'ழ'
***************************************************
துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.
மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.
'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...
தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.
அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.
அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?
அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.
அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..
அங்கே மேடையில்,
'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.
குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.
அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ட்டே உயகு
பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.
***************************************************
சாட் லவ்.
***************************************************
அவன் - ஹாய்
அவள் - ஹாய். எஸ்ஸ்.
அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?
அவள் - ஸ்வேதா
அவன் - ஸ்வீட் நேம்.
அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?
அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.
அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.
அவன் - ஆர் யூ ஹிண்டு
அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?
அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.
அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?
அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?
அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.
அவன் - ஐ லவ் யு.
அவள் - மீ டூ.
***************************************************
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
25 comments:
பதிவர் விசா இப்படி டபுள் ஷாட் அடிப்பார். சிங்கத்தை பார்த்து பூணை சூடுபோட்ட 'கதை'யாக நானும் இரண்டு கதைகளை எழுதிவிட்டேன். உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்...
இரண்டாவது கதை தான் பிடிச்சிருக்கு!
ஆனா ஏன் ரெண்டு பேர்த்துக்கும் எயிட்ஸ் இருக்குற விசயத்தை சாட்டில் சொல்லலைன்னு தான் தெரியல!
முதல்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியான சம்பவங்கள் நிஜத்திலும் நடந்த கொண்டிருப்பதுதான் வேதனையைத் தருகிறது. பாராட்டுக்கள்.
ரெண்டாவது கதை செம டச்.!!!!
அசத்தி புட்டீங்க.
சிங்கத்தை பார்த்து பூனை சூடு போட்ட.....
எனக்கு சூடு போடாம இருந்தா சரி.
ஓட்டு போட்டாச்சு.
நன்றி வால்ஸ்.
நன்றி வலசு வேலன்
நன்னி விசா
நல்ல கற்பனை. நல்லாயிருக்கு. 6 வயசு ? கொஞ்சம் அதிகமா சொல்லியிருக்கலாம், நம்பகத்தன்மை அதிகம் ஆகும் கதைக்கு
இரண்டுமே நல்லா இருக்கு. தமிழ்மணம் வீட்டில போடுறேன். டேமேஜர் புண்ணாக்குக்கு தமிழ்மணம் ஸ்பாம்மராம்.=))
பின்னோக்கி. ஒரு ரெண்டு மூனு வயசு சேர்த்து போட்டா ஓக்கேவா ?
நன்றி வானம்பாடிகள்.
கதைகள் இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கி.
நன்றி ப்லாக்பாண்டி
ரெண்டு கதையும், ரெண்டு விதம்....சூப்பர்...!!!
வால் அண்ணனோட கிளைக்கதையும் சூப்பர்...!!! : )
நன்றி சிவன்..!!!!!!!!!
முதல்ல எழுதி இருக்கறது குமுதம் பாணி ஒருபக்க கதை. நல்லா இருக்கு. ரெண்டாவது எழுதி இருக்கறது கதை எல்லாம் இல்லை. பட் நல்லா இருக்கு.
இரண்டுமே் நல்லாயிருக்கு.தவிர இரண்டிலுமே கற்பனை கொஞ்சம்தான், நிஜம்தான் அதிகம்.
வாழ்த்துக்கள் ரவி!
அன்புடன்
இரண்டாவது முதலாவது. :)
thanks mani
thanks karikalan
எல்லாருக்கும் தேங்ஸ் சொல்றீர் எனக்கும் சொல்லிடும் ஓய்.
நன்றி குடுகுடுப்பை.
second story was nice.
thanks thozhi
//கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.//
மாண்புமிகு பேரனுக்கு மரியாதையை வெகுவாக ரசித்தேன் :)
இரண்டாவதும் சூப்பரா இருக்கு.. பொண்ணு எவ்ளோ வரதட்சனை தரும்னு தெரிஞ்ச பெறகு தான் இவர் propose பண்ணினார் என்பதை நீங்க மறைச்சிட்டீங்க :)
Post a Comment