாவற்றையும் திறந்துவைத்துள்ளது....
அங்க மட்டும் தேவைப்படாத காந்தி இங்க எதுக்கு ?//
///சந்திரன் கடை, பால்ராஜ் கடை பத்தி எல்லாம் எழுத மாட்டீங்களா ?////
அழுக்கன் கடையை பற்றி எழுத நான் என்ன புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியிலயா படிச்சேன் ?
நான் படிச்சது திருச்சி மண்டல பொறியியியல் கல்லூரி...
இம்சை அரசியிடம் விசாரிக்கவும்...
வாங்க கபீஷ்...
வெறும் கட் அண்ட் பேஸ்ட் தானா ? உங்களோட கருத்தை சொல்லவேயில்லையே ?
இல்லைங்க நான் உங்க ப்ளாக் இப்ப தான் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன். அதுனால தான் தெரியல.
பாஸ், நிற்க.... நிற்க...ன்னு, அஞ்சு தடவ வருது பதிவுல....
இப்போ நம்ம பின்னூட்டத்த மறுபடியும் படிங்க...
வணக்கம் ரவி,
காஷ்மீர் பிரச்சனையப் பற்றி நான் என் பதிவுல ரொம்பத் தெளிவா எழுதல. நேற்று மிகத் தாமதமாக அலுவலகத்தில் வந்து எழுதியதால் தெளிவாக எழுத இயலவில்லை. காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி நான் ஒன்றும் விரிவாக எழுதவில்லையே? இந்திய விடுதலைக்கு காரணம் காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம் மட்டும் காரணம் அல்ல என்பதைத் தான் எழுதியிருந்தேன். எனினும் நீங்கள் சொல்லும் பதிவுகளை நான் படிக்கிறேன். சுட்டித் தர முடியுமா?
http://blog.tamilsasi.com/2005/06/1.html
http://blog.tamilsasi.com/2008/08/kashmir-independence-amarnath.html
லிங்க் ரெண்டு
நண்பரே...கள் விற்க அனுமதி அளிப்பின்...பெரும் நிறுவனங்களுக்கு நிகராக எந்த பாழாய்ப்போகப்போகிற விவசாயியும் கையூட்டு அளிக்க வக்கில்லையே....
எல்லோர்க்கும் தெரிந்ததுதானே.
எழுந்து நின்றாகிவிட்டது.... போதுமா ரவி.. இனி இருக்கலாமா??
//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டத//
??###**&&???
பதிவு படிக்க வந்ததுக்கு தண்டனையா?
இது
///நிற்க !!!!!!!!!!!!!!!!//
எத்தனை முறைதான் நிற்பது:(((
//நிற்க !!!!!!!!!!!!!!!!//
அடுத்து பீர் அடித்த பதிவு ஒன்னு எழுதி அதிலாவது உட்கார சொல்லுங்க..
Post a Comment