Tuesday, October 07, 2008

உடன்பிறப்பே !! தந்தி அனுப்பவேண்டாம் !!! SMS போதும் !!! கலைஞர்..

ஏழரைப்பக்க நாளேடு !!!!

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை !!!!

கேள்வி : தந்திகள் சரியாக சென்று சேரவில்லை என்றும் புதிய உத்தியை முதல்வர் அறிவிப்பார் என்றும் வரும் செய்திகள் குறித்து ?

பதில் : பெருவாரியான தந்தி மெசின்கள் வேலை செய்யாதது, மற்றும் அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த தந்தி ஊழியர்கள் அவசர விடுப்பு எடுத்துவிட்டு சென்றுவிட்டது போன்ற காரணங்களால், மாவட்ட வாரியாக பிரதமர் மற்றும் சோனியாஜியின் மொபைல் எண்ணை போஸ்டர் அடித்து ஒட்டும் பணியை என் உடன்பிறப்புகள் செய்து வருகிறான்...நாளையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் பணியில் நூறு கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்...மத்திய அமைச்சர் ஏ.ராசா, நாளை முதல் தேசிய குறுஞ்செய்தி வசதி இலவசம் என்று அறிவித்துள்ளார்...என் உடன்பிறப்புகளாகிய மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுக்கு ஏர்டெல் சிம் கார்டுகள் வாங்கி அளித்துள்ளனர்...நாளை முதல் தமிழனின் உண்மையான உணர்வுகள் மத்திய அரசுக்கு தெரியவரும்...PLEASE STOP KILLING TAMIL PEOPLE என்ற குறுஞ்செய்தியை திராவிட முன்னேற்ற கழகத்தினரும், பொதுமக்களும், பிரதமருக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், ராகுல் காந்தி அவர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள்...


செல்போன் எஸ்.எம்.எஸ் பிரச்சினை. மன்மோகன்சிங் அதிர்ச்சி...

காலையில் இருந்து தன்னுடைய மொபைல் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்களால் பிரதமர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அபிஷியல் அரசியல் நெம்பரை குறைந்த நபர்களுக்கு தானே கொடுத்தோம், இது எப்படி லீக் அவுட் ஆனது என்று டென்ஷனில் உள்ளார். மேலும் இந்த நம்பரை மாற்றி வேறு நம்பர் போடமுடியாதபடிக்கு, இந்த நம்பரை அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய அதிபர், பிரான்ஸு அதிபர் சார்க்கோஸி, இலங்கை அதிபர் போன்றவர்களுக்கு கொடுத்து தொலைத்துவிட்டோமே என்று பிரதமர் சங்கடத்தில் நெளிகிறார். இரண்டு எஸ்.எம்.எஸ் டெலீட் செய்தால் அடுத்து இரண்டு வந்துவிடுகிறது, SMS மெமரி புல் என்றும் காட்டுகிறது...இதை தடுக்க ஒரு மத்திய அரசு ஊழியரை அமர்த்தி, SMS அனைத்தையும் டெலீட் செய்யலாமா என்று பிரதமரின் பாதுகாப்பு அமைச்சு யோசித்து வருகிறது...

நேரம் குறைவாக உள்ளதால் உங்கள் கற்பனை குதிரையை விரட்டி நீங்களே மீதியை பின்னூட்டத்தில் டைப் செய்துவிடுங்கள்...!!!

4 comments:

rapp said...

me the first:):):)

மங்களூர் சிவா said...

:)))))))))

Anonymous said...

please stop tamils என்ற SMS குறுஞ்செய்தியை மன்மோகன்சிங் அவர்கள் அப்படியே இந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதரின் மொபைலுக்கு forward செய்திருப்பதாகவும்
இது இலங்கைத் தமிழரின் இதுவரை காலமுமான அவல வாழ்விற்கு நல்லதொரு திருப்பமாக தீர்வாக அமையும் என்றும் அப்பாவித் தொண்டன் நம்புகின்றான்.

இப்பவாவது இலங்க பிரச்சனையில் தலையிட்ட இந்தியாவை பாராட்டுகிறோம் - புலம்பெயர் இலங்கை தமிழர்கள்

Anonymous said...

enkalai vaichu unkalukku comedi?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....