Posts

Showing posts from October, 2008

காண்டு கஜேந்திரன் பதில்கள் பாலஸ்தீனம் சம்பந்தமாக

இஸ்ரேலில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப பாலஸ்தீனம் பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் வருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

குறைசிம்மா:

1. பாலஸ்தீனியர்கள் அழிவது யூதர்களுக்கு நல்லதா?


ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.

மலையகபாலஸ்தீனியன்

1) தன்னையே கொல்ல திட்டமிட்ட யாசர் அராபத்தை மன்னித்து, பாலஸ்தீனத்தில் அவனால் கஷ்டப்படும் மக்கள் மீது கூட இஸ்ரேல் ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கோல்டா மேயர் பாராட்டுக்குரியவர்தானே?


தன்னை கொல்லத் திட்டமிட்ட யாசர் அராபத்தை கோல்டா மேயர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஏன் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேய…

கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்

Image
நானும் மணிவண்ணனும் சேர்ந்து பி.எஸ்.ஸி ப்ராஜக்ட் செய்தோம்..."இண்ட்ரப்ட் For பிகினர்ஸ்" என்று "C" மொழியில்...

ஒரு எம்.சி.ஏ சீனியர் (பெயர் கண்ணன், புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம்), கொடுத்த ஐடியா, சி எடிட்டரில் மெனு, சப் மெனு, ஹெல்ப் பைல்ஸ் எல்லாம் போட்டோம்...

சின்ன ஐடியாவை ஊதி ஊதி பெரிதாக்கியது மணிவண்ணன் தான்...நான் அவ்வளவாக காண்ட்ரிப்யூட் செய்யவில்லை என்றாலும் ஒரு அல்லக்கை நொள்ளக்கையாக கூடவே இருந்தேன்...

திருச்சி துறையூரில் ப்ராஜக்ட் டாக்குமெண்டேஷனுக்காக ஒரு இரவு ஒரு ப்ரவுஸிங் செண்டரை வாடகைக்கு எடுத்து டைப்போ டைப்பு என்று டைப்பினான்...

நான் கண்கள் சொருக தூங்கினேன்...அப்பப்போ "தம்" போட மணிக்கு கம்பேனி கொடுத்ததோடு சரி...

வைவாவின் போது நான் அதிகமாக சைட் அடித்த மேடம் மற்றும் ஹெச் ஓ டி எதிரில், என்னவோ மணி அதிகம் பேசவில்லை...நான் ஏதோ உளறிக்கொட்டி படபடவென்று பேசி எப்படியோ ஒப்பேத்தினேன்...

ரிசல்ட் வந்தபோது, என்னுடைய மார்க் 99. மணிவண்ணன் 98...

எப்போதும் 75 சதவீத மதிப்பெண் வைத்திருக்கும் மணி என்னை விட ஒரு மார்க் கம்மி...

நாற்பது மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என…

குசும்பா !!! ஐ யாம் ஸாரி...ஜெ,சூ.சுவாமி,சோ,இந்து ராம்

Image
குசும்பா...
சுப்ரமணியம் சுவாமி படம் மற்றும் அதில் ஒரு கமெண்டு போட்டு தரமுடியுமா ?

கிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்....

Image
டேய் தம்பிகளா...வேண்டாம்டா...வேண்டாம்...அது நல்லதில்லைடா...நான் உங்களோட தாத்தா மாதிரிடா...என்று சேலத்தை சேர்ந்த சித்த வைத்தியர் தொலைக்காட்சியில் இப்போது புலம்பிக்கொண்டுள்ளார்...

ஆனால் அதைவிட ஒரு பெரிய பிரச்சினை..இந்த பாலித்தீன் பைகள்...சுற்றுச்சூழலை குத்திக்கிளறி புண்ணாக்கும் இந்த வீணாய்ப்போன பிரச்சினை, வரும் சமுதாயத்துக்கும் மாபெரும் கேடு...

நல்ல பதிவுகளை எழுதாமல் மொக்கை போட்டாலும் பரவாயில்லை...பாலித்தீன் பைகளை குப்பையாக போடுவதை முடிந்தவரை தவிருங்கள் மக்கா...இந்த பாலித்தீன் சம்பந்தமான பொருட்கள் - உலகம் முழுவதும் 60 மில்லியன் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகின்றன..

நீ புடுங்குற எல்லா ஆணியுமே தேவை இல்லாத ஆணி தான் என்பது போல எல்லாமே மக்காத குப்பைகள் தான்...

ஒரு ஜெர்மன்காரன் 1898ல ஆக்ஸிடெண்டலா கண்டுபிடிச்சது இந்த பாலித்தீன் என்னும் பொருள்...டயாஸோமித்தேனை சூடாக்கிக்கிட்டிருந்தானாம்...அப்போ வழவழன்னு வந்த இந்த சனியனை ஆராய்ஞ்சிருக்கான்...வந்திருச்சு பாலித்தீன்...

இந்த பாலித்தீன்ல ஒரு சில வெரைட்டீஸை ரீசைக்கிள் பண்ணமுடியும் தான்...ஹும்...இருந்தாலும் முக்காவாசி பாலித்தீன் ரீசைக்கிள் ஆகமுடியாத வகையிலேயே…

கஞ்சா குடிக்கி...

Image
நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன ? நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...

தம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா ? தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா ? இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...

கஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...

நமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட …

நான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் !!!

ஏதோ ஒரு அதிர்வு உள்ள பாடல் இது...முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும்...படத்தில் ஆடுபவர் ராஜ்குமார் மகன்...!!! படம் மிலனா !!! கூட ஆடுற அழகி யார் என்று தெரியவில்லை...அழகிய சிரித்த முகம்...!!!

கத்து கத்து நோடுன்னா கன்னடத்துல மொறைச்சு மொறைச்சு பாக்குறதுன்னு அர்த்தம்...உங்களுக்கு உண்மையிலேயே முழு பாடலோட அர்த்தம் வேனும்னா பின்னூட்டத்துல கேட்கவும்...!!!

இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு கன்னட பாடல்களையும் போடலான் என்றுள்ளேன்...!!! இதுல நீங்க அடிக்கிற கும்மிய பொறுத்து !!!!

அப்புறம் கேப்பங்கஞ்சி வித் கவிதாவுடன் செந்தழல் ரவி படிச்சுட்டீங்களா ? படிக்கலைன்னா இங்கே க்ளிக் !!!!

தமிழக கிறிஸ்தவர்களிடையே சா'தீ'யம்...பாதிரியார்களையும் விட்டுவைக்கவில்லையே...

Image
தமிழகத்தில் சாதீயத்துக்கெதிராக முழு அளவில் போராட்டம் நடத்தியவர் என்றால் அது பெரியாரை மட்டும் தான் சொல்லமுடியும்...அதன் பிறகு பல பெரிய தலைவர்கள் உருவானாலும் (திரைத்துறையில் இருந்து அதிகபட்சமாக), உருப்படியாக சாதியை எதிர்த்து அறிக்கை கூட விட முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்த ஓட்டுப்பொறுக்கிகள்...

சாதியை எதிர்த்து - இரட்டைக்குவளை ஒழிப்பு என்று பெரியார் தி.க / கொளத்தூர் மணி தலைமையில் போராட்டம் நடத்தியது எனக்கு தெரிந்தவரை சாதீய எதிர்ப்புவாத போராட்டம்...

தமிழக இசுலாமியர்களிடையே சாதீயம் இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது...ஆனால் தமிழக கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதீயம் - படு கேவலமானது...

பாதிரியார்கள் பாப்பாக்களை கர்ப்பமாக்கும் மேட்டர் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவது...ஆனால் இந்த சாதீயம், தமிழகத்தில் வாழும் அத்துனை கிறிஸ்தவர்களிடமும் ஒட்டிக்கொண்டுள்ளது...(பெரும்பான்மையாக)...பொதுவாக கிறிஸ்தவ மதத்தினர் என்றால் அனைவரும் நினைப்பது அவர்கள் அனைவரும் தலித் / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது மீனவர்கள் என்றுதான்...ஆனால் அப்படி இல்லாமல், நாடார், செட்டியார், தேவர், முதலியார், …

டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள்

20/07/2007 8:03 AM க்கு பதிந்தது !!! சீனியர்களோட மேட்டர்களை வெச்சு நாங்க எப்படியெல்லாம் மொக்கை போட்டோம் என்று இள மண்ணுங்களான வால்,பரிச,கார்க்,அதிஷ,நர்சி,குசும் தெரிஞ்சுக்கங்க !!!!

நேராவிஷயத்துக்கு வந்திருவம்...சென்னையில் ஒரு பிரபல(?!) டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எழுத்தாளர்களும் கவிஞர்களும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியை பதிவாக்கி உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

பங்கேற்பாளர்கள்: வரவணையான், மிதக்கும்வெளி, பொட்டீக்கடை, லக்கிலூக், குழலி, ஓசை செல்லா, எஸ்.பாலபாரதி, மகேந்திரன் பெ, முத்து தமிழினி பின்னே ஞானும்..

பாலபாரதி (தமிழ் வலைப்பதிவு அமைப்பாளர்) : வாங்க எல்லோருக்கும் வணக்கம்...!!! இந்த கவிதை அரங்கத்துக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்...

மிதக்கும்வெளி:(சூடாக) யோவ் அப்ப தண்ணியடிக்க வரலையா...நான் போறேன்...

வரவணையான்: அட இருங்க தோழரே...ச்சும்மா மாம்ஸ் இப்படித்தான் வழக்கம்போல ஏதாவது உளறுவாரு...ஒரு க்வாட்டர் ஓல்டு மங்க ஓப்பன் பண்ணா மோந்து பார்த்து மயக்கமாகிருவாரு...

எஸ்.பா: ஏஏஏஏப்பா...வம்பிளுக்கறதுக்குன்னே வருவீங்களா...

வரவணை: சரி, விடுங்க மாம்ஸ்...தோழர் செந்தழல் ஒரு ஆ…

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...

Image
Real Face !!!Reeeeeel Face !!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைய…

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...

Image
பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...நிஜ முகம்பொய் முகம்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி …

தமிழச்சியின் பல்வேறு போஸ் !!!!

Image
இந்த வாங்கிக்க க்ளிக்கவும்இந்தா புட்சுக்க க்ளிக்கவும்இது எப்பிடி இருக்குஅப்புறம் சுகம் தானே ?நல்லா கீறியான்னு கேட்டேன்...
தமிழச்சி பெயரை சொல்லிக்கொண்டு எந்த பதிவும் போடக்கூடாது என்றில்லையே ? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை இந்தியாவில் சொன்னால் போலீஸ் புடிக்கும் என்பது போல தடை செய்யப்பட்ட (???) தமிழச்சியின் பெயரை சொல்லி பதிவு போட்டால் தூக்கிற மாட்டாங்களே ? பதிவை !!!

கட்டங்கடைசியா...

இத்தையும் பாத்துக்கோ !!!டவுசரை கழட்ட ஏதும் ஸ்பெஷல் ட்ரெயினிங் குடுக்கறாங்களா உங்க மாஸ்டர்ஸ் ? எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா டவுசரோட அலையறார். அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்...

வாய்யா வாய்யா வாய்யா...அட வாங்கக...பாஸ்ஸ்ஸ்...

ஆதலினால் காதல் செய்தேன் - இதுவரை எழுதிய 7 பாகங்கள் !!!!

Image

என்னை அடி அடியென்று அடித்தவன்...

Image
ஞாயிறு மதியம் வழக்கம்போல லேட்டாக ரெண்டு மணி வாக்கில் கொஞ்சம் ஹெவி சாப்பாடு...ரெண்டு மணி நேர தூக்கம்...!!!

அப்படியே எழுந்து ம்மா ஹேர் கட் பண்ணனும் நூறு ரூபாய் கொடு என்றேன்...

ஓக்கே ப்ரூ காபித்தூள் அப்படியே ஒரு சின்ன பாக்கெட் வாங்கிவந்திருங்க என்றாள் தங்கமணி...

<<< கிரி வடிவேல் பாணியில் படிக்கவும் >>>

நானும் மெதுவாத்தாம்மா போய் உக்காந்தேன்...மொதல்ல ஒருத்தன் தலையில கைய வெச்சு கட்டிங்கா ஷேவிங்கா மஸாஜிங்கும் பண்ணவா அப்படீன்னான்...

நானும் சரி மொத்தமா மூனையும் பண்ணுடா...தலை காலியாத்தானிருக்குன்னேன்...

கட்டிங் ஷேவிங்க முடிச்சுட்டு நவரத்தின தைலமா தேங்கா எண்ணையான்னான்...

நவரத்தின தைலமே போடுப்பா அப்படீன்னேன்...

ஹூம்...<<>>

மொதல்ல லைட்டாத்தாம்மா ஆரம்பிச்சான்...லெப்ட்ல ஒருத்தன் ரைட்ல ஒருத்தன் நின்னுக்கிட்டு...

அடி அடின்னு அடிச்சானுங்கம்ம்மா...

நானும் எவ்ளோ நேரந்தான் தூங்குறாமாதிரியே நடிக்கறது...

******************

தாய்லாந்து போன்ற நாடுகளில் மசாஜுக்காகவே உலகமெங்கிலிருந்தும் டூரிஸ்ட் வருகிறார்கள்...

வருபவர்கள் பல பேருக்கு "அது" அஜெண்டா என்றாலும் நல்ல மசாஜை எஞ்சாய் பண்ணாமல் …

காதலில் விழுந்தேன் தமிழ் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை

Image
எனக்கு தெரிந்து பல பிரச்சினைகளுக்கு இடையே வெளிவந்த பல படங்கள் இமாலய வெற்றி பெற்றுள்ளன...

கோர்ட்டில் வழக்கு, இராமநாதபுரம், மதுரை ஏரியாவில் திரையிட பிரச்சினை என்று பல பிரச்சினைகளை சந்தித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத மாபெரும் வெற்றி பெற்றுள்ளது...

அதிக வசூல் செய்த படங்களான பாட்ஷா, சிவாஜி, தசாவதாரம் போன்றவற்றை விட அதிக வசூல் பெற்றுள்ளது...மொத்தம் 3000 ப்ரிண்டுகள் இந்தியாவிலும் 2500 ப்ரிண்டுகள் வெளிநாட்டிலும் போடப்பட்டுள்ளது...

இது உலகில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையாகும்...

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் நகுல் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். இந்த திரைப்படத்தை நியூயார்க் பாக்ஸ் ஸ்டுடியோவில் பார்த்த நடிகர் ப்ரூஸ் வில்லீஸ் (புகழ்பெற்ற ஆக்சன் நடிகர்), "இந்திய சினிமாவில் இருந்து தனக்கு ஒரு போட்டி கிளம்பிவிட்டதாக" பொறாமையுடன் குறிப்பிட்டார்..

இந்த படத்தில் நடித்த சுனைனாவுக்கோ, பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகங்களில் இருந்தும் தென்னிந்திய திரையுலகங்களில் இருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்…

பார்ப்பனீயம் For Dummies !!!!

Image
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்...

நிறைய புதிய பதிவர்கள் வந்திருக்கிறார்கள்...சிலர் இந்தி வாழ்க, கருணாநிதி மட்டும் என்னை ஹிந்தி படிக்க விட்டிருந்தால் அம்பானிக்கு அஸிஸ்டெண்ட் வேலையில் மும்பையில் இருந்திருப்பேன் என்கிறார்...இந்தி எதிர்ப்புக்கும் இந்தி திணிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தனியாக எழுதவேண்டும்...

ஆனால் இந்த பதிவு, பார்ப்பனீயம் என்றால் என்னவென்று அறியாத புதிய பதிவர்களுக்கு அது குறித்து விளக்கும் ஒரு சிறு முயற்சி...

இரண்டு கேள்விகளுக்கு விடை காண்போம்...

1. யார் பார்ப்பனர் ? மற்றும் 2. எது பார்ப்பனீயம் ? என்ற இரு கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்...


யார் பார்ப்பனர் என்ற கேள்விக்கு பொதுவாக வரும் விடை, ப்ராமின் (பார்ப்பண) சாதியில் பிறந்திருந்தால் அவர் பார்ப்பனர் என்பது...

இது தவறு !!!

பார்ப்பன சாதியில் பிறந்த அனைவரும் பார்ப்பனர் இல்லை...!!!

பாரி.அரசு அவர்கள் எழுதிய பதிவில் இருந்து ஒரு ஸ்னிப்பெட் கீழே தருகிறேன்...

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்க…

14 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : கலைஞர் அறிவிப்பு !!!

வருகின்ற பதினாலாம் தேதி இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்கவும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் போதிய ஆதரவுகளை திரட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்...

அ.இ.அதிமுக இதில் கலந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை..ஆனால் இன்றைக்கு செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்படுவது குறித்து மத்திய அரசை சாடியுள்ளார், மேலும் அவர்களுக்கு உணவும் மருந்துப்பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்...!!!

ஏதோ நல்லது நடந்தா சரி !!!

ஒரு டாபர் மற்றும் தமிழ் காமிக்ஸ் உலகம்

Image
தமிழர்களுக்குள், ஈழ தமிழர்களை ஆதரிப்பதில் கருத்து வேற்றுமைகள் பல இருக்கின்றன...17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ் படுகொலையை சொல்லி சொல்லி அழுகாச்சி ஆகும் சிலர் இன்னும் இருக்கிறார்கள்..

சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்டார் இந்திரா அம்மையார் என்பதால் தலையில் முண்டாசு கட்டிய சீக்கியர்களை அனைவரையும் வெறுத்துவிட்டோமா என்ன ? அதே சீக்கியரை பிரதமர் ஆக்கி அழகு பார்க்கவில்லையா காங்கிரஸ் கட்சியினர் ?

தமிழர்கள் அனைவரையும் வெறுக்கும் இதுபோன்ற இலங்கை தமிழ் / ஈழ எதிர்ப்பாளர்களின் டவுஸர் பற்றி எனக்கு கொஞ்சம் விளங்காமலேயே இருந்துகொண்டிருக்கிறது..வியட்நாமில் வீசப்பட்ட நேபாம் போன்ற குண்டுகளை / ரசாயன மற்றும் பெட்ரோல் மூலப்பொருட்களை கொண்ட குண்டுகளை (காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி மக்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் குண்டுகள் இவை) இலங்கை ராணுவம் வீசி வருகிறது...இந்த குழந்தைதான் உங்களுக்கு கரும்புலி, பச்சைப்புலியாக தெரிகிறதாடா டாபர்களா ?இப்படி சிரித்துக்கொண்டிருந்த குழந்தைகள்இப்படி சிதறுண்டதே !!! இந்த காட்சிகளை கண்டு கல் கூட கரையுமே ? இரக்கமில்லா நெஞ்சில் கூட ரத்தம் கசியுமே ?

இப்படியான சம்பவங்களுக்கு பிற…

இரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் !!!

Image
எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் பதினேழாம் பொருத்தம்...அப்புறம் தான் தெரிந்தது, பல விடயங்களில் நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம் என்பது...!!!!

எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டால்...

1. சாமி கும்பிடுவதில்லை
2. டோமர் மாதிரி பதிவு எழுதுவது
3. காதல் திருமணம்
4. அவுஸ்திரேலியா
5. பாஸ்டர்ஸ் பியர்
6. ஹாலி டேவிஸன் பைக் மீது காதல் ( அவரிடம் உள்ளது, என்னிடம் அதன் படம் மட்டும்)
7. மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது
8. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது
9. டவுஸர்
10. புகை பழக்கத்தை விட்டுவிட்டது

வேற்றுமைகளை சொன்னால் இந்த பதிவு தாங்காது...யாரடா அந்த டாபர்கள் என்று பார்க்கிறீர்களா ?

சமீபத்தில் என்னுடைய புறாக்கூண்டு வீட்டுக்கு (பெங்களூரு) வருகை தந்த பொட்டீக்கடையார் தான் அவர்...அவர் போட்டிருந்த டவுஸரை பார்க்கும்போது இவர் பொட்டீக்கடையா அல்லது ஜட்டீக்கடையா என்று தெரியவில்லை...(லக்கி, தமிழச்சி கவனிக்க)...படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கழுத்தை சாய்த்து பார்க்கவும். கழுத்து சுளுக்கு மற்றும் அய்யோடெக்ஸ் செலவுக்கு நான் பொறுப்பல்ல...!!!

படத்தை பார்த்துவிட்டு, இதை சூடான இடுகையாக த…

உடன்பிறப்பே !! தந்தி அனுப்பவேண்டாம் !!! SMS போதும் !!! கலைஞர்..

ஏழரைப்பக்க நாளேடு !!!!

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை !!!!

கேள்வி : தந்திகள் சரியாக சென்று சேரவில்லை என்றும் புதிய உத்தியை முதல்வர் அறிவிப்பார் என்றும் வரும் செய்திகள் குறித்து ?

பதில் : பெருவாரியான தந்தி மெசின்கள் வேலை செய்யாதது, மற்றும் அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த தந்தி ஊழியர்கள் அவசர விடுப்பு எடுத்துவிட்டு சென்றுவிட்டது போன்ற காரணங்களால், மாவட்ட வாரியாக பிரதமர் மற்றும் சோனியாஜியின் மொபைல் எண்ணை போஸ்டர் அடித்து ஒட்டும் பணியை என் உடன்பிறப்புகள் செய்து வருகிறான்...நாளையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் பணியில் நூறு கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்...மத்திய அமைச்சர் ஏ.ராசா, நாளை முதல் தேசிய குறுஞ்செய்தி வசதி இலவசம் என்று அறிவித்துள்ளார்...என் உடன்பிறப்புகளாகிய மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுக்கு ஏர்டெல் சிம் கார்டுகள் வாங்கி அளித்துள்ளனர்...நாளை முதல் தமிழனின் உண்மையான உணர்வுகள் மத்திய அரசுக்கு தெரியவரும்...PLEASE STOP KILLING TAMIL PEOPLE என்ற குறுஞ்செய்தியை திராவிட முன்னேற்ற கழகத்தினரும், பொதுமக்களும், பிரதமருக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், ராகுல் காந்தி அவர்களுக்கும் அனுப்பி வ…

காமெடி கீமடி பண்ணலியே ?

Image
நடக்கும் சம்பவங்களை பார்த்தால் !! வடிவேலு பாணியில்...எங்களை வைத்து காமெடி கீமடி பண்ணலியே !!! என்று சொல்லத்தோன்றுகிறது...!!!

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வீடிழந்து அகதிகளாக உயிரைக்காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...!!! மக்கள் வசிக்கும் இடங்களில் இலங்கை அரசு குண்டுகளை வீசுகிறது...படம் : இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவம்

இந்திய அரசு கொடுத்த ராடார்கள், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகள் கொண்ட உதவிக்குழு, இந்திய அரசால் பயிற்சி பெற்ற இராணுவப்படையை கொண்டு தமிழர்களை வேரறுக்க கொலைவெறியோடு கிளம்பியுள்ளது இலங்கை இராணுவம்...

தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளை ஏவி விட்டு, கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது இலங்கை அரசு. வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக சொந்த நாட்டு மக்களை கொள்ள முப்படைகளையும் ஏவியவர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டுமே.படம் : ராஜபக்ஸ, பிரதமர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் திரு.M.K.நாராயணன், இலங்கை துணை தூதர் பலிதனகோடாவை அழைத்து (தூதர் மெடிக்கல் லீவ்) இலங்கையில் தமிழர்களிடம் டீசண்டாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்திய…

ஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலைவர்கள் !!!!

Image
உலகத் தமிழர் தலைவர் டாக்டர் கலைஞர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள சூடான கடித்ததில் இந்திய இலங்கை கூட்டு ரோந்து தேவையில்லை என்று சாடியுள்ளார்...புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா விடுத்துள்ள சூடான அறிக்கையில் இந்திய அரசு அரியானா மாநிலத்தில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்த விவரம், இந்திய அதிகாரிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை இலங்கை செல்வது, இந்திய ரேடார்கள் இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களை கொல்ல உபயோகப்படுவது என்று மத்திய அரசை கிழி கிழி என்று கிழித்துள்ளார். மத்திய அரசை கையில் வைத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மத்திய அமைச்சர்கள் என்ன ஆணி புடுங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார்...
டாக்டர் அய்யா திரு ராமதாசு அவர்கள், சமீப காலங்களில் எந்த தமிழக அரசியல் தலைவரும் தெரிவிக்காத சூடான ஆதரவு கருத்துக்களையும் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கலைஞரையும் சாடியுள்ளார். இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவிகள் வழங்கும் இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் பதினெட்டு நாளில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்…

வீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்)

முதலில் ஒரு கவிதை

பேருந்து நிறுத்தம்
குப்பைத்தொட்டி
எச்சில் இலை
நான்
நீ
உன் கூச்சல் உனக்கு
என் கூச்சல் எனக்கு
இருவருடைய பேருந்து எண் என்னவோ 47D


*** தமிழில் மிகப்பெரிய சிந்தனையாளர் - ஏஞ்சலீனா கோவிந்தசாமீ aka (அஞ்சலை) ***


இன்று இரவு ஏழு மணி வாக்கில் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு நானும் தங்கமணியும் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு சென்றிருந்தோம்...இப்போதெல்லாம் எல்லாவற்றையும் பாக்கிங் செய்து விற்றுவிடுகிறார்கள்...பூண்டு, வெங்காயம் உட்பட - உரித்து - பாலித்தீன் கவர்களில் கட்டி - இரண்டு மூன்று ரூபாய்கள் அதிகம் தான், விற்றுவிடுகிறார்கள்...

நம்மை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் முயற்சியா அல்லது நமது சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியா தெரியவில்லை...

அன்னாசிப்பழத்தை (சின்ன ன் ஆ அல்லது பெரிய ண் ஆ தெரியவில்லை அன்னாசிக்கு) அப்படித்தான் டப்பாவில் அடைத்து பதினைந்து உரூபாய்க்கு விற்றார்கள்...

அது மற்றும் மாதுளையையும் உரித்து பெட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள்...இது முப்பத்து இரண்டு ரூபாய்...

வாங்கினோம், அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து லைட்டாக திறந்தபோதே உஷார் ஆகியிருக்கவேண்டும் நான்...

விதி வலியது...

படபடவென…

வரவணையான் வீடியோவுக்கு எதிர் வீடியோ

நோ கொமெண்ட்ஸ் !!!!

எனக்கு மிகவும் பிடித்த கார் !!!

Image
சாம்சங் நிறுவனத்தின் ஈக்குவஸ் (EQUES) கார், எனக்கு மிகவும் பிடித்தது...ச்ச்சும்மா அதிருதில்ல !!!

சாம்சங் எங்கடா கார் தயாரிக்குதுன்னு கேக்காதீங்க..ஜப்பான் நிறுவனத்தின் கொலாபரேஷனோட கில்லி மாதிரியான கார்கள் தயாராகி கொரியாவில் விற்பனை செய்யப்படுகிறது...!!!

ஒரு வாசகியின் பார்வையில் !!!

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ…